என் மலர்
சமையல்
புளிச்சக்கீரை மட்டன் குழம்பு மிகவும் சுவையாகவும், காரமாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை - 1 கட்டு
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 இன்ச்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை :
புளிச்சகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக் கீரையை சேர்த்து வதக்கி மூடி வைத்து, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி நன்றாக மசித்துகொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மசித்த புளிச்சக்கீரையை சேர்த்து கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி !
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் சாப்பிடலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கோதுமை பிரெட் - 4
முட்டை - 2
மயோனஸ் - தேவையான அளவு
கேரட் - 1
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
புதினா சட்னி - தேவையான அளவு

செய்முறை :
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு மெல்லிய துண்டுகளாக வட்டமாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கோதுமை பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
டோஸ்ட் செய்த கோதுமை பிரெட்டின் ஒரு புறத்தில் புதினா சட்னி தடவி பின்னர் அதன் நடுவில் வேகவைத்து வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயத்தை வைத்து மேலே டொமேட்டோ கெட்சப், மயோனஸ் ஊற்றி மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
கோதுமை பிரெட் - 4
முட்டை - 2
மயோனஸ் - தேவையான அளவு
கேரட் - 1
வெங்காயம் - 1
வெள்ளரிக்காய் - 1
புதினா சட்னி - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - தேவையான அளவு

செய்முறை :
முட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு மெல்லிய துண்டுகளாக வட்டமாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், வெள்ளரிக்காய், கேரட்டை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கோதுமை பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளவும்.
டோஸ்ட் செய்த கோதுமை பிரெட்டின் ஒரு புறத்தில் புதினா சட்னி தடவி பின்னர் அதன் நடுவில் வேகவைத்து வெட்டிய முட்டையை வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய், கேரட், வெங்காயத்தை வைத்து மேலே டொமேட்டோ கெட்சப், மயோனஸ் ஊற்றி மற்றொரு பிரெட்டால் மூடி பரிமாறவும்.
சூப்பரான அவித்த முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரெட்டில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பிரெட் வைத்து சூப்பரான குளுகுளு குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரெட் - தேவைக்கேற்ப,
பால் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,

செய்முறை
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.
கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.
சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
பிரெட் - தேவைக்கேற்ப,
பால் - 1/2 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பாதாம் மில்க் பவுடர் - 2 டீஸ்பூன்,
கன்டன்ஸ்டு மில்க் - 1/2 டின்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
முந்திரி, பிஸ்தா, பாதாம் - தேவைக்கேற்ப.

செய்முறை
பிஸ்தா, பாதாமை ஊற வைத்து தோல் உரித்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
முந்திரியையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பிரெட்டின் ஓரத்தை வெட்டி விட்டு மிக்ஸியில் போட்டு தூளாக்கவும்.
கடாயில் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் கன்டன்ஸ்டு மில்க், பிரெட் தூள் கலந்து கொதிக்க விடவும்.
சிறிது பாலில் ஊற வைத்த குங்குமப் பூவை சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் சேர்க்கவும்.
அடுத்து அதில் சோள மாவு, பாதாம் மில்க் பவுடரை கொதிக்கும் பாலில் கலக்கவும்.
அடுத்து அதில் நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரியை சேர்த்து சற்று திக்கான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
கலவை ஆறிய பின் குல்ஃபி மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
சூப்பரான பிரெட் குல்ஃபி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆப்பிள் டீ சுவையாக இருப்பதோடு அதிக ஆரோக்கியம் நிறைந்தது. முக்கியமாக ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். ஆப்பிள் டீயில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் - 1
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2

செய்முறை:
ஆப்பிள் பழத்தை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதனுடன் போதுமான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தது இறக்கி வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
ஆப்பிள் - 1
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை:
ஆப்பிள் பழத்தை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதனுடன் போதுமான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
அடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தது இறக்கி வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
குறிப்பு- நாட்டு சர்க்கரை பிடிக்காதவர்கள் தேன் கலந்தும் பருகலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஹோட்டல் ஸ்டைலில் செய்யும் இந்த இறால் உருண்டை குழம்பு மிகவும் அருமையாக இருக்கும். சாதம், தோசை, சப்பாத்திக்கு அருமையான இறால் கோலா உருண்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
இறால் - முக்கால் கிலோ,
கடலை மாவு - அரை கப்,
சின்ன வெங்காயம் - 150 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 4,
மீன் வறுவல் மசாலா - 50 கிராம்,
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
சோம்பு, சீரகம், கசகசா - தலா ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்,
தேங்காய் - அரை மூடி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,

செய்முறை :
இறாலை நன்றாக சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் முக்கி எடுத்து தனியே வைக்கவும்.
கொத்தமல்லி, சின்ன வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்துடன் சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மீன் வறுவல் மசாலா, மிளகுத் தூள், இஞ்சி - பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், அரைத்து வைத்த வெங்காய விழுது, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு திக்கான மாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொரு இறாலாக தனியாக எடுத்து மாவுடன் உருட்டி, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிய பின்னர், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
அரைத்த தேங்காய் விழுதை அதனுடன் கலந்து, திக்கான பதம் வந்ததும் பொரித்த இறால் உருண்டைகளை சேர்த்து, அடுப்பை ‘சிம்’மில் வைத்து வேக விடவும்.

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

குழம்பு திக்கான பதம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்த மல்லி தூவி இறக்கினால்… சுவையான இறால் கோலா உருண்டை குழம்பு ரெடி!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெல்லிக்காய் டீயை பருகலாம். இன்று இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்
நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்
குறிப்பு - நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை - 2 கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்,

செய்முறை
ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும்.
விருப்பப் பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.

வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்.

சூப்பரான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
மாறிவரும் வாழ்க்கைச் சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை பரவலாக எல்லோருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் இருக்கிறது. பெண்களுக்கான உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. தினமும் ஒரு மூலிகை பானம் அருந்தினால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அந்த வகையில் இன்று மருத்துவ உணவான ஆவாரம் பூ டீ தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆவாரம்பூ பொடி - ஒன்றரை டீஸ்பூன் (காயவைத்து அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி - சிறிய துண்டு ஒன்று
கருப்பட்டி - சிறிய துண்டு
மிளகு அரை - டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்

செய்முறை :
ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் இஞ்சி, ஆவராம் பொடி கலவையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

ஏலக்காய் - 2

நிறம் மாறியதும் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சூடான சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மாங்காய் - மட்டன் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 100 கிராம்
மட்டன் - 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
மாங்காய் - கால்பகுதி மாங்காய் (நறுக்கவும்)

செய்முறை:
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மாங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது பாதியளவு, மிளகாய்த்தூள், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பச்சை மிளகாய், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மாங்காய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மாங்காய் நன்றாக வெந்ததும கடைசியில் வேக வைத்த மட்டனைப் போட்டுப் புரட்டி அடுப்பை அணைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மாங்காய் - மட்டன் குழம்பு ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சியா விதையும், இளநீரும் கலந்து உட்கொள்ளும் பொழுது உடல் சிறந்த ஊட்டச்சத்தினை பெறுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. சிறு நீரக கல் உருவாவதை தடுக்கின்றது.
இளநீருக்கு எண்ணற்ற நல்ல குணங்கள் உண்டு. இயற்கையின் ஆரோக்கிய உணவு இது. இதனைப் போன்று சியா விதைகளும். இந்த சிறிய விதையில் நார்சத்து, புரதம், நோய் எதிர்ப்பு சக்திகள் கொட்டிக் குவிந்துள்ளது. சியா விதைகள் உடல் வீக்கத்தினைக் குறைக்கும். சர்க்கரை அளவினைக் கட்டுப்படுத்தும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கும் தன்மைகள் உண்டு.
தேவையான பொருட்கள்
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
அனைத்தினையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
இதனை 10-15 நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து குடிக்கவும்.
சூப்பரான இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ் ரெடி.
தேவையான பொருட்கள்
இளநீர் - 1 கப்
சியா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - சிறிதளவு

செய்முறை
அனைத்தினையும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
இதனை 10-15 நிமிடங்கள் கழித்து நன்கு கலந்து குடிக்கவும்.
சூப்பரான இளநீர் சியா விதை லெமன் மிக்ஸ்டு ஜூஸ் ரெடி.
இதனை தொடர்ந்து தினமும் (அ) வாரம் மூன்று முறை குடிக்கலாம். ஆனால் மிக அதிக அளவில் உட்கொண்டால் வயிறு கோளாறு ஏற்படும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
வெங்காயம் - 500 கிராம்
தக்காளி - 500 கிராம்
தயிர் - 1 கப்
சிகப்பு மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 150 கிராம்
இஞ்சி விழுது - 1 1/2 ஸ்பூன்
பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை -1 கப்
புதினா - 1 1/2 கப்
ப. மிளகாய் - 5
பட்டை பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
தனியா பொடி - 1 தேக்கரண்டி
கலர் பொடி - 1 சிட்டிகை
எலுமிச்சை பழம் - 1

செய்முறை:
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பாதி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பாதி கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அடுத்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு வதங்கியவுடன் சிக்கன், தயிர், தனியா பொடி, 1/2 மூடி எலுமிச்சை சாறு தக்காளி, மீதி கொத்த மல்லி, புதினாவையும் போட்டு வேக விடவும்.
சிக்கன் நன்றாக வெந்தது எண்ணெய் பிரிந்து வரும் போது 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும்
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கலர் பொடி, உப்பு போடவும். அரிசியை 20 நிமிடம் முன்பே ஊற வைத்து நன்றாக வடிகட்டவும்.
அரிசியை போட்டு நன்றாக கிளரவும். அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்க வேண்டும்.

நெய் - ஒரு தேக்கரண்டி

முக்கால் பகுதி அரிசி வெந்தவுடன் தீயை குறைத்து மீதமுள்ள பாதி எலுமிச்சை ஜீஸ், பொரித்து வைத்த வெங்காயத்தை போட்டு சட்டி்யை சுற்றிலும் துணி கட்டி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான ஸ்பெஷல் பெங்களூர் சிக்கன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று இவை இரண்டையும் வைத்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பழுத்த தக்காளி - 3 கப்
வெள்ளரி - 1/2 கப்
கிராம்பு - 1
தயிர் - 1/4 கப்
புதினா இலைகள் - 10
டிஸ்டீவியா (தேன் புல்) - 1/4 தேக்கரண்
கல் உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி
பழுத்த தக்காளி - 3 கப்
வெள்ளரி - 1/2 கப்
கிராம்பு - 1
தயிர் - 1/4 கப்
புதினா இலைகள் - 10
டிஸ்டீவியா (தேன் புல்) - 1/4 தேக்கரண்
கல் உப்பு - 1/4 தேக்கரண்டி
ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

செய்முறை:
தக்காளி, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, வெள்ளரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
அடுத்து அதில் தயிர், ஸ்டீவியா மற்றும் உப்பைச் சேர்த்து மென்மையாகும் வரை நன்கு அரைக்கவும்.
அடுத்து அதில் ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள் மற்றும் புதினா சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கி பரிமாறவும்.
சத்தான சுவையான தக்காளி வெள்ளரிக்காய் ஜூஸ் ரெடி
கலந்த கலவையை அதில் ஊற்றி பரிமாறவும்.