search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குல்ஃபி"

    • குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் ரொம்ப பிடிக்கும்.
    • இன்று வீட்டிலேயே குல்ஃபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்

    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    சாக்லேட் - 1 கப் (துருவியது)

    சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    சர்க்கரை - 1/2 கப்

    பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

    செய்முறை :

    * ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

    * ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    * அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

    * சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

    * பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

    * 1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!

    • தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • இன்று வெயிலுக்கு இதமா மாம்பழ குல்ஃபி செய்வது குறித்து பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    பால் - 500 மிலி

    சர்க்கரை - 3/4 கப்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    குங்குமப்பூ - 1 சிட்டிகை

    மாம்பழ கூழ் - ஒன்றரை கப்

    மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

    செய்முறை

    * நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    * அடுத்தாக அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும்.

    * பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * கடைசியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறிய அளவு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி ப்ரிஜ் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த கலவை நன்கு உறைய வேண்டும். குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை வைத்து சாப்பிடலாம்.

    * அவ்வளவு தான் சிம்பிள், சுவையான மாம்பழ குல்பி வீட்டிலேயே தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இந்த குல்ஃபி ஷேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    தயாரித்து வைத்திருக்கும் குல்ஃபி - 2 கப்

    கொழுப்பு நீக்காத பால் - 1 கப் (காய்ச்சி ஆறவைத்தது)

    சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி - 1 டீஸ்பூன் (பொடிதாக நறுக்கியது)

    குங்குமப்பூ - ¼ டீஸ்பூன்

    செய்முறை:

    பிளண்டரில் பால், சர்க்கரை, ஒரு கப் குல்ஃபி ஆகியவற்றை போட்டு நுரைக்கும் வரை பிளண்ட் செய்யவும்.

    பின்னர் அதை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே துண்டுகளாக வெட்டிய ஒரு கப் குல்ஃபியை போடவும்.

    பின்பு அதன் மேல் முந்திரி மற்றும் குங்குமப்பூவைத் தூவி சில்லென்று பரிமாறவும்.

    இப்போது சூப்பரான குளுகுளு குல்ஃபி ஷேக் ரெடி

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×