என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. கருத்தரிக்க தடையாக இருப்பதற்கு நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்சனை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.
எதை மாற்றலாம்? எதை திருத்திக் கொள்ளலாம்? எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.
ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.
அசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது - குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.
சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…
எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.
கீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.
பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.
மாறிப்போன உணவுப் பழக்கங்கள்.
தவறான வாழ்வியல் பழக்கம்.
காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.
நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.
பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.
மாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.
மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.
அதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்… பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.
புது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.
பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.
நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.
இதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். பெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க புரதம் நிறைந்த கிரீன் தோசையை காலையில் சாப்பிடலாம். இன்று இந்த தோசையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 3

செய்முறை :
பச்சைப்பயறை இரவே நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான கிரீன் தோசை ரெடி.
பச்சைப்பயறு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
உப்பு - சிறிதளவு

செய்முறை :
பச்சைப்பயறை இரவே நன்றாக கழுவி தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
காலையில் ஊறவைத்த பச்சைப்பயறை மிக்ஸியில் போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், முந்திரி, சிறிது உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
தோசை மாவு பதத்துக்கு மாவை கரைத்துக்கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான கிரீன் தோசை ரெடி.
தக்காளி சட்னி, வெங்காய சட்னிக்கு தொட்டு சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும்.
* முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
* உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.
* உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
* கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.
* நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும். அதனால் நீங்களும் உடலுக்கும் ஸ்கிப்பிங்தானே என எண்ணாமல் ஆரோக்கியமான வாழ்விற்கு ஸ்கிப்பிங் செய்து பயன்பெறுவோம்.

சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் 1992-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண்களின் நலனை பாதுகாப்பதற்காக 1990-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணைய சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்றவற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது.
பெண்களின் நலன் தொடர்பாக தற்போது உள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்தச் சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றையும் ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களை செய்ய பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது.
பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களை பெற்று அவற்றின் அடிப்படையிலும், குற்றச் செயல்களை அறிந்து தாமாகவும் நோட்டீஸ் அனுப்பி இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உதவி, ஆதரவு, சட்ட கவனிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மகளிர் ஆணையம் இவ்வாறு செய்கிறது.
வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு வசதியாகவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது.
பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன மற்றும் சட்ட பாதுகாப்புகளை ஆய்வு செய்வது, சட்ட தீர்வுகளை பரிந்துரைப்பது, குறைகளை தீர்க்க உதவி செய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விஷயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குவது உள்ளிட்டவைதான் தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள் ஆகும்.

விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும்.
புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் ஆரம்ப கல்விக்கு முன்பு 3 வருட கல்வி பரிந்துரை
பேராசிரியர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி உருவாக்கியுள்ள புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி பருவத்தை பற்றி, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிறப்பு முதல் ஆறு வயது வரையிலான பருவத்தை பற்றி கவனப்படுத்துகிறது. குழந்தை பிறந்தவுடன் கற்கத் தொடங்குவதாக நரம்பியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆறு வயதிற்குள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி 85 சதவீததை எட்டிவிடும் என்பதால், இந்த பருவத்தில், குழந்தைகளுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளிக்க வேண்டும் என்கிறது இந்த அறிக்கை.
எனவே ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை (இ.சி.சி.இ), பள்ளிக் கல்விக்கான ஆதாரமாக இந்த அறிக்கை முன்வைக்கிறது. இதற்கு, ஆரம்பக் கல்விக்கு முன்பாக, மூன்று வருட கல்வியை பரிந்துரைக்கிறது. 3 முதல் 8 வயது வரை ‘விளையாட்டு மூலம் கண்டறிந்து கற்றல்’ முறையின் அடிப்படையில், நாடு முழுவதும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தை முன்மொழிகிறது. ஆரம்ப வயதுகளில் சரியாக பேணப்படாததால் பின் தங்கும் குழந்தைகள், கடைசி வரை, கல்வியில் பின்தங்குகிறார்கள் என்று மாணவர்களின் கற்றல் திறன் பற்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
இந்தியாவில் கல்வி கற்றலில் ஒரு நெருக்கடி உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை கணித திறன் மற்றும் கற்றல் திறன் இல்லை. முதல் வகுப்பில் நுழைவதற்கு முன்பே இந்த பிரச்சினை உருவாகிறது. ஆறு வயதில், முதல் வகுப்பில் சேருவதற்கு முன்பு போதுமான கவனிப்பும், அடிப்படை கல்வியும் கிடைக்காததால், இது ஏற்படுகிறது. ஆரம்ப கல்விக்கு முந்தைய நிலை கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காத பல சிறார்கள், ஆறு வயதாகும் முன்பே ஒன்றாம் வகுப்பில் சேருவதும் அதிகம் நடக்கிறது.
இந்த குறைபாடு, சமூகத்தில் பெரும் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குகிறது. வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தரமான முன் கல்வியும், ஆரோக்கியமான குடும்ப சூழலும், ஊட்டசத்து மிகுந்த உணவுகளும், மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
இந்த மாற்றம் எப்படி நடக்கும்?
உயர்தரமான பராமரிப்பு, சீரான உணவு, சரியான விளையாட்டுகள், மகிழ்ச்சியான குடும்பச் சூழல், மன ரீதியான ஆதரவு ஆகியவை ஒரு குழந்தையின் முதல் ஆறு வருடங்களுக்கு மிக முக்கியமானவை என்று இந்த வரைவு அறிக்கை கருதுகிறது. இதன் மூலம் மூளை வளர்ச்சி சீராக நடந்து, கற்றல் திறன் தேவையான அளவுக்கு வளரும்.
சிறு வயதில் பல வகையான புறக்கணிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்கும் குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மூளை ஸ்கேன்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், இந்த கருத்துகளை வரைவு அறிக்கை முன்வைக்கிறது. இவர்களின் மூளை வளர்ச்சியில் குறைபாடுகள் உருவாகி, அதனால் புரிந்து கொள்ளும் திறன் மற்றும் மனவளர்ச்சி பாதிக்கப்படுகிறது. சிறந்த இ.சி.சி.இ திட்டத்தை செயல்படுத்த அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், பத்து ரூபாய் அளவுக்கு பலன் கிடைக்கும் என்று வரைவு அறிக்கை கூறுகிறது.
இ.சி.சி.இ எப்படி வேலை செய்கிறது?
பிறந்தது முதல் மூன்று வயது வரை தாயாருக்கும், குழந்தைக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவும், மருத்துவ வசதிகளும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை பேண, தொடர்ந்து அவர்களுடன் பேசுதல், விளையாடுதல், நகர்த்துதல், இசை கேட்க வைத்தல், தொடுதல் போன்றவறை செய்ய வேண்டும். பல மொழிகளின் மற்றும் எண்களை அறிமுகம் செய்து, எளிய புதிர்களுக்கு விடை தேட பழக்குதல் ஆகியவையும் இந்த வயதுகளில் மிகவும் தேவையானவை ஆகும். 3 முதல் 6 வயது வரையிலான இரண்டாவது கட்டத்தில், ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். சுயஉதவி திறன்கள், சுகாதாரம், நகரும் திறன்கள், பிரிவு, பதற்றம் போன்ற உணர்ச்சிகளை கையாளுதல், சக வயதுடைய குழந்தைகளுடன் சகஜமாக பழகுதல், சரி, தவறுகள் பற்றிய தார்மீக அறிவு, உடற்பயிற்சி ஆகியவை இதில் கற்பிக்கப்படும்.
எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை பெற்றவர்களிடமும், பிறரிடமும் வெளிப்படுத்த, பிறருடன் தொடர்பு கொள்ள, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு செயலை செய்ய, பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டுகளுடன் கூடிய கல்வி தனியாகவும், கூட்டாகவும் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் திறமைகள் இயல்பான முறையில் வளர்த்தெடுக்கப்படும். கூட்டு முயற்சி, குழுவாக செயல்படுதல், சமூக ஊடாடல்கள், கருணை காட்டுதல், சமமாக நடத்துதல், சேர்த்துக்கொள்ளுதல், கலாசாரத்தை மதித்தல், ஆர்வம் காட்டல், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடன் சகஜமாகவும், மரியாதையுடனும் பழகுதல் ஆகியவை வளர்த்தெடுக்கப்படும்.
பல துறை திறன்களை வளர்க்கும் நோக்கத்தை கொண்ட இ.சி.சி.இ திட்டத்தில் எழுத்துகள், மொழிகள், எண்ணுதல், வரைதல், வண்ணங்கள், வடிவங்கள், வண்ணம் பூசுதல், உள்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள்,
புதிர்கள், தர்க்கரீதியாக சிந்தித்தல், காட்சிக் கலை, கைவினை, பொம்மலாட்டம், இசை, நடனம் ஆகியவை அடங்கும்.

சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 5
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை ஸ்பூன்
நறுக்கிய மாங்காய் - சிறிதளவு

செய்முறை :
பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
பாகற்காய் - 5
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை ஸ்பூன்
நறுக்கிய மாங்காய் - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மூட்டுகளில் கால்மூட்டு, கணுக்கால் மூட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டுகளையே அதிகமாக பயன்படுத்துகிறோம். மூட்டுகளில் வலி ஏற்பட்டால் தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
மூட்டுபிடிப்புகளும் தசை பலகீனமும் ஏற்பட்டு வலிகள் உண்டாகிறது. நமது உடம்பில் 360 எலும்பு இணைப்புகளும் 639 தசைகளும் 206 எலும்புகளும் உள்ளன. மனிதன் ஒரு அடி எடுத்துவைக்கும் போது 140 தசைகள் இயங்குகிறது.
மூட்டுகளில் கால்மூட்டு, கணுக்கால் மூட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் தோள்பட்டை மூட்டுகளையே அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த மூட்டுகளை முறையாக அசைத்து பயிற்சி செய்ய எளிய வழிகள் உள்ளன. படுக்கை பயிற்சியாக இரவில் படுக்கும்போது உணவுக்கு பின் ஒரு மணி நேரத்திற்கு பிறகு படுக்கையில் மல்லாந்து படுத்த நிலையில் கால் விரல்களில் தொடங்கி கணுக்கால், முழங்கால், இடுப்பு, கழுத்து, கைகளை ஒரு மூட்டுக்கு 10 என்ற எண்ணிக்கையில் முழு அளவும் அசைத்துவிட்டு உறங்கலாம்.
அப்படியே எழும்போது அசைத்துவிட்டு எழும்புவது நல்லது. மூட்டுகளை தொடர்ந்து அசைப்பதனால் தசைகள் வலுப்பெறும் நரம்புகள் புத்துணர்ச்சி பெறும். மூட்டுகளில் பசைத்தன்மை குறையாமல் மூட்டுத்தேய்மானம் தடுக்கப்படும். வாரத்திற்கு இரு முறையேனும் மிதமான நடைபயிற்சி செய்வதும் மோட்டார் சைக்கிளில் செல்வதை நிறுத்திவிட்டு சைக்கிள் ஓட்டுவதும் சிறந்த பயிற்சியாகும்.
இன்றைய சூழலில் அனேக மக்கள் குதிகால் வலியினால் அவதிப்படுகிறார்கள். கெண்டைக்கால் தசைகள் தொகுப்பாக மாறி குதிகால் எலும்பில் போய் முடிவடைகிற இடத்தில் ஒருசிறு எலும்பு வளாச்சி உண்டாகி தசைகளை அழுத்தும்போது குதிகால்வலி ஏற்படுகிறது. இதற்கு ‘கல்கேனியல் ஸ்பர்‘ என்று சொல்லப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் ஒரு அடிகூட தரையில் கால் வைக்கமுடியாத அளவிற்கு வலி ஏற்படும். வலியை பொறுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தவுடன் வலியின் தன்மை குறைந்துவிடும். இதற்கு காலையில் எழுந்தவுடன் நடப்பதற்கு முன்பாக ஒரு மசாஜ் செய்து பிடித்து விட்டு கொண்டு கால்விரல்கள் மற்றும் கணுக்கால்களை முன்னும் பின்னும் அசைத்து நன்கு பயிற்சி செய்தபிறகு சிறிதளவு மிதவெப்பமான வென்னீரில் ஒரு 10 நிமிடம் காலை வைத்திருந்தால் காலில் ரத்த ஓட்டம் அதிகமாகி வலி குறைந்துவிடும்.
பிறகு நடக்க ஆரம்பிக்கலாம். மிருதுவான ரப்பர் செருப்புகள் எம்.சி.ஆர் செருப்புகளை அணிந்து நடந்தால் நாளடைவில் வலி குறைந்துவிடும். மணற்பகுதிகளில் வெறும்காலில் நடப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் நல்ல பயிற்சியாகும். பெண்கள் ஹைகீல்ஸ் செருப்புகளை தவிர்ப்பது நல்லது. இது மூட்டுகளில் தேவையற்ற அழுத்தத்தை உண்டு பண்ணி உங்களுக்கு தெரியாமல் உடம்பில் பல மூட்டுகளில் வலிகளை கொண்டுவந்துவிடும்.

அடுத்து முழங்கால் மிகவும் முக்கியமானது. உடம்பின் எடையை தாங்கவும் உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் அதிக நேரம் நின்று கொண்டு பணி செய்பவர்கள் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் உடற்பயிற்சி செய்யாதோர்களுக்கெல்லாம் மூட்டு முழங்கால் வலி ஏற்படும். உடல்பருமன் குறைய உணவுக்கட்டுப்பாடும் கொழுப்புள்ள உணவினையும் தவிர்க்கவும். கால்சியம் சத்து நிறைந்த பால், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் துவையல், அத்திப்பழம், பாதாம் உணவில் சேர்த்துக்கொள்வதும் மாமிச உணவு, புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்ப்பதும் எலும்பின் நலனுக்கு இன்றியமையாதது.
எளிய பயிற்சிகளை அதாவது படுக்கையில் ஒருபுறம் சாய்ந்து படுத்துக்கொண்டு முழங்கால் மூட்டுகளை முன்னும் பின்னும் அசைப்பதும் குப்புற படுத்துக்கொண்டு முழங்கால் மடக்கி நீட்டுவதும் நல்ல பயிற்சியாகும். தற்போது 40 வயது வந்தவுடன் முழங்காலில் தேய்மானம் ஆரம்பித்து விடுகிறது. ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடிஸ் என்று அழைக்கப்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானத்தால் உலகெங்கும் 630 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் வருடந்தோறும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அடிப்பட்ட வீக்கத்திற்கு உடனே ஐஸ் ஓத்தடம் கொடுப்பது நல்லது. உடல்பருமனால் முழங்காலில் வலி உள்ளவர்கள் உடல்எடையை குறைப்பதில் கவனம் செலுத்தவேண்டும்.
முழங்கால் உறைகளை அணியவேண்டும். ஆரம்பநிலையில் முழங்கால் வலி உள்ளவர்கள் வீட்டிலேயே உள்ள அருமையான மருத்துவம் வென்னீர் ஒத்தடம் வென்னீரில் ஒரு கைபிடி அளவு கல்உப்பு போட்டு கதர் துணிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க எல்லா தசைகளிலும் வலி குறைந்துவிடும். தொடை தசைகள் பலவீனமானால் முழங்கால் வலி வந்துவிடும். தொடைதசை வலுப்படுத்த மல்லாந்து படுத்த நிலையில் முழங்காலில் பின்புறம் மெல்லிய தலையணையை வைத்து முழங்காலில் 50 முறை விட்டு விட்டு அழுத்தவேண்டும். மேலும் அதேநிலையில் காலை நீட்டியவாறே முழங்காலையும் தூக்கி பிறகு சமநிலைக்கு கொண்டுவரும் பயிற்சி ஒரு காலிற்கு 10 முறை என்ற அளவில் செய்வதும் சிறந்தது. உடம்பின் மொத்த எடையும் கூடும் இடம் இடுப்பு பகுதியாகும்.
முதுகெலும்பின் அடிபகுதியில் தான் தேய்மானம் ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. நீண்டதூர இருசக்கர வாகன பயணம் போன்றவை இடுப்பு வலிக்கு காரணம். குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் சிறிதளவு முட்டியை மடக்காமல் தூக்கி பிறகு தளர்த்தும்படி 10 முறை செய்வது இடுப்பு தசையை வலுப்பெறச் செய்யும். முதுகு வலி உள்ளவர் படுக்கையிலிருந்து எழும்பும்போது ஒரு பக்கமாக சாய்ந்து எழும்புவதும் முழங்கால்களை மடக்கிக்கொண்டு தரையில் உள்ள பொருட்களை எடுப்பதும் முதுகுவலியை குறைக்கும் வழியாகும்.
கழுத்துவலி நீங்க மருத்துவம் சொல்லும் தலையணை மந்திரம் என்னவென்றால் பெரிய உயரமான தலையணைகளை தவிர்க்கவேண்டும். டெயிலர் தொழில் செய்பவர் எழுத்து பணியாளர்கள் ஓட்டுனர்களுக்கு அதிகமாக கழுத்து வலி ஏற்படுவதுண்டு. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்தினை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை பக்கவாட்டிலும் முன்னும் பின்னும் அசைத்து பயிற்சி செய்வதன் மூலம் கழுத்து வலியை குறைக்கலாம். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கீழே பக்கவாட்டில் என வட்டம் போடுவதால் 5 லிருந்து 10 முறை செய்வதும் நல்ல பயிற்சியாகும்.
தாய்மார்கள் ஆட்டுக்கல்லையும் அம்மிக்கல்லையும் வாரம் ஒரு முறையேனும் பயன்படுத்துவதும் குனிந்து நிமிர்ந்து கோலம்போடுவதும் குடும்பத்தலைவர்கள் கார்களை பயன்படுத்துவதை தவிர்த்து கால்களை பயன்படுத்தி நடைபயிற்சி சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல் போன்றவை செய்வதும் வலிகளை நீக்க சிறந்த பயிற்சிகளாகும். எனவே உடம்பிற்கு பயிற்சிசெய்து வலிகளை நீக்கி ஆரோக்கியமாக வாழ்வோம்.
கே.கோவிந்தசாமி, இயன்முறை மருத்துவர், புதுக்கோட்டை

ஆண்களை திருத்தவோ, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ முன்வராதவர்கள், அதுபோன்ற தவறை பெண் செய்துவிட்டால் அவள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள்.
திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்த பிரச்சினைகளையோ, அதனால் ஏற்படும் மனக்காயங்களையோ, திருப்தியின்மையையோ பெண்கள் வெளியே சொன்னால் அது ஒழுங்கீனம் என்று கருதப்படுகிறது. தனது மனக்காயங்களுக்கு மருந்து தேடும் விதத்தில் அதை பற்றி அடுத்தவர்களிடம் சொல்லிவிட்டால், ‘தன் மனைவியின் நடவடிக்கை சரியில்லை’ என்ற முடிவுக்கு கணவர் வந்துவிடுகிறார்.
திருமணம் என்ற ஒப்பந்தம் இருவருக்கும் பொதுவானது. அந்த ஒப்பந்தத்தில் நிறைய கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் ஆண்களை பெரும்பாலும் சமூகம் கண்டு கொள்வதில்லை. இதிகாச காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வரும் அவலம் இது. ஆண்களின் குணமே அப்படித்தான் என்று அவர்களுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று, ‘அவன் அவ்வாறு நடந்துகொள்வதற்கு அவனது மனைவிதான் காரணம்’ என்று தேவையில்லாமல் மனைவி மீது வீண்பழியும் சுமத்துவார்கள்.
ஆண்களை திருத்தவோ, அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்கவோ முன்வராதவர்கள், அதுபோன்ற தவறை பெண் செய்துவிட்டால் அவள் திருமண வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். ஒரு பெண் திருமணத்திற்கு பிறகு வேறு ஒருவருடன் பேசினால், பழகினால் அது தவறாக பார்க்கப்படுகிறது. இதற்கு மனோரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதுபற்றி பிரபலமான மனநல நிபுணர் டாக்டர் ராமவுன் லாம்பா ஆராய்ச்சி செய்து சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
“திருமணத்திற்கு பின்பு ஒரு பெண், இன்னொரு ஆணுடன் பேசுவதும்- ஒரு ஆண், இன்னொரு பெண்ணிடம் பேசுவதும் இருவேறு கோணங்களில் அலசி ஆராயப்படுகிறது. ஆண்களை பொறுத்தவரை காதல் வேறு, பாலியல் உறவு வேறாக பார்க்கப்படுகிறது. ஆனால் பெண்களின் மனநிலை அப்படியில்லை. காதலின் ஆழத்தை பொறுத்துதான், பெண்களின் பாலியல் உறவு நிலை வலுப்படுகிறது. ஒரு பெண் மனதளவில் கணவனை விட்டுப் பிரிந்து வேறுஒருவருடன் சென்றுவிட்டால் அதோடு அவளது மணவாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுகிறது.
கற்புக்கு பலவித அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், மனம் என்பது மட்டுமே அதற்கு சரியான பொருள். பெண்ணின் மனம், கணவருடனான திருமண வாழ்க்கையை விட்டு விலகிப்போகும்போது அவளது எதிர்காலம் தடுமாற்றத்திற்குள்ளாகிறது. அப்போது கூட சமூகத்தில் தனக்கு இருக்கும் மரியாதைக்கு பங்கம் நேர்ந்துவிடுமோ என்றுதான் பயப்படுவாள். மற்றவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வேதனைப்படுவாள்.

தனக்கும்- தன் மனைவிக்கும் இடையே மூன்றாம் நபர் ஒருவர் வந்துவிட்டார் என்று கணவர் கருதும்போது, அவரும் மிகுந்த மனக்குழப்பத்திற்கு உள்ளாகிவிடுவார். மனைவி தன்னைவிட்டு விலகிவிட்டால், தனது எதிர்காலம் என்னவாகும்? எப்படி புரியவைத்து தடுப்பது? குடும்ப கவுரவத்தை எப்படி காப்பாற்றுவது? குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்? தன்னிடம் ஏதேனும் குறை உள்ளதா? இதுநாள் வரை வாழ்ந்தது போலியான வாழ்க்கையா? யாரிடம் சொல்லி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது? இப்போது என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்பன போன்ற பல கேள்விகள் கணவனை பாடாய்ப்படுத்தும். தம்மை பார்த்து இந்த சமூகம் கேலியாக சிரிக்கும் நிலைமை வந்து விடுமோ? என்ற கலக்கமும் தோன்றும்..” என்று ஆண், பெண் இருவருக்குமே தெளிவுபடுத்து கிறார், டாக்டர் லாம்பா.
இ்ந்த மாதிரியான நெருக்கடிக்குள் வாழ்க்கை சிக்கும்போது என்ன செய்யலாம்?
‘மேரேஜ் பிட்னெஸ்’ என்ற புத்தகத்தை எழுதி யிருக்கும் பட்டேல் இதற்கு தீர்வு தருகிறார்!
“வாழ்க்கை என்பது வாகனம் போன்றது. அவ்வப்போது அதை பழுதுபார்க்க வேண்டும். அப் போதுதான் எங்கே குறை இருக்கிறது என்பதை கண்டறிந்து சரி செய்ய முடியும். எந்த பெண்ணுக்கும் தன் கணவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கப் போவதில்லை. திருமண வாழ்க்கையின் அஸ்திவாரமான நம்பிக்கையை அசைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படாது. ஏதோ ஒரு வகையில் செய்த தவறு வாழ்க்கையை திசை மாற்றிவிடும். அந்த சமயத்தில் நிலைமையை பக்குவமாக கையாள வேண்டும். அப்போது ஆவேசம் வரும். மனைவியை தண்டிக்கத் தோன்றும். நான்கு பேரிடம் சொல்லி நியாயம் கேட்க தூண்டும். அப்படி செய்வதுதான் சரியென்று மனம் சொல்லும். ஆனால் அதெல்லாம் குடும்ப வாழ்க்கையை சிதைக்கத்தான் வழிவகை செய்யும்.
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆத்திரப்பட்டு தவறான முடிவு எடுத்துவிடக்கூடாது. நிலைமையை சுமுகமாக கையாள வேண்டும். கையைவிட்டு நழுவும் பொருள் நமக்கு சொந்தமானது. அதை பத்திரப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. அந்த சமயத்தில் பேசிப் பேசி பிரச்சினையை அதிகப் படுத்தி வாழ்க்கையை சிக்கலாக்கி விடக்கூடாது. சொந்தம், பந்தம், உறவுகள், நட்பு என எல்லோரிடமும் நடந்த சம்பவங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. சிலர் ஆறுதல் கூறுவதுபோல் பேசி எல்லா தகவல்களையும் கறந்துவிடுவார்கள். பின்னர் மற்றவர்களிடம் கூறி சிரித்து மகிழ்வார்கள்.
அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டால் மானம் போய்விடும், வாழ்க்கையே முடிந்துவிடும் என்றெல்லாம் கூறி தவறாக சித்தரித்துவைத்திருக்கிறார்கள். அதை நம்பி மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. தவறான முடிவும் எடுத்துவிடக்கூடாது. அவசரப்பட்டு பிரிவு முடிவை எடுத்துவிட்டால் அதன் பிறகு குழந்தைகளின் எதிர்காலம், வழக்கு, விவாகரத்து, ஜீவனாம்சம் என ஏராளமான சிக்கல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். அதற்கு இடம் கொடுக்காமல் மன்னிப்பு மூலமே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் அல்லவா!

ஒருவேளை மன்னிக்கவேகூடாத குற்றம் என்று சிலர் சொல்லலாம். ஆனால், அதற்காக உங்கள் வாழ்க்கையையே நீங்கள் சிதைத்துவிட முடியாது அல்லவா! கேலி பேச நினைப்பவர்களுக்கு நீங்களே வலிய சென்று வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் தவறு செய்ய நினைத்தால் அதற்கு கணவரின் செயல்பாடும் நிச்சயம் ஒருவகையில் காரணமாக இருக்கும். அதனை சரி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மனம் விட்டு பேசி துணையின் தவறை திருத்துவதற்கு முயல வேண்டும்.
அப்படியும் துணையின் மனநிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், இதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி கூறவேண்டும். தனக்காக இல்லாவிட்டாலும் குழந்தைகளின் நலனுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க சொல்லுங்கள். நீங்கள் செய்த தவறு எதுவாக இருந்தாலும் அதற்காக மனம் விட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்ளுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் இருவருக்குமிடையேயான பிரச்சினையை பற்றி நீங்கள் பேசாததையா மற்றவர்கள் பேசிவிடப்போகிறார்கள்? வாழ்க்கையில் செய்யும் தவறுகளை சரி செய்வதற்கு பொறுமை தேவை” என்கிறார், அவர்.
குடும்பநல ஆலோசகர் டாக்டர் ராஷி அகிஜா சொல்கிறார்:
‘‘பெரும்பாலான பெண்கள் உடல் ரீதியான தேடலுக்காக திருமண வாழ்க்கையை விட்டு வெளி யேறுவதில்லை. கணவனிடம் இருந்து அன்பும், அனுசரணையும் கிடைக்காதபட்சத்தில் அது கிடைக்கும் இடத்தை தேடிப் போவார்கள். அந்த சமயத்தில் பின்விளைவுகளை பற்றி யோசிக்க மாட்டார்கள். கணவன்தான் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்திக்கொள்ள முயல வேண்டும். மனைவி தவறே செய்திருந்தாலும் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மன்னித்துவிட வேண்டும். மீண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் அதுபற்றி பேசவே கூடாது.
இந்த மாதிரியான நெருக்கடியில் கணவன்- மனைவி இருவருடைய மனதையும் சம நிலைக்கு கொண்டு வந்து பழைய வாழ்க்கையை நோக்கி பயணிக்க வைக்க ‘கப்பிள்ஸ் தெரபி’ உதவுகிறது. இந்த தெரபி இருவருக்கும் தேவை. அவர்கள், தடுமாறிய சம்பவத்தை ஒரு விபத்து என்று எண்ணி மறந்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ஏதேனும் குறைகள் இருந்தாலும் அதற்கான தீர்வை வெளியே போய் தேடக்கூடாது. திருமண வாழ்க்கை மனைவியின் தவறால் மட்டுமே சிதைந்துவிடாது. அதன் பிறகு இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள். எப்படி பிரச்சினையை கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே மீதமுள்ள வாழ்க்கை அமையும்” என்கிறார்.

வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருந்தால் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர். வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் எளிய பயிற்சி இதோ...
கொடி போன்ற இடை என்பது பலரின் கனவு முக்கியமாக பெண்கள் இடை சிறுத்து இருக்க ஆசை கொள்கின்றனர்.. வயிறு அதை சுற்றியுள்ள பகுதிகள் மெலிந்து இருந்தால் பார்க்க அழகாக இருப்பதாக இன்றைய பெண்கள் கருதுகின்றனர்.
நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு சத்தானது முதலில் வயிறு அதை சுற்றியுள்ள பிரதேசங்களிலேயே அதிகம் படிகின்றது….இதுவே தொந்தி பிரச்சினைக்கு முதல் காரணமாகும் … இரண்டாவது வயிற்றில் உள்ள தசைகள் தொய்வடைவது ..
இக்காரணத்தினாலேயே பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வயிறு பெருத்து விடுகின்றது.. முதல் காரணமான கொழுப்பினால் உண்டாகும் தொந்தி பிரச்சினைக்கு உணவுக்கட்டுப்பாடு தான் சிறந்த மருந்து அத்துடன் வயிற்றில் உள்ள தசைகளுக்கான பயிற்சியை செய்தல் மிகவும் அவசியம் ஆகும்.
வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க உதவும் எளிய பயிற்சி இதே….
முதலில் நேராக படுத்துக்கொண்டு காலை மடக்கி வைக்கவும். கைகளை தலையின் பின்புறம் வைத்துக் கொண்டு மெதுவாக மேல் எழுப்பி வர வேண்டும் முடிந்த அளவு மேல் நோக்கி வர வேண்டும். ஆனால் கால்களை அசைக்க கூடாது..
இதை கிரஞ்சஸ் எனக்கூறுவர். வயிற்று தசை பகுதிகளுக்கான வெகு முக்கிய பயிற்சி இதுவே.. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 15 முறை செய்துவிட்டு 20 நொடிகள் ஓய்வு பின் மீண்டும் பத்து முறை என தொடர்ந்து 3 செட்கள் செய்தல் நலம் படிப்படியாக வயிற்று பகுதியில் உள்ள சதை குறைவதை காணலாம்.
ஆரம்பத்தில் 2 செட் மட்டும் செய்தால் போதுமானது. படிப்படியாக இந்த பயிற்சியின் அளவை 2 செட்டியிலிருந்து அதிகரித்து 5 செட் வரை செய்யலாம்.

வயிற்றில் உள்ள புண்ணை குணமாக்கும் தேங்காய்ப்பால் கஞ்சி. இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - கால் கிலோ
பாசி பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெ.வெங்காயம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசி, பாசிபருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
பூண்டுவை லேசாக இடித்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்சியில் கொட்டி அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசி பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
பச்சரிசி - கால் கிலோ
பாசி பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
பெ.வெங்காயம் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை :
கொத்தமல்லி, பெரிய வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சரிசி, பாசிபருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
பூண்டுவை லேசாக இடித்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவலை மிக்சியில் கொட்டி அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை, சோம்பு, பூண்டு சேர்த்து தாளித்த பின்னர் மிளகாய், வெங்காயம், வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் அரிசி, உப்பு, பாசி பருப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேகவிடவும்.
வெந்ததும் இறக்கி ஆறியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறிவிடவும்.
அதனுடன் புதினா, கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
சத்தான தேங்காய்ப்பால் கஞ்சி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பவதிகள் தங்களது உடல் நிலையைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். கர்ப்ப காலத்தில் நல்ல உணவு முறைகளையும், யோகாசனப் பயிற்சியையும் பின்பற்றினால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக எளிமையான ஆசனங்கள் தான் செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி மிகவும் முக்கியம். எல்லாவற்றையுமே, ஒரு யோகா பயிற்சியாளர் மூலம் கற்று, செய்வது நல்லது. உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும். இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். தசை பிணைப்புகளை சரிசெய்கிறது. முதுகுவலி மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்கிறது. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. சிசு பிறப்பை எளிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே சிசுவிற்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டும் போதாது உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில யோகா செய்வதனால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.

இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் ஆகியவற்றை உட்கொள்ளலாம். சுத்தமான, ஆரோக்கியமான சத்துணவுகளை சாப்பிட வேண்டும். தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை மற்றும் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் என அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் அதிகரிக்க தயிர், கேழ்வரகு, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, மீன், நல்லெண்ணெய் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் மருத்துவர்கள் தரும் சத்து மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை தவறாமல் சாப்பிடலாம்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம். தசை பிணைப்புகளை சரிசெய்கிறது. முதுகுவலி மற்றும் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது. உயர் இரத்த அழுத்த நிலையைக் குறைக்கிறது. சிறந்த தூக்கத்தை வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுக்கிறது. சிசு பிறப்பை எளிதாக்குகிறது.
கர்ப்ப காலத்தில் உடலில் எந்த வியாதியும் இல்லாமல் இருந்தாலே சிசுவிற்கு பல மடங்கு ஆரோக்கியம் கிடைக்கும். நல்ல உணவு முறைகளைப் பின்பற்றினால் மட்டும் போதாது உடற்பயிற்சியும் அவசியமான ஒன்றாகும். கர்ப்ப காலத்தில யோகா செய்வதனால் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியம் பெரும்.
குட்டீஸ் உங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குட்டீஸ் உங்களுக்கு சிலேட்டு என்றால் தெரியுமா? கடந்த தலைமுறை பள்ளிப் பிள்ளைகளும், சிலேட்டும் பிரிக்க முடியாதவை. அவர்கள் எழுதக் கற்கும் இடம் சிலேட்டுதான். நீங்கள் சிலேட்டில் எழுதியிருக்கிறீர்களா? முன்பெல்லாம் சிலேட்டில் நன்கு எழுதிப்பழகிய பின்புதான் நோட்டில் எழுதப் பழக்குவார்கள். பின்னர் பென்சிலில் எழுதிப் பழகிய பின்புதான், பேனாவால் எழுதத் தொடங்குவார்கள். இப்போது சிலேட்டுகள் பள்ளிகளில் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. எல்.கே.ஜி. முதலே நோட்டு பென்சில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். பாரம்பரியம் மிக்க சிலேட்டுகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?
எழுதும் சிலேட்டுகள் ஒரு வகை பாறையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. அந்த பாறையின் பெயர்தான் சிலேட்டு. அதில் இருந்து தயாரிக்கப்படுவதால் அந்தப் பெயரையே இதற்கும் வைத்திருக்கிறார்கள். சிலேட்டு பாறைகள், உருமாறிய மென்பாறைகளாகும். களிமண் மற்றும் வண்டல் மண் அல்லது எரிமலை சாம்பல்கள் படிவுகளாகி சிலேட்டுப் பாறைகளாகின்றன.
சிலேட்டு பாறைகள் தனித்துவமானவை. பளபளப்புத் தன்மையும், மென்மையும் கொண்டவை.
களிமண்ணானது அதிக வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும்போது மைக்கா மற்றும் சிலேட்டு பாறைகள் உருவாகின்றன.
சிலேட்டுப் பாறையின் வண்ணமானது அதில் கலந்திருக்கும் இரும்புத் தாதுவின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. பெரும்பாலும் இவை சாம்பல் (பழுப்பு) வண்ணத்தில் காணப்படுகிறது.
சிலேட்டுப் பாறைகள் கூரைக் கற்களாவும், தரைக் கற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சிலேட்டு பாறைத் துண்டுகளே பாலிஷ் செய்யப்பட்டு எழுது பலகையாக மாணவர்களின் கைகளில் தவழ்கிறது.
1800-களில் இருந்து சிலேட்டுகளை எழுது பலகையாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

எத்தனை அடுக்குகள் கொண்ட தகட்டினால் சிலேட்டு உருவாக்கப்பட்டு உள்ளது என்பதைப் பொறுத்து எழுது பலகைகள் உறுதியாக இருக்கும். மென்மையான சிலேட்டுகள் எளிதில் உடைந்துவிடும்.
சிலேட்டு பாறைகள் தண்ணீர் உறிஞ்சுவதில்லை, மேலும் குளிர்ச்சியை தாங்கும் தன்மை கொண்டது என்பதால் இவை பெரும்பாலும் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிலேட்டு பாறைகள் விலை மதிப்புமிக்கவை. அதை கடினமான அடுக்காக உருவாக்கவும், பொருத்தி பயன்படுத்தவும் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சிலேட்டுகள் உலகெங்கும் தயாராகிறது. ஆனால் பிரேசில் மற்றும் இங்கிலாந்து சிலேட்டுகள் தரம்மிக்கவையாக பெயர் பெற்றுள்ளன.
கல் சிலேட்டுகளாக அறிமுகமான சிலேட்டுகள், மரச்சட்ட சிலேட்டுகள், பிளாஸ்டிக் சட்ட சிலேட்டுகள், கோடு போட்ட சிலேட்டுகள், எழுத்துகள் பதித்த சிலேட்டுகள், ஆணிமணிச் சட்ட சிலேட்டுகள், காந்தத்தன்மை கொண்ட சிலேட்டுகள் என பல நவீன அவதாரங்கள் கண்டுவிட்டன.
இன்றைய காலத்தில் கல் சிலேட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் சிலேட்டுகள் மற்றும் எழுது பலகைகள் வந்துவிட்டன. உடைந்துவிடும் சிலேட்டுகளை பலரும் விரும்புவதில்லை. இருந்தாலும் சிலேட்டுகளும் காலத்திற்கேற்ப நவீனத்துவம் பெற்று வழக்கத்திற்கு வருகின்றன. அவை என்றும் மழலைகள் விரும்பும் பொருளாக இருந்து பாடங்களை (எழுதிக்) கற்பிக்கின்றன. அழித்து அழித்து எழுதிப் பழக, சிலேட்டைவிட சிறந்த சாதனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உங்கள் கல்வியை சிலேட்டில் இருந்து தொடங்குங்கள்... நாளைய தலைமுறையும் சிலேட்டில் இருந்து கற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.