search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலையணை"

    • பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.
    • 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. இந்த அணைகளில் நேற்று மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 941 கனஅடியாக குறைந்தது. அணைகளில் இருந்து 354 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. மாநகரிலும் காலையில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அங்கு 1.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ள ளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 20 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 21 அடியாக உள்ளது.

    இதேபோல் ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் தலா 1 அடி உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை சற்று குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தணிந்தது.

    களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்விழ்ச்சி அமைந்துள்ளது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்தியது.

    வெயிலின் தாக்கத்தால் தலையணை தண்ணீர் இன்றி வறண்டது. மரம், செடி,கொடிகளும் மழை இன்றி காய்ந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனைதொடர்ந்து வறட்சியின் காரணமாக மூடப்பட்ட தலையணை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக தலையணை, திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் களக்காடு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின் பேரில் தலையணைக்கு செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணைக்கு செல்லும் வாயில் மூடப்பட்டு, வனசரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கும் பக்தர்கள் செல்ல 2-வது நாளாக இன்று தடைவிதித்தனர்.

    மேலும் உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், பச்சையாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. களக்காடு-நாகர்கோவில் சாலையில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் நாங்குநேரியான் கால்வாயில் செல்லும் தண்ணீர் உப்பாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது.

    களக்காடு தாமரை குளத்தின் நடுமடை அருகே கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பொதுப் பணித்துறையினர் மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×