என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
சருமத்தில் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் மாஸ்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
* பார்லரில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் மில்கையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில் தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும். கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும். மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும். ஆடவோ, அசையவோ கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம் பாதிக்கப்படும்.
* மற்றவர்களுடன் பேசக்கூடாது.
* மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்தோ துடைக்கவேண்டும்.
வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்
பிரட் மாஸ்க் : ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும். பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பிரட்டை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.
பாதாம் மாஸ்க் : மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும். கரும்புள்ளிகள் மறையும். இந்த மாஸ்க்கை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

கர்ப்ப காலத்தில் உணவினைக் கட்டுப்படுத்தினால் ஊட்டச்சத்துக் குறைவினை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்திவிடும். தாயாகப்போகும் பெண்ணுக்கு தேவையான சில அறிவுரைகளை பார்க்கலாம்.
கர்ப்பிணித் தாய்மார்கள் போஷாக்கான மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக இவர்களுக்கு 2500-லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது. கர்ப்ப காலம் முழுவதிலும் உப்பைக் கட்டுப்படுத்துவது நல்லது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிக புரதம், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள கலப்பட உணவு உகந்தது. முடிந்தால் நாளொன்றுக்கு ஒரு லிட்டர் பாலினைக் கர்ப்பிணித் தாய்மார்கள் குடிப்பது நல்லது.
பச்சைக் காய்களிகள் கூடுதல் இரும்புச்சத்தினைக் கொடுக்கும். பழங்களையும், காய்கறிகளையும் இவர்கள் எடுத்துக்கொள்ள வலியுறுத்த வேண்டும். இறைச்சி, மீன், முட்டைகள், ரொட்டி, சாதம், தயிர் போன்றவை இவர்களுக்கு நல்லது.
கர்ப்ப காலத்தில் உணவினைக் கட்டுப்படுத்தினால் ஊட்டச்சத்துக் குறைவினை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்திவிடும். அதன் விளைவாகக் கர்ப்ப பையிலேயே குழந்தை இறந்துவிடுதல், குறைப்பிரசவம் போன்றவையும், பிரசவத்தில் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கர்ப்ப காலத்தில் அதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்க்கவேண்டும்.
கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில் மார்பகங்களைக் கவனித்தல் மிகவும் முக்கியமாகும். மார்பகங்கள் பெரிதாகும் இந்த காலகட்டத்தில் இறுக்கமான, தேவையற்ற அழுத்தத்தை அளிக்கும் துணிகளை அணிய கூடாது. மார்பகங்கள் பெரியதாகவும் கனமானதாகவும் இருந்தால், அதனைத் தாங்குமாறு சரியான உள்ளாடைகளை அணிந்துகொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் கடைசி கட்டத்தில் காம்புகளை சோப்பு மற்றும் தண்ணீரினால் தினமும் கழுவி முன்னுக்கு இழுத்து விடவேண்டும். மலச்சிக்கலை கர்ப்பிணித் தாய்மார்கள் தவிர்த்தல் நல்லது. அதற்காக மலமிளக்கிகளை உபயோகிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் குடிப்பது, கீரைகளைச் சாப்பிடுவது, பழங்களைச் சாப்பிடுவது போன்றவற்றைச் செய்தாலேயே மலம் தினமும் முறையாக வந்துவிடும். அதோடு எளிமையான உடற்பயிற்சிகளும் செய்வது மலம் இயற்கையாக வெளிவர உதவும்.
கர்ப்ப காலத்தில் மன அமைதியுடன் இருத்தல் அவசியம். முடிந்த அளவுக்கு மன இறுக்கத்தைக் குறைத்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதற்கு மனதிற்கு இதமளிக்கும் புத்தகங்கள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல், தியானம் செய்தல், கைவினைப் பொருட்களைச் செய்தல் போன்றவை உதவியாய் இருக்கும்.

தினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,
காலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),
பால் - ஒரு கப்,
மிளகுத்தூள் - சிறிதளவு,
கோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 5 பல்,
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,

செய்முறை:
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
காலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.
2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.

உப்பு - தேவைக்கேற்ப.

சூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சவாசனத்தில் பிராணாயாமம் செய்து வந்தால் மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம். சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள். கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்’ என்று ஜெபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.
பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.

பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.
இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.
அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.
மனிதர்கள் ஏன் அடிக்கடி களைப்படைகிறார்கள் என்பதற்கு ஜேன் பிராடி என்ற மருத்துவ அறிஞர் ஒரு விளக்கம் அளித்துள்ளார். கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிக அளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன.
ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவற்றின் அறிகுறி இருந்தாலும், அவை உடலை களைப்படையச் செய்துவிடும். உணர்ச்சி வசப்படுவதாலும், மனத்தளர்ச்சியினாலும் அதிகமான எதிர்பார்ப்புகளாலும் களைப்பு ஏற்படுவது உண்டு. அவசரமாக உண்பதாலோ, சரிவர உண்ணாமல் இருப்பதாலோ உடலில் சர்க்கரை சத்துக்குறைவு ஏற்பட்டு களைப்பு உண்டாகிறது. அதிகமான உடற்பயிற்சி, குறைந்த உறக்கம் போன்றவையும் களைப்பின் காரணங்களாகும்.
மிகச் சமீபத்தில் மற்றொரு ஆச்சரியமான கண்டுபிடிப்பும் வெளிவந்துள்ளது. குறைப்பிரசவத்தில் அதாவது ஏழு, எட்டு மாதங்களில் பிறந்தவர்கள் வெகு எளிதில் களைப்படைந்து விடுவார்களாம். இது குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் கசப்பான சேதி. ஆனாலும் அதுதான் நிஜம். அடிக்கடி களைப்பு, தொண்டைக் கமறல், கண் எரிச்சல், உடலில் சோர்வு, லேசான நடுக்கம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் சொட்டுதல் போன்றவை நமக்கு ஏற்பட்டால் அது அழையா விருந்தாளியான ஜலதோஷத்தைக் குறிக்கிறது. ஜலதோஷத்தால் பாதித்த ஒருவருக்கு எளிதாக பிற பெரிய நோய்களும் தாக்கக்கூடும்.
ஆகவே, இந்த தொல்லை தரும் ஜலதோஷத்தை தடுப்பது எப்படி? இதற்கு மிகச் சரியான மருந்து ஒருவகை அமிலம்தான். இதன் பெயர் அஸ்கார்பிக் அமிலம் ஆகும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இந்த அமிலம் 80 மில்லி கிராமும், தாய்மார்களுக்கு 100 மில்லி கிராமும் தேவைப்படுகிறது. இந்த அளவு குறைந்தால் நோய்கள் மிக எளிதில் தொற்றிக்கொள்ளும். களைப்பு ஏற்படும் போது எலுமிச்சம்பழத்தில் அதிகமாக காணப்படும் இந்த அமிலம் அந்தக் களைப்பை போக்குகிறது. இந்த அமிலத்துக்கு வேறு பெயரும் உண்டு. அதன் பெயர் வைட்டமின் ‘சி’, இது குறைந்தாலும் களைப்பு ஏற்படும். குறிப்பாக கோடைகாலத்தில் மிக அதிக களைப்பு ஏற்படும்.

தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கோழி வெப்புடு. இன்று அதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
தட்டிய பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
தட்டிய பூண்டு - 30 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 3
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகள், மஞ்சள்தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
சிக்கன் வெந்து தண்ணீர் எல்லாம் வற்றியதும் மிளகுத்தூள் தூவிக் கிளறவும்.
கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
ஆந்திரா ஸ்டைல் கோழி வெப்புடு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இயற்கையை வெல்ல எவராலும் முடியாது. எனவே அதனோடு இசைந்து வாழ கற்றுக்கொள்வது சாலச்சிறந்தது. கொடூரமாக கொளுத்தும் வெயில் காரணமாக வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் சுருண்டு விழுந்து மரணம் அடைகிறார்கள்.
தமிழ்நாட்டில் வெயில் கொடுமையால் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும் வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கம் மக்களை வாட்டுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் வெயில் மண்டைய பிளக்கிறதே என நினைத்தால், கிராமப்புறங்களில் அதைவிட மோசம். பெரும்பாலானோர் கோடை வெயிலுக்கு பயந்து கொண்டு உச்சி நேரங்களில் வெளியில் வருவதே இல்லை.
நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்க செய்கிறது. வெயிலின் கொடுமையினால் நம் உடல் மட்டுமல்ல... நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையும் உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் செல்லும்.
அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு குளிர்சாதன அறைக்குள் சென்றால் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும். வெயிலின்போது தேவைக்கு அதிகமாக காபி, டீ, உடலுக்கு வேண்டாத குளிர்பானங்கள் போன்றவை மென்மேலும் தாகத்தை தூண்டும். உணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
எனவே இயற்கையான பானங்களை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம்குடிக்கலாம். வெள்ளரி, தர்ப்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை,மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம். நுங்கு, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.
வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்துகொள்ளலாம். கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்க்கலாம்.
உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான். பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல். எனவே ஆடைகளையும் இந்த காலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம்.
பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்திஆடைகளை உடுத்துங்கள்.
வீடுகளில், மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும்.
வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.
மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானையில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடிக்கலாம்.

சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல்.
சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சிலர், சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் எனப் பல மணி நேரம் குளியல் அறையிலேயே தவம் இருப்பார்கள். உண்மை அதுவல்ல. சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.
சிலர் அதிக நேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும்போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.
தலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.
அதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.
உடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.
குளித்து முடித்ததும் உடலில் உள்ள ரோமங்கள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அப்போது ஷேவ் செய்வதும் சுலபமாக இருக்கும்.
குளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.
குளித்துவிட்டு, உடலைத் துவட்டியதும் கட்டாயமாக பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது, நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை உள்ளங்கையில் எடுத்து, நன்கு தேய்த்துத் தடவிக்கொள்ளலாம்.
இதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் என்றும் இளமை மிளிர ஜொலிக்கும்!

பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சீரக சம்பா அரிசி சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் - 10
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பால் - கால் லிட்டர்
தயிர் - 100 மில்லி
எண்ணெய் - 50 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:
சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வேக விடவும்.
தக்காளி நன்றாக குழைய வெந்ததும் சிக்கன், தயிர், உப்பு, பால், அரை லிட்டர் தண்ணீர், சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைச் சேர்த்து வேகவிடவும்.
அரிசி பாதியளவு வெந்த பிறகு தம் போட்டு இறக்கவும்.
கொத்தமல்லித்தழை, புதினா, நெய் சேர்த்து 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பிறகு ராய்த்தாவுடன் பரிமாறவும்.

சூப்பரான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மூச்சை உள்ளிழுப்பது, கும்பகம் செய்வது, வெளிவிடுவதில் உள்ள ஏற்றத்தாழ்வை வைத்து, பிராணாயாமத்தை முதல் நிலை, நடு நிலை, உயர் நிலை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.

முதல் நிலை:
இது சாதாரணப் பிராணாயாமம்.
'தாழ்ந்த வகை’ எனப்படும் இந்த முதல் விதத்தில், 12 முறை உள்ளே இழுத்து (பூரகம் செய்து), 48 முறை உள்ளே வைத்திருந்து (கும்பகம் செய்து), 24 முறை மூச்சை வெளியே (ரேசகம்) விடுவது. (ஒரு முறை என்பது, கண் மூடி கண் திறக்கும் கால அளவு. இதை ஒரு மாத்திரை என்றும் கணக்கிடலாம்.)
ஒரு மாதம் வரை திணறல், சிரமம் இல்லாதபடி செய்ய பழகியதும், நடுநிலைக்குப் போகலாம்.
நடு நிலை:
இதில், மூச்சை 16 முறை உள்ளிழுத்து 64 முறை நிறுத்தி, சீராக 32 முறை வெளியே விடலாம். உடம்பில் வியர்வை வழியும். அதைத் துண்டால் துடைத்துக்கொள்ளாமல் வெறும் கைகளாலேயே துடைப்பது நலம்.
இந்தவிதமான பிராணாயாமத்தை மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து பழகிட வேண்டும். இதன் பிறகே உயர்நிலை பிராணாயாமத்தை அடையவேண்டும்.
உயர் நிலை:
இதில் 24 முறை மூச்சை உள்ளே இழுக்கவும். உடனே, 96 முறை உள்ளே நிறுத்திக் கும்பகம் செய்யவும். கும்பகம் செய்தவுடன் 48 முறை வெளிவிடவும். இப்படி ஒழுங்காக உயர்த்தி, திணறல் இன்றியும், மூச்சை விரைவின்றி சீராகவும் இழுக்கவும் விடவும் பழகவேண்டும்.
காலை 4 மணிக்கு அதாவது சூரிய உதயத்துக்கு முன் எழுந்து விரும்பும் தெய்வத்தை வணங்கிவிட்டு, பிராணாயாமத்தை ஆசன நிலையில் பயிற்சி செய்யவேண்டும்.
காலை 11 மணி, மாலை 5 மணி, இரவு 11 மணி என வைத்துக்கொண்டு நான்கு முறை பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஒரு தடவையில் 80 என்று 320 பிராணாயாமங்கள் ஒரு நாளில் பயிற்சி செய்வதுதான் தீவிர பயிற்சி.
பலன்கள்: பயிற்சியில் நாம் பிரணவ மந்திரத்தை ஜெபிக்குபோது உடலில் வெப்பம் உண்டாகிறது. இது அழுக்குகளைப் போக்கும். புது நிலையில் நாடிகள் தூண்டப்படுகின்றன. சிலருக்கு, உடலின் பல பாகங்களில் வலிகூட ஏற்படலாம். இருந்தாலும் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வரவேண்டும். உடல் வெப்பத்துக்கு ஏற்ப, பால், வெண்ணெய் ஆகியவை பயன்படுத்தவேண்டும். எண்ணெய்க் குளியல் அவசியம் தேவை.

காலமாற்றத்தின் காரணமாக குழந்தைகளுக்கும் நீரிழிவு வருவது போல, இப்போது குழந்தைகளும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனக்கு செம டென்ஷன்’ என்ற வாசகத்தை இன்றைய குட்டிக் குழந்தைகளிடம்கூட கேட்க முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளாக குழந்தைப் பருவ உயர் ரத்த அழுத்தம் என்ற பிரச்னை நம்மிடையே உள்ளது. வழக்கமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உண்டாக உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன் காரணமாக உள்ளது.
இது இன்றைய குழந்தைகளுக்கும் பொருத்தமான காரணமாகவே உள்ளது. மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவது குறைந்துவிட்டது. செல்போனிலும், வீடியோகேமிலும் பெரும்பாலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியக் கேடான பானங்களையே குழந்தைகள் உண்டு வருகிறார்கள்.
இதனால் இன்றைய குழந்தைகளில் 3.5 சதவீதம் பேருக்கு குழந்தைப் பருவ ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 10 முதல் 11 சதவீதம் குழந்தைகளிடம் ரத்த அழுத்தம் உள்ளது. குழந்தைப் பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய் நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
உயர் ரத்த அழுத்தம் உள்ள இளம் பருவத்தினரிடம் விரைவுபடுத்தப்பட்ட ரத்தநாள முதிர்ச்சி பிரச்னைக்கான வாய்ப்புகள் அதிகமாகவும் உள்ளன. தொடர்ச்சியாக நிலையாகவும், கடுமையான அல்லது உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு ஏதாவது நோய் அவர்களை அடிக்கடி தாக்கும். நாள்பட்ட உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தீவிரமான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கு வயதாகும் போது ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது இளம் வயதிலேயே கூட இவர்களைத் தாக்கலாம்.
குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளதா எனக் கண்டறியும் பரிசோதனைகள் மீது விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்துள்ளது. இது சற்று ஆறுதலான விஷயம். இது இன்னும் அதிகரிக்கும் விதமாக 3 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் குழந்தைகளிடமும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என AAP/IAP பரிந்துரை செய்கிறது. குழந்தைப் பருவத்தில் தோன்றும் ரத்த அழுத்தத்தை கவனிக்காமல் விடுவது அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும்.