என் மலர்
ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.
பச்சை பயறு: புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.
மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.
கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.
தட்டை பயறு: தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.
உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்.
குழந்தைகள் வாழும் குடும்ப சூழல் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றபடிதான் குழந்தைகளின் மன நிலையும் இருக்கும். குழந்தைகளுக்கு எதுவும் புரியாது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வயது முதல் குழந்தையின் புரிந்துக் கொள்ளும் ஆற்றல் வளர்கிறது. ஒரு வயது குழந்தைக்கு சுற்றுச்சூழல் எல்லாமே புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்கு வாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கிவிடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும்.
ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டியது குழந்தைகளுக்குதான். தங்களுக்குரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் குழந்தைகள் மனம் வெதும்பிப்போய்விடுவார்கள். தேவையான முக்கியத்துவம் கிடைக்காதபோது தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று குழந்தைகள் நினைக்கத் தொடங்கிவிடும். அப்படி நினைக்கும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மவுனமாகிவிடும்.
குழந்தைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத் தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக் கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவை யற்ற ஆயுதமாகும்.
குழந்தைகளை கண்டிப்பதில் மிகுந்த கவனம் வேண்டும். கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு மற்ற குழந்தைகள் முன் அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.

பிடி கருணைக் கிழங்கில் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த கிழங்கில் மசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிடி கருணைக் கிழங்கு - 200 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 5
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தாளிக்க

செய்முறை :
கருணைக் கிழங்கை அவித்துத் தோல் உரித்து மசித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி வேகவிடுங்கள்.
பின் மசித்த கிழங்கைப் போட்டு சிறிது நேரம் கழித்து வெல்லம் போட்டுக் கிளறி இறக்க வேண்டும்.
சாம்பார் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

கறிவேப்பிலை, வெல்லம் - சிறிதளவு

சூப்பரான கருணைக் கிழங்கு மசியல் ரெடி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கான காரணங்களையும், தீர்வையை அறிந்து கொள்ளலாம்.
ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.
பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்’ எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.
இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.
இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.
ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.
தடுப்பு முறைகள்
பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.
இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள்.
வீட்டின் செல்வ செழிப்புக்கு உறுதுணையாகும் பெண்கள், வீட்டுப்பராமரிப்பில் மட்டுமே பெண்கள் கவனம் செலுத்தி வந்த காலங்கள் எல்லாம் பழங்கதையாகிப்போயிற்று. நாகரீக உலகில் ஆண்களின் சேமிப்புகளை முறையாக முதலீடு செய்வதற்கும் செல்வம் சேர்க்கும் அவர்களது முயற்சியில் உதவிடவும் இன்றைய பெண்கள் தயாராகி வருகின்றனர்.
வீட்டின் சேமிப்பை வளப்படுத்துவதில் ஆண்களின் முதல் சொத்தாக விளங்குவது அவர்களது இல்லத்தரசிகளே. செல்வ வளம் சேர்ப்பதில் ஆண்களின் நிதி ஆலோசகராக விரும்பும் பெண்மணி நீங்களானால், இந்த கட்டுரை உங்களுக்காகத்தான். தொடர்ந்து படியுங்கள். இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில நிதி நிர்வாக நுட்பங்கள். இதை தெரிந்து கொண்டால் பணம் சேர்ப்பதில் உங்கள் கணவருக்கு நீங்கள் சிறந்த துணையாக முடியும்.
எதற்கும் திட்டமிடுவது தான் முதல் படி. `திட்டம் சரியாக இருந்தால் பாதி வெற்றி அடைந்தாயிற்று’ என்னும் ஆங்கில பழமொழியை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் செலவுகளை- அடிப்படை செலவுகள், அதிக அவசியமல்லாத செலவுகள், சொத்துக்கள் மீதான முதலீட்டு செலவுகள் மற்றும் சேமிப்புக்கள் என வகைப்படுத்திக்கொள்ளுங்கள்.
மளிகை, மருந்து, வாடகை, வீட்டுப்பணியாள் சம்பளம், கல்விக்கட்டணம், மின் கட்டணம், டெலிபோன் கட்டணம் போன்றவை அடிப்படை செலவுகளாகும். சுற்றுலா, சினிமா, உணவு விடுதிகளுக்கு செல்லுதல் போன்றவை அதிக அவசியமல்லாத செலவுகளாகும். வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் ஆகியவை சொத்துக்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகளாகும். தங்க ஆபரணங்கள், வங்கி டெபாசிட்டுகள், பங்கு வர்த்தக முதலீடுகள் போன்றவை சேமிப்புகளாகும்.

மேற்சொன்ன ஒவ்வொரு இனத்திற்கும் அடுத்த மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை முன்னதாக திட்டமிட்டு அந்தந்த தொகையை தனித்தனியே எடுத்து வையுங்கள். வரவோ செலவோ அவற்றை தனித்தனியாக எழுதி வையுங்கள். என்னென்ன வகைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை சரியாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக பேப்பர்காரர், காய்கறிக்காரர், பால்காரர், சலவை தொழிலாளி இவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை, வீட்டுப்பணியாளருக்கு கொடுத்த முன்பணம், வங்கியில் செலுத்த வேண்டிய பணவிடை, மற்றும் காசோலை பற்றிய தகவல்களை ஞாபகமாக எழுதி வையுங்கள். அந்தந்த செலவுகள் முடிந்ததும் அதையும் மறக்காமல் குறிப்பெடுங்கள்.
ஒவ்வொரு இனத்துக்கும் நீங்கள் திட்டமிட்ட செலவு அதனை மிகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஒரு இனத்தில் நீங்கள் திட்டமிட்டதை விட அதிகமாக செலவு செய்து விட்டதாக தெரிய வந்தால், வேறு ஏதாவது ஒரு செலவை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியுமா என்று பாருங்கள்.
பல நேரங்களில் உபரி வருமானத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. உதாரணமாக, போனஸ் பணத்தில் தனக்கொரு செல்போன் அல்லது லேப்டாப் அல்லது கேமராவை வாங்கலாமென கணவர் நினைக்கும் போது, தங்க ஆபரணங்கள் வாங்குவதே சரி என மனைவி கருதலாம். இதுபோன்ற தருணங்களில் எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதை இருவரும் கலந்து பேசி முடிவெடுப்பது நல்லது.
கல்வி, மருத்துவம் மற்றும் உணவுக்கு முன்னுரிமை தருவது மிகவும் சரியானது. செலவுகளை கட்டுப்படுத்தி மாதாந்திர வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க கற்றுக்கொண்டால் அவற்றை சிறப்பான அளவில் முதலீடு செய்யலாம்.

எண்ணெய்ச் சத்து மிகுந்த அவகோடா பழத்தின் சதைப் பகுதியில் வைட்டமின், புரதம் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இந்த பழத்தில் இன்று துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அவகோடாவில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளன.
தேவையான பொருட்கள்
அவகோடா பழக்கூழ் (தோல், கொட்டை நீக்கியது) - 1 கப்
உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும் அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு கடாயை அடுப்பில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

சத்தான சுவையான அவகோடா துவையல் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். அவர்கள், சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.
பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். பிள்ளைப் பெற்றால் இப்படித்தான் ஆகும்… என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.
அதற்கு என்ன செய்யலாம்?
* மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு இடது காலை தூக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இதுபோல் தினமும் பத்து முறை செய்யலாம். இப்படிச் செய்வதால் உப்பிக் காணப்படும் வயிற்றின் உப்புசம் குறையும்.
* நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும் கால் விரல்களை தொடும் அளவுக்கு தினமும் பத்து முறை குனியலாம்.
* காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கலாம்.
* நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமையல் வேலைகளை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்வது நல்லது.
* குழந்தை பிறந்த ஐந்து மாதத்திற்குப் பிறகு தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தாலும் வயிற்று உப்புசம் சரியாகும்.

வீட்டில் கிடைக்கும் எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
தூசியால் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
* முன்னோர் காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
* அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
* இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.
* கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.
* சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.
* தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு “பேக்” போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள்.
இலந்த பழம்... இலந்த பழம்.. செக்க செவந்த பழம்.. தேனாட்டம் இனிக்கும் பழம்.. என்ற பாடலை மறக்க முடியாது. தற்போது இலந்தை பழம் சீசன் என்பதால் இன்றும் கிராமங்களின் வயல்வெளி, ஏரிக்கரை ஓரத்தில் உள்ள இலந்தை மரங்களில் சிறுவர்கள் பழம் பொறுக்கி உண்கின்றனர். அதிக ஊட்டசத்து கொண்ட இந்த பழத்தின் விலை மிக குறைவு என்பதால் ஏழைகளின் பழம் என்றழைக்கப்படுகிறது.
இது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருப்பதால் நினைத்தாலே நாவில் உமிழ்நீர் சுரக்கும். இதன் காய் பச்சை நிறத்திலும், பழம் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலிருக்கும். இப்பழத்தில் கொட்டைப்பகுதியும் அதை சுற்றி சதைப்பகுதி இருக்கும் இது மிகவும் சுவை மிகுந்தது. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டிற்கு முன்பே இருந்துள்ளது.
இதன் வேர், இலை, பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது. பழத்தில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும். இதை சாப்பிட்டால் மன அமைதி ஏற்படுவதுடன் ஆழ்ந்த உறக்கம் வரும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இதை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து ரத்த ஓட்டம் சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படுவதுடன் குடல் பகுதியில் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கிறது. உடல் சூட்டை போக்கி குளிர்ச்சியை தருகின்றது. பஸ்சில் செல்லும்போது சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் வரும். இதை தவிர்க்க இலந்தை பழம் சாப்பிட்டால் தடுக்கப்படுவதுடன் உடல் வலி நீங்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும் மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது. நமக்கு பல வழிகளிலும் நன்மை தரும் இந்த பழத்தினை அளவுக்கு மீறியும் உண்ணக் கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். பழம் விலை குறைவு என்று அலட்சியம் காட்டாமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள்.
உமா, கள்ளக்குறிச்சி.

சப்பாத்தி, நாண், தோசை, பூரி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் - 1 கப்
பெ.வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்

செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
மீல் மேக்கர் - 1 கப்
பெ.வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள், மிளகாய் தூள் - சிறிதளவு
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
தேங்காய் பால் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு

செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் நீரை வடிகட்டி மீல் மேக்கரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும்.
ஓரளவு வெந்ததும் மீல் மேக்கர், தேங்காய் பால், உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
ருசியான மீல் மேக்கர் குருமா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே.

* முகத்தில் சிறு பரு வந்தாலும் பலருக்கு ஒரு பழக்கம். அதனை பிய்த்து பிய்த்து கிருமி தாக்குதல், மறையா வடு இவற்றினை ஏற்படுத்தி விடுவர்.
* வலி இருந்தால் அதன் மீது ஐஸ் வையுங்கள். சரும மருத்துவர் உதவி பெறுங்கள். முகத்தினை வலிய கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது சுகாதாரமே. மேலும் பருக்களின் மீது நகம் படுவதும் ஆபத்தானதே.
* இம்மாதிரி முகத்தில் பருக்கள், கட்டிகள் வருவதற்கு சில காரணங்களில் ஒன்று அவர்களது கை குட்டைகள், துண்டுகள்தான் இவை சுகாதாரமற்று, துவைக்காமல் அழுக்காக இருப்பதுதான். பல நாட்கள் அதே கைக்குட்டை, துண்டினை உபயோகிப்பது நோயினை ஓடி சென்று வரவழைப்பதாகும். வியர்வை, அழுக்கு போன்றவை துண்டு, கை குட்டைகளில் படிவதால் இதனை அன்றாடம் முறையாய் சுத்தம் செய்வது அவசியம்.
இதே போன்று படுக்கை விரிப்பு, தலையணை உரைகளை மாதக் கணக்கில் துவைக்காமல் இருந்தால் அநேக கிருமிகளின் நிரந்தர உறைவிடமே மனித உடல்தான் என்றாகி விடும். படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதே சிறந்தது.
* சிலர் காதினை சுத்தம் செய்கின்றேன் என்கிற பெயரில் பல கூரிய ஆயுதங்களை உபயோகிப்பது வழக்கம். இதனால் ஏற்படும் பாதிப்பில் யாரும் அக்கறை கொள்வதில்லை. காதில் நிரந்தர பாதிப்புகள் ஏற்படலாம்.
ஆகவே முதலில் இப்பழக்கத்தினை கை விடுங்கள். பஞ்சு கொண்ட குச்சியாக இருந்தாலும் அதனை தொண்டை வரை உள் விட்டு உள்காதை தேய் தேய் என தேய்த்து சுத்தம் செய்ய வேண்டாம். உள் காதில் புண், பாதிப்பு என பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். மேலும் காதில் உள் உள்ள கீகிஙீ மேலும் உள் தள்ளப்படலாம். பஞ்சு உள்ளே சிக்கிக் கொள்ளலாம். உள் அழுக்கினை நீக்க மருத்துவர் மருந்தினை சிபாரிசு செய்வார். அதனையே பயன்படுத்தவும்.
* அன்றாடம் பள்ளிக்கு, அலவலகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பலரின் வழக்கம். இது நல்லதே. ஆனால் அதனை சுத்தமே செய்யாமல் தொடர்ந்து அந்த பாட்டிலிலேயே தண்ணீர் கொண்டு செல்வது பல வைரஸ் கிருமிகளை கொண்டு வந்து சேர்க்கும். தண்ணீர் பாட்டிலை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவுவது மிக முக்கியம்.
* இருமல், சளி இருக்கும்போது அடுத்தவர் முகத்துக்கு நேரே இருமவோ, தும்மவோ செய்வது தவறு. எளிதாக அனைவருக்கும் நோயினை தானம் செய்து விடுகின்றீர்கள். கை குட்டை, டிஷ்யூ இவற்றினை பயன்படுத்துங்கள். இது நமது கடமையாகும்.

* அதிக நேரம் ஷவரில், சுடுநீரில் நின்று கொண்டே இருக்காதீர்கள். உடலிலுள்ள இயற்கை எண்ணை பசையினை நீக்கி சருமத்தினை வறண்டு விடச் செய்யும். தோல் வயதானவர் போல் தோற்றமளிக்கும்.
* சாப்பிட்டவுடன் பற்களை நன்கு சுத்தம் செய்யுங்கள். இது ஆரோக்கியம் மற்றும் நாகரீகமும் கூட. வைட்டமின் பி12 பற்றாக்குறை உள்ளதைக் கூறும் அறிகுறிகள். பொதுவில் சாதாரண மறதி. வெளிர்ந்த தோல் இவைகளை பி12 குறைபாடு என எளிதில் கூறி விடுவர்.
வைட்டமின் பி- பிரிவில் 8 வகை உள்ளன. அவை அனைத்தும் உடலுக்கு உணவிலிருந்து சக்தி கிடைக்க உதவுபவை. ஞிழிகி, ஆரோக்கிய நரம்பு, ரத்த செல்கள் இவற்றுக்கு பி12 மிகவும் அவசியமானது. ரத்த சோகையினைத் தவிர்க்கின்றது. இதன் குறைபாடு காட்டும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.
* கை, பாதம் இவை மரத்து போவது, ஒருவித குறுகுறுப்பு உணர்வு இருப்பது, சிறு சிறு ஊசி குத்தல்கள் போல் உணர்வது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
* அடிக்கடி சோர்ந்து போவது, பலவீனமாக உணர்வது
* வெளிரிய சருமம்
* சைவ உணவு மட்டுமே உட்கொள்பவர்கள்
* நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்கள்
* நெஞ்செரிச்சல் மருந்து அடிக்கடி எடுத்துக் கொள்பவர்கள்
* அதிக மன உளைச்சல்
* அதிக மறதி
* வயது 50-க்கும் மேல்
மருத்துவர் ரத்த பரிசோதனை மூலம் குறைபாட்டினை உறுதி செய்து அதற்கான சத்து மாத்திரைகளைத் தருவார். சுயமாக தானே எந்த மருந்து, சத்து மாத்திரையினையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதனை நினைவில் கொள்க.
மேலும் காரணமின்றி முடி கொட்டுதல், இளநரை, வாயு புண் இவைகள் ஏற்படும் பொழுதும் வைட்டமின் பி12 பற்றி மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும்.
வயது கூடும்பொழுது நமது உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளம் வயதில் இருந்த ஒரு வேகம் இருப்பதில்லை. பல உணவுகள் வயது கூடும்பொழுது ஒத்துக் கொள்வதில்லை. சிலரது வாழ்க்கை, உணவு முறை மாறுதல்களின் மூலம் வயது கூடும்பொழுது ஏற்படும் மாறுதல்களை குறைத்துக் கொள்ள முடியும்.
* வயது கூடும்பொழுது பலருக்கு சர்க்கரை நோய் பிரிவு 2 தாக்குதல் எளிதில் ஏற்படுகின்றது. அனைவரும் அன்றாடம்? கப் அளவு பீன்ஸ், மொச்சை, பருப்பு வகைகள் இவைகளை சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்பு குறைவதுடன் சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகின்றது.

* வயது கூடும்பொழுது இருதயநோய் பாதிப்புகள் எளிதில் ஏற்படுகின்றது. ஒருவேளையாவது ஓட்ஸ் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பு குறைய பெரிதும் உதவுகின்றது.
* அந்த காலம் முதல் சிபாரிசு செய்யப்படும் ஆப்பிள் எந்த காலத்திலும் சிறந்த உணவு பொருளாகவே இருக்கும். இதிலுள்ள நார்சத்து கொலஸ்டிராலினை குறைக்கும். மேலும் வைட்டமின் சி, பொட்டாசியம் என பல சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இதற்கு அதிகம்.
* பாதம், பிஸ்தா, ஆக்ரூட், முந்திரிகொட்டை வகைகள். இந்த கொட்டைகள் கலவை ஒரு அவுன்ஸ் அன்றாடம் எடுத்துக் கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றினை 28 சதவீதம் வரை குறைக்கின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
சிறிதளவு வேர்கடலை கூட சிறந்ததுதான். எதையும் வறுத்து, பொரித்து, உப்பு போட்டு சாப்பிடுவது என்பது தீங்கே. ஆகவே சுவையினை இங்கு தவிர்த்து கைப்பிடி கலவை கொட்டைகளை அன்றாடம் எடுத்துக் கொள்ளுங்கள்.
* மூளைக்கும் சக்தி வேண்டாமா? இங்குதான் கீரை வகைகளை முக்கியமாக குறிப்பிட வேண்டும். அடிக்கடி கீரை உணவினை சேர்த்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாட்டுத் திறன் சிறந்து விளங்குவதாக கூறப்படுகின்றது. இருப்பினும் ஏதேனும் உடல்நல பாதிப்பு இருந்தால் உணவு முறை, கீரைகளை உணவில் சேர்த்தல் இவைகளைப் பற்றி மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதனை கடைபிடிக்க வேண்டும்.
* உங்கள் உடல் தசைகள் வலுவோடு இருக்க வேண்டுமா? உடலுக்கு தேவையான புரதம் கிடைக்க வேண்டும். பல பொருட்களை புரதம் கிடைக்க வேண்டி நாம் எடுத்துக் கொள்கிறோம். அதிக கொழுப்பு இல்லாத தயிர் ஒரு கப் அளவு அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இதில் உள்ள கால்சியம் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தினை காக்கும்.
கேரட்: இது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் நலத்தினை அளிக்கக் கூடியது. கண்கள், வாய், சருமம், இருதயம் என சொல்லிக் கொண்டே போகலாம். கேரட் ரத்தக் கொதிப்பினைக் குறைக்கும். கெட்ட கொழுப்பினை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும். ஜீரண சக்திக்கு உதவும். இருதய நோய் பாதிப்புகளை குறைக்கும். புற்றுநோய் பாதிப்பினை வெகுவாக குறைக்கும்.
இதில் உள்ள நார்சத்து, வைட்டமின்கள் ஏ, பி8, சி, ஈ., கே. மற்றும் தாது உப்புக்கள் இரும்பு, பொட்டாசியம், காப்பர், மக்னீஸ், பீட்டா கேரோட்டின் மற்றும் பல பிரிவான நோய் எதிர்ப்பு சக்தி இவை கேரட்டினை மிக முக்கியமான உணவாக்கி விடுகின்றது.
பீட்ரூட்: கேரட் போன்ற மற்றொரு உணவு பீட்ரூட் புற்று நோயை தவிர்க்க, மறதி நீக்க, உயர் ரத்த அழுத்தம் குறைய என பீட்ரூட்டின் நன்மைகள் ஏராளம்.
* அடர்ந்த சாக்லேட்டில் 70 சதவீதம் கோகோ இருப்பதால் தினமும் ஒரு துண்டு அடர்ந்த சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம்.
மேற்கூறியவைகளை ஆரோக்கிய வாழ்வின் ஒரு பகுதி என்பதனை அறிந்து பின்பற்றுவோம்.

ஆஸ்துமா பாதிப்பு பெரியவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 5 முதல் 10 சதவிகிதம் வரை குழந்தைகளையும் ஆஸ்துமா பாதிக்கிறது.
‘‘சுற்றுச்சூழல் மாசு, பரம்பரை ரீதியான காரணங்களால் பொதுவாக ஆஸ்துமா ஏற்படுகிறது. இதே காரணங்களால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா உண்டாகலாம். கிராமத்தைவிட நகரங்களில் வாழும் குழந்தைகளுக்கு இந்த சாத்தியம் இன்னும் அதிகம். பல பெற்றோர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை. உடனே வேறு மருத்துவர், வேறு சிகிச்சை என்று மாற்று வழிகளைத் தேடுகிறார்கள்.
அப்படியே ஆஸ்துமாவை ஏற்றுக்கொண்டாலும் இன்ஹேலர் வைக்க வேண்டும் என்று சொன்னாலோ, நெபுலைஸர் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாலோ கேட்பதில்லை. பெற்றோரின் அறியாமையால் கடைசியில் குழந்தைதான் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளிடம் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுப் பொருட்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
‘‘நிறம், மணம், சுவை கிடைப்பதற்காக, உணவைப் பதப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களால் குடல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். இந்த வேதிப் பொருட்களால் மூச்சுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு ஆஸ்துமா உண்டாவதற்கும் 5 சதவிகித வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமாக இருக்கும் குழந்தை திடீரென்று மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவதற்கு உணவுப் பொருட்களே பெரும்பாலும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஐஸ்க்ரீம் வகைகள், குளிர்பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு உணவுகளில் இந்த வாய்ப்பு அதிகம். சில குழந்தைகளுக்கு இயற்கை உணவுகளே ஆஸ்துமாவை உண்டாக்குகின்றன.
அதனால், குழந்தைகள் இருமலால் அவதிப்பட்டால் சமீபத்தில் குழந்தை என்ன சாப்பிட்டது என்பதை பெற்றோர் கவனித்து, குறிப்பிட்ட உணவை அதன்பிறகு தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இல்லாமலே சளி ஏற்படுவது, இருமலுடன் வாந்தி, 10 நாட்கள் வரை சளித் தொல்லையால் குழந்தை அவதிப்படுவது போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.