search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜவ்வரிசி காய்கறி கஞ்சி
    X
    ஜவ்வரிசி காய்கறி கஞ்சி

    புரதம் நிறைந்த ஜவ்வரிசி காய்கறி கஞ்சி

    ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. இன்று ஜவ்வரிசி, காய்கறி சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நைலான் ஜவ்வரிசி - அரை கப்
    இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
    கேரட் - 1
    பீன்ஸ் - 5
    கடைந்த மோர் - அரை கப்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பச்சை மிளகாய் - ஒன்று
    உப்பு - தேவைக்கேற்ப.

    ஜவ்வரிசி

    செய்முறை:

    பீன்ஸ், கேரட், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

    குக்கரில் தேவையான நீர் விட்டு உடைத்த ஜவ்வரிசி, பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

    பிறகு இறக்கிவைத்து… கடைந்த மோர் உப்பு சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×