என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து சூப்பராக போண்டா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு  - 1 கப்
    அரிசி மாவு  - 1/2 கப்
    உப்பு  - தேவையான அளவு
    தயிர் - 1 கப்
    பெரிய வெங்காயம்  - 1
    பச்சை மிளகாய்  - 3  
    கறிவேப்பிலை  - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    கோதுமை வெங்காய போண்டா

    செய்முறை :

    வெங்காயம், ப,மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு சுத்தமான பவுலில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்,

    அடுத்து அதனுடன் தயிர்,  பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    இந்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை சிறிய சிறிய உருண்டையாக எடுத்து போடவும். போண்டா ஒருபுறம் நன்றாக வெந்து சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான கோதுமை வெங்காய போண்டா ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது பாகற்காய். இன்று பாகற்காய் வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாகற்காய் - 1
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    ப.மிளகாய் - 1
    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு

    பாகற்காய்

    செய்முறை:

    பாகற்காயை நன்றாக கழுவி தண்ணீரை நன்றாக வடித்து விட்டு விரும்பியபடி வெட்டி கொள்ளவும். ஆனால் மெலிதாக வெட்ட வேண்டும்.

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாகற்காய், வெங்காயம், தக்காளி, ப. மிளகாய், எலுமிச்சைசாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இப்போது சுவையான பாகற்காய் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஃபிஷ் டிக்காவை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. ஊரடங்கு காரணமாக ஹோட்டலுக்கு செல்ல முடியாத காரணத்தால் வீட்டிலேயே ஃபிஷ் டிக்காவை செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    துண்டு மீன் - அரை கிலோ
    கெட்டியான தயிர் - 1 கப்
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    வெங்காயம் விழுது - 1 டீஸ்பூன்
    இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
    பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தனியா தூள் - 1 தேக்கரண்டி
    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
    பட்டை தூள் - 1/4 தேக்கரண்டி
    ஜாதிக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கொத்தமல்லி - சிறிதளவு

    ஃபிஷ் டிக்கா

    செய்முறை:


    மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் கெட்டியான தயிர், வெங்காயம் விழுது, எண்ணெய், இஞ்சி விழுது, பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், சீரகம் தூள், பட்டை தூள், சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக மென்மையான பேஸ்ட்டை தயாரிக்கவும்.

    அடுத்து அதில் கழுவி வைத்த மீனை போட்டு மசாலா மீனில் நன்றாக படும் படி பிரட்டவும்.

    கலந்த மீனை மூடி, பிரிஜில் 1 மணி நேரம் வைக்கவும்.

    அடுத்து மீனை வெளியே எடுத்து சிறிது கொத்தமல்லி சேர்க்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த மீனை போட்டு ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சுவையான ஃபிஷ் டிக்கா ரெடி.

    பச்சை சட்னியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஜீரணம், வயிற்று உபாதைகளால் கஷ்டப்படுபவர்கள் சீரகம் - தனியா சூப் செய்து குடிக்கலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சீரகம், மல்லி (தனியா) - தலா கால் கப்,
    இஞ்சி - சிறிய துண்டு,
    மிளகு - 2 டீஸ்பூன்,
    எலுமிச்சைப் பழம் - 2,
    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
    உப்பு - தேவையான அளவு.

    சீரகம் - தனியா

    செய்முறை :

    மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும்.

    இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும்.

    இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும்.

    பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும்.

    எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கிரில்டு இறாலை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் கிரில்டு இறால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    இறால் - 500 கிராம்
    பூண்டு - 5 பெரியது
    எலுமிச்சை சாறு - 3 மேசைக்கரண்டி
    ஆலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    உப்பு - சுவைக்கேற்ப

    கிரில்டு இறால்

    செய்முறை:

    இறலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இறாலுடன் நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், அரைத்த மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    கிரில்லை சூடாக்கி அனைத்து இறால்களையும்  ஒரே லேயராக பெரிய ஆவன்-ப்ரூப் பாத்திரத்தில் வைக்கவும்.

    பாத்திரத்தை கிரில்லின் கீழ் வைக்கவும்.

    இறாலின் ஒரு புறத்தை 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

    பாத்திரத்தை வெளியே எடுத்து, இறால்களைத் திருப்பவும். மறு புறமும் 2-3 நிமிடங்கள் கிரில் செய்யவும்.

    பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான கிரில்டு இறால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு குளுமை தரும் கேழ்வரகுடன் முருங்கைக்கீரை சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான உணவு இது.
    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு  மாவு - 1 கப்
    உளுந்தம் பருப்பு - கால் கப்
    முருங்கை கீரை - 1 கைப்பிடி
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கேழ்வரகு உளுந்து முருங்கை கீரை தோசை

    செய்முறை

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு ஊறியதும் எடுத்து களைந்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

    உளுந்து நன்றாக நைசாக அரைந்ததும் அதில் கேழ்வரகு மாவை சேர்த்து உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.

    பின் அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் அத்துடன் முருங்கை கீரை சேர்த்து நன்கு கலந்து மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் தடவி மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு  உளுந்து முருங்கை கீரை தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த அப்பளம் போட்ட வத்தக்குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - தேவையான அளவு
    அப்பளம் - 4
    வெங்காயம் - அரை கப்
    புளி - எலுமிச்சை அளவு
    நசுக்கிய பூண்டு - 4 பற்கள்
    கறிவேப்பிலை - கொஞ்சம்
    வரமிளகாய் -1
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/2டீஸ்பூன்
    க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
    ரசப்பொடி - 1 டீஸ்பூன்
    மல்லித்தூள் - 1டீஸ்பூன்
    பருப்பு பொடி -1 டீஸ்பூன்
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்
    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
    வெல்லம் - கொஞ்சம்

    அப்பளம் போட்ட வத்தக்குழம்பு

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

    புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

    பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

    அதே எண்ணெயில் கடுகு, வெந்தயம், க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.

    அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் நசுக்கிய பூண்டு உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி, ரசப்பொடி, மல்லிப்பொடியை சேர்த்து தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம் கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)

    புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

    மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் வெல்லம் சேர்க்கவும்.

    அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)

    குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான அப்பளம் போட்ட வத்தக்குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு வலு தரும், உடல் எடையை குறைக்கும் கொள்ளுவை வைத்து சத்தான சுவையான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 1 கப்
    கொள்ளு - அரை கப்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    சீரகத் தூள்,  தனியாத் தூள் - தலா அரை டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு

    கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இரண்டு நாள் முன்பே கொள்ளுப் பயறை ஊறவைத்துக்கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து முளை வரும்வரை மூடிவையுங்கள்.

    முளைகட்டிய கொள்ளுப் பயறுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இஞ்சி உப்பு சீரகத் தூள் தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

    கோதுமை மாவுடன் உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள்.

    மாவைச் சிறிதுநேரம் ஊறவைத்துச் சப்பாத்திபோல் திரட்டி அதனுள் அரைத்துவைத்துள்ள கொள்ளுக் கலவையை வைத்து மூடி மீண்டும் திரட்டிக்கொள்ளுங்கள்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியைச் சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.

    சத்தான சுவையான கோதுமை கொள்ளு ஸ்டப்ஃடு சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
    பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    சோள மாவு - அரை டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். தோலுரித்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைபோட்டு வெடித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து, வேகவைத்த கிழங்கையும் போட்டு மசித்து, எலுமிச்சைச்சாறு பிழிந்து இறக்கவும்.

    இதை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து  கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

    மேலே கரகரப்பாகவும் உள்ளே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சுவையுடனும் சாப்பிட மிகவும் ருசியுடன் இருக்கும்.

    இதற்கு சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் ஒரு தேன் நெல்லிக்காய் சாப்பிட்டால் வைட்டமின் குறைபாடுகள் நீங்கும். இன்று வீட்டிலேயே தேன் நெல்லிக்காய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய நெல்லிக்காய் - 10,
    தேன் - 100 மில்லி.

    செய்முறை:

    நெல்லிக்காயைக் கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து உதிர்த்து கொட்டையை எடுக்கவும்.

    வெறும் வாணலியில் உதிர்த்த நெல்லிக்காயைப் போட்டு சிறிது வதக்கிக்கொள்ளவும்.

    வதக்கிய நெல்லிக்காயை ஒரு பாட்டிலில் போட்டு நெல்லிக்காய் மூழ்கும் வரை தேன் ஊற்றிவைக்கவும்.

    தேனில் ஊறி, தேன் சுவையும் நெல்லிக்காயின் சுவையும் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய மாம்பழம் - 2
    பால் - 1 கோப்பை
    வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கோப்பை
    ஜெல்லி - 2 மேஜைக் கரண்டி

    மாம்பழ ஐஸ்கிரீம்

    செய்முறை :

    பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.

    மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.

    குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.

    பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.

    பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் செய்து கொடுக்கலாம்.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை பிரெட் - 6
    முட்டை - 3
    வெங்காயம் - 1 பெரியது
    மஞ்சள்தூள் - சிட்டிகை
    மிளகாய்தூள் - 1/4 டீஸ்பூன்
    ப.மிளகாய் -1
    கொத்தமல்லி இலை - தேவைக்கு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் / நெய் - தேவைக்கு

    கொத்தமல்லி சட்னி

    கொத்தமல்லி - கால் கப்
    புதினா - கால் கப்
    தேங்காய் - கால் கப்
    புளி - சிறு துண்டு ( விரும்பினால்)
    ப.மிளகாய் - 2
    உப்பு - தேவைக்கு

    கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட்

    செய்முறை :

    கொத்தமல்லி சட்னிக்கு தேவையனா பொருட்களை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு சிறுது தண்ணீர் தெளித்து திக்காக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    ஒரு பாத்திரத்தில் முட்டை, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி இலை, தூள் வகைகள், உப்பு கலந்து நன்றாக கரண்டி வைத்து கலந்து வைக்கவும்.

    கோதுமை பிரெட் துண்டுகளை முக்கோண வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

    கோதுமை பிரெட் இன் ஒரு பகுதியில் கொத்தமல்லி சட்னி தடவி வைக்கவும். மறு புறம் ப்ளேன் பிரெட் வைத்து செட் ஆக ரெடி செய்து வைக்கவும்.

    தோசை தவாவில் சிறிது எண்ணெய்/ நெய் ஊற்றி சூடானதும் ரெடி செய்து வைத்த பிரெட்டை முட்டை கலவையில் முக்கி தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

    சுவையான கோதுமை பிரெட் முட்டை மசாலா டோஸ்ட் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×