search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோதுமை பிரட் முட்டை உப்புமா
    X
    கோதுமை பிரட் முட்டை உப்புமா

    நீங்க டயட்டில் இருக்கீங்களா? அப்ப இந்த உணவை சாப்பிடலாம்

    டயட்டில் இருப்பவர்கள் காலையில் புத்துணர்ச்சியுடன், சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமா? இப்ப இந்த உணவை சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நீண்ட நேரம் பசி எடுக்காது.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரெட் - 4 துண்டுகள்
    முட்டை - 3
    பெ.வெங்காயம் - 1
    மிளகுத் தூள், சீரகம் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எண்ணெய் - தேவைக்கு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு தாளிக்கவும்.

    பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

    அதனுடன் மிளகுத்தூள், உப்பு தூவவும்.

    முட்டைஉதிரியாக வந்ததும் பிரெட்டு துண்டுகளை போட்டு கிளறவும்.

    உப்புமா பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கோதுமை பிரட் முட்டை உப்புமா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×