என் மலர்tooltip icon

    சமையல்

    உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்களுக்கு சீரகம் ஒரு அருமருந்து. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் சீரகத்தை தவறாமல் தங்கள் உணவில் எடுத்து கொள்ளலாம்.
    தேவையான பொருள்கள்:

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    நெய் - 2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 2 மேசைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - சிறிய துண்டு
    கிராம்பு - 2
    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை:

    வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும். பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும்.

    சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனதும் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி போட்டு மூடவும்.

    நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறி மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

    சுவையான ஜீரா புலாவ் தயார்.

    குருமா வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது. ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்

    வல்லாரை கீரை - 1 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    பூண்டு - 5 பல்
    பெருங்காய தூள் - 1/2 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - தேவையான அளவு
    உப்பு - சிறிதளவு
    எண்ணெய்  - 1 மேஜை கரண்டி

    தாளிக்க

    கடுகு, சீரகம், கறிவேப்பிலை

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கிய பின்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.  

    கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

    சத்தான வல்லாரை கீரை பொரியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்களை :

    சிக்கன் - 100 கிராம்
    நூடுல்ஸ் - 1 பாக்கெட்
    வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 1 தேக்கரண்டி
    தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
    வெங்காயத் தாள் - தேவையான அளவு

    செய்முறை:

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்ஸை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர் அதில் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சிறிது சர்க்கரை, வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முள்ளங்கி - 2 கப்
    வெங்காயம் - 2
    கடலை பருப்பு - 2 ஸ்பூன்
    தனியா - 2 ஸ்பூன்
    வரமிளகாய் - 4
    பூண்டு பல் - 2 பல்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை :

    வெங்காயம், முள்ளங்கியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, தனியா, பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.

    நன்கு வெந்தவுடன் வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள வகை வகையாய் சட்னி, சாம்பார் வைத்தாலும், வடகறி இருந்தால் அந்த உணவே விருந்து தான். அரைமணி நேரத்தில் சுவையான வடகறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலைப் பருப்பு - ஒரு கப்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் -  3
    தக்காளி -  2
    சோம்பு  - 1 ஸ்பூன்
    பட்டை, லவங்கம், கிராம்பு  - தலா 1
    எண்ணெய்  - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    முந்திரி - 10
    மஞ்சள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
    தேங்காய் - அரை கப்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    இட்லி தட்டில் துணி பரப்பி அதன் மேல் அரைத்த மாவை கொட்டி 15 நிமிடங்கள் வேக வைத்து உதிர்த்து வைத்து கொள்ளவும்.

    தேங்காயுடன் முந்திரி, சோம்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை  வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

    பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    குழம்பு கொதித்ததும் வேக வைத்த கடலை பருப்பை சேர்த்துக் கிளறவும்.

    அடுத்து அரைத்த தேங்காய் விழுதை சேர்க்க வேண்டும்.

    ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான வடகறி தயார்..

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ் - 150 கிராம்
    பட்டாணி - 1 கைப்பிடி
    உப்பு  - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்து வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    தண்ணீர் வற்றிய உடன் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

    சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைக்காய் வாய்வு என்று பலரும் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் வாழைக்காயுடன் மிளகு சேரும் போது உங்கள் பயம் பறந்தேவிடும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைக்காய் - 1
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கடுகு - 1 டீஸ்பூன்

    அரைப்பதற்கு

    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1/2 இன்ச்
    பூண்டு - 5
    மிளகு - 3 டீஸ்பூன்

    செய்முறை

    வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும். வெட்டிய வாழைக்காயை அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.

    வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

    பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள்

    திணை அரிசி - 1 கப்
    உளுந்து - அரை கப்,
    வெந்தயம் - 2 தேக்கரண்டி,
    உப்பு - தேவையான அளவு,
    கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி,
    சின்ன வெங்காயம் - 200 கிராம்,
    ப.மிளகாய்  - 4,
    எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு,
    சீரகம் - சிறிதளவு.

    செய்முறை

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    திணை அரிசி, உளுந்து, வெந்தயத்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நன்றாகப் பதமாக அரைக்கவும்.

    இதனுடன் உப்பு சேர்த்து ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி புளித்த மாவுடன் சேர்த்துக் கலக்கவும்.

    பணியாரச் சட்டியில் எண்ணெயைத் தடவி, கலந்த மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.

    கடலைத் துவையல், புதினா துவையல், தேங்காய்ச் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட இந்த ஸ்நாக்ஸ் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெபிசி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    ஜவ்வரிசி - 1 கப்
    வேக வைத்த உருளைக்கிழங்கு -2
    உப்பு - தேவைக்கேற்ப
    பச்சை மிளகாய் - 1
    வெங்காயம் - 1
    கொத்தல்லி  - சிறிதளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - பொரிக்க
    கறிவேப்பிலை -சிறிதளவு

    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை நன்கு கழுவி சிறிது நீர் தெளித்து 2 மணி நேரம் ஊற விடவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து போட்டு அதனுடன் ஜவ்வரிசி, ப.மிளகாய், வெங்காயம்,  கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

    இந்த மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சுவையான வித்தியாசமான ஜவ்வரிசி உருளைக்கிழங்கு வடை தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவல் ஓர் ஆரோக்கியமான காலை உணவு. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    காய்ந்த மிளகாய் - 2
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய்த்துருவல் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை அலசி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்த பின்னர் தண்ணீர் இல்லாமல் பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.

    பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் அதில் வெந்த பருப்பு, ஊறிய அவல், தேங்காய்த்துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.

    அவல் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பருப்பு - 25
    சர்க்கரை - 1/4 கிலோ
    ஏலக்காய் தூள் - பாதாம் எஸ்சென்ஸ்
    பால் - 1 லிட்டர்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

    செய்முறை:

    வெதுவெதுப்பான பாலில் குங்குமப் பூவை ஊறவைக்கவும்.

    பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

    பாலை நன்றாக காய்ச்சவும், பால் அரை பங்காக சுண்டியதும் சர்க்கரை சேர்க்கவும்.

    பிறகு பாதாம் விழுதை போட்டு 5 நிமிடம் அடி பிடிக்காமல் கிளறவும்

    பால் திக்காகும் போது ஏலக்காய் தூள், ஊறவைத்த குங்கும பூ சேர்த்து கிளறினால் பாதாம் கீர் ரெடி…

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    டயட்டில் இருப்பவர்கள் காலையில் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இப்ப இந்த உணவை சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரெட் - 4 துண்டுகள்
    முட்டை - 3
    பெ.வெங்காயம் - 1
    மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

    அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும்.

    முட்டைஉதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை போட்டு கிளறவும்.

    உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×