search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா
    X
    சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா

    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு போண்டா.இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 100 கிராம்,
    பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    எலுமிச்சைப்பழம் (சிறியது) - ஒன்று,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    கடலை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    சோள மாவு - அரை டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கு

    செய்முறை:

    ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கை குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து இரண்டு விசில்விட்டு இறக்கவும். தோலுரித்து மசித்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகைபோட்டு வெடித்ததும் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும்.

    இதனுடன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து, வேகவைத்த கிழங்கையும் போட்டு மசித்து, எலுமிச்சைச்சாறு பிழிந்து இறக்கவும்.

    இதை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைத்து  கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

    மேலே கரகரப்பாகவும் உள்ளே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சுவையுடனும் சாப்பிட மிகவும் ருசியுடன் இருக்கும்.

    இதற்கு சட்னி, சாஸ் சிறந்த காம்பினேஷன்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×