என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளுக்கு பாயாசம் செய்து கொடுக்க விரும்பினால் சத்தான கம்பு சேர்த்து பாயாசம் செய்து கொடுக்கலாம். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கம்பு - அரை கப்
    பால் - அரை லிட்டர்
    சர்க்கரை - தேவையான அளவு
    பிஸ்தா, பாதாம், ஏலக்காய் - தேவையான அளவு

    கம்பு பாயாசம்

    செய்முறை

    பாதாம், பிஸ்தானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கம்பை முதல் நாள் இரவே நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    மறுநாள் பாதியளவு பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

    மீதி பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

    அதனுடன் வேகவைத்த கம்புப் பயறைச் சேர்த்து, ஏலக்காயைத் தட்டிப் போட்டு இறக்கவும்.

    பிஸ்தா, பாதாம் பருப்புகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கம்பு பாயாசம் ரெடி.

    குறிப்பு: சர்க்கரையை தவிர்க்க நினைப்பவர்கள் கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும்.
    உணவின் தன்மையை பொருத்து தான் நாம் அவற்றை வகைப்படுத்த வேண்டும். சில உணவுகள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். சில உணவுகள் நமது முழு உடல் அமைப்பையும் மாற்றம் பெறச் செய்யும். பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது தான் பழங்களும்.

    நமக்கு பிடித்த பழங்களை எந்நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்போம். பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். காய்கறிகளில் இருக்கும் சத்துக்கள் தான் பழங்களிலும் உள்ளன. சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களை நீரில் அலசி சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும். குறிப்பாக பழங்களை சாப்பிடுவதற்குமுன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு நிறைய நலன்கள் கிடைக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

    பழங்களின் மேல் தெளிக்கப்பட்டு இருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும். அவ்வாறு செய்தால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்ற பாதிப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே இந்த வகையான பூச்சி கொல்லிகள் தான். நீரில் அதிக நேரம் பழங்களை ஊற வைப்பதால் இந்த பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். பொதுவாகவே பழங்களை வெறும் நீரினால் அலசுவது சிறந்த முறையல்ல. அதற்கு மாறாக 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளும்.

    இதுபோன்று நீரில் ஊற வைப்பதால் பழங்களின் தட்பவெப்பம் சீராக இருக்கும். குறிப்பாக இவை வெப்ப நிலையை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், தர்பூசணி போன்ற பழங்கள் அதிக அளவில் வெப்பத்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமது உடலில் இவை வெப்பத்தை உருவாக்காமல் பார்த்து கொள்ளலாம். இது போன்று பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகளை தடுக்க முடியும். மேலும், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருப்பதையும் இதனால் தடுக்க இயலும்.
    நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். இந்த திரவம் குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும்.
    நம் முடிக்கால்களுக்கு இடையில் உள்ள கபாலத்தில் எண்ணெய் போன்ற ஒரு திரவம் சுரக்கும். அதற்குப் பெயர் சீபம். சீபம் சுரப்பது குறைவாக இருந்தால் முடி வறட்டுத்தன்மை அடையும். வெளியில் செல்லும்போது தலைமுடியை தூசிபடாதவாறு பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் முடி விரைவில் பாழாகி வறட்டுத் தன்மையை அடையும். அடிக்கடி சீப்பு கொண்டு தலை சீவுவதால் ஸ்கால்பில் சுரக்கும் சீபமும் சீப்பின் வழியாக முடி நுனிவரை பரவும்.

    தலையில் ரத்த ஓட்டம் சீராகும்.சுருள் முடிக்காரர்களுக்கு முடி அடர்த்தியாக இருப்பதால் வறட்டுத் தன்மை இருக்காது. எளிதில் முடி சிக்கு பிடிக்கும். நீளமுடி உள்ளவர்களுக்கும் வறட்டுத் தன்மையினால் முடி செம்பட்டை நிறமாகத் தெரியும். அலை அலையான முடி உள்ளவர்களுக்கு தலைமுடி சீவாதது போல எப்போதும் அடங்காமல் இருக்கும்.

    வறட்சித் தன்மை நீங்க, அவகடோ பழத்தின் (Butter fruit) சதைப்பகுதியினை தலையில் தடவினால் அது முடிக்கு நல்ல ஈரப்பதத்தைத் தரும். தயிரை தலையில் தடவினாலும் நல்லது. அதேபோல் பியரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு முடியில் அடித்து பிறகு தலைக்கு குளித்தால் அதுவும் முடிக்கால்களுக்கு ஈரத்தன்மையை அளிக்கும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது முடிந்தால் இரண்டு முறை எண்ணெய் குளியல் செய்தால் முடியின் வறட்டுத்தன்மை நீங்கும்.
    உடற்பயிற்சி தேவையில்லை அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.
    நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.

    நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

    ‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்த நோய்களும் ஏற்படுகின்றன.

    இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.

    மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று தினை, கோதுமை சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை மாவு - ஒரு கப்
    கோதுமை மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    தினை கோதுமை சப்பாத்தி

    செய்முறை


    ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.  

    பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.

    சத்தான தினை கோதுமை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஏதாவது ஆபத்து, சிக்கல்கள் இருந்தால் மட்டும், மிக விரைவில் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
    37 - 40 வாரங்களில் தாய்க்கு வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது ஆபத்து, சிக்கல்கள் இருந்தால் மட்டும், மிக விரைவில் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

    குழந்தையின் எடை 4 கிலோவுக்கும் அதிகமாக இருப்பது கர்ப்பப்பையில் நீர் குறைவாக இருப்பது தாய்க்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்தால் சிசேரியன் செய்யவேண்டும் கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால், இது தாயின் உடல்நிலையை பொறுத்துதான். சிலருக்கு சுகபிரசவம்கூட நடக்கலாம்.

    இரட்டை குழந்தைகள் இருப்பது கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருப்பது பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பது கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் நிலை மாறுபட்டு இருப்பது முந்தைய பிரசவம் சிசேரியனாக இருப்பது. தாய்க்கு இதய நோய் பாதிப்பு, நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது வலி வந்த பின்னும் கர்ப்பப்பை வாய் திறக்காமல் இருப்பது 30 வயதை கடந்தவர்கள்… இது சிலருக்கு மட்டுமே… இதெல்லாம் காரணங்களாகும்.

    வலி காரணமாக, பயம், பதற்றம், மனப்பிரச்னை காரணமாகத் தாய்மார்களே மருத்துவரிடம் கேட்டு சிசேரியன் செய்து கொள்கிறார்கள். சிலர் பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை நாள், ஜாதகம் பார்த்து செய்வது, தங்களுடைய சொந்த விருப்பத்தில் சில நாளை குறிப்பிட்டு குழந்தையை பெற்றுக்கொள்ள சிசேரியன் செய்வது போன்றவையும் நடக்கின்றன.

    ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறக்க கூடாது என்ற மூடநம்பிக்கையிலும் சிசேரியன் செய்து கொள்கின்றனர். பிரசவ வலிக்கு ரொம்பவே பயப்பட்டும் இப்படி சிசேரியன் செய்து கொள்கின்றனர். மேற்சொன்ன காரணங்களும் சிலருக்கு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இருக்கும். எனினும் அவர்களே தானாக முன்வந்தும் சிசேரியன் செய்துகொள்பவர்களும் உண்டு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

    சிசேரியனால் தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருந்தால், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதனால், பிரசவம் சிக்கலாகும். குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்த பின் சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படலாம் வயிற்றினுள் ரத்த ஓட்டத்தில் பிரச்னை வந்து, அதனால் மலக்குடலில் பிரச்னை ஏற்பட்டு ரத்தப்போக்கு ஏற்படுவது. இது சிலருக்கு மட்டுமே. தொற்றுநோய்கள் வரலாம். சிசேரியன் செய்து கொண்ட பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகு வலி அதிகமாக இருக்கும். அதிக உதிரப்போக்கு ஏற்படலாம். 
    குடும்ப உறவுகளின் தொடர்பு அறுந்து விடாமல் இருக்க வாரத்திற்கொரு முறையோ, மாதத்திற்கொரு முறையோ அவர்களை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தால் உறவுகள் கண்டிப்பாக பலப்படும்.
    உலக அளவில் பல்வேறு சமூகங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாலும் பண்டைய காலந்தொட்டு பாரம்பரியமாக அதற்கென தனி கோட்பாடுகளை பெருமளவில் வகுத்து அதனை தொடர்ந்து காப்பாற்றி கட்டுக் குலையாமல் காக்க இன்றும் நாம் முயற்சித்து வருகிறோம்.

    சமூக அமைப்புகளின் செயல்பாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இருப்பினும் காலம் மாற மாற அதற்கு தகுந்தாற் போன்று தன்னையும் திருத்தி சில மாற்றங்களைக்கண்டது. அந்த வகையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட ஒன்றாக கூட்டுக் குடும்பங்கள் நல்ல முறையில் இயங்கி வந்தன. விஞ்ஞான பொருளாதார வளர்ச்சி, தொழிலுக்காக இடம் விட்டு இடம் செல்லுதல், சட்டம் மற்றும் பொது அறிவு என விரிவடைந்த பின் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறு குடும்பங்களாக மாறிவிட்டன.

    அப்படி இருந்தால் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சி அபரிமிதமாக முன்னேறும் என்ற எண்ணமே அவர்களுடைய பிற்காலத்திய வாழ்க்கை பொருளாதாரத்தினால் நலிவடையாமல் இருக்கும் என்ற கருத்து நிலவியதால் இன்று இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்பவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    ஆனால் அத்தகைய வசதியான வாழ்க்கை வாழ்ந்தும் அதுவே பின்னர் ஆடம்பர வாழ்க்கையாக மாறி தேவையற்ற கடன் மற்றும் பொருளாதார நலிவுகளுக்கு உள்ளாவதை காண்கிறோம். சிறு குடும்பத்தினர் தங்கள் சொந்த உறவுகளிடமிருந்து தூரத்தில் வசிப்பது மட்டுமல்லாமல் தங்களது அண்டை வீட்டுக்காரர்களுடனும் சிலர் சில காரணங்களால் பழகுவதில்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற முதுமொழிகேற்ப நமது உறவுகளிடம் சிறு குறைகள் கண்டு தனிக் குடும்பங்களாக பிரிந்தவர்கள் தாங்கள் வாழும் பகுதியிலும் அண்டை வீட்டாருடன் அறிமுகம் கூட இல்லாமல் சிலர் வாழ்ந்து வருகின்றனர்.

    சமூகத்தில் குறையில்லா மனிதர்களை கண்டுபிடிப்பது கடினம் அதற்காக அனைவரையும் குறை உள்ளவர்களாக கருதுவதும் தவறு. அதற்கேற்றாற் போன்று அவர்களுடன் இணைந்து சமூகத்தில் வாழ்ந்தால் நலம்.

    அந்த காலத்தில்; மலைக்கு சென்று தேன் எடுப்பது, விலங்குகளை வேட்டையாடுவது “மலைக்குச் சென்றாலும் மைத்துனன் துணை தேவை”யென ஒரு பொன் மொழி இருந்தது. இரு குடும்பங்களுக்கு இடையில் பெண் கொடுத்தும், பெண் எடுப்பதும் வழக்கமாக இருந்தது. அந்த வகையில் கடலில் முத்துக்குளிக்க இருவர் சென்றால் இருவரும் அண்ணன் தம்பியாகச் செல்லாமல் மாமனும் மைத்துனருமாகத்தான் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் மற்றொருவர் தனது தங்கை வாழ்வை காப்பாற்ற முயற்சிப்பார் என்பதே அதனுடைய முக்கியத்துவம் ஆகும்.

    பழைய திரைப்படப் பாடல்களில் “அத்தைமடி மெத்தையடி ஆடி விளையாடமா!” மற்றும் “மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்” எனவும் மாமன் உறவுகளுடைய முக்கியத்துவத்தை விளக்கும் திரைப்படப் பாடல்கள் பல வெளியாயின. அதே போன்று அண்ணன் தம்பி உறவுமுறைகளை “முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்னுக்கு ஒன்னாக” போன்ற பாடல்களையும் கூறலாம்.

    கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் பணியாற்றுதல் மற்றும் குழந்தைகளும் கல்வி சம்பந்தமாக தொலை தூரங்களுக்குச் செல்வதால் கூடி வாழவழியில்லாமல் போய் விடுகின்றது. பொதுநாள் விடுமுறை, பண்டிகை தினங்களிலோ அல்லது ஞாயிறு போன்ற நாட்களில் மட்டுமே ஒன்று கூட வாய்ப்பு ஏற்படுகிறது. இன்று பலர் சிறிய இடப்பரப்பினைக் கொண்ட வீடுகளில் வசித்து வருவதால் அவர்களுடைய வீட்டிற்கு வரும் நெருங்கிய உறவுகள் அரை மணிநேரமோ அல்லது ஒரு சிற்றுண்டியை முடித்துவிட்டு அங்கு தங்காமல் சென்றுவிடுகின்றனர். இன்றைய குழந்தைகளுக்கு நெருங்கிய உறவுகள் யார்; அவர்கள் என்ன உறவு என்பதனைக் கூட அறிய வாய்ப்பில்லை.

    வயதான உறவுகளுக்கு எங்ஙனம் மரியாதைத் தர வேண்டும். நையாண்டி, நகைச்சுவை, பொறுப்பு ஆகியவைகள் பற்றி அறிய வாய்ப்பில்லாமல் பல குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். ஒரு சில சிறு குடும்பங்களில் கணவன், மனைவி உறவுகளில் ஏற்பட்ட மனக்கசப்பினால் பிரிந்து தனியாக வாழும் குடும்பங்களும் இன்று உண்டு. அந்த மனக்கசப்பு குழந்தைகளின் மனங்களில் இளமையிலேயே மாறாத வடுகூட்டுக் குடும்பங்களில் முதியவர்களின் அனுபவ பூர்வமான வழிகாட்டுதலும் இளம் கணவன் மனைவி உறவுகளில் சிறு விரிசல் ஏற்படும் போது உடனுக்குடன் அவை சரி செய்யப்பட்டுவிடும். அதேபோன்று வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகளை மற்ற உறவுகள் சுழற்சி முறையில் கவனித்தும் பிற தேவையற்ற, அன்னிய கெட்ட நபர்களின் பழக்கத்திலிருந்து பல வகையில் காப்பாற்றிவிடலாம்.

    கூட்டுக் குடும்பங்கள் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டாக ஒரு சிலர் மட்டும் பொருள் ஈட்டி, உழைத்து பலர் சோம்பேறித்தனமாக பலனை அடைவார்கள் என்று கூறப்படுவதுண்டு. பொருள் ஈட்டும் நபர்களின் குழந்தைகளும் பொருள் ஈட்டாதவர் குழந்தைகளும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகளுடன் வளர்க்கப்படுவர் அதற்கு உழைப்பவர்கள் எதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படும். அத்தகைய குடும்பங்கள் மிக தொலைவான தூரத்தில் தனிக்குடும்பமாக வாழாமல் தங்கள் உறவினர்கள்; வாழும் பகுதியிலேயே அமைத்தால் நல்லது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் குடும்ப உறவுகளின் இன்ப துன்ப நிகழ்வுகளில் தன் முழு குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சற்று கூடுதல் நேரம் செலவழிப்பது உறவை பலப்படுத்த கூடியதாக அமையும்.

    நவீன விஞ்ஞான வளர்ச்சியில் தொலை தொடர்பு வசதிகள் வாயிலாக உறவினை சிலர் தொடர முயற்சித்தாலும் நேரடியாகச் சந்தித்து உணர்வுகளை பகிர்ந்து மகிழ்வதற்கு இணையாக இருக்க வாய்ப்பில்லை. சிலர் தங்களது வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அன்பைக் கூட தங்கள் நெருங்கிய உறவுகளிடம் செலவு செய்வதில்லை என்ற ஒரு கூற்றும் நிலவுகிறது மிகக் கொடுமை.

    குடும்ப உறவுகளின் தொடர்பு அறுந்து விடாமல் இருக்க வாரத்திற்கொரு முறையோ, மாதத்திற்கொரு முறையோ அவர்களை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்தால் உறவுகள் கண்டிப்பாக பலப்படும். தம்முடைய பூர்வீகப் பகுதி மற்றும் முன்னோர் கொண்டாடிய திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு ஆண்டிற்கொரு முறையாவது அழைத்துச் சென்று காட்டினால் மேலும் நலம் பயக்கும்.

    ஆண்டுக்கொரு முறை கோடை வாசஸ்தலங்களை சுற்றுலா அழைத்துச் செல்வது போன்று தங்கள் பூர்வீகத்தைக்காட்ட ஒரு “பூர்வீகச் சுற்றுலா” என சென்று வருவதும் நல்லது. கல்வியிலும், நவநாகரிகத்திலும் முன்னேறிய நாம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொன் மொழியை ஏனோ மறந்து விடுகிறோம். எங்கோ இருக்கும் ஏழைகளுக்கு உதவ நினைக்கும் நாம் நமது பூர்வீகத்தில் அன்புக்கும், ஆலோசனைக்கும் இதர உதவிகளுக்கும் ஏங்கும் நாம் நம் நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு உதவுதலும் ஒரு மிகச் சிறந்த அருட்பணியேயாகும்.

    முனைவர். ஆ.மணிவண்ணன்,

    காவல் உதவி ஆணையர்,

    மதுரை மாநகர்
    மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
    பள்ளிக்கூடம், பல்வேறு இடங்களில் இருந்து வரும் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் இடமாக உள்ளது. இதனால் அவர்கள் ஒவ்வொருவரின் பழக்கங்களும் வேறுபட்டதாக இருக்கிறது. ஆனாலும் மாணவர்கள் ஒன்று கூடி படித்து வருகின்றனர். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களையும் வழங்கி வருகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் இன்னும் போதிய வசதிகளை செய்ய வேண்டிய நிலையே உள்ளது. எனவே தான் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்விச்சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. அதில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்று மேஜை, நாற்காலி, மின்விசிறி போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    இது போல் அரசு பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கும் உதவும் மனம் படைத்தவர்களும், தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக குடிநீர், கழிப்பிட வசதி முழு அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். ஏழை, எளிய அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் தான் படிக்க வைக்கப்படு கின்றனர். அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க ஆசிரியர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், அவர்கள் உயர்கல்வி பெறவும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

    பாடங்கள் நடத்துவது தவிர சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, நீர் மேலாண்மை, வன வளம், சேமிப்பு, சிக்கனம், பேரிடர் மேலாண்மை, அரசு அலுவலக நடைமுறை, விண்ணப்பம் நிரப்புதல் மற்றும் நாட்டின் ஜனநாயக முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக உருவாகும் நிலை ஏற்படும்.

    அரசு பள்ளிகளில் மைதானம், ஆய்வகம், நூலகம் போன்றவை மேம்படுத்தப்பட வேண்டும். அது மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலுவோடு இருக்க உதவும். பள்ளிக்கூடத்தின் பெருமை என்பது அங்கிருக்கும் வசதிகளை மட்டும் கொண்டது இல்லை. மாறாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் செய்யும் சாதனையில் தான் அடங்கி இருக்கிறது. எனவே பள்ளிக்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் மாணவர்களை ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும். அது தான் அரசு பள்ளி குறித்த பொதுமக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்டது.

    பள்ளியின் கருவூலமாக இருக்க கூடியவர்கள் மாணவ -மாணவிகள் தான். அவர்களின் திறமை வளர்க்கப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். தேர்வு முறை சார்ந்து மட்டுமின்றி சமூகசூழல் சார்ந்த சிந்தனையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    நம்மை சுற்றி உள்ள குறைகளை பற்றி கவலை கொள்ளக்கூடாது. மாறாக நம்மிடம் இருக்கும் நிறைகளை வைத்து எப்படி முன்னேறுவது என்பதை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மறை சிந்தனை மூலமே வெற்றியை ஈட்ட முடியும். எல்லா இடங்களில் நிறை, குறைகள் கலந்து தான் இருக்கின்றன. அதில் நம்முடைய தேர்வு எது என்பதில் தான் நம்முடைய வெற்றியும் அடங்கி இருக்கிறது. எனவே மாணவர்களை மேம்படுத்துவதன் மூலம் பள்ளியும் மேம்படும். என்றாலும் மாணவர்களை மேம்படுத்த, பள்ளியில் அனைத்து வகையான கட்டமைப்புகளும், மேம்பட்ட சூழலும் உருவாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

    மணிபாரதி, பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கோவை.
    செட்டிநாடு மட்டன் கிரேவியை சப்பாத்தி, இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 1 /2 கிலோ
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பில்லை - 2 கொத்துகள்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    தனியா தூள் - 3 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    கிரேவிக்கு

    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1 (பெரியது)
    தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

    செட்டிநாடு மசாலா தூள் செய்ய

    தனியா - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    பிரிஞ்சி இலை - 1
    கல் பாசி - 2
    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - 5 கொத்துகள்
    காய்ந்த மிளகாய் - 6 (அல்லது காரத்திற்கேற்ப)

    செட்டிநாடு மட்டன் கிரேவி

    செய்முறை:

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் தனியா தூள், உப்பு சேர்த்து 5 - 6 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளவும்.

    செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருள்களை நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வறுத்துக்கொண்டு, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    கிரேவிக்கு கொடுத்துள்ள பொருள்களை, ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதக்கிய பின், அரைத்து வைத்த கிரேவியை சேர்த்து 2 நிமிடம் கொதித்த பிறகு, வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து, நன்றாக கிளறவும்.

    பிறகு, அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா தூளை சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீரும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து இறக்கி வைக்கவும்.

    சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்!

    சிவரஞ்சனி ராஜேஷ், கரூர்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலிலுள்ள நீரின் அளவு குறையும் போது உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். அதைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.
    குளிர்காலத்தில் நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். காரணம்... உடலிலுள்ள நீரின் அளவு குறைவது. குறிப்பாக உதடுகள் வறண்டு போக ஆரம்பிக்கும். அதைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

    `உதடுகளில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் உதடுகளால் நீர்த்தரத்தைப் பற்றிக் கொள்ள முடியாது. இதனால்தான், உதடுகள் வறட்சியோடு சேர்த்து வெடிப்படையவும் செய்கின்றது. எனவே உதட்டுக்கு எண்ணெய் பசை தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதில் ஐந்து சொட்டு அளவுக்கு ஆலிவ் எண்ணெயை ஊற்ற வேண்டும். பின்னர், அதை லேசாகச் சூடுபடுத்தி காட்டன் துணியில் நனைத்து அதை உதட்டில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, காட்டன் துணியால் அதிகப்படியாக இருக்கக்கூடிய எண்ணெய் பசையைத் துடைத்துக்கொள்ள வேண்டும். இதை வாரத்துக்கு இரு முறை செய்தால் உதடுகள் வெடிக்காமல் இருக்கும்.

    கிரீன் டீ தற்போது பெரும்பாலானோர்களின் வீட்டிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த கிரீன் டீ பேக்கை எடுத்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், மெதுவாக அந்த டீ பேக்கால் உதட்டை தேய்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிஷங்கள் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், உலர்ந்த காட்டன் துணியால் உதடுகளைத் துடைக்கும்போது இயல்பான பிங்க் கலரில் உதடுகள் மாறிவிடும்.

    பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

    கடைகளில் பாதாம் எண்ணெய் கிடைக்கும். அதில் ஸ்வீட் பாதாம் எண்ணெயை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய்யை ஒரு துளி அல்லது இரண்டு துளி இட்டு இரவு தூங்குவதற்கு முன்னர் உதடுகளில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். காலையில் பார்க்கும் பொழுது உதடுகள் ரொம்ப அழகாக இருக்கும்.
    இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை

    இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் படுத்து, கைகளால் உடலை மேலே தூக்கி, கால்கள் தலைக்கு பின்னால் தரையை தொடுமாறும், பின் கைகள் தரையில் ஊன்றியிருக்குமாறும் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

    பயன்கள்

    இந்த ஆசனம் பார்ப்பதற்கு கஷ்டமானதாகத் தான் தெரியும். ஆனால் இந்த ஆசனத்தின் மூலம் இனப்பெருக்க உறுப்புகள் தூண்டப்பட்டு, மசாஜ் செய்தது போல் இருக்கும். மேலும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள், இந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால், நிச்சயம் நல்ல பலனைக் காணலாம். 
    இணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம், நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது.
    வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினி பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினி பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணைய பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம், நன்மை-தீமைகள் என இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது.

    உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள் உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுது போக்கிற்காக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும். மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதையே பெரியதாக கருதும் இன்றைய சூழலில் தற்போது சமூக வலை தளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எண்ணி நகையாடுகின்றனர். வாழ்க்கையில் அங்கமாகவே சமூகவலை தளம் மாறி விட்டது எனலாம்.

    சமூக வலை தளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கி கொண்டிருக்கிறது. கருத்துகளை பரிமாறி கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.

    தன் குடும்பத்தை பிரிந்து சென்று மறந்து விடாதே அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துகளையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். வணிக நிறுவனங்கள் சமூக வலை தளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளரின் கருத்துகளை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சமூக வலை தளங்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

    வாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்

    தீமைகள்

    சமூக வலை தளங்களை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    அதுமட்டுமின்றி சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்ளும் சம்பவமும் நிகழ்கிறது.

    அதிக பயன்பாட்டின் விளைவு

    24 மணி நேரமும் சமூக வலை தளங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

    ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும். சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை- தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களை குறைக்க இயலும். அதிலும் குறிப்பாக பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

    அ.ரூத், கணித துறை இரண்டாமாண்டு,
    உதயா கல்வியியல் கல்லூரி,
    அம்மாண்டிவிளை. 
    ×