search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளும், கொரோனா நோயும்...
    X
    குழந்தைகளும், கொரோனா நோயும்...

    குழந்தைகளும், கொரோனா நோயும்...

    கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.
    வயது வந்தோர்களைப்போல குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நோயின் தாக்கம் சற்று குறைவாகவே குழந்தைகளுக்கு காணப்படுகிறது. கடந்த இரண்டு கொரோனா அலைகளிலும், முன்பே புற்றுநோய், உடல்பருமன், இதய பாதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்த குழந்தைகளை கூடுதலாக பாதித்திருந்தது.

    மூன்றாம் அலையில்குழந்தைகள் அதிக அளவில் பாதிக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இன்னும் தடுப்பூசி போடாதவர்கள். இரண்டாம் அலை முடிந்து விட்டது என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து அரசின் விதிமுறைகளை பின்பற்றினால் பெரிய பாதிப்புகளில் இருந்து நம்
    குழந்தை
    களை காப்பாற்றலாம்.

    கொரோனா பாதித்த 90 சதவீத குழந்தைகளுக்கு இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை. மூன்றாம் அலையில் புதிய அறிகுறிகள் வரவும் வாய்ப்புகள் உள்ளன.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு முதல் ஆறு வாரங்களில் மிஸ்சி பாதிப்பு சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும், குழந்தைகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது.

    குழந்தை
    களுக்கான பிற பிற தடுப்பூசிகளை, கொரோனா முடியும் வரை நிறுத்தி வைக்க கூடாது,

    மேற்கண்ட தகவல்களை குழந்தைகள் நல டாக்டர்கள் திரவியம் மோகன், கோபால் சுப்பிரமணியம், சுனில் குமார், பர்வீன் பானு தெரிவித்தனர்.

    தொடர்புக்கு டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை, கே.பி. ரோடு, நாகர்கோவில் -629003. செல்போன் எண்:98423 39003.
    Next Story
    ×