search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முட்டைகோஸ் பட்டாணி பொரியல்
    X
    முட்டைகோஸ் பட்டாணி பொரியல்

    செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

    தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ் - 150 கிராம்
    பட்டாணி - 1 கைப்பிடி
    உப்பு  - தேவையான அளவு
    துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க

    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    முட்டைக்கோசை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு தண்ணீரை வடித்து வைக்கவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வேக வைத்து வடித்து வைத்த முட்டைகோஸ் சேர்த்து தண்ணீர் சிறிது தெளித்து வேகவிடவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    தண்ணீர் வற்றிய உடன் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

    சுவையான முட்டைக்கோஸ் பட்டாணி பொரியல் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×