என் மலர்
குழந்தை பராமரிப்பு
உறவுகளில் மிகவும் சிக்கலான சற்றே கடினமான உறவாக பார்க்கப்படுவது அப்பா-மகன் உறவு. அம்மா-மகன் உறவில் இருக்கும் ஓர் அன்னியோன்யம் அப்பா மகன் உறவில் இருப்பதில்லை.

தந்தை சற்று கண்டிப்பானராகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் குழந்தைகள் மத்தியில் விரிசல் ஆரம்பித்தாலும் அந்த விரிசல் தொடர்ந்து நீடிப்பதில் தான் சிக்கல் இருக்கிறது. சில வீடுகளில் பேச்சுவார்த்தை கூட இருக்காது.
தந்தையிடமிருந்து தான் மகன் கற்க ஆரம்பிக்கிறான். அதிகாரம் செலுத்துவது, இன்னொருவரிடம் பழகுவது, கோபம் கொள்வது போன்ற ஓர் ஆண் செய்வதைத் தான் தானும் செய்ய வேண்டும் என்பதை உணர்கிறான். ஆரம்பத்திலிருந்தே மகன் அதிகார தோரணையில் பார்த்த தந்தை மீது ஆரம்பத்தில் இருந்த பிம்பம் பெருஞ்சுவராக மாறிவிடுகிறது. அதனை தவிர்க்க குழந்தைகளோடு கண்டிப்போடு அன்பையும் சேர்த்து பகிர்ந்திடுங்கள்.
மகனின் விருப்பங்களை கண்டறிந்து அவை பற்றிய விபரங்களையாவது தெரிந்து வைத்திருங்கள். அலுவலகம் அதை விட்டால் வீடு இது தான் என் உலகம். வீட்டின் பொறுப்பு மனைவிக்குத் தான் என்று ஒதுங்கியிருக்காதீர்கள். மகன்களுடன் விளையாடச் செல்லுங்கள்
ஆண் குழந்தைகள் செய்திடும் சின்ன சின்ன தவறுகளுக்கு எல்லாம் நிதானம் இழக்காமல் கண்டியுங்கள். அந்த கண்டிப்பு தவறை மறுபடியும் செய்ய வைக்ககூடாதே தவிர உங்கள் மீது வெறுப்பு வந்துவிடக்கூடாது.

குழந்தைகள் தங்களுடைய வயதில் தவறு செய்வதை எல்லாம் பெரிது படுத்தி வாழ்க்கையில் தோற்றுவிடுவாய் என்ற பயத்தை ஏற்படுத்தாதீர்கள். எச்சரிக்கை செய்யுங்கள். தவறிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ள வைத்திடுங்கள்.
மகன்களுடன் பேச தயக்கம் காட்டாதீர்கள். பெண்கள் குறித்தும், செக்ஸ் குறித்தும், அவர்களிடம் உரிய வயதில் பேசி புரிய வைத்திடுங்கள். இணையத்தை அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் அது குறித்த விழிப்புணர்வு எல்லாம் நிச்சயமாய் உங்கள் குழந்தைக்கு வேண்டும்.
குழந்தைகளின் திறமையை கண்டறிவதில் முனைப்பு காட்டுங்கள். உற்சாகமான உங்களது வார்த்தைகளை அவர்களை தட்டிக் கொடுப்பது போல இருக்க வேண்டும். தவறுகள் செய்தாலும் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நினைவுப்படுத்தி சொல்லுங்கள். அது போல இருந்தால் அப்பாவுக்குப் பிடிக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள்.
பெரும்பாலான ஆண்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறார்கள். சம்பாதிப்பது மட்டும் தான் என் வேலை வீடு குழந்தைகள் எல்லாம் மனைவியின் பொறுப்பு என்று விலகி நடக்கிறார்கள். இது மிகவும் தவறானது வீட்டின் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிக்க மட்டும் அப்பா இல்லை அரவணைக்கவும் பாராட்டவும் அப்பா இருக்கிறேன் என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

குழந்தை வளர்ப்பில் சுதந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை பற்றியும் சிறிது பேசுவோம்...
சுதந்திர காற்றை சுவாசிக்கும்போது நமக்குள் புது சக்தி பிறக்கும். குழந்தை வளர்ப்பிலும் சுதந்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமக்கு கிடைக்காததெல்லாம் நம் பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் இன்று அதிகம். ஆனாலும் அதீத அக்கறையால் குழந்தைகளை ரோபோக்களைப்போல நடத்தி, எல்லாவற்றையும் வற்புறுத்தி திணிப்பதுமாக வளர்க்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் செய்யும் தவறுகளையும், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரத்தை பற்றியும் சிறிது பேசுவோம்...
* குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்கள் அனுபவத்தின் வழியாகவே நிறைய கற்றுக் கொள்வார்கள். தவறுகளே அந்த அனுபவப் பாடத்தை கற்றுத் தருகிறது. ஆனால் குழந்தையை கவனிக்கும் பெற்றோர், குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்துவதாக எண்ணிக் கொண்டு கத்துவதையும், திட்டுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது அவர்களின் மனதில் எதற்கெடுத்தாலும் திட்டுவார்கள் என்ற அசட்டுத் தனத்தை வளர்த்துவிடும். தன்னம்பிக்கையையும் குறைத்துவிடும்.
* மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது பெற்றோர் செய்யும் மற்றொரு மாபெரும் தவறாகும். இதுவும் தன்னம்பிக்கையை இழக்கச் செய்து பலவீனத்தை வளர்க்கும். குழந்தைகளை மற்றவர் முன்பு அவமானம் செய்யக் கூடாது. சின்னச்சின்ன விஷயங்களிலும் அவர்களை பாராட்டுங்கள். தவறு செய்தால்கூட, மென்மையாக சுட்டிக்காட்டுங்கள். மீண்டும் சரியாக செய்ய வாய்ப்பளியுங்கள்.
* எப்போதும் படி, படி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கக் கூடாது. போட்டி மனப்பான்மையுடன், இலக்கை நோக்கி எப்போதும் குழந்தைகளை உந்தித் தள்ளக்கூடாது. குழந்தைப் பருவத்து அனுபவங்களை, விளையாட்டுகளை, சுதந்திரத்தை அவர்களை அனுபவிக்கச் செய்யுங்கள். யதார்த்தமாக அவர்கள் செய்யும் செயல்களும், அனுபவிக்கும் அனுபவங்களுமே அவர்களை எதிர்காலச் சூழலை சரியாக எதிர்கொள்ள வழி வகுக்கும்.
* மணலில் விளையாடுவதால் உடல் அசுத்தமாகும் என்றும், தண்ணீரில் விளையாடுவதால் நோய்கள் பரவும் என்றும் தடுத்துவிடுவதும், படிப்பதால் மட்டுமே அவர்களின் அறிவு மேம்படும் என்று நினைப்பதும் பெரும் தவறாகும். குழந்தைகளுக்கு விளையாட போதிய இடத்தையும், அவகாசத்தையும் வழங்காததன் காரணமாக பல்வேறு அனுபவங்களை அவர்கள் தவற விடுகிறார்கள். புறச்சூழலுக்கு ஏற்ப தன்னிச்சையாகச் செயல்படும் நரம்பு மண்டல செயல்பாடுகளை இது தடுத்துவிடுகிறது.
* மண்ணிலும், தண்ணீரிலும் விளையாடுவதும், மற்றவர்களுடன் இணைந்தும், போட்டியிட்டும் விளையாடுவதும் ஆரோக்கியமான பலன்களை அதிகம் தரும். கோகோ, கபடி போன்ற விளையாட்டுகள் மூலம் சரியானது எது? தவறு எது? என்பதை குழந்தைகள் அறிந்துகொள்கின்றனர். அத்துடன் துணிகர முயற்சிகளை எடுக்கவும், பிரச்சினைகளைத் தீர்க்கவும், அணி சேர்க்கவும், மற்றவர் மீது பிரியமாக இருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். பயிற்றுவிப்பதைவிட கலந்துரையாடல்களில்தான் சமூகப் பண்புகள் வளர்கின்றன. எனவே பேசவும், விளையாடவும், பகிர்ந்து உண்ணவும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

* ஒழுக்கம் மிகவும் அவசியமானதுதான். ஆனால் எதற்கெடுத்தாலும் அதைத் தொடாதே, இதைச் செய்யாதே, அப்படி இரு, ஒழுக்கமாய் நட என்று வற்புறுத்திக் கொண்டிருக்க வேண்டாம். மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் தொடங்கி மரணம் வரையில் நீடிக்கிறது. நாமும் இன்றும் பல விஷயங்களை புதிதாக அனுபவித்து அறி கிறோம். அதுபோலவே அவர்களும் தங்கள் அறிவுணர்ச்சியால் மெல்ல மெல்ல தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள்.
* தங்கள் குழந்தையின் திறமையை எப்படி மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. பொதுவாக புத்தகப் படிப்பு மட்டுமே எல்லாவற்றையும் வளர்க்கும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். புத்தக படிப்பைத் தாண்டிய அனுபவங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
* குழந்தைகளின் படிக்கும் திறனை ஊக்குவிக்க கவலையின்றி படிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டும், கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்பது போன்ற நெருக்கடியில்லாமல் விளையாட்டும், செயலுமாக கற்றால் அவர்கள் விருப்பத்துடன் படிப்பார்கள். மனதில் ஏற்றிக் கொள்வார்கள்.
* குழந்தைகளுக்குத் தற்போது சேர்ந்து விளையாடவோ, பொழுதைக் கழிக்கவோ, சாவகாசமாகத் தங்கள் இயல்புக்கு ஏற்ப கற்பதற்கோ போதிய நேரமில்லை. ஆனால் குழந்தைகளைப் பொருத்தவரை அவகாசம் அவசியமானது. அதிகரித்துவரும் பாடச்சுமையும், பயிற்சிகளும் அவர்களது இளைப்பாறும் இடைவேளைகளை திருடிக் கொள்கின்றன. குழந்தைகளின் அடிப்படைத் தேவையான விளையாட்டை பெற்றோரும், பள்ளிகளும் பறிக்கக் கூடாது. விதவிதமான பயிற்சிகள் மட்டும் அவர்களை மேதைகளாக்கி விடாது. விளையாட்டைப் போல அவர்களின் திறன்களில் மாறுதலை ஏற்படுத்துவது எதுவுமில்லை. அதனால்தான் சமீப காலமாக செயல்வழி கற்றல் சிறந்தது என பேசப்பட்டு வருகிறது.
* மதிப்பெண்கள் பெறவும், உயர் பதவிக்கு செல்லும் நோக்கத்துடனும் குழந்தைகளை முடுக்கிவிடக் கூடாது. அப்படி எந்திரத்தனமாக நடத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தங்கள் அடிப்படை திறனில் இருந்து எளிதில் விலகுவார்களே தவிர, அதிகமாக சாதிப்பதில்லை. அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் அதிகமாக சாதிப்பார்கள்.
* உடலியல் ரீதியில் ஒன்றைப் பற்றி மீண்டும் மீண்டும் நினைவுகூரும்போது புத்திக்கூர்மைத் திறன் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் அழுத்தமற்ற சூழலில் ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து செய்யும்போது அது நல்ல முறையில் நினைவில் தங்குவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுதந்திரமான சூழலில், ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது. ‘பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்’ என்பதைப்போல, ‘பெற்ற பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்து அவர்களின் சாதனையில் பங்கெடுப்போம்’!

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்ட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறந்த குழந்தைகளின் ஆடைகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியம். குழந்தைகளின் சருமம் மிகமிக மென்மையானது. அவர்களுடைய ஆடைகள் சரியான முறையில் பராமரிக்காமல் இருந்தால், சருமத்தில் அலர்ஜி உண்டாகும்.
நோய்த்தொற்றுக்கள் உண்டாகவும் வாய்ப்பு அதிகம். அதனால் குழந்தைகளின் ஆடைகளைப் பராமரிக்கும் போது, சில அடிப்படையான விஷயங்களை மனதில் கொள்வது அவசியம்.
குழந்தைகளுக்காக வாங்கும் ஆடையில் இணைக்கப்பட்டிருக்கும் லேபிள்களை முதலில் நன்றாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வாஷிங் முறையைப் பயன்படுத்தினால் ஆடைகள் நீண்ட நாட்களுக்கு புதுசு போலவே இருக்கும்.
எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதிக வெப்பத்தால் பாழாகிப் போகும். அதனால் குளிர்ந்த நீரில் குழந்தைகளின் ஆடைகளைத் துவைத்திடுங்கள். அவற்றை உலர்த்தும் போது, நிச்சயம் அதிக வெயிலில் காய வைக்கக் கூடாது. மிதமான வெயிலில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்துதல் வேண்டும்.

துவைக்கும்போது கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், ஒவ்வொரு ஆடையையும் தனித்தனியாகத் துவைப்பது நல்லது. குழந்தைகளின் சில ஆடைகளில் வாட்டர் பிரிண்ட், ஆயில் பிரிண்ட் ஆகியவை போடப்பட்டிருக்கும். சில ஆடைகளில் சாயம் வெளியேறும்.
அவை மற்ற ஆடைகளில் சேர்ந்து, அவற்றையும் வீணாக்கிவிடும். ஆகையால் சிரமம் பார்க்காமல், தனித்தனியே ஆடைகளைத் துவைப்பது நல்லது. துணியைத் துவைக்கும் போது, வெளிப்புறம் அப்படியே துவைக்காமல், உள்புறமாகத் திருப்பித் துவைத்தல் வேண்டும்.
குழந்தைகளின் டயப்பர்களைத் துவைத்துக் காய வைக்கும்போது, நன்கு வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டது.
குழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவர்களின் ஆடைகளைத் துவைக்கப் பயன்படுத்துகிற டிடர்ஜெண்ட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிடில், குழந்தைகளில் மேனியில் அலர்ஜி, ரேஷஸ் போன்றவை உண்டாகும்.

குழந்தைகள் மழலையாக இருக்கும்போதே ஊட்டமான உணவு, நல்ல பழக்கவழக்கங்கள் எனக் கற்றுக்கொடுக்காவிட்டால், வளர்ந்த பிறகு திருத்துவது ரொம்பவே சிரமம்.
ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது. ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.
எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது. இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் பழங்களைக் கொடுக்கலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.
கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.
குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம்.
உங்கள் குழந்தைக்கு போனில் விளையாடுவது தான் ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டால், பெரும்பாலான பெற்றோர்களின் பதில் ஆம் என்பதே. நீங்களும் உங்கள் குழந்தையை போனில் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பது, நீங்களே உங்கள் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு சமம்.
நாம் வீட்டு வேலை செய்து கொண்டிருக்குமு்போது நம்மை வந்து தொந்தரவு செயய்க்கூடாது என்பதற்காக கையில் நாம் போனைக் கொடுத்து விளையாடு என்று சொல்லிவிடுகிறோம். அந்த நேரத்தில் வேண்டுமானால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். உங்களுக்குத் தொல்லை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அதனால் என்னென்ன விளைவுகள் உண்டாகுமென்று தெரியுமா உங்களுக்கு?
அவர்களுடைய பிடிவாதத்தை சமாளிக்க, குறும்புத்தனத்தை அடக்க என எந்த காரணத்துக்காக கொடுத்தாலும் அது தீங்கில் தான் முடியும். குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடுவது குறையும். அதனால் என்ன? என் குழந்தை வீட்டிலேயே இருக்கிறது என்றால், அது உங்கள் அறியாமையை வெளிக்காட்டுகிறது. உங்கள் குழந்தை வெளியில் விளையாடும் போது, அவர்களது உடல் மற்றும் மனம் வலிமையடைகிறது. அவர்களுக்கு ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
இதனால் உங்கள் குழந்தைகள் நீண்ட காலம் உடல் மற்றும் மன வலிமையுடன் இருப்பார்கள். போனில் விளையாடும் போது இதெல்லாம் அப்படியே தலைக்கீழாக மாறும்.

குழந்தைகள் போனில் விளையாடுவதற்கு நேரம் காலம் பார்ப்பதில்லை. இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களை விளையாடும் போது, உங்கள் போனிலிருந்து வெளிவரும் அதிகப்படியான வெளிச்சம், குழந்தையின் கண்களை பாதித்து பார்வை கோளாறை ஏற்படுத்தும். கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிடும்.
பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளின் மூளை, நரம்பு மண்டலம் மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகள் மிக மென்மையானதாக இருக்கும். அதனால் அவர்களின் மூளை எளிதில் அனைத்தையும் உள்வாங்கும். அப்படி உங்கள் குழந்தை விளையாடும் போது, அவர்களின் மூளை அதற்கு அடிமையாக துவங்கும். அதோடு போனைச் சுற்றியிருக்கும் அதிர்வலைகள் உங்கள் குழந்தையின் மூளையில் பல பிரச்சனைகளை உண்டாகும்.
உங்கள் குழந்தைகள் போனில் விளையாடுவதற்கு அதிக நேரம் செலவிடுவார்கள். நீங்களும் உங்களுக்கு தொந்தரவு தரவில்லை என்று நினைத்து விட்டுவிட்டால், பிரச்சனை அங்கே தான் ஆரம்பமாகிறது. உங்கள் குழந்தையின் உலகம், அவர்களும் செல்போனும் தான் என்ற குறுகிய இடைவெளிக்குள் தனிமைப்படுத்தப்படும். இதனால் அவர்கள் வெகு விரைவில் மனநிலையில் மாற்றம் அடைவார்கள்.
குழந்தைகள் தொடர்ந்து விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், அது அவர்கள் கல்வியை மிகவும் பாதிக்கும். அவர்களது மூளை அந்த விளையாட்டை உள்வாங்கி இருப்பதால், அவர்களது கவனம் கல்வியை நோக்கி பயணிக்க மறுக்கும். அதனால் அவர்கள் படிப்பில் மந்தமடைய துவங்குவார்கள்.
உங்கள் போனில் உள்ள விளையாட்டுகளை நீக்கிவிடுங்கள். அது முடியவில்லை என்றால், உங்கள் குழந்தை என்ன அடம்பிடித்து கேட்டாலும் கொடுக்காதீர்கள். அவர்கள் உடல்ரீதியாக விளையாட அனுமதியுங்கள். அதற்கு தேவையானவற்றை வாங்கி கொடுங்கள். அவர்களுடன் நேரம் செலவிட முயற்சியுங்கள். யோகா, கராத்தே, உடல் பயிற்சிகள் மற்றும் பரதம் என இன்னும் குழந்தைகள் ஆரோக்கியமாகக் கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றுள் குழந்தைகளுக்கு விருப்பமானதை செய்ய அனுமதியுங்கள்.

மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தொற்று நோயில் இருந்து காத்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மழைக்காலத்தில் தேங்கும் நீரால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, மார்புச் சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. இந்த நோய்கள் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். 102 டிகிரி காய்ச்சல் இருக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தால் உடல் வலி அதிகமாக இருக்கும்.
ஆர்.எஸ்.வீ எனும் வைரஸ் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும்போது ப்ராங்கியோலைட்டீஸ் எனும் நுரையீரல் நோயை ஏற்படுத்தி மூச்சுத் திணறலை வர வைக்கிறது. இந்த நோய் அதிகரித்து வீசிங் ப்ராங்கைட்டீஸ் என்று சொல்லும் இளப்பு நோயாக மாறும். ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படும். மழைக் காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூஞ்சை நோய்களும் வருகின்றன. அக்குள், தொடை இடுக்குகளில் பூஞ்சைக் காளான் கிருமி தாக்குவதால் படர்தாமரை நோய் வரும். இந்த படர் தாமரை உடலில் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சிகப்பு நிறத்தில் தோலில் தழும்பு ஏற்பட்டு உடலில் நமைச்சல் ஏற்படும்.
மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் முட்டையிடுவதால், அதன் மூலம் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. இதனால் அனை வரும் ஆங்காங்ககே தேங்கும் நீரை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும். தினமும் காய்ச்சிய நீரையே பருக வேண்டும். சளி, காயச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி குணமடைந்த பின்னர் அனுப்ப வேண் டும்.
வீடு, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டு்ம். பாத்திரங்களில் தண் ணீர் தேங்கவிடாமல் துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். சூடான உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அதிகமாக மழை பெய்யும்போது ஸ்வெட்டர், குளிர் தடுக்கும் சாதனங்களை பயன்படுத்தலாம். கொசுக்கடியைத் தடுக்க உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குழந்தை சீரியஸ் நிலமையில் இல்லாமல் லேசாக தண்ணீர்ச்சத்து குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனைப் பெறுங்கள்.
பெரியவர்களுக்கு ஏற்படுவது போன்றே குழந்தைகளுக்கும் டீஹைட்ரேஷன் ஏற்படும். குழந்தையிக்கு தேவையானளவு தண்ணீர் இல்லையென்றால் உடனடியாக உணர்ந்து அதனை நிவர்த்தி செய்திட வேண்டும் இல்லையெனில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடிய ஆபத்துக்களும் உண்டு.
குழந்தைக்கு நீர்சத்து குறைவாக இருப்பதை பெற்றோர் உணர்வதற்கு சில அறிகுறிகள்.
ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருக்கும். சிறுநீர் அடர்த்தியாகவும் வழக்கதை விட நாற்றமெடுக்கும். உதடுகள் வறண்டு காணப்படும். குழந்தை தொடர்ந்து சோர்வாகவே இருக்கும். அழும் போது கண்ணீர் வராது. குழந்தையின் கண்கள் அமிழ்ந்து உள்ளே சொருகியிருக்கும். குழந்தையின் உள்ளங்கை மற்றும் கால் சில்லென்றாகிவிடும். சருமத்தில் திட்டுகள் தோன்றும்.
பெரியவர்களைப் போல குழந்தைகளால் ஒரு சத்து குறைந்தாலும் அதனை எதிர்த்து போராட முடியாது. உடலில் நிகழும் சின்ன சின்ன மாற்றங்களுக்கும் குழந்தை சட்டென பாதிக்கப்படும். குழந்தையின் நிலமை மிகவும் சீரியசாக இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
குழந்தை சீரியஸ் நிலமையில் இல்லாமல் லேசாக தண்ணீர்ச்சத்து குறைந்திருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் கேட்டு ஆலோசனைப் பெறுங்கள். திட உணவுகள் கொடுப்பதை தவிர்த்து தண்ணீர்சத்து நிரம்பிய உணவுகளை கொடுங்கள். மூன்று மாதத்திற்கும் குறைவான குழந்தையென்றால் தாய்ப்பால் வழக்கத்தை விட அதிகமான முறை கொடுங்கள்.

மூன்று மாதத்திற்கும் அதிகமான குழந்தை உடனடியாக தண்ணீர்ச்சத்து வரவேண்டுமென்றால் மருத்துவர் ஆலோசனைப்படி குழந்தைக்கான எலக்ட்ரோலைட்ஸ் பவுடர் வாங்கி கொடுக்கலாம். குழந்தையின் வயது, எடை பொருத்து அளவு மாறுபடும் என்பதால் மருத்துவ ஆலோசனை கட்டாயம் பெற வேண்டும்.
குழந்தைக்கு ஒரு நாளில் எத்தனை முறை தண்ணீர் கொடுக்கிறீர்கள் என்று கவனியுங்கள். குறிப்பாக வெயில் காலங்களில் திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டது என்றால் உணவைத் தவிர தண்ணீர் எத்தனை முறை கொடுத்திருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
குழந்தைக்கு கார்பனேட்டட் டிரிங்க்ஸ் கொடுக்கக்கூடாது. செயற்கையான பானங்கள் கொடுப்பதால் அது குழந்தையின் பல் வளர்ச்சிக்கும், உடல் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும். அதே போல ஜூஸ் வகைகளையே அதிகம் கொடுக்கக்கூடாது.
குழந்தைக்கு காய்ச்சலாக இருந்தால் உடலில் உள்ள தண்ணீர்சத்து விரைந்து குறைய வாய்ப்புண்டு அதனால் காய்ச்சல் நேரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதே போல உணவு ஒவ்வாமை அல்லது அஜீரணம் காரணமாக டயேரியா,வாந்தி போன்றவற்றால் குழந்தை பாதிக்கப்பட்டாலும் சட்டென உடலில் உள்ள தண்ணீர்ச்சத்து குறையத்துவங்கும்.

நிதானமாக சிந்தித்து செயல்படும் பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே தங்கள் பிள்ளைகளிடம் உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பு. சிறுவயதில் இருந்தே அவர்களின் சிந்தனை திறனை கூர்தீட்டி மெருகேற்ற வேண்டும்.
நெருக்கடியான சூழ்நிலைகளிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் படைத்தவர்கள் எல்லா சிக்கல்களையும் எளிதாக தகர்த்தெறிந்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். சுயமாக சிந்தித்து செயல்படுபவர்களிடம் தேவையற்ற மனக்குழப்பங்கள் எட்டிப்பார்க்காது. அப்படி நிதானமாக சிந்தித்து செயல்படும் பழக்கத்தை குழந்தை பருவத்திலேயே தங்கள் பிள்ளைகளிடம் உருவாக்குவது பெற்றோரின் பொறுப்பு. சிறுவயதில் இருந்தே அவர்களின் சிந்தனை திறனை கூர்தீட்டி மெருகேற்ற வேண்டும்.
குழந்தைகளிடம் சிந்திக்கும் ஆற்றல் நிறைய உண்டு. சிலசமயங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகள் சம்பந்தமில்லாமல் இருப்பதாக பெற்றோர் நினைப்பார்கள். ஆனாலும் அப்படி கேள்வி கேட்கக்கூடாது என்று தடை போடக்கூடாது. அவர்களின் சிந்தனையை பிரதிபலிக்கும் கேள்விகளுக்கு பொருத்தமான பதிலை சொல்லும் பக்குவம் கொண்டவர்களாக பெற்றோர் விளங்க வேண்டும். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு குழந்தைகளை தள்ளிவிடக்கூடாது. அதுசம்பந்தமான கேள்விகள் கேட்கவும், விவாதிக்கவும் குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.
தங்கள் குழந்தை மற்றவர்களை விட திறமைமிக்கவர்களாக இருக்க வேண்டும், சாதனையாளராக திகழ வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக இருக்கிறது. அதற்கு குழந்தைகளை தயார்படுத்தும்போது அவர்களின் சிந்தனை திறனுக்கு எல்லை வகுத்துவிடுகிறார்கள். ஏதாவது ஒரு குறிக்கோளை அவர்களின் மனதில் நிறுத்தி அதை நோக்கியே அவர்களின் சிந்தனையை படரவிட்டு விடுகிறார்கள். அது அவர்களின் மற்ற தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போட்டு விடும்.
அவர்களின் சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். அதைவிடுத்து பெற்றோரின் கருத்துக்களை அவர்கள் மீது திணிப்பது அவர்களின் சிந்தனைத் திறனுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும். குழந்தைகள் தவறு செய்வது இயல்பானது. அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தண்டிக்கக் கூடாது. தண்டனை அவர்களின் தன்னம்பிக்கையை குறைத்துவிடும்.

ரியாலிட்டி ஷோக்களில் ‘தோற்றதாக’ கருதப்படும் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையும், குறைந்த சுயமதிப்பு உணர்வும் குடியேறும் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.
காட்சி 1: அந்த பிரபல டி.வி. ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற சிறுவன், நடுவர்களில் ஒருவரான பெண் பாடகியைப் பார்த்து, தன்னை திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று கேட்கிறான். பாடகி ‘நாணுகிறார்’. பார்வையாளர்கள் ‘கொல்’லென்று சிரிக்கிறார்கள்.
காட்சி 2: அந்த நடனப் போட்டி நிகழ்ச்சியில், ஆபாச எல்லையை மீறும் பாடலுக்கு வாயசைத்து, இடுப்பை வளைத்து நெளித்து ஆடுகிறாள், அச்சிறுமி. நடன அசைவுகளும், பாடல் வரிகளும் ஆபாசம் என்பது அச்சிறுமிக்குத் தெரியாது. நிகழ்ச்சியின் நடுவர்கள், அதில் பங்கேற்றிருக்கும் பார்வையாளர்கள், பெற்றோருக்குக்கூடவா?
காட்சி3: பெரிய பெண் போன்று நிகழ்ச்சியில் நடித்த சிறுமி, நடித்து முடித்தபிறகு தான் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டுக்கே எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் கசிய (நடிப்பில்) விவரிக்கிறாள். அப்போது அந்த சிறுமியின் விவரிப்பு, வார்த்தைகள் எல்லாமே பெரிய மனுஷத்தனம்.
‘டி.ஆர்.பி.’யை உயர்த்துவதற்காக தொலைக்காட்சிகள் பின்பற்றும் உத்திகளில், குழந்தைகளின் குழந்தைத்தனம் காணாமல்போகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுகிறது. அது எந்த அளவு நிஜம்?
இதுகுறித்து அலசி ஆராய்ந்தால், முற்றிலுமாக உண்மையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. இன்று எல்லா டி.வி.களிலும் எல்லா வகை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
இந்நிலையில், அவை ஒன்றை ஒன்று முந்தும் முயற்சியில்தான், தங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் குழந்தைத்தனத்தைப் பலிகொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘உங்க அம்மா கோபப்படும்போது அவரை உங்கப்பா எப்படி சமாதானப்படுத்துவார்?’ என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க, ‘அப்போ அப்பா, புஜ்ஜிம்மா, செல்லக்குட்டிம்மான்னு கொஞ்சுவார், உம்மா கொடுப்பார்’ என்று மழலைக் குரலில் கூறுகிறது, குழந்தை. பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருக்கும் அந்த அம்மாவும், அப்பாவுமே ரசித்துச் சிரிக்கிறார்கள்.
குழந்தைகளிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறோம், போட்டித் திறனை வளர்க்கிறோம், அதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கிறோம் என்று டி.வி.கள் கூறினாலும், சின்னத்திரையில் குழந்தைகளின் அசத்தல்களுக்குப் பின்னே அவர்கள் எவ்வளவு அவஸ்தைகளை அனுபவிக்கிறார்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு நடன நிகழ்ச்சியில் ஒரு குழந்தை காற்றில் சுழன்று, அடுத்தடுத்து குட்டிக் கரணம் அடித்து மின்னலாய் நடனம் ஆடுகிறது, இன்னொரு ‘சிங்கர்’ நிகழ்ச்சியில், கஷ்டமான ராகத்தில் கர்நாடக சங்கீதப் பாடல் பாடுகிறது, மற்றொரு நிகழ்ச்சியில் குட்டி சமையல் கலைஞராய் விதவிதமாய்ச் சமைக்கிறது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நுழைத்து தங்கள் குழந்தையையும் பிரபலமாக்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள், பெற்றோர். அதைப் புரிந்துகொண்டு புதிது புதிதாய் பயிற்சி மையங்களும் முளைக்கின்றன.
குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறி பேசும், பாடும், ஆடும், செயல்படும் ‘ரியாலிட்டி ஷோக்கள்’ எதில் போய் முடியும்? நிகழ்ச்சியில் இருந்து ‘வெளியேற்றப்படும்’ பத்து வயது குழந்தை கண்ணீர் வழியப் பேசுவதை காட்சிப்படுத்துவதன் அவசியம் என்ன? உண்மையில் இதன் அபாயத்தை நாம் உணர்ந்திருக் கிறோமா?
“மேடைப் பயத்தை ஒழிக்கிறது, சவாலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் தைரியத்தைத் தருகிறது என்ற வகையில் இந்த ‘ரியாலிட்டி ஷோக்களை’ பாராட்டலாம். ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்த்தால், ஒருவருடன் ஒருவர் போட்டியிடும் குழந்தைகளின் மனோநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சி என்பது, பணம் சம்பாதிப்பது, அதற்காக டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. எனவே அங்கே குழந்தைகளின் மனநலம், உடல்நலம் குறித்தெல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை. அவர்களுக்கு இடப்படும் ஒப்பனை, காமிரா முன் உதிர்க்கப்படும் கண்ணீர், சொல்லப்படும் ‘தீர்ப்பு’ வார்த்தைகள் எல்லாமே குழந்தைகளிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார், குழந்தை உளவியல் நிபுணர் சீமா.
புன்னகை முக நடுவர்கள், ஜாலி என்ற பெயரில் எல்லை தாண்டும் தொகுப்பாளர்களின் கமெண்ட்கள், கைதட்டும், ஆரவாரித்து ஆடும் பார்வையாளர்கள் எல்லாமே ரியாலிட்டி ஷோக் களின் மாறாத அங்கங்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பாடுவது, ஆடுவதுடன், கொஞ்சம் ‘நடிக்கவும்’ வேண்டும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மிக இயல்பாக இருப்பது போலத் தோன்றினாலும் இந்திய ரசிகர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப திறமையாக இயக்கப்படுபவை இவை என்பது பலருக்குத் தெரியாது.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறுவன், பெண் நடுவரிடம் ஜாலியாக பேசுவதுகூட சொல்லிக்கொடுக்கப்படும் வசனம்தான். உண்மையில் அதன் நிஜமான அர்த்தம், குறிப்பிட்ட குழந்தைக்குத் தெரியாது.
அந்தக் குழந்தை பாடி அல்லது ஆடி முடித்ததும், உருக்கமான கதை ஒன்றைக் கூறவும், முடிந்தால் கண்ணீர் சிந்தவும் கூட அறிவுறுத்தப்படுகிறது. பங்கேற்பாளர்கள் நடுவே ஏற்படும் ‘மோதல்’, சர்ச்சை போன்றவையும் டி.ஆர்.பி. யை எகிறவைக்கின்றனவாம்.
இதெல்லாம், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பருவ வயதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
“ஒரு குழந்தையின் மனம் என்பது வளர் நிலையில் உள்ளது. குழந்தையை ஒரு சீரான வாழ்க்கை முறையில் இருந்து பிடுங்கி, தீவிர போட்டிச் சூழலுக்குள் திணிக்கும்போது, பின்வரும் வருடங்களில் உணர்வு நிலையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நாமே காரணமாகி விடுகிறோம்” என்று கூறுகிறார், மனோவியல் நிபுணர் தனுஸ்ரீ.
அவரே தொடர்ந்து, “புகழுக்காக வலுக்கட்டாயமாக இதுபோன்ற போட்டிகளுக்குள் குழந்தைகளைத் தள்ளுவது, அவர்களின் நடத்தை, மனோபாவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் தம்மைப் போன்ற சக சிறுவர், சிறுமியருடன் இயல்பாகக் கலந்து பழக வேண்டிய காலகட்டம் இது. ஆனால், டி.வி. நிகழ்ச்சிகள் போன்றவை அவர்களுக்கு ஏற்படுத்தும் ஒளிவட்டம், அதுபோன்ற தொடர்புகளையே துண்டித்துவிடுகிறது” என்கிறார்.
ஆனால் இந்த விஷயத்தில், டி.வி. நிர்வாகம், நடுவர்களை விட குழந்தைகளின் பெற்றோருக்குத்தான் அதிகப் பொறுப்பு இருக்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பணம், புகழையே குறிவைக்கும் பெற்றோர், தங்கள் குழந்தை ஒரு மனிதப்பிறவி என்பதையே மறந்துவிடுகிறார்கள். பிற போட்டியாளர்களைத் தாண்டி ‘சாதிக்க வேண்டும்’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறித் தள்ளுவது, நெருக்கடி கொடுப்பது அவர்களின் உளவியலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடுகிறார்கள். படிப்பு, விளையாட்டு என்று தங்களின் வழக்கமான விஷயங்களுக்கு இடையில்தான் குழந்தைகள் இதுபோன்ற போட்டிகளுக்கும் தயாராக வேண்டியிருக்கிறது.
இந்த ரியாலிட்டி ஷோக்களில் ‘தோற்றதாக’ கருதப்படும் குழந்தைகளிடம் தாழ்வு மனப்பான்மையும், குறைந்த சுயமதிப்பு உணர்வும் குடியேறும் என்பதை பெற்றோர் உணர்வதில்லை.

குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற்கும் அசறுவதாக இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.
பல பள்ளிகள் இரண்டரை வயது குழந்தைகளை கூட பள்ளியில் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்ல தயாராகிவிட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல.
நிறைய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுவார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
உளவியல் மருத்துவர்கள் சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும் என்று கூறுகின்றனர்.
குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சில குழந்தைகள் தங்களது ஏழு வயதிலும் சிலர், பதினொரு வயதிலும் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றார்களாம்.

சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது. செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஏதேனும் வாங்கி உண்ண காசு கொடுத்து அனுப்புவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம். அப்பழக்கம் தற்காலத்தில் சற்று வலிமையடைந்து இருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது பத்து ரூபாய் முதல் அதிகப்பட்ச பணம் கொடுத்து அனுப்பும் பெற்றோர் தற்போது அதிகரித்து இருக்கிறார்கள். சிறுவயது குழந்தைகளுக்கு காசு கொடுத்து பழக்குவது அவர்களிடம் கெட்ட விளைவுகளையே உண்டாக்குகிறது.
செலவு செய்வதற்காக குழந்தைகளுக்குப் பணம் கொடுப்பதை விட சேமிக்க கொடுக்கலாம். பணம் கொடுத்து தன் முன்னிலையிலேயே உண்டியலில் போடுமாறு பெற்றோர் குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம். பின்னாளில் இந்நடத்தை சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சேமித்துப் பழகியவர்கள் பிற்காலத்தில் படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் தான் பெறும் சம்பளப் பணத்தை கண்ணும் கருத்துமாக செலவு செய்பவர்களாக இருக்கின்றனர்.
அவர்களுக்கு குடும்ப பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. திட்டமிட்டு பொருட்களை வாங்கும் திறமை வளர்ந்து விடுகிறது. கிடைத்த பணத்தையெல்லாம் செலவு செய்து வளரும் குழந்தைகள் பின்னாளில் மனதில் நினைத்ததையெல்லாம் வாங்கிக் குவித்து விடும் இயல்பினராக மாறிவிடுவர். மேலும் கடன் வாங்கியாவது செலவு செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு பெரிய கடன் சுமையை தன் மீது இவர்கள் ஏற்றிக் கொள்வார்கள்.
பணம் இல்லாவிட்டால் என்ன நிகழும் என்பதை அவ்வப்போது குழந்தைகளுக்கு புரிய வைப்பது நல்லது. அப்போது தான் உதாரித்தனமாக செலவு செய்வதை பிற்காலத்தில் தவிர்ப்பார்கள். குறைவான பணத்தை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்று பணம் போதவில்லை என்பதற்காக வேண்டிய பொருளை வாங்காமல் திரும்பி வரலாம்.
அப்படி வருவதை உணரும் குழந்தைகள் பணத்தின் அருமையை தானாகவே உணர்ந்து கொள்வார்கள். இதுபோன்ற மேலும் சில வழிமுறைகளை பயன்படுத்தி குழந்தைகளிடம் சிறுவயதிலேயே பணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதே சமயத்தில் குழந்தைகளை கஞ்சத்தனம் உள்ளவர்களாக உருவாக்கி விடக்கூடாது என்பதில் பெற்றோர் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசியமான செலவுகளை செய்வதையும் அநாவசியமான செலவுகளை தவிர்ப்பதையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதே சரியானது.

குழந்தைகளின் திறமையை கண்டுபிடித்து அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று பெற்றோர் யோசிக்க வேண்டும்.
"என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும் படுசுட்டி." என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.
திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில் இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும்.
குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படி கண்டு பிடிப்பது?
சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள் கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை வெளிப்படும். இதைத்தான் 'சித்திரமும் கைப்பழக்கம்' என்று கூறுவர்.
அதேபோல் சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும் சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர்.
மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி, சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.
* உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
* எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.
* பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப் போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.
* உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி உற்சாகப்படுத்துங்கள்.
* 'வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு' என்று அவ்வப்போது உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். 'தோல்விகள்தான் வெற்றியின் படிக்கற்கள்'. 'தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்' என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே திடப்படுத்துங்கள்.
* உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில் வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும் அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள்.