என் மலர்
ஆரோக்கியம்
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது.
பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?
மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.
மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.
இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.
செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.
தடுக்கும் வழி
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
சிகிச்சை
வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.

காலையில் சாப்பிடும் உணவு ஆரோக்கியம் நிறைந்ததாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் சத்தான் இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரொட்டி - 5 துண்டுகள்
துருவிய பன்னீர் - கால் கப்
நறுக்கிய காளான் - அரை கப்
பெ.வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
தக்காளி - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ரொட்டி துண்டுகளை பரப்பி இரு புறமும் புரட்டி போட்டு பொன்னிறமாக பொரித் தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, காளான், உப்பு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இந்த கலவையை ரொட்டி துண்டுகளின் மீது பரப்பி அதன்மேல் துருவிய பன்னீரை தூவி மைக்ரோ ஓவனில் வைத்து டோஸ்ட் செய்து பரிமாறவும்.

மறுமணத்தில் இணையும் கணவனோ அல்லது மனைவியோ அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.
மறுமணங்கள் தற்போது பெருகிக்கொண்டிருக்கின்றன. கணவனை இழந்த பெண்களும், மனைவியை இழந்த ஆண்களும் தனிமையில் இப்போது அதிககாலத்தை செலவிட விரும்புவதில்லை. முடிந்த அளவு சீக்கிரமாகவே தனக்கு ஒரு துணையை தேடிக்கொண்டு புதியவாழ்க்கையைத் தொடங்க விரும்புகிறார்கள். இது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும், அந்த மறுமணத்திலும் சில நேரங்களில் பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. அதற்கு புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த கணவனோ அல்லது மனைவியோ மட்டும் காரணமில்லை. அவர்களில் யாராவது ஒருவருக்கு குழந்தை இருந்தால், அந்த குழந்தையாலும் புதுவிதமான பிரச்சினைகள் முளைக்கின்றன.
மறுமணத் தம்பதிகளுக்கு குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகளை உணர்த்தும் இரண்டு சம்பவங்கள்!
ஒன்று: அவருக்கு 45 வயது. கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவரது மனைவி நான்கு வருடங் களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவர்களது மகனுக்கு 15 வயது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். மனைவியை இழந்த அந்த பேராசிரியர், கணவரை இழந்த ஒரு பெண்ணை ஆறு மாதங்களுக்குமுன்பு மறுமணம் செய்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் குழந்தை ஏதும் இல்லை.
அந்த 15 வயது சிறுவன், தாயை இழந்த பின்பு தந்தையின் அன்புப் பிடிக்குள் வளர்ந்து வந்திருக்கிறான். அமைதியான சுபாவம் கொண்டவனாக இருந்திருக்கிறான். ஆனால் புதிய தாயார் வந்ததில் இருந்து அவனுக்குள் வன்மம் வளர்ந்துவிட்டது.
தனது புதிய மனைவியோடு அந்த பேராசிரியர் ஆலோசனை பெற வந்திருந்தார். கலங்கிய கண்களோடு அவர், ‘என் மகனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைகண்டு நான் அதிர்ந்து போயிருக்கிறேன். வீட்டில் நின்றிருந்த காரை ஓட்டி பக்கத்து ஊருக்குகொண்டு சென்று அங்கு நடுரோட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான். இவளது புடவைகளை எல்லாம் எடுத்துச்சென்று தீவைத்து எரித்துவிட்டான். நடுராத்திரி திடீரென்று எழுந்துவந்து எங்கள் படுக்கை அறை கதவை அடித்து உடைப்பதுபோல் பலமாக தட்டுகிறான்’ என்றார்.
இரண்டு: கணவரை விவாகரத்து செய்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட, 35 வயதுபெண் அவள். அவளது மகளுக்கு 12 வயது. பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வரும் அவள், சுயதொழில் செய்து வரும் 32 வயது இளைஞரை மறுமணம் செய்திருக்கிறாள். அவருக்கு இதுதான் முதல் மணம். இவர்கள் வாழ்க்கையில் இணைந்து ஒரு மாதம் தான் ஆகியிருக்கிறது.
மகளுடன் வந்திருந்த பயிற்சி நிலைய பெண், ‘நானும், அவரும் நாலைந்து வருடங்களாக பழகிக்கொண்டிருக்கிறோம். அப்போது அவர் நட்புரீதியாக அடிக்கடி எனது வீட்டிற்கு வருவார். என் மகளுடனும் பேசுவார். எங்களை வெளியிடங்களுக்கு அழைத்தும் செல்வார். அப்போதெல்லாம் இவள், அவர் மீது அன்பு செலுத்தத்தான் செய்தாள். நான் அவரை மறுமணம் செய்துகொள்ளப்போகும் தகவலை முதலிலே இவளிடம் தெரிவித்தேன். இவள் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. காலப்போக்கில் சரியாகிவிடுவாள் என நினைத்து நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
அவர் நண்பராக வந்தபோதெல்லாம் மகிழ்ச்சியாக காணப்பட்ட இவள், அவர் என் கணவராக வந்த நாளில் இருந்து கவலைமிகுந்தவளாகி விட்டாள். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவள் சிறகொடிந்த பறவை போன்று காணப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை. என்னிடம்கூட முகம் கொடுத்துபேசுவதில்லை. படிப்பிலும் பின்தங்கிவிட்டாள்...’ என்று வருத்தத்தோடு கூறினாள். அருகில் அமர்ந்திருந்த அந்த சிறுமியோ எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் எதிலும் பிடிப்பற்றவளைப் போன்று காணப்பட்டாள்.
இனி இதில் பொதுவான விஷயங்களை அலசுவோம்! இறப்பு அல்லது விவாகரத்து மூலம் வாழ்க்கைத்துணையை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் மறுமணம் செய்து, அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ளவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இது ஆண், பெண் இருபாலினருக்கும் பொதுவானது. இத்தகைய மறுமணங்கள் வெற்றியடைய வேண்டும் என்றால், புதிதாக வாழ்க்கையில் இணையும் அந்த தம்பதிகள் இரண்டு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
முதலில் அவர்கள் இருவரும் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும், கருத்துரீதியாகவும் பொருத்தம் கொண்டிருக்கவேண்டும். இரண்டாவதாக அந்த தம்பதிகளில் யாருக்காவது குழந்தை இருந்தால் (அல்லது இருவருக்குமே குழந்தைகள் இருந்தால்) அந்த குழந்தைகளும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அந்த மறுமணம் அமையவேண்டும். அப்படி அமைந்தால்தான் அந்த வாழ்க்கை வெற்றியடையும்.
கணவன், மனைவி, குழந்தை ஆகிய மூன்று பேரை கொண்ட ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதில் மனைவிக்கு தனது கணவரை பிடிக்காமல் போகலாம். ஆனால் தன்னைப்போன்று தனது குழந்தைக்கும் அவரை (அவனது அப்பாவை) பிடிக்காது என்று அவள் கருதிவிடக்கூடாது. தனக்கு கணவரை பிடிக்காமல் போவதற்கு பல காரணங்கள் அவளுக்கு இருப்பதுபோல், தனக்குதன் அப்பாவை பிடிக்கும் என்பதற்கும் அந்த குழந்தையிடமும் பல காரணங்கள் இருக்கும்.
அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து, விவாகரத்தும் ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். அப்போது சட்டப்படி அந்த குழந்தை தாயிடம் வந்து, வளர்ந்து கொண்டிருந்தாலும் அது தனது தந்தையை முழுமையாக புறக்கணித்துவிடும் என்றோ, தன்னைப் போன்று அவர் மீது நிரந்தரமாக பகை உணர்ச்சி கொண்டிருக்கும் என்றோ அந்த தாய் கருதிவிடக்கூடாது.
கணவனும், மனைவியும் வெவ்வேறு பெற்றோருக்கு பிறந்து திருமணத்தால் ஒன்றிணைபவர்கள். வெவ்வேறு குடும்பங்களில் இருந்துவந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும், வித்தியாசங்களும் இருக்கத்தான் செய்யும். வித்தியாசங்களின் முடிவில் விவாகரத்தை நோக்கிச் செல்லவும் அவர்கள் மனதளவில் தயாராகி விடுவார்கள். ஆனால் குழந்தை என்பது தாயும், தந்தையும் இணைந்து பெற்றெடுத்தது. அந்த குழந்தை எப்போது அவர்களுக்கு பிறக்கிறதோ, அப்போதே அந்த குழந்தைக்கு அப்பா அவர் மட்டும்தான் என்பது உறுதியாகிவிடுகிறது. அந்த குழந்தையின் மரணம் வரை அவர் மட்டுமே அப்பா.
இந்தநிலையில் தன் தாய் யாரை மறுமணம்செய்து கொண்டாலும், ‘அம்மாவுக்கு புதியகணவர் கிடைத்திருக்கிறார்’ என்றுதான் குழந்தை கருதுமே தவிர, ‘தனக்கு புதிய அப்பா கிடைத்திருக் கிறார்’ என்ற சிந்தனை அவ்வளவு சீக்கிரத்தில் எந்த குழந்தைக்கும் ஏற்படாது.
பொதுவாக தாய் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு குழந்தையை பெற்றெடுத்ததும், ‘தனக்கு கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் குறைந்து போய்விடுமோ!’ என்று கவலைப்பட்டு முரண்டு பிடிப்பது முதல் குழந்தைகளின் இயல்பு. அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட குழந்தைகள், மறுமணத்தின் மூலம் ‘தனக்கும்-தன் தாய்க்கும் இடையில் இன்னொருவர் வருவதை’ ஏற்றுக்கொள்ள ரொம்ப சிரமப்படும்.
அதனால் மறுமணம் செய்து கொள்ளும் பெண்கள், ‘நான் இவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன். இனி இவர்தான் உன் அப்பா’ என்று திடீரென்று அறிமுகம் செய்வதை தவிர்க்கவேண்டும். அந்த திடீர் அறிவிப்பு தாய் மீது அந்த குழந்தை கொண்டிருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து, அதனிடம் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை உருவாக்கிவிடும்.
இதை எல்லாம் நினைத்து கணவரை இழந்தபெண்ணோ, மனைவியை இழந்த ஆணோ வருந்த வேண்டியதில்லை. அவர்கள் மறுமணத்திற்கு தயாராகவேண்டும். அவர்கள் தயாராகும்போது, தங்கள் குழந்தையையும் அந்த சூழ்நிலையை உணர்ந்துகொள்ள தயார்படுத்தவேண்டும். அதற்கு அன்பு செலுத்துவதும், நம்பிக்கையூட்டுவதும், சமூக சிக்கல்களை புரியவைப்பதும் அவசியம். அதற்கு குறைந்தது ஆறு மாதமாவது தேவைப்படும்.
அந்த 6 மாதத்தில் என்ன செய்யவேண்டும்?
தாயை இழந்து தந்தையின் பராமரிப்பில் வளர்ந்துகொண்டிருக்கும் மகன் என்றால், அவனுக்குள் தாய்மையின் ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த தவிப்பை, குழந்தை வெளிப்படுத்தும் தருணங்களில் ‘அதற்கான வாய்ப்புகளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்பதுபோல் பேசி, மறுமணம் பற்றி மகனுடனும் கலந்துரையாடவேண்டும். அவன் தற்போது படிப்பதற்கும், பின்பு வேலைக்கும் வெளியே செல்லும்போது தனக்கு வீட்டில் தனிமை ஏற்படும் என்பதையும், பாதுகாப்பின்மை உருவாகும் என்பதையும் உணர்த்த வேண்டும்.
இப்படி எல்லா விஷயங்களையும் விவாதித்து, புதிதாக குடும்பத்திற்குள் வர இருக்கும் பெண்ணையும் அறிமுகப்படுத்தி இருவருக்குள்ளும் ஒரேமாதிரியான எண்ண அலைகளை உருவாக்கவேண்டும். இதற்காக தெளிவான முடிவை எடுக்கவும், நெருக்கமானவர்களை சிந்தனைரீதியாக ஒருங்கிணைக்கவும் தியானம், மியூசிக்தெரபி, கவுன்சலிங் போன்றவை உதவும்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயம். தாயோ, தந்தையோ மறு மணம் செய்யும்போது, திருமணத்திற்கு பின்னாலும் குழந்தைகளால் பிரச்சினைகள் எழலாம். தான் தனிமைப்படுத்தப்படுவது போலவோ, தன்னை அலட்சியப் படுத்துவது போலவோ அந்த குழந்தை கருதலாம். அதனை சரி செய்ய புதிதாக அந்த குடும்பத்திற்குள் வரும் பெண் (அல்லது ஆண்) பக்குவம் நிறைந்தவராக இருக்கவேண்டும். தியாக மனப்பான்மையும் கொண்டிருக்க வேண்டும். அதெல்லாம் இருந்தால்தான் மறுமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள முடியும்.
- விஜயலட்சுமி பந்தையன்.

சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள். அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.
சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள். ஆனால் பிளீச்சிங்குக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனம் உள்ளது. இது சருமத்தில் உள்ள முடியை ஒழிக்கும்தன்மை கொண்டது. அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.
மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.
பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.
நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.
சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும். அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.
பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்.

டென்ஷன் கோபத்திற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றது. அதனால் மற்றவர்களின் மனத்தில் இறுக்கமும் அழுத்தமும் ஏற்பட்டு உடலும் பாதிக்கப்படும்.
டென்ஷனைக் குறைப்பது நல்லது. ஏனெனில் அதிக டென்ஷன் எனும் மன அழுத்தம் உடையவர்களுக்கே மாரடைப்பும். இருதய நோயும் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
மன அழுத்தமாக அல்லது டென்ஷனாக இருப்பதாக உணர்ந்தால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யத் தெரிந்தால் தியானம் செய்யுங்கள். இல்லையெனில் ஒன்று இரண்டு மூன்று என நூறு வரை எண்ணுங்கள். இதனால் மனச் சிந்தனை வேறு பக்கம் செலுத்தப்பட்டு மன அழுத்தம் குறையும்.
அடிக்கடி மன அழுத்தம் அடைபவர்கள் தியானத்தைப் பழகிக் கொண்டு தினசரி தியானம் செய்தல் அவசியம் நாம் இருக்கும் இடத்திலோ நாம் பயணம் செய்யும் பொழுதோ தியானம் செய்யலாம்.
மன அழுத்தம் உடையவர்கள் தினசரி உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். தியானம் செய்ய விருப்பமில்லாதவர்கள் அவர்கள் மத கடவுளை நினைத்து வழிபட்டு உட்கார்ந்திருக்கலாம்.
முன் நெற்றியில் இரு புருவங்களுக்கும் இடையே ஒரு ஒளி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அதன் மீது கவனம் செலுத்தியவாறு உட்கார்ந்து இருக்கலாம்.
டென்ஷன் குறைய ஆரோக்கியமான தூக்கம் அவசியம். நல்ல காற்றோட்டமுள்ள சூரியனைப் பார்த்த அறையில் தூங்குவதும் அவசியம். முறையான மற்றும் சரியான நேரத்தில் தூங்கிப் பழக வேண்டும். உடல் உழைப்பு முறையான தூக்கத்தை உண்டாக்கும்.
எந்த செயல் பாட்டிலும் வேகத்தைத் தவிர்த்து விவேகமாகச் செயல்பட்டால் டென்ஷனைத் தவிர்க்கலாம். சிந்தித்து பொறுமையாக திட்டம் தீட்டி நேரம் ஒதுக்கி செயல்பாடுகளைச் செய்தால் மனம் அமைதி பெறும் டென்ஷன் ஏற்படாது.

எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும்.
எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.
இந்த 28 நாளில் முதல் 4 – 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, ‘கருமுட்டை’.
இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை ‘பொக்கிஷம்’ என்றும் சொல்லலாம்.
இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.
சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள், தொடர்ந்து உங்களது மாதவிலக்கு வரும் தேதியை காலண்டரில் குறித்து வரலாம்.
உதாரணத்துக்கு, உங்களுக்கான மாதவிலக்கு சுழற்சி 30 நாட்கள் என்றால், 16-ம் நாள் கருமுட்டை வெளிவரும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது என்பதால் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை எந்த நாளிலோ ஒரு நாள் கருமுட்டை வெளிவரலாம் என யூகித்துக் கொள்ளலாம். இந்த நாட்களில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம்.
11-16ம் நாள் வரை என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், 11,12,13 நாட்கள் ஓரளவுக்கு கருத்தரிக்க வாய்ப்பு இருக்கும். 14,15,16 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.
இன்னும் துல்லியமாக தெரிய வேண்டும் என்றால், நீங்கள் தொடர்ந்து உங்களது மாதவிலக்கு தொடங்கும் நாளைக் குறிப்பிட்டு வந்து, உங்களுக்கான சுழற்சி எத்தனை நாளுக்கானது எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி கணக்கிடுவது மிகவும் சுலபம்தான். ஆனால், உங்களால் இப்படி கணக்கிட முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
உங்களது மொபைலில் ப்ளே ஸ்டோரில் (Play Store), பீடியட் டிராக்கர் (Period tracker, ovoluting period) என்று போட்டு தேடினால், நிறைய ஆப்கள் வரும். அதில் ஒன்று தேர்ந்தெடுத்து உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு மாதவிலக்கு வரும் நாட்களை அதில் குறித்து வைத்தால் மட்டும் போதும். இதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.
அந்த காலண்டரிலே உங்களுக்கான ஓவல்யூஷன் நாள் (கருமுட்டை வெளிவரும் நாள்) அதில் காண்பிக்கும். எந்த நாளில் கருத்தரிக்க அதிக வாய்ப்புகள், எந்த நாளில் கருத்தரிக்க குறைவான வாய்ப்புகள் என்று காண்பிக்கும்.
அப்போது நீங்கள் உடலுறவு மேற்கொண்டால் கரு உருவாக வாய்ப்புகள் அதிகம்.
எந்தக் குழப்பமும் இல்லாமல் சுலபமாக, கருமுட்டை வெளிவரும் நாளை நீங்கள் இந்த ஆப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாழ்த்துகள்…

சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் ஒரு நோயும் நம்மை தீண்டாது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் முதல் கல்லறை வரை பயணிக்கிறது. இடையில் தொய்வு ஏற்பட்டால் நோய் எனும் அரக்கன் நம்மை தொற்றிக்கொண்டு இறங்க மறுக்கும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறக்க முடியும். அவ்வாறான நல வாழ்விற்கு வழியமைப்பதே சுகாதாரம் ஆகும்.
சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். ஆரம்ப கால மக்கள் இயற்கையோடு தொடர்பு கொண்டு வாழ்ந்ததால் அவர்களின் வாழ்வில் சுகாதாரம் என்பது உயிரினும் மேலாகக் கருதப்பட்டது.ஆனால் இன்றைய நவீன காலகட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அதிகரித்து வரும் மக்கள்தொகை, வளங்களின் குறைபாடு, பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றின் விளைவால் சிறந்த சுகாதாரமானது குறைந்து கொண்டே வருகின்றது. இதற்கு காரணம் இன்றைய கால மனிதர்கள் செயற்கையின் பால் அடிபணிந்ததே முக்கிய காரணமாகும்.
அந்த வகையில் மனிதனின் நலமான வாழ்விற்கு அத்தியாவசியமான ஒன்றுதான் உணவாகும். நாம் உண்ணும் உணவு உடல் ஆரோக்கியத்தை நிர்ணயம் செய்கிறது. எனவே ஆரோக்கியமான முறையில் உணவு தயாரிப்பது இன்றியமையாதது. மேலும் நலமான வாழ்விற்கு தூக்கமும், ஓய்வும் மிக, மிக அவசியம். அன்றைய காலத்தில் இரவு விளக்கு வைக்கும் முன் உணவருந்தி விட்டு முன்னிரவில் தூங்குங்கள் காலையில் கோழி கூவிட எழுந்து விடுங்கள், அதுவே ஆரோக்கிய வாழ்வாகும் என அக்கால மக்கள் கூறுவார்கள். இது நலமான வாழ்க்கைக்கு அவர்கள் கூறிய வழிமுறைகளாகும்.
மேலும் நலமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இன்னொரு காரணி கழிவு வெளியேற்றமாகும். உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் கழிவு நீக்கம். இதை இரண்டும் சம அளவில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்று குறைந்து மற்றொன்று கூடினாலோ ஆரோக்கியத்திற்கு வேட்டு வைப்பதாகும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு முக்கியமாக உணவு அருந்தும் முன்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சுத்தப்படுத்தாமல் உணவு உண்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்கு கீழுள்ள சுமார் 20 லட்சம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் மூலம் இறந்து போவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கைகளை சுத்தமாக கழுவுவதன் மூலம் உயிர் கொல்லி நோய்கள் பரவுவதையும் தடுக்கலாம். சுகாதாரத்தை பயன்படுத்தி பின்பு காயத்திற்கு மருந்து போடுவதற்கு முன், பின், தும்மல் வந்த பின்பு, இருமல் வந்த பின்பு, உணவு சாப்பிடும் முன்பு, பின், குப்பைகளை கொட்டிய பின்பு, விலங்குகளை தொட்டபின்பு கைகளை சுத்தமாக கழுவவேண்டும்.
அடுத்து சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதாகும். சுத்தமான நீரினைப் பயன்படுத்துவதன் மூலம் அசுத்தமான நீரினால் கிருமிகள் பெருகி காலரா, வயிற்றுப்போக்கு பரவுவது கட்டுப்படுத்தப் படும். அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் ஆண்டுக்கு உலகம் முழுவதும் 170 கோடிபேர் வயிற்றுப் போக்கினால் அவதிப்படுகிறார்கள். மூன்றாவது அம்சம் சுத்தமான உணவை உண்ணுதல் ஆகும். அடுத்து உடற்பயிற்சியாகும். காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து, சூரிய ஒளியில் படும் படி அமர்ந்தால், சுகவாழ்வு கிடைக்கும்.
இந்தியாவில் பெருகி வரும் சுகாதார சீர் கேட்டினால் நாம் நினைத்தே பார்த்திராத அளவுக்கு விதவிதமான நோய்கள் பரவி வருகின்றன. பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு, மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா என்று பல விதமான நோய்கள் படையெடுத்துள்ளன. இவற்றை தவிர, என்னவென்றே கண்டுபிடிக்க முடியாத சில காய்ச்சல்களுக்கு மர்ம காய்ச்சல் என்று மருத்துவ உலகம் பெயரிட்டு விடுகிறது. எனவே ஆரோக்கிய வாழ்வுக்கு சுத்தமாக இருக்க பழகிக்கொள்ளுங்கள். சுத்தமான உடைகளை அணியுங்கள். வீட்டை சுத்தமாக வைத்து இருங்கள். வீட்டை சுற்றி சுற்றுப்புறத்தையும் குப்பை தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுகாதாரம் தொடர்பானவற்றை கடை பிடித்தால் நீங்கள் மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. நோய் எனும் அரக்கன் இருக்கும் இடம் தெரியாமல் ஓடிவிடுவான்.

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணியில் ஜூஸ், ஐஸ்கிரீம் மட்டுமல்ல பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று தர்பூசணியில் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தர்பூசணி - 1
புழுங்கல் அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
தர்பூசணி பழத்தின் தோலை மெலிதாக சீவிவிட்டு வெள்ளை நிறப்பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து துருவிக்கொள்ளவும்.
அரிசியையும், துவரம் பருப்பையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவு கலவையுடன் தர்பூசணி துருவல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் எண்ணெய் விட்டு தடவி, மாவை அடைகளாக தயார் செய்து வைக்கவும்.
ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேகவைத்து ருசிக்கலாம்.

பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஏழ்மை, கல்லாமையை விட கொடுமையானது போதை பழக்கம். இந்தியாவை போதை பழக்கம் இல்லாத நாடாக நாம் மாற்ற வேண்டும். பொதுவாக பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு எதனால் போதை பழக்கம் ஏற்படுகிறது. காரணங்கள் என்ன? அதிலிருந்து அவர்கள் விடுபட பெற்றோர்கள் அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டர்’ டாக்டர் டீன் வெஸ்லி கூறியதாவது:-
இன்றைய நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கூல்லிப்ஸ், ஹேன்ஸ், கெய்னி, சுபாரி, குட்கா, மாவா, பான் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எல்.டி எனும் புகையில்லா புகையிலை போதை பழக்கம் ஆகும். இதில் 4:200 கெமிக்கல் இருக்கிறது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை உட்கொள்வதால் கண்டிப்பாக வாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பற்கள் சீர் கெடும். வயிற்றில் புண் ஏற்படும். ஆரம்பத்தில் இதனை பழகும் மாணவர்கள் பின் மெதுவாக சிகரெட், பீடி, கஞ்சாவிற்கும், பலர் மதுவுக்கும் அடிமை ஆகின்றனர்.
சக மாணவர்களின் வற்புறுத்தலாலும், மாணவர்களின் மனதில் போதை பொருட்களை பயன்படுத்துவது ஸ்டைலாக காட்சியளிப்பது போன்ற எண்ணத்தை உருவாக்குவதாலும் 90 சதவீத மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அதேபோல் கவலைகளை மறக்க குடிப்பதாக பலர் கூறுகின்றனர். பொதுவாக போதையில் இருக்கும் போது ஞாபகசக்தி குறைவாக இருக்கும். அதனால் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தும் சரியாகி விடும் என நினைப்பார்கள். ஆனால் மனக்கவலையையும், மன பயத்தையும், மன அழுத்தத்தையும் போதை பொருட்களால் தடுக்க முடியாது.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களின் நடத்தையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு அவர்களுக்கு அன்பு, பாசத்தை புரிய வைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் தனிமையில் இருக்க விடக்கூடாது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே டாக்டரிடம் அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு ‘காக்னடிவ் பிகேவியர் தெரபி’ மற்றும் ‘பேமிலி தெரபி’ மூலமாகவும் தேவையான மருந்துகள் கொடுக்க வேண்டும். இதனை ஒரு நல்ல டாக்டரால் எளிதாக கையாள முடியும். அத்தகைய கவுன்சிலிங், சிகிச்சையை திண்டுக்கல்லில் உள்ள எங்களது ‘ஸ்பீக் யுவர் மைண்ட் கவுன்சிலிங் சென்டரில்’ வழங்குகிறோம். எனவே போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களை கிண்டல், கேலி செய்யாமல் அவர்களுக்கு உதவியாக இருந்து, ஊக்குவித்து சமுதாயத்தில் அவர்களும் நல்ல வாழ்க்கை வாழ உதவுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
லட்சங்களில் பணத்தை செலவிட்டு ஆர்ப்பாட்டமாக நடந்த மணவிழாக்களுக்கு கொரோனா முடிவுகட்டியதால், காலத்திற்கு ஏற்றபடி ‘கலர்புல்லாக’ திருமணங்களை நடத்த அனைவரும் தயாராகிவிட்டார்கள். ஆடம்பர விருந்து, கொண்டாட் டங்களை தவிர்த்து குறைந்த அளவு விருந்தினர்களோடு திருமணங்களை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் மணப்பெண்கள் இப்போதும் அழகிலும், அலங்காரத்திலும் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் அவர்கள் அணியும் முக கவசமும் தங்களுக்கு கூடுதல் அழகு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பொதுவாக மணப்பெண் அலங்காரத்தில் முக அழகு முதலிடம் பிடிக்கும். தங்கள் முகத்திற்கு பொருத்தமான மூக்குத்தி அணிந்துகொள்வார்கள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக் பூசி கூடுதலாக மெருகேற்றிக்கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் அணியும் மாஸ்க் வாயையும், மூக்கையும் மூடி, அந்த அழகை மறைத்துவிடுகிறது. ஆனாலும் தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அது அவர்கள் முகத்தை பிரகாசிக்கவைக்கிறது. அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தற்போது மணப்பெண்கள் அணியும் முக கவசங்களில் தங்க நூல் இணைப்பு கொண்டவை அதி அற்புதமான அழகைக் கொண்டிருக்கின்றன. முத்துகள், தொங்கல்கள், எம்ப்பிராய்டரி, ஜரிகை வேலைப்பாடுகள் போன்றவைகளும் மாஸ்குகளில் இடம்பெறுகின்றன. பூக்கள் மற்றும் விதவிதமான டிசைன்களை கொண்டும் மாஸ்குகள் கவர்ச்சியாக்கப்படுகின்றன.
அழகான மாஸ்குகள் மணப்பெண்களின் அழகுக் கவலையை குறைத்திருக்கின்றன. மாஸ்குகள் மூலம் தங்கள் முக அழகை மேம்படுத்திக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையும் மணப்பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. சில மணப்பெண்களின் உதடு அல்லது மூக்கு அவர்கள் விரும்பும் அழகுடன் காட்சியளிக்காது. அந்த பகுதிகளின் அழகை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி ‘கரெக்டிவ் மேக்கப்’ போடுவார்கள். அப்படிப்பட்ட மணப்பெண்கள் இந்த கவர்ச்சி மாஸ்குகள் அணிவதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளை மறைத்து, மாஸ்குகள் அவர்கள் கூடுதல் அழகுடன் காட்சியளிக்க துணைபுரிகின்றன.
மணப்பெண்களின் அலங்கார மாஸ்குகள் முதலில் வடஇந்தியாவில்தான் பிரபலமானது. இப்போது தமிழகத்தில் உள்ள பெருநகர பெண்களால் அதிகம் விரும்பி வாங்கி அணியப்படுகிறது. அவர்கள் திருமண உடைகள், ஆபரணங்கள் வாங்கும்போதே அதற்கு பொருத்தமான மாஸ்குகளையும் வாங்கிவிடுகிறார்கள். மணநாளுக்கு முன்பே அவைகளை எல்லாம் அணிந்து ஒத்திகையும் பார்த்துக்கொள்கிறார்கள்.
மாஸ்க் அணிவதால் மணப்பெண்கள் கண் அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். புருவத்தை சீராக்கி, கண்களுக்கு கவர்ச்சியை கூட்டுகிறார்கள். அதோடு முந்தைய காலங்களில் அவர்கள் மறந்து போயிருந்த நெற்றிச்சுட்டி, மாட்டி போன்றவைகளையும் இப்போது அணிந்துகூடுதல் அழகுடன் வலம் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது குறைந்த அளவு விருந்தினர்களே திருமண நிகழ்ச்சிகளில் பங்குபெறுகிறார்கள். அவர்கள் அனைவருமே மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி திருமணத்தில் பங்கேற்கும் அனைவருமே ஒரே மாதிரி உடை அணிவதும், அதற்கு ஏற்றபடி ஒரே மாதிரியான முக கவசத்தோடு தோன்றுவதும் இப்போது புதிய டிரெண்ட்டாக இருந்துகொண்டிருக்கிறது.

‘பழங்களின் அரசன்’ என்ற சிறப்பு மாங்கனிக்கு உண்டு. முக்கனிகளில் முதன்மை இடம் மாங்கனிக்குத்தான். சுவை மற்றும் சத்துக்களிலும் ‘மா’வுக்கு முன்னணி இடம் உண்டு. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்.
மாம்பழத்தின் தாயகம் இந்தியாதான். இமயமலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை மட்டும் கிடைக்கும் பழ வகையைச் சேர்ந்தது மா. வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவங்களில் பல்வேறு அளவுகளில் மாங்கனி விளைகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு-மஞ்சள், இளஞ்சிவப்பு-பச்சை நிறங்களில் கனிகள் விளையும்.
‘வைட்டமின் ஏ’ மாங்கனியில் அதிக அளவில் உள்ளது. இது கண்பார்வைக்கு உகந்த வைட்டமினாகும்.
புதிதாக பறித்த மாங்கனியில் பொட்டாசியம் மிகுதியாக இருக்கும். மேலும் ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் சி’, ‘வைட்டமின் ஈ’ நிறைய அளவில் உள்ளது. வைட்டமின் சி, உடலை நோய்த் தொற்றுக்கு எதிராக காக்கும்.
‘வைட்டமின் பி-6’, மூளைக்கு அவசியமான அமினோ அமிலம் சுரக்க துணைபுரியும். தாமிர தாது நிறைய உள்ளது. இது பல்வேறு நொதிகள் செயல்பட துணைக்காரணியாக விளங்கும். ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியிலும் இது பங்கு வகிக்கிறது. உடனடியாக ஜீரணம் ஆகும் நார்ச்சத்து நிறைய உள்ளது. மற்றும் பல புளோவனாய்டுகளும், தாது உப்புக்களும் குறைந்த அளவில் உள்ளன.
எப்படியெல்லாம் சாப்பிடலாம்..?
மாங்கனியை கழுவிவிட்டு அப்படியே கடித்து சாப்பிடலாம். மாங்கனித் துண்டுகள் பழச் சாலட்டுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. பனிகட்டிகளுடன் சேர்க்கப்பட்ட மாங்கனிச் சாறு உலகம் முழுவதும் பிரபலமான சாறு வகை பானமாகும். மாங்கனிச் சாற்றை பாலுடன் சேர்த்து ‘மாங்கோ மில்க் ஷேக்’ ஆக சுவைக்கப்படுகிறது. ஜாம், பனிக்கூழ் மற்றும் உணவு உற்பத்தி துறையில் மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது. ஆசிய நாடுகளில் மாங்காய் ஊறுகாய், சட்னி பிரபலமாகும். பழுக்காத மாங்காய், குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு "இதுதான் மருந்து" என்று எந்த மருந்துகளும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் உணவையே மருந்தாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
காரத்தன்மை உள்ள உணவுகள் வைரஸ் உடலுக்குள் வாழ்வதைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த உலகையும் வீட்டுக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கும் நுண்ணுயிரி! ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி, தொற்றை ஏற்படுத்தும் இதன் தாக்கத்திலிருந்து தப்பிக்க தற்போது சமூக விலகலிலும் மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதிலும் கவனம் செலுத்திவரும் நாம் இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
"கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அதனை எதிர்த்துப் போராட சத்து மிகுந்த உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். நாம் உண்ணும் ஒவ்வோர் உணவுப் பொருளுக்கும் ஒரு பி.ஹெச்(pH) இருக்கிறது. pH என்பது ஒரு பொருளில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் அடர்த்தியைப் பொறுத்து அமிலம், காரம் என்று வகைப்படுத்தப்படுகிறது. இதை அளவீடு செய்ய pH மீட்டர் என்ற அளவீட்டுக் கருவியும் உள்ளது.
பொதுவாக பி.ஹெச் அளவீடு 1-ல் இருந்து 14வரை இருக்கிறது. இதில் 1-ல் இருந்து 6.9 வரை பி.ஹெச் உள்ள உணவுகள் அமிலத்தன்மை உள்ளவை எனப்படும். 7.1-ல் இருந்து 14வரை பி.ஹெச் உள்ள உணவுகள் காரத்தன்மை உணவுகள் எனப்படும். 7 என்பது நியூட்ரல் பி.ஹெச். இதில் அமிலம் மற்றும் காரத்தன்மை சமமாக இருக்கும். நாம் அருந்தும் குடிநீரின் பி.ஹெச் 7. மற்றபடி நாம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், உணவுகள் எல்லாம் தனித்தனியே காரம் அல்லது அமிலத்தன்மையைக் கொண்டதாக இருக்கும்.
பி.ஹெச் 6 மற்றும் அதற்குக் கீழான அசிடிக் தன்மையே இந்தக் கொரோனா வைரஸ் வாழ்வதற்கு ஏற்ற சூழல் என்பதால் காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது. இது நம் வயிற்றில் வைரஸ் பெருகுவதற்கு ஓர் அசாதாரண சூழலை ஏற்படுத்தும்.
எனவே காரத்தன்மை அதிகம் கொண்ட காய்கறிகள், நட்ஸ் வகைகள், பருப்புகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பழங்களில் ஆப்பிள், திராட்சை, மற்றும் சிட்ரஸ் வகைகளில் பொதுவாக அமிலத்தன்மை காணப்பட்டாலும் இவை நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
பொதுவாக நமக்குக் காய்ச்சல் ஏற்படும் நேரத்தில் மட்டும்தான் கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துப் பழகியிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு சூழலிலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மிளகு, சீரகம் சேர்த்த ரசம், பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்த கஞ்சி போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட உணவுகளை இவ்வேளையில் எடுத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அவற்றை எங்கிருந்து வாங்குகிறோம் என்பதில் கவனம் தேவை.
ஏற்கெனவே பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கும் அசைவ உணவுகளை வாங்கக் கூடாது. நெய், வெண்ணெய், சீஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இவை வயிற்றில் கோழை போன்ற ஒரு படிமத்தை உண்டாக்கி வயிற்றில் வைரஸ் தங்காமல் இருக்க உதவுகிறது.
கொரோனா வைரஸ் அதீத சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல், மூச்சுவிடுதலில் சிரமம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவர்கள் எல்லா உணவுப் பொருள்களையும் சூடாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கலாம். தண்ணீரில் சீரகம் கலந்து அருந்தலாம். சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்கலாம். கிர்ணி, பப்பாளி, மாதுளை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.