என் மலர்
ஆரோக்கியம்
மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காயில் 26 கலோரிகள் கொண்டது. மஞ்சள் பூசணிக்காய் வாயு தொந்தரவு, செரிமான கோளாறை சரி செய்யும் தன்மை கொண்டது.
தேவையான பொருட்கள் :
மஞ்சள் பூசணிக்காய் - அரை கிலோ (நறுக்கியது)
கடலைப் பருப்பு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
தூளாக்கிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கு
செய்முறை:
குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
பின்னர் வேகவைத்த கடலைப்பருப்புடன் பூசணி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், தேங்காய் துருவல், வெல்லம், சேர்த்து வதக்கி இறக்கி பரிமாறலாம்.
இந்த பூசணிக்கூட்டை சிறுவர்- சிறுமியர் விரும்பி சாப்பிடுவார்கள்.

புதிய பூஞ்சை தொற்று குறித்த விபரங்களை மருத்துவ உலகம் சேகரிக்க தொடங்கி இருக்கிறது. பச்சை பூஞ்சை என்றால் என்ன? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பார்போம்.
கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றை தொடர்ந்து பச்சை பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குணமடைந்த 34 வயதான நபர், பச்சை பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர், சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கொரோனாதொற்றில் இருந்து மீண்ட அந்த நபர் தனக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார்.
ஆனால் கருப்பு பூஞ்சைக்கு பதிலாக அவரது நுரையீரல், சைனஸ் மற்றும் ரத்தத்தில் பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீஅரவிந்தோ மருத்துவ அறிவியல் கழகத்தின் மார்பு நோய்த்துறை தலைவர் டாக்டர் ரவி தோஷி, ‘‘நோயாளி குணமடைந்துவிட்டார். ஆனால் அவரது மூக்கில் ரத்தப்போக்கு மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட தொடங்கியது. உடல் எடை குறைந்து மிகவும் பலவீனமாகிவிட்டார்’’ என்றார். இந்த புதிய பூஞ்சை தொற்று குறித்த விபரங்களை மருத்துவ உலகம் சேகரிக்க தொடங்கி இருக்கிறது. பச்சை பூஞ்சை என்றால் என்ன? அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பார்போம்.
பச்சை பூஞ்சை என்றால் என்ன?
இது அஸ்பெர்கில்லோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஞ்சை உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் வாழும் தன்மை கொண்டது. அதிக காய்ச்சல், மூக்கில் ரத்தப்போக்கு, கடுமையான எடை இழப்பு, உடல் பலவீனம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சையை ஒவ்வொரு நாளும் பலரும் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் சுவாசிக்கிறார்கள்.
பச்சை பூஞ்சை எவ்வாறு பரவுகிறது?
ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் ஆஸ்பெர்கிலஸ் பூஞ்சை வாசத்தை நுகர்வதால் அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை. ஆனால் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் அதை சுவாசிக்கும்போது நுரையீரல் அல்லது சைனஸில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும். உடலின் மற்ற பாகங்களை யும் பாதிக்கும். உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நிமோனியாவை ஏற் படுத்தும்.
பச்சை பூஞ்சை தொற்றுநோயா?
பச்சை பூஞ்சை தொற்றுநோய் அல்ல. மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.
இந்த பூஞ்சை எப்படி தோன்றுகிறது?
அழுகிய தாவரங்கள், முறையான பராமரிப்பின்றி தானியங்கள் சேமித்து வைக்கப்படும் இடங்கள், காய்ந்த இலைகள், மக்கும் உர குவியல்கள் போன்றவற்றில் இவை காணப்படும்.
பச்சை பூஞ்சையின் அறிகுறிகள்?
காய்ச்சல், மூச்சுத்திணறல், வாசனையை இழக்கும் திறன், சோர்வு, இருமல், மூக்கு ஒழுகுதல், தலைவலி, எடை இழப்பு, சிறுநீர் குறைவாக வெளியேறுதல், மார்பில் வலி, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.
யாரை அதிகம் பாதிக்கும்?
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் கருத்துப்படி, காசநோய் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்கள் உள்ளவர்களை இந்த தொற்று பொதுவாக பாதிக்கிறது. மேலும் மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ் (ஏ.பி.பி.ஏ) எனும் வகை ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களையும் பாதிக்கிறது. `பூஞ்சை பந்து' என்றும் அழைக்கப்படும் இது நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, பிற நுரையீரல் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், அதிக அளவு கார்டிகோஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பச்சை பூஞ்சையை தடுக்க முடியுமா?
நல்ல சுகாதார நிலையை பேணுவது, வாய்வழி மற்றும் உடல் தூய்மையை பேணுவதன் மூலம் இந்த பூஞ்சை தொற்று பாதிப்பை தடுக்க முடியும். அதிகமான தூசுக்கள் மற்றும் அசுத்தமான தண்ணீரை சேமித்து வைக்கும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை அங்கு செல்வதாக இருந்தால் என்95 போன்ற உயர்தர முக கவசம் அணிந்திருக்க வேண்டும். காற்றின் மூலம் தூசு, மண் உடலில் படிந்தால் சோப்பு கொண்டு முகம், கை, கால்கள் உள்பட உடல் பாகங்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக காயங்களில் மண் அல்லது தூசுக்கள் படர்ந்திருந்தால், தவறாமல் அப்பகுதியை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தி முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.
முகம் பொலிவிழந்து சோர்வுடன் காட்சியளிப்பதற்கு சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள்தான் முக்கிய காரணமாக அமைந்திருக்கும். முகத்தை கழுவும்போதெல்லாம் சோர்வு நீங்கி புத்துணர்வு எட்டிப்பார்ப்பதை உணர முடியும். இந்த வழக்கத்தை அடிக்கடி பின்பற்றி வந்தாலே சருமம் சுத்தமாகிவிடும். பிரகாசமாகவும் ஜொலிக்கும். அழுக்குகள் படியாது. ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் முகத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.
பாதாம்: இதில் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ சத்து அதிகம் நிரம்பியுள்ளது. நான்கு பாதாமை பொடித்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு, சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். முகம் புத்துணர்ச்சியோடும் காட்சி தரும்.
பச்சை பயறு: இதில் வைட்டமின்கள் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை முழுமையாக வெளியேற்றும் தன்மையும் பச்சை பயறுக்கு உண்டு. பச்சை பயறை நன்றாக பொடித்து அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் கலந்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் அழுக்குகள் எட்டிப்பார்க்காது. முகம் புதுப்பொலிவோடு காட்சிதரும்.
உளுந்தம் பருப்பு: 50 கிராம் உளுந்தம் பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து விழுதாக அரைத்து அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் நெய், சிறிதளவு பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் அழுக்குடன், இறந்த செல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். முகம் ஜொலிப்புடன் மின்னும்.
அரிசி மாவு: இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளன. சோர்வோடு காணப்படும் சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும் தன்மை இதற்கு உண்டு. சிறிதளவு அரிசி மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிடலாம். அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேறி முகம் பளிச்சிடும்.
ஜவ்வரிசி: அகன்ற பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசியுடன் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து பசை போல் குழப்பி முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகள் அகலும். முகமும் பிரகாசமாக காட்சி தரும்.
கல் உப்பு: இதில் கனிமச்சத்துக்கள் ஏராளம் இருக்கிறது. சிறிதளவு கல் உப்புடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து சருமத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள், இறந்த செல்கள் அடியோடு அகலும். சருமத்தில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.
சுவையுடன், சத்துகளும் நிறைந்ததாக உள்ளது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு. ஆனால் இதைச் சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுவதால், உடம்பு எடை அதிகரிக்கும் என்ற தவறான நம்பிக்கை பலருக்கும் உள்ளது.
ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்புவது போல் தோன்றுகிறது. இது, விரைவில் செரிமானம் ஆகாமல் தடுப்பதால் உடலில் கொழுப்புச் சத்தை சேர்க்கத் தூண்டும் இன்சுலின் சுரப்பு தடுக்கப்படுகிறது.
உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஸ்டார்ச் சத்துகள் அதிகமாக உள்ளதால், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அதிக வைட்டமின்களை கொண்டுள்ளதால், இளமையில் ஏற்படும் முதுமை தோற்றத்தைத் தடுக்கிறது. சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
இதில் இரும்பும், மாங்கனீஸும் அதிக அளவில் உள்ளன. நரம்புகள், இதயம், ரத்த நாளம் ஆகியவை சீராகச் செயல்பட இவை உதவுகின்றன. மாங்கனீஸ், மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக முக்கிய தாதுப்பொருளாகும். சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால் இதை குறைந்த ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம், அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களும் உண்ணலாம்.
குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.
குங்குமப்பூ சருமத்திற்கு அழகு சேர்க்கும் தன்மை கொண்டது. சருமத்தை ஈரப்பதமாக்கும், வடுக்களை குணமாக்கும், முகப்பருவை போக்கும், இளமையை தக்கவைக்கும்.. இப்படி குங்குமப்பூ தரும் அழகு நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குங்குமப்பூவுடன் ஒருசில வீட்டு உபயோகப்பொருட்களை சேர்த்து ‘பேஸ் பேக்’ தயாரித்து சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கலாம்.
குங்குமப்பூ-பால்: ஒரு சிட்டிகை குங்குமப்பூவுடன் 4 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நன்றாக கிளறிவிட்டு, அதனுள் பஞ்சை முக்கி முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் உலர விடவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக் சருமத்திற்கு பிரகாசமான நிறத்தை அளிக்கும்.
குங்குமப்பூ-தேன்: 2-3 குங்குமப்பூ இழைகளுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பிரஸையோ, விரலையோ கொண்டு முக்கி முகத்தில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலரவிட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: தேன் ஈரப்பதமாகவும், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகவும் இருப்பதால், முகப்பருவை அகற்றவும், சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க வும் உதவும்.
குங்குமப்பூ-வேம்பு, துளசி: 3-4 குங்குமப்பூ இழைகளுடன் 4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து சில நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வேப்பம் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் துளசி தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகம் முழுவதும் தடவிவிட்டு உலர விடவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: இந்த பேக்கில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியவை. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் எட்டிப்பார்க்காது.
குங்குமப்பூ-ரோஸ் வாட்டர்: ஒரு கிண்ணத்தில் 3 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அதில் 4-5 குங்குமப்பூ இழைகளை ஊறவைத்துக்கொள்ளவும். நன்கு ஊறியதும் பஞ்சை அதில் முக்கி முகம் முழுவதும் தடவிவிட்டு 30 நிமிடங்கள் உலர விடவும். பின்பு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.
அழகு நன்மைகள்: சருமத்திற்கு பளபளப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். இளமையை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும்.
குங்குமப்பூ-சூரியகாந்தி விதைகள்: ஒரு கப் பாலில் ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ மற்றும் 3 டேபிள்ஸ்பூன் சூரியகாந்தி விதைகள் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் இந்த பேக்கை நன்றாக குழைத்து தூரிகையை பயன்படுத்தி முகத்தில் தடவ வேண்டும். சிறிது நேரம் உலர விட்டுவிட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவிவிடவும்.
நன்மைகள்: இந்த பேஸ் பேக் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்திற்கு குறைபாடற்ற பிரகாசத்தை அளிக்கும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்பவர்கள் சில நாட்களிலே மீண்டும் பாதிப்புடன் வருகிறார்கள். ஆனால் இப்படி வரும்பொழுது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது காணமுடிகிறது.
கொரோனா நுரையீரலை தாக்கி நிமோனியா தொற்றை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் நாம் அறிய வேண்டிய முக்கியமான மற்றொரு விஷயம் கோவிட் நோய் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமலே ரத்தம் உறைதலை தூண்டுகிறது. இதனால் முக்கிய உறுப்புகளில் ரத்தம் உறைந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்.
முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்பவர்கள் சில நாட்களிலே மீண்டும் பாதிப்புடன் வருகிறார்கள். ஆனால் இப்படி வரும்பொழுது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது காணமுடிகிறது. அதனால் கொரோனா தொற்றுக்கு மருத்துவர்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அவற்றை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் இந்த கடுமையான பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.
கொரோனாவும் இதயமும்
கொரோனா தொற்று இதயத்தை கடுமையான பாதிக்கப்படுகிறது. வைரஸ் இதயத்தின் தசை செல்களை நேரடியாக பாதிப்பதால் அவற்றின் சுருங்கி விரியும் தன்மை இழந்து, இதயம் பலவீனமடைகியது.
வென்ட்ரி குலர் டாக்ரிக்கார்டியா பைப் ரிலேஷன் மாரடைப்பு மிக முக்கியமான பாதிப்பு. இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதால் ஏற்படுகிறது. இது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருக்கும்பொழுது 50 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
அறிகுறிகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நான்கில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இதய நோய் வருவதாக ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் 40 சதவீத நோயாளிகள் உயிர் இழக்கின்றனர்.
கொரோனா பாதிப்பால் இதய தசை வீக்கம், இதய தசை இறப்பு, இதயத்தில் காணப்படும் வேதிச்சுட்டிகள், இதய செயல் இழப்பு, ரத்த குழாய் அடைப்பு மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
இதற்கான அறிகுறிகள் மார்பு வலி, தலை சுற்றல், படபடப்பு, புதிதாக வரும் மூச்சு திணறல், சோர்வு ஆகும். இவைகளில் ஏதேனும் அறிகுறிகள் கொரோனா நோயாளிகளுக்கு தென்பட்டால் பெரும்பாலும் அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருக்க வாய்ப்பு உள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகமாக புரதசத்து உணவுகளும், நீர்ச்சத்து உணவுகளும் சாப்பிடுவதால், ரத்த ஓட்டம் சீராக செயல்பட வைக்கும். சத்தான பழ வகைகளையும் சாப்பிட்டு, உரிய சிகிச்சை பெற்று, உடல் வலிமை பெற்று இதய நோயில் இருந்து விடுபடலாம்.
தடுப்பது எப்படி?
ரத்தம் உறையும் தன்மை அறிந்துக்கொள்ள சில பரிசோதனைகள் செய்து அதற்கேற்ப மருத்துவர்கள், மருந்துகள், பரிந்துரைப்பார்கள். அதனை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று ஏற்பட்டு டிஸ்சார்ஜ் ஆனாலும் கடுமையான வேலைகள் உடற்பயிற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.
நோயின்றி நூறாண்டு காலம் வாழ்வது உங்கள் கைகளில் தான் உள்ளது என தஞ்சை அனு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர்.வி.சிவக்குமார் கூறினார்.

நன்றி என்பது சிறிய வார்த்தைதான். நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.
நெருங்கிய நண்பர்கள், மனதுக்கு பிடித்தமானவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் யாரேனும் தக்க சமயத்தில் உதவி செய்யும்போதோ அல்லது அவர்களிடம் இருந்து ஏதாவதொரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்ளும்போதோ அவர்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் பலரும் நன்றி சொல்ல மறந்துவிடுவார்கள். ‘நமக்குள் எதற்கு நன்றியெல்லாம்’ என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படி நன்றி சொல்ல தவறுவது நல்ல விஷயமல்ல. நன்றி சொல்வது மனதுக்கும், இதயத்திற்கும் நல்லது என்பது மன நல நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. எதற்கெல்லாம் நன்றி சொல்லலாம் என்று பார்ப்போம்.
1. யாரிடம் பழகினாலும் அவர்களிடம் இருந்து ஏதாவதொரு நல்ல விஷயத்தை கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலும் நெருங்கி பழகுபவர்களாக இருந்தால் அக்கறையுடன் பல விஷயங்களை கற்றுக்கொடுப்பார்கள். அவர்களுக்கு நிச்சயமாக நன்றி கூற வேண்டும்.
2. சிலரிடம் ஒருசில கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். அதனை கைவிட முடியாமல் தவிப்பார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அதில் இருந்து மீள முடியாமல் இருக்கும் சூழலில் நெருங்கி பழகுபவர்கள் கூறும் ஆலோசனை பலன் கொடுப்பதாக அமையலாம். விரைவாக கெட்டப்பழக்கத்தில் இருந்து விடுபட வைக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
3. சிலர் எந்த செயலையும் ஈடுபாட்டோடு செய்வதற்கு முன்வர மாட்டார்கள். நாளை செய்யலாம், அதற்கு மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்று காலம் தாழ்த்திக்கொண்டே இருப்பார்கள். அப்படி தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பதால் ஏற்படும் இழப்புகளை நெருங்கி பழகுபவர்கள் புரியவைக்கலாம். அவர்களே உடன் இருந்து அந்த செயலை முடிப்பதற்கு பக்கபலமாக இருக்கலாம். அதற்காக அவர்களுக்கு நன்றி கூறலாம்.
4. சிலருக்கு வாழ்க்கை மீது பிடிப்பே இருக்காது. ஒருவித சலிப்புடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பார்கள். எதிலும் ஆர்வம் இல்லாமல் சோம்பேறித்தனத்துடன் காட்சியளிப்பார்கள். குடும்ப நலனில் அக்கறை கொண்ட நபர்கள், வாழ்க்கையை புரியவைத்து அதன் மீது பற்றுதலை ஏற்படுத்தி இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது.
5. அலுவலக பணியில் நெருக்கடியான சூழலில் சக ஊழியர் உடன் இருந்து வேலையை முடிப்பதற்கு உதவி இருக்கலாம். நன்றி என்பது சிறிய வார்த்தைதான். ஆனால் வாழ்வின் அர்த்தத்தை புரிய வைத்தவர்களுக்கு, உங்களையே புதுப்பிக்க வழிகாட்டியவர்களுக்கு நீங்கள் சொல்லும் நன்றி என்ற இந்த சிறிய வார்த்தை மிகப்பெரிய சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆறுதலையும் நிச்சயம் தரும். எனவே, யாராவது எந்த வகையிலாவது உதவி இருந்தால், உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டியிருந்தால், தயங்காமல் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவை பிசிபேளாபாத் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 100 கிராம்,
துவரம் பருப்பு - 50 கிராம்,
பிசிபேளாபாத் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை பட்டாணி - 30 கிராம்,
கரைத்த புளி - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு,
வெங்காயம் - 3
தக்காளி - 3,
நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் - 2 கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி,
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பிரஷர் குக்கரில் போட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும்.
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து குக்கரில் போட்டு 2 விசில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
கொத்தமல்லி, தக்காளி, காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதங்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் பட்டாணி, காய்களை சேர்த்து வேகவைக்கவும்.
காய்கறிகள் நன்றாக வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, பிசிபேளாபாத் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும்.
10 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு, கோதுமை ரவை இரண்டையும் சேர்த்துக் 5 நிமிடம் கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் குழந்தை பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.
கருவுறாமை என்றால் என்ன?
கருவுறாமை என்றால் பெண்களால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு கால கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சினை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகி்ன்றன.
இந்த கருவுறாமைக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.
ஏன் ஏற்படுகிறது?
அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல். கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள், கர்ப்பப்பை வாயில் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவும் காரணம் ஆகும். இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
அதிக வயதானாலும் பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது. ஆகவே குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..
இது தவிர ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக அவர்களின் உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய் தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சால சிறந்தது. இதையெல்லாம் விட கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்திருக்காது. அதுவும் கருவுறாமையை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சுதா கூறினார்.

கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.
வயது வந்தோர்களைப்போல குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நோயின் தாக்கம் சற்று குறைவாகவே குழந்தைகளுக்கு காணப்படுகிறது. கடந்த இரண்டு கொரோனா அலைகளிலும், முன்பே புற்றுநோய், உடல்பருமன், இதய பாதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்த குழந்தைகளை கூடுதலாக பாதித்திருந்தது.
மூன்றாம் அலையில்குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள். இரண்டாம் அலை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் பெரிய பாதிப்புகளில் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றலாம்.
கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முதல் ஆறு வாரங்களில் மிஸ்சி பாதிப்பு சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும், குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கான பிற பிற தடுப்பூசிகளை, கொரோனா முடியும் வரை நிறுத்தி வைக்க கூடாது,
மேற்கண்ட தகவல்களை குழந்தைகள் நல டாக்டர்கள் திரவியம் மோகன், கோபால் சுப்பிரமணியம், சுனில் குமார், பர்வீன் பானு தெரிவித்தனர்.
தொடர்புக்கு டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை, கே.பி. ரோடு, நாகர்கோவில் -629003. செல்போன் எண்:98423 39003.

பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள், உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
முதல் குழந்தையை பெற்றெடுத்த பெண்கள் பிரசத்துக்கு முந்தைய உடல் வலிமையை மீண்டும் பெற ஆரோக்கியமானஉணவு மட்டுமே போதாது. தளர்வடைந்த வயிற்று தசைகள், கருப்பை மற்றும் உடல் உறுப்புகளை மீண்டும் நன்றாக செயல்படுவதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மசாஜ் செய்வதும் அவசியம்.
பிரசவித்த ஒரு வாரம் கழித்து மசாஜ் செய்யலாம். தொடர்ந்து ஒரு மாதம் வரை மசாஜ் செய்து வரும் போது உடலின் தசைகள் உள் உறுப்புகள் புத்துணர்வுடன் செயல்படும்.
மசாஜ் என்பது எண்ணெய்யை உடலில் தேய்த்து விடுவது மட்டுமல்ல. அதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்தவர்களை கொண்டே மசாஜ் செய்ய வேண்டும். அதன் மூலமே முழுமையான பலன்களை பெற முடியும். பிரசவித்து பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்ற சில மசாஜ் முறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
ஸ்வீடிஷ் மசாஜ்
கிளாசிக் மசாஜ் என்றும் இந்த முறை குறிப்பிடப்படுகிறது. உடலின் முக்கிய நரம்புகளை மென்மையாக தேய்த்து விடுவது பிசைவது குலுக்குவது, தட்டுவது என பல முறைகளில் இந்த மசாஜ் செய்யப்படுகிறது. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யப்படும் இந்த மசாஜ் மூலம், எளிதாக புத்துணர்ச்சியும், அமைதியும் பெற முடியும்.
ஜமு மசாஜ்
இந்தோனேசியாவில் பரவலாக இங்வகை மசாஜ் அளிக்கப்படுகிறது.நமது நாட்டிலும் இம்முறை பின்பற்றப்படுகிறது. மருத்துவ ரீதியாக பல நன்மைகள் அடங்கியுள்ள இந்த மசாஜ் செய்வதற்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வேர்கள், மரப்பட்டைகள் பூக்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தளர்ந்த வயிற்று தசைகள் இறுக்கமடைவதற்கு உதவியாக இருப்பதுடன் பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் தொப்பை பிரச்சனைக்கும் இந்த மசாஜ் நல்ல தீர்வாக அமையும்.
கால் ரிஃப்ளெக்சாலஜி
கால்களில் உள்ள தசைகளை வலுவாக்க இந்த மசாஜ் உதவியாக இருக்கிறது. கால்களில் அமைந்துள்ள அக்குபிரஷர் புள்ளிகள் இந்த முறையில் தூண்டிவிடப்படுவதால் உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும். மகப்பேறு முடிந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, உடல் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றுக்கு இந்த மசாஜ் நல்ல பலன் அளிக்கும்.
மூலிகை குளியல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமானது மூலிகை குளியல், பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் தாய்மார்களுக்கு மூலிகை குளியல் அளிக்கப்படுவது நல்லது. மருததுவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை நீரில் ஊற வைத்து அதில் குளிக்க செய்து மசாஜ் அளிக்கப்படும். அதனால் நரம்புகள் வலுவடைந்து உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.
அக்குபிரஷர்
உடலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட புள்ளிகளை தேர்வு செய்து அங்கே விரல்கள் மூலம் மென்மையாக அழுத்தம் கொடுத்து நரம்புகளை தூண்டச்செய்யும் முறை இதுவாகும். உடல் வலியை அகற்றவும், அசவுகரியங்களை நீக்கவும் அக்குபிரஷர் முறை உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. பல நன்மைகளை கொண்ட இம்முறையை பின்பற்றும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றிருக்கும் நிலையில் தையல் போடப்பட்ட காயம் ஆறும் வரை இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.

இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.
ஐ.டி.கலாசாரம், பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்கள், மேலை நாட்டு கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள். இப்படி ஐ.டி.கலாசாரம் நம்மிடம் மேலை நாட்டு பழக்கங்களை, புகுத்தி வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பது, ‘நள்ளிரவு பிரியாணி’.
இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன. நள்ளிரவு ஓட்டல்கள் என்றவுடன், டீ-காபி, சாண்ட்விச் மற்றும் பன் ரொட்டிகளை தயாரிக்கும் ஓட்டல்கள் என்று நினைத்துவிடாதீர்கள். இந்த ஓட்டல்களில், அதிகாலை 3 மணிக்கு கூட, சூடான பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன. பிரியாணி மட்டுமல்ல, சிக்கன் 65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன. அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.
இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.
நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள். அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.
பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள். நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.