என் மலர்
குழந்தை பராமரிப்பு
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.
குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் டென்சன் ஆகி கத்துவது வாடிக்கை. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாங்கள் தான் குழந்தைகளை அடிக்கவில்லையே காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கும் விதமாக, குழந்தைகளை மிரட்டுவதற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக என்று எப்படி சமாதானம் சொன்னாலும் பாதிப்பு என்பது உண்மை தான். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற் போல எப்படி அணுக வேண்டும் என்பதற்கான சில டிப்ஸ் இதோ...
இந்த வயதில் குழந்தைகளுக்கு அரவணைப்பு மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் தொனியில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. அந்த அதிர்வை குழந்தைகளால் ஏற்றுக் கொள்வது சிரமம் என்பதால் தூக்கத்தில் அதிர்ந்து எழுந்து அழும், இதனால் குழந்தையின் தூக்கம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க மெலிதாக அவர்களை அணுகுவதே சிறந்தது. அதற்கு விரைவாக ரெஸ்பான்ஸ் கிடைப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.
குழந்தைகளிடத்தில் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த வயதில் குழந்தைகள் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடும். தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பிக்கும். இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர் குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன் எண்ணத்தை வெளிப்படுத்தாது தனிமைபடுத்திக் கொள்ள அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடும்.
கோபத்தை அன்பால் அணுகுங்கள், ஓடி வந்து எதையாவது சிந்திவிட்டால், ஏன் ஓடி வந்தாய்? என்று கத்தி இனிமே வந்த கால ஒடச்சுருவேன் என்று மிரட்டாமல், கொட்டிருச்சு வாங்க க்ளீன் பண்ணலாம் என்று அழைத்து நீங்கள் சுத்தம் செய்யும் போது உடன் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இரட்டிப்பு வேலை என்று நினைப்பதை குழந்தையிடம் பக்குவமாக உணர்த்துங்கள். மெதுவா வந்தா கொட்டியிருக்காதுல்ல இனிமே வீட்டுக்குள்ள ஓடிவரக்கூடாது என்று புரியவைத்திடுங்கள்.
குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதேயளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு. சிறு வயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும் போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவர் அது பொய்க்கும் போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவர். அதனால் அன்பாக திருத்துங்கள்.கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்

ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.
தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...!
தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம் இடம் தான் அதிகமாக இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆண்கள் தனது குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு தந்தையால் ஆண் குழந்தைகளின் உள் உணர்வுளை புரிந்து கொள்வதை விட பெண் குழந்தைகளின் உள் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தனது குழந்தைக்கு வேண்டியதை செய்ய இவர்களால் முடியும்
என்ன தான் பெண் குழந்தைகள் தன் தாயுடன் நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, தன் தந்தையை கண்டவுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ளும். பெண் குழந்தைகளுக்கு தன் தந்தையுடன் நேரத்தை செலவழிப்பது மற்றும் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.
பெண் குழந்தைகளால் மற்றவர்களை காட்டிலும், தனது முகபாவனைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
தாயை காட்டிலும் தந்தையால் தனது பெண் குழந்தைக்கு அதிக வெளியுலக அறிவை கொடுக்க முடியும். தந்தையுடன் செலவிடும் நேரங்களில் பெண் குழந்தைகள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிகிறது.
பெரும்பான்மையான குழந்தைகள் தங்களது தந்தையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். தாயுடனான தந்தையின் அன்பு ஒரு குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை பேணிக்காக்கிறது.

தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாமா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்.
தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான விடையை இப்போது பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், எஃப்.டி.ஏ. ஒப்புதல் அளித்த வலிநிவாரணி மாத்திரைகள் குறித்த முழுத் தகவல்கள், அந்த மாத்திரைகளால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகியவற்றை முழுவதுமாக அறிந்த பதிவுபெற்ற மருத்துவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் குழந்தைகளுக்கு ஏற்ற அளவு கொடுக்கலாம்.
சரியான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வலிநிவாரணி மாத்திரைகள், டாக்டர் பரிந்துரைக்காத மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு, சைனஸ் பிரச்சனை, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம்.
அதற்கு பாராசிட்டமால் கொடுக்கலாம். வயிற்றுவலி மட்டும் இருந்தால் எந்த இடத்தில் வலி உள்ளது, வலியின் தன்மை ஆகியவற்றை பொறுத்து மாத்திரை கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன.
இன்றைய காலத்தில் உடல் பருமன் பெரியவர்களை மட்டும் பாதிக்கவில்லை, குழந்தைகளையும் தான். அதிலும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமனால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு, இதய நோய், தூக்கமின்மை போன்ற நோய்கள் விரைவில் வந்துவிடுகின்றன. ஆகவே அவர்களுக்கு இத்தகைய நோய்கள் எல்லாம் தாக்காமல் இருக்க, தேவையில்லாத கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டாம்.
ஆனால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது என்பது சற்று கடினமானது. ஏனெனில் அவர்களுக்கு பிடித்தவற்றை சாப்பிடாமல் வைப்பது என்பது மிகவும் கடினம். மேலும் அவர்களது டயட், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிகமான அளவில் உண்ணுதல் போன்றவைகளும் குழந்தைகளை குண்டாக்குகின்றன. ஆகவே அவர்களை சரியாக பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* குழந்தைகள் குண்டாவதற்கு அவர்களின் உடலில் இருக்கும் மரபணுக்கள் பெரும்பாலும் காரணமாகின்றன. ஆகவே மறக்காமல் மருத்துவரை உடனே அணுக வேண்டும். ஏனெனில் மரபணுவில் ஏதாவது திடீரென மாற்றங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகள் குண்டாவார்கள்.
* குழந்தைகளின் உடல் எடை சரியாக உள்ளதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டே வர வேண்டும். மேலும் அதற்கேற்றவாறு உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் அதிகமான உணவுப் பொருட்களை கொடுத்தால், அதில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குழந்தைகளின் உடலில் சென்று உடல் பருமனை ஏற்படுத்திவிடும். ஆகவே அவர்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடை இருக்குமாறு பார்த்து வரவும்.
* குழந்தைகளை எப்போதும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும். அதாவது, குழந்தைகள் வீட்டில் உட்கார்ந்து டி.வியை பார்த்துக் கொண்டிருந்தால், அவர்களை விளையாட சொல்ல வேண்டும். ஏனெனில் இதனால் குழந்தைகளின் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் ஓடுதல், நடத்தல், குதித்தல், சைக்கிளிங் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாட வைக்கலாம்.

* குழந்தைகளுக்கு அதிகமான அளவில் பாஸ்ட் ஃபுட் உணவுகளான பிரன்ச் ப்ரைஸ், சிப்ஸ், ப்ரைடு சிக்கன், மில்க் ஷேக் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். ஏனெனில் இவற்றில் அதிக அளவு கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால், பிற்காலத்தில் இதய நோய் விரைவில் வந்துவிடும்.
* அதிக அளவில் கொழுப்புக்கள் உள்ள பாலைக் கொடுப்பதை விட, குறைந்த அளவில் கொழுப்புக்கள் இருக்கும் பாலை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பிற்காலத்தில் குண்டு தான் ஆவார்கள்.
* பால் பொருட்களை கொடுக்கும்போது கூட, கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* குண்டாகும் குழந்தைகள் விரைவில் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் குண்டாக இருப்பதால், நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். ஆகவே அவர்கள் எடையை குறைக்க ஊக்குவிப்பதோடு, அவர்களுடன் அன்பாக, பாசத்துடன் நடக்க வேண்டும்.
* மாலை வேளையிலோ அல்லது மற்ற வேளைகளிலோ, அவர்களுக்கு உண்ண உணவுகளை கொடுக்கும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளைக் கொடுக்காமல், அவர்களுக்கு ஏதேனும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆகவே, மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், குழந்தைகள் எடை கூடாமல், அழகாக பிட்டோடு இருப்பார்கள்.

தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்நேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.
தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும் என்று தெரியுமா? தலையணை வைப்பதால் குழந்தைக்கு இருக்கும் மெல்லிய நாஸ்ட்ரில்கள் அழுத்தம் பெற்று மூச்சுக்காற்று சென்று வர சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் குழந்தை திரும்பி படுக்கும் போது அது மூச்சுத்திணறலை உண்டாகும்.
மூச்சுத்திணறல் மட்டுமல்ல SIDS எனப்படுகின்ற Sudden Infant Death Syndrome ஏற்படக்கூட வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில் தலையணையில் இருக்கும் பஞ்சு, பீட்ஸ் போன்றவை குழந்தைகள் முழுங்கிவிடக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன.
பெரும்பாலான தலையணைகள் பாலிஸ்டர் அல்லது பேப்ரிக் கொண்டு தயார் செய்யப்பட்டவையாகவே இருக்கின்றன. இது குழந்தைகளுக்கு சூட்டை ஏற்படுத்திடும். கைக்குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிய நிலையிலேயே இருப்பதால் இது உடலுக்கும் பல கோளாறுகளை ஏற்படுத்திடும். இதனால் வரும் அதிக வியர்வை குழந்தைக்கு பாதிப்பை உண்டாக்கும். சில நேரங்களில் தலையில் அதிக சூடு, உடலில் குளிர் என வேறுபட்ட டெம்பரேச்சர் இருப்பதாலும் பாதிப்பு உண்டாகும்.
குழந்தைகளுக்கான தலையனை மிகவும் சாஃப்ட்டாக இருக்க வேண்டும் என்று தேடி வாங்கியிருப்போம். குழந்தைகளுக்கு சாஃப்ட்டான தலையணை தேவையில்லை மாறாக தலையணை உயரமில்லாமல் தட்டையாக இருந்தாலே போதும். நீண்ட நேரம் தூங்கும் குழந்தை உயரமான தலையனையால் குழந்தையின் கழுத்து எலும்பு பாதிக்கப்படும். இதனை தவிர்க்க தலையணை போடாமல் இருப்பதே நல்லது. இரண்டு வயது வரை தலையணை வைப்பதை தவிர்க்கவும்.

குழந்தைகள் வீடியோ கேம்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓடியாடி விளையாடினாலே அவர்களுடைய மூளையின் இயக்கம் அதிகரிக்கும்.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் குழந்தைகள் மேற்கொள்கிற, உடற்பயிற்சியானது, குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது.
குழந்தைகள் வீடியோ கேம்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஓடியாடி விளையாடினாலே அவர்களுடைய மூளையின் இயக்கம் அதிகரிக்கும். அறிவாற்றல் மேம்படுவதோடு கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவதால், அவர்களுடைய திறன்கள் அதிகரிக்கின்றன. ஊக்கப்படுத்துதல், நம்பிக்கை, தன் முன்னேற்றம், பெற்றோர்களுடனான உறவு ஆகிய வாழ்வியல் திறன்களும் அதிகரிக்கின்றன.
குழந்தைகள் சிறுவயதில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்தால், அது பிற்காலத்திலும் அவர்களை இதய நோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து காக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியானது, இயற்கையாகவே உடலின் இயக்கத்தை சீராக்குகிறது. இதயநோய்கள் வருவது இயல்பாகவே தடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி இதயத்துக்குச் செல்லும் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தைச் சீர்படுத்துகிறது.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் குழந்தைகள் மேற்கொள்கிற, உடற்பயிற்சியானது, குழந்தைகளின் கல்வியையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. உடல் உழைப்பு சார்ந்த பயிற்சிகள் சிறுவயதில் மட்டும் அல்லாமல், பொது வெளிகளிலும் வேகமாக இயங்கச் செய்கிற வாய்ப்பை அவர்களுக்கு வழங்குகிறது.

அடுக்கடுக்கான பலதரப்பட்ட துணிகள் இணைத்து உருவாகும் ஆடைகள் அணியும் பெண் குழந்தைகள் உயிரோவியமாய் உலா வரும் பொம்மைகள் போல காட்சி தருகின்றனர்.
நமது வீட்டின் குட்டி இளவரசிகளாக உலா வரும் பெண் குழந்தைகளுக்கான வண்ணமயமான ஆடைகள் புதிய வடிவமைப்பில் நவீன டிரெண்டிற்கு ஏற்ப விற்பனைக்கு வந்துள்ளன. இளந்தேவதைகளுக்கு உரிய நவீன ஆடைகள் அடர்த்தியான வண்ண சாயல் என்பதுடன் மென்மையான வண்ண சாயல் அதிகம் கொண்டவாறு வருகின்றன.
புதிய ஆடைகள் விருந்துகள், விழாக்கள் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்றவாறு பிரம்மாண்டமான வடிவில் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் அழகிய வேலைப்பாடுகள் நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளதால் கண்ணை கவரும் வகையில் உள்ளன. அடுக்கடுக்கான பலதரப்பட்ட துணிகள் இணைத்து உருவாகும் ஆடைகள் அணியும் பெண் குழந்தைகள் உயிரோவியமாய் உலா வரும் பொம்மைகள் போல காட்சி தருகின்றனர்.
விதவிதமான குட்டி தேவதை ஆடைகள்:
குட்டி தேவதைகள் அணிகின்ற ஆடைகள் எனும்போது அழகிய பிராக், கவுன், புல் பிராக், லெஹன்கா மஸ்தானி, அனார்கலி, மசக்கலி என பல பெயர்களில் மாடர்ன் மற்றும் இந்திய கலாசார ஆடைகள் வருகின்றன. அத்துடன் நமது பாரம்பரிய பட்டு பாவாடை சட்டை, குட்டீஸ் போன்றவையும் அசத்துகின்றன. இவையனைத்தும் அவ்வப்போது புதிய வடிவமைப்புகள் மற்றும் சில வேறுபாடுகள் செய்யப்பட்டு நவீன வடிவில் வருகின்றன. எப்படி இருப்பினும் பெண் குழந்தைகள் அணிகின்ற ஆடைகள் அனைத்தும் ஒவ்வொரு விதமான தனிசிறப்பு கொண்டவையாக உள்ளன.
பிரம்மாண்டமான பார்ட்டி பிராக்:
பெண் குழந்தைகள் எனும்போது வயதுக்கு தக்கவாறுகுட்டை பிராக் மற்றும் நீள பிராக் போன்றவை வருகின்றன. ஆனால் தற்போது அதிகளவு நீளமான பிராக்களே ஆர்வத்துடன் வாங்கப்படுகின்றன. நீளமான பிராக் என்பவை இரட்டை மற்றும் மூன்று துணிகள் வரிசைப்படுத்தப்பட்டு மேற்புறம் அழகிய நெட் துணி பூ வேலைப்பாடுகள் மற்றும் சரிகை வேலைப்பாடுகள் செய்யப்படும். பெரிய அளவிலான பூக்கள் நெட் துணியில் உருவாக்கப்பட்டு தோள் பகுதியில் இருந்து வளைவாக கீழ்பகுதி வரை நீண்ட கொடி போல் படர விடப்படும் பிராக் இரட்டை வண்ண சாயலுடன் கிடைக்கின்றன. மெல்லிய வண்ண சாயல் பூக்கள் என்றால் அடர்த்தியான பின்னணி ஆடையமைப்பு உள்ளவாறு உருவாக்கப்படுகிறது.
உலோக பூக்கள், மணி பூக்கள், லேஸ்யால் உருவான பூக்கள், சரிகை மற்றும் எம்பிராய்டரி பூக்கள் என பலவிதமான பூக்கள் பூத்திருப்பது போன்ற நீளமான பிராக் கிடைக்கின்றன. இவை பாதம் வரை நீண்ட ஆடை என்பதால் அணிந்த பெண் குழந்தை ஓர் இளவரசி போல் கம்பீரமாய் நடைபயில்வாள்.
அலங்கார பொருட்கள் இணைப்புடன் கூடிய ஆடைகள்:
நாம் வாங்கும் ஆடைக்கு ஏற்ப அதற்குரிய இணைப்பு அலங்கார பொருட்களை தனித்தனியாக வாங்குவோம். ஆனால் தற்போது கவுன் மற்றும் பிராக் மாடல் ஆடைகளுக்கு ஏற்ற காதணி, கழுத்து மாலை, இடுப்பில் கட்டும் மணிபட்டை, காலணி மற்றும் பிரேஸ்லெட் வளையல் போன்ற அனைத்தும் இணைத்து கிடைக்கின்ற ஆடைகளும் வருகின்றன. இதன் மூலம் எந்த டிரஸ் எந்த மாதிரி அலங்கார பொருள் அணிய வேண்டும் என்ற கவலையே ஏற்படாது. அத்துடன் ஆடைக்கேற்ற அழகிய வடிவமைப்பு பொருட்கள் என்பதால் அணியும் அனைவரும் ஓர் தனிக்கம்பீர தோற்றத்துடன் ஜொலிப்பர்.
ஜொலிக்கும் பாரம்பரிய ஆடைகள்:
பாரம்பரிய ஆடைகள் எனும்போது லெஹன்கா, மஸ்தானி, மசக்கலி, பாவாடை சட்டை போன்ற ஆடைகள் அதிகமாக சரிகை வேலைப்பாடும், எம்பிராய்டரி செய்யப்பட்டும் கிடைக்கின்றன. இதில் வருடத்திற்கு ஒருமுறை சில மாற்றம் செய்யப்பட்டு புதிய கற்கள் மற்றும் மணிகள் பதித்தவாறும், அதிக பொலிவு கொண்ட தங்க மற்றும் வெள்ளி நிற சரிகை வேலைப்பாடும் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. இவைகளும் ஓர் குட்டி இளவரசி போல தோன்றும் வகையில் நீண்ட கைகள், கழுத்துடன் காலர், பதக்கங்கள் கொண்ட மேலாடை என பிரம்மிப்புடன் உலா வருகின்றன.

இருட்டைக் கண்டாலே குழந்தைகள் அரண்டு போகும். அப்படி அவர்கள் இருட்டைப் பார்த்து பயப்படாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நாம் வீட்டில் இருக்கும்போது குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் இருட்டைப் பார்த்தாலே பயப்படுவார்கள். அதுபோன்ற சமயங்களில் குழந்தைகள் பயப்படாமல் இருப்பதற்கு என்ன மாதிரியான விஷயங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?
குழந்தைகள் தூங்கும் படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் வரும் வகையிலான விளக்குகளைப் போடுங்கள். அப்போது குழந்தைகள் ஓரளவு பயமின்றி நிம்மதியாகத் தூங்குவார்கள்.
இருட்டாக இருக்கும்போது என்ன மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதைக் குழந்தைகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அந்த விஷயங்களைப் பற்றி விளக்கங்களைக் கொடுத்து தெளிவுபடுத்துங்கள்.
இருட்டில் இருக்கும்போதும் வெளிச்சமாக இருக்கும்போதும் வீட்டிலோ அல்லது அவர்களுடைய அறையிலோ எந்த மாற்றங்களும் நிகழாது என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். அது அவர்களுடைய பயத்தைப் போக்கும்.
குழந்தைகள் இருக்கும் அறையில் முழுமையாக வெளிச்சம் இருக்கும்படி போடப்பட்டிருக்கும் விளக்குகளின் வெளிச்த்தின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கலாம்.
ஒரு வாரம் முழுமையாக வெளிச்சம் தரும் விளக்கு இருந்தால் அடுத்த வாரம் அதைவிட கொஞ்சம் மங்கலாக இருக்கும் விளக்கும் என, வெளிச்சத்தைக் குறைத்துக்கொண்டே செல்லுங்கள். அப்போது இருட்டு என்பது ஒன்றும் பயம் கிடையாது என்று கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே உணர்ந்து கொள்ள ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகள் அறையில் விளக்கை அணைத்துவிட்டு அவர்களுடன் எப்போதும் போல பேசிக்கொண்டு இருங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய பயத்தை விலக்கும்.

பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் குறும்பு செய்யாத குழந்தைகளை பார்க்கவே முடியாது. நிறைய பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே அவர்களை கட்டுப்பாட்டுடன் வைப்பதற்கு, அவர்கள் ஏதேனும் குறும்போ அல்லது தவறு செய்து விட்டால், உடனே அவர்களை அடிப்பார்கள்.
அதாவது குழந்தைகளை சிறு வயதிலேயே திருத்தாவிட்டால், அந்த பழக்கம் அவர்களிடமிருந்து மாறாமல் இருக்கும் என்பதற்காக, அவர்களை அடிக்கின்றனர். அவ்வாறு அடிக்கும் பெற்றோர்கள் கொஞ்சம் கூட குழந்தைகளது மனதை புரிந்து கொள்ளாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளை அடித்தால், அவர்கள் பிற்காலத்தில் எவ்வாறு கெட்டவர்களாக மாறுவார்கள் என்பது பற்றி புரியாமல் இருக்கின்றனர். ஆகவே அத்தகைய பெற்றோர்களுக்கு குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ என்னவெல்லம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
* குழந்தைகள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களை அப்போது அடித்தால், அவர்கள் சுபாவம் மிகவும் கடுமையாகிவிடும். அதாவது யாரிடமும் சரியாக பேசாமல், அப்படி யாராவது பேசினால் சிடுசிடுவென்று பேசுவது என்பன போன்ற செயல்களில் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். மேலும் இந்த சுபாவம் வருவதற்கு வேறு யாரும் காரணம் இல்லை, பெற்றோர்கள் தான். ஆமாம், அவர்கள் தவறு செய்யும் போது அதை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்காமல், உடனே அடிப்பது, திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மனதில் அந்த பழக்கம் பழகி, பின் அவர்களும் அவ்வாறே நடக்க ஆரம்பிப்பார்கள்.
* குழந்தைகளை அடித்தால் மட்டும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரும் என்று நினைப்பதை முதலில் மனதில் இருந்து பெற்றோர்கள் நீக்க வேண்டும். ஏனெனில் இவற்றால் அவர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்களாக மாறும் நிலைக்கு வந்துவிடுவர். அதிலும் குழந்தைகள் தவறு செய்து, பெற்றோர்கள் கடும் தண்டனையை குழந்தைகளுக்கு எப்போதும் கொடுத்தால், அவர்கள் அந்த தவறை மறுபடியும் செய்வர். அவற்றால் சில குழந்தைகள் பல கெட்ட பழக்கங்களையும் பழகிக் கொள்வர். ஆனால் அதையே பக்குவமாக சொல்லி புரிய வைத்துப் பாருங்கள், குழந்தைகள் புரிந்து கொண்டு எந்த நேரத்திலும் அந்த செயலை மறுமுறை செய்யாமல் இருப்பர்.
* குழந்தைகளுக்கு கடுமையாக தண்டனையை கொடுத்தால், பின் குழந்தைகளது மனதில் பெற்றோருக்கு தம் மீது அக்கறை, பாசம் எதுவுமில்லை என்று நினைத்து, தவறான பாதையில் வேண்டுமென்றே செல்ல ஆரம்பிப்பார்கள். சிறிது காலத்தில் குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதையே நிறுத்திவிடுவர். பின் அவர்கள் தனிமையிலேயே இருந்து, தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் கூட பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பர். பின் அவர்கள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு பாதிக்கப்படுவார்கள்.
* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர்களின் செயல்களால், குழந்தைகள் வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, சோம்பேறித்தனத்துடன், எதையும் சரியாக செய்யாமல், சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றை மட்டும் செய்வார்கள். குழந்தைகள் என்றால் நன்கு சுறுசுறுப்போடு விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சோம்பேறித்தனத்தோடு இருந்தால், உடல் எடை அதிகரித்து, பின் அவஸ்தைக்குள்ளாக நேரிடும்.
ஆகவே பெற்றோர்களே! இனிமேல் குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், அவர்களிடம் அவர்களது தவறை எடுத்துச் சொல்லி புரிய வைத்தால், அதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். முக்கியமாக அடித்தால் தான் குழந்தைகள் திருந்துவார்கள் என்ற தவறான எண்ணத்தை பெற்றோர்கள் தங்கள் மனதில் இருந்து அழித்துவிட்டால், குழந்தைக்கும் பெற்றோருக்கும் உள்ள உறவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம்.
குழந்தைகள் சாப்பிடும் போது பிரச்சனை செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்கள் மிகுந்த குஷியில் இருப்பதால் செய்யும் குறும்புதனம், மற்றொன்று அவர்களுக்கு உணவு பிடிக்காததாலும் தான். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உணவை கொடுக்கும் முன், அவர்கள் செய்யும் பிரச்சனைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து கொண்டால், பின்னர் அவர்களிடம் எந்த ஒரு சண்டையும் போடாமல் உணவை ஊட்டிவிடலாம். இப்போது அந்த பிரச்சனைகள் என்னவென்று பார்க்கலாமா!!!
* குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது அவர்கள் செய்யும் ஒரு முக்கியமான ஒரு செயல் தான் உணவை துப்புவது. வேண்டுமென்றால் கூர்ந்து கவனித்து பாருங்கள், குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் போது துப்புவார்கள். இதற்கு பெரும் காரணம், அவர்களுக்கு அந்த உணவை சாப்பிட்டு, வெறுப்பாகியிருக்கும். இதனால் அவர்கள் தனக்கு பிடிக்காததை அவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உணவை ஊட்டும் போது, அவர்கள் கவனத்தை திருப்புவதற்கு விளையாட வைத்து கொடுத்தால், தடுத்துவிடலாம்.
* சில குழந்தைகள் முகத்தை திருப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆகவே அவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு விளையாட்டு பொருளை, அவர்கள் முன்பு கொண்டு வந்தால், அவர்கள் அதை வாங்கும் போது உணவை சுலபமாக ஊட்டிவிடலாம். இல்லையென்றால் ஏதாவது ஒரு வித்தியாசமானவற்றை அவர்களுக்கு காண்பித்து, அதைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்தால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே சமத்துக்குட்டியாக சாப்பிட்டுவிடுவார்கள்.
* நிறைய செல்ல குட்டிகள் உணவைக் கொண்டு வந்தாலே, கைகளால் வாயை நிரப்பிக் கொண்டு, உணவை கொடுக்க முடியாத அளவில் செய்வார்கள். அப்போது அவர்கள் முன்பு, அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடுவது போல் செய்தால், பின் அவர்கள் உணவை நீங்கள் சாப்பிடப் போவதால், அது பிடிக்காமல், பின் அவர்களே வாயிலிருந்து கையை எடுத்து விட்டு, உணவை வாங்கிக் கொள்வார்கள்.
* சில குட்டீஸ்களுக்கு வாயில் உணவை வைத்தால், அதை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்று தெரியாது. ஆகவே அப்போது அவர்கள் முன்பு நீங்கள் உணவை வாயில் வைத்து, மென்று காண்பித்தால், அதைப் அப்படியே அவர்களும் செய்வார்கள்.
* குழந்தைகள் சாப்பிடும் போது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் சில குழந்தைகள் உண்ணும் போது அவர்கள் கைகளால் எடுக்க முயல்வார்கள். முக்கியமாக அப்போது அவர்களுக்கு இடது கை தான் வரும். ஆகவே அத்தகைய குழந்தைகளுக்கு, நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுக்கும் வகையில், அவர்களிடம் வலது கையால் எடுத்து சாப்பிட பழக்க வேண்டும். இதனால் அவர்களும் விருப்பப்பட்டு சாப்பிடுவார்கள்.
* மேலும் சிலர் உணவை ஊட்டும் போது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் உணவை ஊட்டுவது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் குழந்தைகள் எங்கெல்லாம் ஓடுகிறார்களோ, அங்கெல்லாம் ஓடிப் போய் ஊட்ட முடியாது. ஆகவே அவர்களிடம் ஒரு விளையாட்டுப் பொருளைக் கொடுத்தோ அல்லது கதைகளை சொல்லியோ, ஒரே இடத்தில் உட்காருமாறு செய்து ஊட்டலாம்.

பெற்றோர்கள் குழந்தைகளின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
பொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு 'பூச்சாண்டி' காட்ட சொல்லும் பயமானது. மனதில் அப்படியே பதிந்து, எப்பொழுதும் அதே பயத்தில் இருப்பார்கள். சில சமயம் அந்த பயம் அவர்களுக்கு நிரந்தரமாகிவிடும். எனவே அவற்றை நிரந்தரமாக விடாமல், அதிலிருந்து அவர்களை காப்பது பெற்றோரின் கடமை.
1. சிறு வயதில், அதாவது 1-2 வயது வரை குழந்தைகளை சாப்பிட வைக்க, பூச்சாண்டி காட்டி சாப்பிட வைப்பது, அடம் பிடிக்கும் போது அவர்களுக்கு பேய் வருகிறது என்று சொல்லும் கட்டுகதைகள் போன்றவற்றை அவர்கள் வளர வளர நாளடைவில் மாற்றி கொள்வது நல்லது. அதாவது அவர்கள் அடம் பிடிக்கும் பொழுது, ஏதாவது பாட்டு அல்லது கதை சொல்லி அல்லது அவருக்கு பிடித்தமான ஒன்றை கொடுக்கிறேன் என்று சொல்லி, அவர்களை திசை திருப்பலாம். அவர்களை பயமுறுத்தினால், பின் அவர்கள் பார்ப்பது, கேட்பது போன்றவைகளை வைத்து ஒரு உருவத்தை அல்லது கற்பனை செய்து கொள்வர். பின் அவர்கள் இருட்டான இடத்தைப் பார்த்தால், அங்கு பேய் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு, அவர்களின் மனமானது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகிவிடும். எனவே அப்போது அவர்களுக்கு உண்மையை சொல்லி புரிய வைக்க வேண்டும்.
2. குழந்தைகள் அதிகமாக பயந்தால், அவர்களின் பயத்திற்கான காரணத்தை கண்டறிய, குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்கள் எதனால் பயப்படுகிறார்கள் என்பதை அவர்களையே விளக்க சொல்லி, பின்னர் அவர்களுக்கு புரியும் வகையில் அந்த பயத்தை போக்கும் வகையில் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் இவை அனைத்து ஒரு மாயை என்பதையும் புரிய வைக்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு சரியானதை பொறுமையாக சொல்லி கொடுக்கவும். அதைவிட்டு கோபமாக சொன்னால், எதுவும் நடக்காது. அன்போடு அமைதியாக சொன்னால், குழந்தைகள் எதையும் பெற்றோரிடம் பயமின்றி, மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்வார்கள்.
4. குழந்தை ஒரு குறிப்பிட்ட உறவினர், பராமரிப்பாளர்களிடம் பயம் கொண்டு, அதனை பெற்றோரிடம் சொல்லும் போது, பெற்றோர்கள் அதை நிராகரிப்பது நல்லது அல்ல. அந்த நிலையில் குழந்தையை அவர்களிடம் இருக்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. அவர்களால் குழந்தைக்கு என்ன பிரச்சினை, அவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று குழந்தைகளிடம் கேட்டு, பின் அதனை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு குழந்தையை கண்டிக்கக் கூடாது.
5. குழந்தைகளை அவர்களின் பயம் குறித்து கிண்டல் செய்யக்கூடாது. ஏனெனில் குழந்தையை கேலி செய்தல் மூலம் அந்த பயமானது குறையாது. அதற்குப் பதிலாக, அது அவர்களது கவலையை அதிகரிக்கும். அதே நேரத்தில் அவர்களது தன்னம்பிக்கையையும் குறைக்கும். ஏனெனில் பெற்றோரே குழந்தையை கிண்டல் செய்வதன் மூலம், அவர்களது மனம் தளர்ந்து, பின் அவர்களுக்கு எப்போதும் எதிர்மறையான உணர்வுகள் மட்டுமே உருவாகும்.
6. குழந்தைகள் பயந்து செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். அப்போது அவர்களின் பயத்தைப் புரிந்து கொண்டு, அவர்களின் அச்சத்தை நீக்க அவர்களுடன் அன்புடனும் ஆதரவுடனும் பேசி, பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும்.
7. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தைரியத்தை கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் எப்போதும் தைரியாமாக எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு எதிர்கொண்டு, செய்து முடிப்பது போல் நடந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் உங்கள் செய்கைகளைப் பார்த்து, அவர்களுக்கும் மனதில் தைரியம் ஏற்படும். மேலும் எதை செய்யலாம் எதை செய்யகூடாது என்பதையும் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கவும்.
8. குழந்தைகள் வீட்டில் உள்ள அறைக்குச் செல்ல அஞ்சுகின்றனர் என்றால், அந்த பகுதிக்கு அவர்களுடன் சென்று, அனைத்து கதவுகளை திறந்து, ஒளியைப் பயன்படுத்தி படுக்கைக்குக் கீழ் எதுவும் இல்லை பார் என்று காட்டவும். மேலும் ஏதாவது சப்தம் அல்லது நிழல் கண்டு பயந்தால், அப்போது அவர்களிடம் அந்த சப்தம் மற்றும் நிழல் எதனால் வந்தது என்று விளக்கமாக சொல்லிப் புரிய வைக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால், குழந்தைகளை பயத்திலிருந்து விடுவிக்க முடியும். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதைகள் குழந்தைகளின் சிந்தனை ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் ஆற்றல் மிக்கவை. நீதிக்கதைகள் சொல்வது குழந்தைகளை நல்வழிப்படுத்தும்.
கதை சொல்லி குழந்தைகளை தூங்க வைக்கும் பாட்டிகள் குறைந்து போய்விட்டார்கள். செல்போன் கேம்களில் மூழ்கிய நிலையில் குழந்தைகளை தூங்க வைக்கும் அம்மாக்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பாட்டிகள் குழந்தைகளுக்கு கதை சொல்வது அவர்களை தூங்க வைப்பதற்காக மட்டுமே அல்ல. கதைகள் குழந்தைகளின் சிந்தனை ஆற்றலையும், கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும் ஆற்றல் மிக்கவை.
கதையில் இடம்பெறும் சம்பவங்கள் அவர்களின் ஆழ்மனதில் காட்சி பதிவுகளாக விரியும். ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கேட்பார்கள். கதாபாத்திரங்களோடு எளிதில் ஒன்றியும் போய்விடுவார்கள். சந்தேகம் எழுந்தால் குறுக்கு கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்வார்கள். அது அவர்களின் சிந்தனை திறன்மேம்படுவதற்கு வழிகாட்டியாக அமையும்.
குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு கதை சொல்வது அவசியமென்பதால், அவர்கள் எதை ஆர்வமாக கேட்கிறார்களோ அதை அப்படியே மனதில் ஆழமாக பதியவைத்துவிடுங்கள். இரவில் கதை கேட்டுக்கொண்டே தூங்கும் குழந்தைகள் மனதில் அதில் இடம்பெறும் சம்பவங்கள் ஆழ்மன பதிவாக இடம்பெற்றுவிடும். அதனால் நீதிக்கதைகள் சொல்வது குழந்தைகளை நல்வழிப்படுத்தும்.

அக்கதைகளில் இடம் பெறும் கருத்துக்கள், போதனைகள் அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும். பெரியவர்களிடம் மரியாதையாகவும், தன்னடக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கற்றுத்தரும். கதையில் இடம் பெறும் சம்பவங்களை மனதுக்குள் அசைபோட்டு பார்க்கும்போது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களையும் கற்றுக்கொடுக்கும்.
கதைகளை கேட்டு அதன் சாரம்சங்களை சிந்திக்கும்போது பல்வேறு வகையான அனுபவங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும். கதையில் தவறான வழியில் செல்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்ற நியதி வலுவாக முன்வைக்கப்படும் என்பதால் நல்ல, கெட்ட விஷயங்களை எளிதில் சீர்தூக்கி பார்க்கும் பக்குவம் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
கதைகளில் சொல்லப்படும் நீதியை நிஜ வாழ்க்கை சம்பவங்களோடு ஒப்பிட்டு பார்க்கவும் தொடங்குவார்கள். ஆதலால் முன்னோர்கள் கையாண்ட கதை சொல்லும் யுக்தியை பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க முன்வர வேண்டும். இப்போது இணைய தளங்களில் நீதிக்கதைகள் குவிந்திருக்கின்றன. அவைகளை சுருக்கமாக குழந்தைகளிடத்தில் கூறி நல்ல நீதி கருத்துக்களை விதைக்க வேண்டும்.