என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.
    உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

    குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

    முத்திரை பயிற்சி செய்யும் முன்...

    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

    * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.
    தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று மாதுளை, பீட்ரூட் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,
    துருவிய பீட்ரூட் - கால் கப்,
    தக்காளி - 2,
    சோள மாவு - 2 டீஸ்பூன்,
    வெண்ணெய் - அரை டீஸ்பூன்,
    கிராம்பு - 2,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மாதுளை முத்துக்கள், துருவிய பீட்ரூட், நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து சூடானதும் கிராம்பு, சோள மாவு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மாதுளை விழுது, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    எல்லாம் சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்து, பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றவும்.

    உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான மாதுளை - பீட்ரூட் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.
    பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.

    பொதுவாக மேனி வறண்டுபோகாமல் இருக்க வழக்கமாக கூறப்படும் ஆலோசனை, அதிக அளவில் தண்ணீர் அருந்துவது. அது ஒரு வகையில் பலனளிக்கும் என்றாலும், ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை புரியும் மாயஜாலம் அதி அற்புதமானவை என்கிறார்கள் நிபுணர்கள். ஆரஞ்சு பழ சுளைகளை உண்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடாமல், அதனை காயவைத்து பவுடராக்கி தண்ணீருடன் குழைத்து முகம் மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் போயே போச்சு.

    * தக்காளி சாறு, தேன், முல்தானி மட்டி போன்றவைகளை சேர்த்து கிரீம் போல் அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். வறண்ட சருமம் இதன் மூலம் பொலிவு பெறும்.

    * வாழைப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சு பழம் போன்றவைகளை சேர்த்து அதில் அரை தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடர் சேர்த்து கிரீம் போல ஆக்கி முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள்.

    * ஓட்ஸ், பார்லி, சோயா மில்க் போன்றவைகளை சேர்த்து பேக் போடலாம்.

    * கேரட் சாறில் முல்தானி மட்டி பவுடர் கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

    * பாலாடை, ஆப்பிள் இரண்டையும் சேர்த்து சருமத்தில் பூசுவதும் வறண்ட சருமத்துக்கு பொலிவை ஏற்படுத்தும்.

    * பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.
    பொறுப்புணர்வு, வியாபார உத்தி, வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    அறிவியல் வளர்ச்சி இளைய தலைமுறையினரை சோம்பேறியாக மாற்றிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. விவசாய பணிகள், தொழிற்சாலைகளில் வியர்வை சிந்தி உழைக்கும் எண்ணம் மாறி, கம்ப்யூட்டர் முன்பு தவம் கிடக்கும் பணிகளை தான் இன்றைய இளைஞர்கள் பலரும் விரும்புகின்றனர். தொழில் தொடங்கி 10 பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பத்தோடு, பதினொன்றாக கிடைக்கும் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

    எல்லோரும் அலுவலக பணியை எதிர்நோக்கி கொண்டிருப்பதால் தான் சாதாரண வேலைக்கு கூட அதிக போட்டி நிலவுகிறது. இதனால் தான் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது. கொஞ்சம் மாற்று வழியை பற்றியோசித்தால் வாழ்க்கையில் ஜெயிக்க ஆயிரம் வாய்ப்புகள் உங்கள் முன்பு இருப்பது புரியும். ஆம், சுய தொழில் தொடங்கியும் சாதிக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழிலில் ஜெயிக்க நாணயம் மட்டும் இருந்தால் போதாது. தொழில் முன்னேற்றத்தில் அக்கறையும், சிறந்த நிர்வாகத்திறமையும் அவசியம் ஆகும். இதற்காக எம்.பி.ஏ. படித்து விட்டு தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதில்லை.

    ஆரம்பத்தில் சிறிய முதலீட்டுடன் தொடங்கிய பின்பு அந்த தொழிலில் உள்ள நெளிவு, சுழிவுகளை நன்கறிந்து தொழில் சார்ந்த அனுபவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த முதற்கட்ட பரீட்சையில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு தொழிலில் கைப்பிடித்தம் வராமல் லாபம் பார்த்து விட்டால், நிர்வாகத்திறமை வந்து விட்டது என்று அர்த்தம். பின்னர் காலத்தை கணித்து படிப்படியாக உங்கள் தொழிலின் வளர்ச்சியை அபிவிருத்தி செய்து கொள்ளலாம்.



    சிறந்த தொழில் அதிபராக நீங்கள் பிரகாசிக்க வேண்டும் என்றால், சந்தை நிலவரத்தை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். காரணம், போட்டியாளர், உங்களைவிட திறமைசாலியாக இருந்தால், நீங்கள் எளிதில் வீழ்ந்து விடுவீர்கள். தொழில் தொடங்க மூலதனமே பிரதானம். அதற்கு வங்கிகள் கடன் வசதி செய்து கொடுத்து ஊக்குவிக்கின்றன. இவை தவிர பின்வரும் குணாதிசயங்களையும் தொழில் தொடங்குபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    அதாவது தொழில் தொடர்பாக நடைமுறைக்கு வரும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆர்வம், தொழில் தொடங்குபவர்களிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பாகும். தொழிலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு செயல்படும் போது இடையூறுகள் வரலாம். அந்த நேரத்தில் மன உறுதியுடன் சமாளிக்கும் மனப்பக்குவமும் வேண்டும். பொறுப்புணர்வு, வியாபார உத்தி, விற்பனை முன்னேற்றம், வாடிக்கையாளர்களிடம் சமூக உறவு, முடிவெடுக்கும் தன்மை, நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் தன்மை போன்ற பண்புகளும் உங்களை சிறந்த தொழில் அதிபராக மாற்றும்.
    கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
    கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள்.

    மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.

    நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது. தற்போது மீண்டும் மக்களிடம் கருப்பட்டி பயன்பாடு அதிகரித்து உள்ளதன் காரணமாக அது குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    கருப்பட்டி எனும் பனை வெல்லம்

    பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இதனை பனை வெல்லம், பனாட்டு, பனை அட்டு என்று சொல்வார்கள். தென் மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பனை மரங்கள் மூலம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். பங்குனி, சித்திரை மாதங்கள் பதநீர் இறக்குவது அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

    வட்ட வடிவிலான இரும்பு பாத்திரமே கருப்பட்டி காய்ச்ச பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தாச்சு என்று பெயர். இதில் சுமார் 15 லிட்டர் பதநீரை ஊற்றி இரண்டு மணி நேரம் கிளறி பதம் வந்ததும் எடுத்து அச்சுகளில் வார்த்து எடுத்தால் அதிகபட்சம் 3 கிலோ அளவிற்கே கருப்பட்டி கிடைக்கும். இதன் காரணமாக கருப்பட்டி உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட அளவிற்கே மேற்கொள்ளப்படும். ஆனால் ஆண்டு முழுவதும் சில்லு கருப்பட்டியின் தேவையுள்ள காரணத்தால் அதில் ஏராளமான கலப்படங்கள் செய்து விற்பனைச் செய்யப்படுகின்றன. எனவே, கருப்பட்டி வாங்கும்போது நல்ல தரமான கருப்பட்டி தானா என்பதை கண்டறிந்து வாங்குதல் வேண்டும்.

    தரமான கருப்பட்டி கண்டறியும் முறைகள்

    நல்ல தரமான கருப்பட்டி என்பது சீக்கிரமாக கரையாது. தண்ணீரில் ஒரு துண்டு கருப்பட்டியை போட்டால் அது முழுதாக கரைய ஒன்றரை மணி நேரம் ஆகும். போலியான கருப்பட்டி என்பது சீக்கிரமே கரைந்து விடும்.

    கருப்பட்டியை நாவில் வைத்து சுவைக்கும்போது கரிப்பு தன்மையுடன் கூடிய இனிப்பு சுவையாக இருக்கும். அதுபோல் கருப்பட்டியில் உட்புறப் பகுதி என்பது கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலானதாக இருக்கும். இதுவே பளபளப்பாக காட்சி தந்தால் அது போலி கருப்பட்டி என்பதாகும்.

    அதுபோல் விவரமறிந்தவர்கள் கருப்பட்டியின் அடிப்பாகத்தை நுகர்ந்து சோதித்து பார்த்து வாங்குவது நலம். ஏனென்றால் உற்பத்தி குறைவு, பனை மரம் இன்மை போன்றவைகளால் சற்று விலை கூடுதலாக தான் கருப்பட்டி கிடைக்கும்.

    கருப்பட்டியில் மருத்துவ குணங்கள்

    கருப்பட்டியை காபி, டீ போன்றவைகளில் கலந்து தினசரி அருந்தி வரலாம். சர்க்கரை நோயாளிகள் கூட கருப்பட்டி காபியை குடிக்கலாம். ஏனெனில் உடல் செயல்பாட்டிற்கு ஏற்ற கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அதிக கலோகரிகள் இன்றி உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. அதிக இரும்புச்சத்து நிறைந்துள்ளது என்பது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.

    கல்லீரலில் சேரும் நச்சுகளை வெளியேற்றி கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து களி செய்து கொடுப்பதன் மூலம் இடுப்பு எலும்பு வலு பெறுவதுடன், கருப்பைக்கு வலுவைத் தருகிறது.

    கருப்பட்டியை உணவு உட்கொண்ட பின் சிறிய துண்டு எடுத்து சாப்பிட்டால் செரிமான சக்தியை தூண்டி எளிதில் உணவு செரிமானம் அடைய செய்கிறது. குடலின் இயக்கம் சீராகி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாதவாறு செயல்படுகிறது.

    கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. அதுபோல் பொட்டாசியம் சத்து மூலம் நரம்பு மண்டலமும் ஆரோக்கியம் பெறுகிறது.

    கருப்பட்டியுடன் சீரகம் கலந்து பொடித்து உண்ணும்போது நல்ல பசி ஏற்படுகிறது. குழந்தைகள் உணவு சாப்பிடாடல் அடம் பிடிக்கும்போது சீரக கருப்பட்டி உருண்டையை செய்து கொடுத்து விடுங்கள் பிறகு குழந்தைகள் நன்றாக சாப்பிட ஆரம்பித்து விடும். காலசூழலில் கருப்பட்டி பயன்பாடு குறைந்து விட்ட போதிலும் தற்போது மீண்டும் கருப்பட்டி பலகாரங்கள் பல கடைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குடல் வறுவல். இன்று இந்த மட்டன் குடல் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் குடல் - 1 (சிறியது)
    சின்னவெங்காயம் - 50 கிராம்,
    காய்ந்த மிளகாய் - 4,
    பச்சை மிளகாய் - 4,
    எண்ணெய் - 6 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை, மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    மிளகு தூள் - தேவையான அளவு,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :

    குடலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய  பின்னர் வேகவைத்த குடலை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன், மட்டன் மசாலா, உப்பு, மிளகு தூள் சேர்த்து தண்ணீர் எல்லாம் வற்றி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி கிளறி எடுத்து பரிமாறவும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம்.
    குழந்தையின் அந்தந்த வயது வளர்ச்சியை பெற்றோர்கள் எதிர்பார்ப்பார்கள். சில குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஒரு திறன் வளர்ச்சியில் மட்டும் தாமதம் ஏற்படலாம்; அல்லது பல திறன்பாடுகளிலும் ஒருசேரத் தாமதம் ஏற்படலாம். தங்கள் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் தெரிந்தாலோ அல்லது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டாலோ, குழந்தை நல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசிக்க வேண்டியது அவசியம். அவர்கள் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையைப் பரிந்துரை செய்வதன் மூலம் அக்குழந்தை பயனடைய முடியும்.

    பொதுவாக, கீழ்வரும் காரணங்களால் குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படுகிறது (முதல் இரண்டு காரணங்கள் பிரதானமானவை).

    * மரபணு
    * மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடுகள் (டவுன்ஸ் சிண்ட்ரோம்/ஃப்ரஜில் ‘X’ சிண்ட்ரோம்)
    * சுற்றுச்சூழல்
    * குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, அல்லது பிறந்தவுடன் அது எதிர்கொள்ள நேரிடும், தீங்கு விளைவிக்கும் நச்சு    பொருட்களின் தாக்குதல் (Lead poisoning)
    * நரம்பு மண்டல நோய்த்தொற்று
    * குறைப்பிரசவம்
    * கர்ப்பகால சிக்கல்கள்
    * கடுமையான வறுமை
    * மோசமான ஊட்டச்சத்து
    * அக்கறையின்மை



    ஏன் வேண்டும் ஆரம்பகால சிகிச்சை (Early Intervention)?

    குழந்தையின் 3 வயதுக்குள் இப்படிப்பட்ட நரம்பியல் வளர்ச்சி சார்ந்த (Neuro Developmental Disorders) குறைபாடுகளைக் கண்டறிவதன் மூலம், அக்குழந்தை தகுந்த சிகிச்சை பெற்று நலம் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளின் தன்மைக்கேற்ப, அவர்களுக்கு பேச்சு சிகிச்சை (speech therapy), தொழில்சார் சிகிச்சை (occupational therapy), உடல் மற்றும் நடத்தை சிகிச்சை (physical and behavioral therapy) அளிக்கப்படுகிறது.

    ஆட்டிஸம், ஏ.டஹெச்.டி (Attention Deficit Hyperactivity Disorder - ADHD), அறிவுத்திறன் குறைபாடு (Intellectual Disability) போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பல குழந்தைகளுக்கு, சிறு வயதில் வளர்ச்சியில் தாமத அறிகுறிகள் (Developmental delay) இருந்திருக்கும். ஆனால், அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்படாததால், அக்குழந்தையின் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமலேயே போகும் வாய்ப்பு உண்டாகியிருக்கும்.

    அதே நேரம், ஆரம்ப நிலையிலேயே இவ்வித சிகிச்சைகள் கொடுக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட குழந்தை தன்னுடைய அதிகபட்ச செயல்பாட்டை அடைந்து வீட்டில் மற்றும் சமூகத்தில் ஒன்றிவாழ முடியும். மேலும், குழந்தையின் குடும்பத்துக்கும் அந்த சிகிச்சை ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். ஒவ்வொரு குழந்தையின் இயல்பும் பிரச்னையின் தன்மைக்கேற்ப வேறுபடும். சிலர் யாருடைய உதவியும் இன்றி செயல்படலாம், சிலர் ஓரளவு உதவியுடன் வாழலாம், இன்னும் சிலருக்கு அதிகபட்ச உதவி தேவைப்படலாம். மொத்தத்தில், ஆரம்ப கால சிகிச்சை குழந்தையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
    யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். தும்மல் வருவதற்கான காரணத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    தும்மல் என்றால் என்ன? அது எப்பொழுது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப்பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும்.

    அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது

    * ரோட்டை பெருக்கிக்கொண்டிருந்தால் அதில் வரும்
    * தூசியின் மூலமாக தும்மல் வரும்.
    * சூடாக சாப்பிடும்பொழுது தும்மல் வரும்.
    * காரமாக சாப்பிடும்பொழுது வரும்.
    * அல்லது வீட்டில்' அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும்பொழுது வரும்.
    * காரம் மூக்கின் வழியாக நுழையும்பொழுது தும்மல் வரும்.

    மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுக்கள், வெப்பம், காரம், கிருமிகள் நுழையும்பொழுது நம் நுரையீரல் பயப்படும். உடனே நுரையீரல் நம் உடலில் உள்ள ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குள்ளே ஒரு நாற்பது தூசுகள் வந்து விட்டன. இதனால் எனக்கு ஆபத்து
    எனவே அதை வெளியேற்ற வேண்டும் என்று கேட்கும். நமது உடலில் உள்ள மருத்துவர் உடனே தும்மல் சுரப்பி என்ற ஹிடமைன் என்ற சுரப்பியிடம் அந்த வேலையை கொடுப்பார்.

    தும்மல் சுரப்பி நுரையீரலுக்குச் சென்று ஆராய்ச்சி செய்வார். இங்கே நாற்பது தூசுக்கள் உள்ளன. எனவே ஒரு நாலு தும்மல் மூலமாக அந்த தூசுகளை வெளியேற்றலாம் என்று முடிவு செய்து தும்மலுக்கு தேவையான சத்தியை உடலிலிருந்து பெற்று காற்று தேவையான அளவு எடுத்து தும்மல் வரும்பொழுது அதில் நீர்த்துளிகள் வரும்.

    எனவே உடலில் உள்ள தும்மலுக்கு தேவையான நீரை உறிஞ்சி நமக்கு தெரியாமல் நம்மையும் மீறி நான்கு முறை காற்றுடன் தண்ணீரைக்கொண்டு அந்த நாற்பது தூசிகளையும் வேகமாக நுரையீரலிலிருந்து வெளியேற்றும் ஒரு அற்புதமான கழிவு நீக்கம் என்ற வேலைதான் தும்மல்.



    தும்மல் என்பது நமது கட்டுப்பாட்டில் கிடையாது. நம்மை மீறி திடீரென வருகிறது. எனவே தும்மல் என்பது ஒரு நோய் கிடையாது. தும்மல் நம் உடல் பார்க்கும் வைத்தியம். ஆனால் நாம் தும்மல் வரும்பொழுது அதை அடக்க நினைக்கிறோம்.

    சிலர் அலுவலகத்திலோ மீட்டிங்கிலோ இருக்கும்பொழுது தும்மல் வராமல் அடக்குகிறோம். இப்படி தும்மல் வரும்பொழுது அடக்கினால் அதற்கு பெயர் தான் நோய். சிலர் தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு தைலம் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தும்மல் வரும்பொழுது தைலம் பயன்படுத்தினால் என்ன நடக்கும்.

    தைலத்தின் வாசம் உடலுக்குள் புகுந்து தும்மல் சுரப்பியை வேலை செய்யாமல் இருக்குமாறு கட்டளையிடும். நமது உடலிலுள்ள கழிவை வெளியே வீசும் மருத்துவம் செய்யும் தும்மல் சுரப்பியை வேலை செய்ய வேண்டாம் என்று தடுப்பது நமது உடலுக்கு நாம் செடீநுயும் துரோகமாகும்.

    இப்படி தைலத்தின் வாசம் இருக்கும்வரை நமக்கு தும்மல் வராது. நாம் நினைத்துக்கொள்கிறோம் தும்மலை குணப்படுத்திவிட்டோம் என்று. கண்டிப்பாக கிடையாது.

    நீங்கள் கழிவை வெளியேற்றும் ஒரு செயலை நிறுத்திவிட்டீர்கள். சுமார் ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்கு ஊந்த தைலத்தின் வாசம் ஊருக்கும்வரை தும்மல் சுரப்பி சுரக்காது. ஏற்கனவே நாற்பது தூசுகள் உள்ளே சென்ற நிலையில் தும்மல் சுரப்பி சுரக்கா விட்டால் இந்த ஐந்து மணி நேரத்தில் நாலாயிரம் தூசுகள் நம் நுரையீரலுக்குள் புகுந்துவிடும்.

    எனவே தும்மல் வரும்பொழுது அதை நிறுத்துவதற்கு எந்த வைத்தியமும் செய்யக்கூடாது. நாம் இருக்கும் இடத்தில் உள்ள காற்று கெட்டு விட்டது என்று புரிந்து நாம் அந்த இடத்தை விட்டு வெளியே வரவேண்டும் அல்லது காற்றாடி போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும். அல்லது முகத்தில் துணியை கட்டிக்கொள்ளவேண்டும்.

    இப்படி காற்றை சுத்தம் செய்வதைப் பற்றித்தான் யோசிக்கவேண்டுமே தவிர தும்மலை நிறுத்துவதற்கு முயற்சி செய்யக் கூடாது. எனவே, தும்மல் என்பது ஒரு நோயே கிடையாது. தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும் என்பது மட்டுமே மருத்துவம் ஆகும். தும்மலுக்கு ஒரே சிகிச்சை தும்ம வேண்டும். இதைத் தவிர எதைச் செய்தாலும் அது உடலுக்கு கெடுதல் உண்டு செய்யும்.
    சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை வகை உணவுகளுடன் மட்டன் ரோகன் ஜோஸினை சேர்த்துச் சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    கிராம்பு - 3
    ஏலக்காய் - 5
    இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டேபிள்ஸ்பூன்
    தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    அரைத்த தக்காளி விழுது - 100 மில்லி
    முந்திரிப்பருப்பு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு  
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி எண்ணெயில் வதக்கி ஆறியதும் மிக்சியில் அரைத்துகொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கிய பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.

    வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அதில் மட்டன், தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்து நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

    கலவை நன்றாக வெந்ததும் அதனுடன் தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.

    கலவையை நன்கு கலக்கிவிட்டு, கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

    10 நிமிடங்கள் வரை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.

    5-10 மில்லி வெண்ணீரில் குங்குமப்பூவை சேர்த்து நன்றாகக் கலக்கி, அந்நீரை அடுப்பில் இருக்கும் மட்டன் கலவையில் சேர்த்து நன்றாகக் கலக்கி, நறுக்கிய கொத்துமல்லித்தழையை தூவி இறக்கவும்.

    சூப்பரான மட்டன் ரோகன் ஜோஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. ​இதனை, ​ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்

    மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.

    பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.

    புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.

    தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.

    குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
    பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். பெண்களின் இந்த பிரச்சனைகளுக்கு கற்றாழை நிரந்தர தீர்வு தருகிறது.
    பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளால்தான். சீரற்ற மாதவிலக்கு, அடிவயிற்றில் வலி, கர்ப்பப்பையில் கட்டி, தொற்று, கர்ப்பப்பைப் புற்றுநோய் என அவர்களின் வாழ்க்கைத்தரத்தையே குறைக்கும் அளவுக்குக் கர்ப்பப்பைப் பிரச்சனைகளும் அதிகரித்துள்ளன.

    இவற்றைச் சரிசெய்ய, மூலிகைகளிலேயே மிக முக்கியமானதாக இருக்கிறது சோற்றுக் கற்றாழை என்ற குமரி. இது உணவாகிய மருந்து, மருந்தாகிய உணவு என்ற சிறப்புகளைக்கொண்டது. பூப்பெய்தும்போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகவும் புரோஜெஸ்ட்ரான் குறைவாகவும் இருக்கும். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவும், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகவும் சுரக்கும்.

    இது இயற்கையின் நியதி. இந்த சமநிலை மாறாமல் இருந்தால், பிரச்சனைகள் எதுவும் இல்லை. ஒருவேளை சமநிலை மாறிவிட்டால், சீரற்ற மாதவிலக்கு, கருவுறுதலில் பிரச்சனை, கருக்கலைதல், கட்டி உருவாகுதல், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் தலை தூக்கும். இதற்காக, ஹார்மோன் மாத்திரைகளைக் கொடுத்து சமநிலை செய்ய முயற்சி செய்தாலும், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

    இதற்கு எல்லாம் விளைவுகள் இல்லாத எளிய தீர்வாக இருக்கிறது கற்றாழை. வாரம் மூன்று நாட்கள், கற்றாழையை சாப்பிட்டுவர, இயற்கையாகவே ஹார்மோன்களின் செயல்பாடுகள் சமநிலையாகும். மேலும், மூளை தொடர்பான ஹார்மோன்களும் சிறப்பாகச் செயல்படும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள்.

    கற்றாழையில் உள்ள சபோனின் (Saponin) என்ற கசப்புத்தன்மை, செல்கள் அதிகம் பெருகுவதைத் தடுக்கிறது. இதனால், மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் புற்றுநோய் செல் வளர்ச்சியைக்கூட கட்டுக்குள் வைத்திருக்கும். கர்ப்பப்பையில் கட்டியிருப்பவர்கள், 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்துவர, கட்டிகள் கரைந்திருப்பதை ஸ்கேன் ரிப்போர்ட்டில் பார்க்கலாம்.
    டோஃபு, பாலக் கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாலக் கீரை - ஒரு கப்,
    டோஃபு (சோயா பன்னீர்) - 100 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    செலரி - சிறிதளவு,
    கோஸ் - 100 கிராம்,
    நறுக்கிய இஞ்சி - பூண்டு - ஒரு டீஸ்பூன்,
    சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுதூள், காய்கறி வேகவைத்த தண்ணீர், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    டோஃபுவை துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, செலரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய கோஸ், செலரி, இஞ்சி - பூண்டு சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் காய்கறி வேகவைத்த தண்ணீரை தேவையான அளவு சேர்க்கவும்.

    பிறகு பொடியாக நறுக்கிய பாலக் மற்றும் டோஃபு சேர்க்கவும்.

    நன்கு கொதி வரும்போது உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, கெட்டியானதும் இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான டோஃபு பாலக் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×