என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது.
    பிள்ளைகள் அழகாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோரும் அழகாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள், பலரும் மெச்சும் அளவுக்கு புத்திசாலிகளாக இருக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் அவர்கள் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அழகும், அந்தஸ்தும் தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

    பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள். பெற்றோர்கள் அழகாக இருந்தால் என்ன லாபம்? அழகான பெற்றோரை தங்களோடு அழைத்துச்செல்வதே கவுரவம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அதனால் தங்கள் பெற்றோரை எப்படி எல்லாம் அழகுப்படுத்தலாம் என்று பிள்ளைகள் மெனக்கெடவும் செய்கிறார்கள். பெற்றோருக்கு அவ்வப்போது அழகு ஆலோசனைகளும் சொல்லி வருகிறார்கள்.

    பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் பிள்ளைகளுக்காக அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது.

    பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

    போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன. ‘நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்’ என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன.

    அப்படி பெற்றோர் அனுமதி கொடுத்து, ஒரு போட்டியில் கலந்துகொண்டு குழந்தைகள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதித்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.

    பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். ‘வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை’ என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரோ, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக் கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

    எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும், ‘நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.

    விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும். படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்றுகுழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.

    சிறுமிகள் தற்போது தங்கள் அம்மாக்கள் அழகு விஷயத்தில் ‘அப் டு டேட்’ ஆக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதனால் தோழி போல் பழகும் அம்மாக்களை பியூட்டி பார்லர்களுக்கு அழைத்துச் சென்று காலத்திற்கு தக்கபடி அழகாக்கவும் அவர்கள் விரும்புகிறார்கள். அதுபோல் அப்பாக்களும் இளமையுடன் வலம் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். தொப்பையுடன் வலம் வரும் அப்பாக்களை ‘ஜிம்’முக்கு கட்டாயப்படுத்தி அனுப்பிவைக்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    பெற்றோர்களே காலம் மாறிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
    நீர்ச்சத்து நிறைந்த உணவு ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை போக்கி ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். அந்த வகையில் ஜவ்வரிசி கஞ்சியை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - கால் கப்
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    காய்ச்சிய பால் - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    வெந்நீர் - சிறிதளவு

    செய்முறை:

    வாணலியில் ஜவ்வரிசியை கொட்டி பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    பிறகு மிக்சியில் தூளாக்கிக்கொள்ளவும்.

    அதனுடன் வெந்நீர் சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

    காய்ச்சிய பால், நாட்டு சர்க்கரை, ஏலக்காய்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்த்து கிளறவும்.

    சுவையான ஜவ்வரிசி  கஞ்சிரெடி.
    பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள்.
    * ‘கல்லூரியில் மூன்று வருடங்கள் எப்படி கடந்துபோனது என்றே தெரியவில்லை. சக மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் எங்கள் காதலை பார்த்து வியந்தார்கள். ஒரே வகுப்பில் நாங்கள் படித்ததால், ஒருபோதும் பிரிந்ததில்லை. ஒருமுறை கூட நாங்கள் சண்டையிட்டதும் இல்லை.

    அவ்வளவு உணர்வுபூர்வமாக இருந்த எங்கள் காதல், கல்லூரியின் இறுதி நாளில் முடிந்துபோய்விட்டது. அன்று ஆசைகள் உந்தித்தள்ள அவன் முன்னால் போய் நின்றேன். அவன் என் காதலுக்கு சமாதி கட்டிவிட்டான். ‘நாம் மூன்று வருடங்களை ஜாலியாக கடந்துவிட்டோம். கல்லூரியே நம்மை ஆழமான காதலர்கள் என்று நம்பிவிட்டது. ஆனால் நமக்குள் இருந்தது வெறும் நட்புதான். மற்ற மாணவிகளிடம் பழகியதைப் போலவே உன்னிடமும் நான் தோழமையுடன்தான் பழகினேன்’ என்று அவன் சொன்னபோது, என் கண்களில் பொங்கிவந்த கண்ணீரை அவன் எப்படி அறிவான்?’ என்று சொன்ன அவளால் கல்லூரி வாழ்க்கை முடிந்து, வேலைக்கு சென்ற பிறகும் அந்த ‘காதல் தோல்வி’ தந்த கவலையில் இருந்து மீளமுடியவில்லை.

    ‘எல்லோரும் எனக்கு இளம் வயதிலே அதிக சம்பளத்தில் வேலை கிடைத்துவிட்டதாகவும், நான் கொடுத்துவைத்தவள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். என்னை திருமணம் செய்துகொள்ளவும் எங்கள் ஊரில் உள்ள வசதியான குடும்பத்தினர் சிலர் போட்டிபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எனக்கு எதிலுமே ஆர்வமில்லை. எதிர்காலத்திலும் நம்பிக்கை இல்லை. இப்போதும் கண்ணீரோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்’ என்று கண்கலங்கினாள், அவள்.

    * ‘வெளிமாநிலத்தில் இருந்து வந்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். அந்த நிறுவனத்தில் இன்னொரு துறையில் எனக்கு சமமான பொறுப்பில் பணிபுரிந்துவந்த இளைஞரை காதலித்தேன். இருவரும் சினிமாவிற்கும், பொழுதுபோக்கு மையங்களுக்கும் சென்றதுண்டு. அவரை நான் காதலிப்பதை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறேன். திருமணம் செய்துகொள்ள விரும்புவதையும் பட்டும்படாமலும் சொல்லியிருக்கிறேன்.

    இந்த நிலையில் எனக்கு என் சொந்த மாநிலத்தில் வரன் தேடத் தொடங்கினார்கள். இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்று கருதிய நான் என் காதலரிடம், நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள லாம் என்று சொல்ல விரும்பினேன். நான் சொல்லப்போவதை முன்னதாகவே தெரிந்துகொண்ட அவர் முந்திக்கொண்டு, ‘எனக்கு ஊரில் பெண்பார்த்து பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு நானும் சம்மதித்துவிட்டேன். நீயும் உன் வீட்டில் ஏற்பாடு செய்யும் நபரை திருமணம் செய்துகொள். திருமணத்திற்கு பிறகும் நமது நட்பு தொடரவேண்டும்’ என்று கூறினார்.

    ஒரே நிமிடத்தில் அவரால் என்னை தூக்கி எறிந்துவிட முடிந்தது. ஆனால், இது நடந்து நான்கு வருடங்கள் ஆன பின்பும் என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போதும் எந்த காதல் ஜோடியை பார்த்தாலும் உடனே அவர் நினைவு வந்து நான் அழுதுவிடுகிறேன்’ என்றாள்.

    இவர்கள் இருவரும் மட்டுமல்ல, இன்னும் நிறைய பெண்கள் காதல் தோல்வி அடைந்துவிட்டால் அதையே நினைத்து காலம் முழுக்க கண்ணீர் விடவும் தயாராக இருக்கிறார்கள். காதல் தோல்விக்கு சில வருடங்கள் துக்கம் அனுஷ்டிப்பதுபோன்று நல்ல விஷயங்கள் எதிலும் அவர்கள் கலந்துகொள்வதில்லை. மகிழ்ச்சியாக இருப்பதில்லை. பார்க்கும் வேலையிலும் முன்னேற்றத்தை நோக்கிச்செல்வதில்லை. தங்கள் வளர்ச்சிக்கு அவர்களே தடைவிதித்துக்கொள்கிறார்கள்.

    கவுன்சலிங்கில் கண்ணீர்விட்ட அந்த இரண்டு பெண்களிடமும் நான், ‘நீங்கள் இருவரும் காதலில் தோல்வியடைந்தது மூலம் வாழ்க்கையில் சிறந்த அனுபவத்தை பெற்றிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் மனது அந்த அனுபவத்தை உணர்ந்து கொள்ளாமல் வருந்திக்கொண்டிருக்கிறது’ என்றதும், என்னை வியப்புடன் பார்த்தார்கள்.

    “நீங்கள் படிப்பில் தோல்வியடைந்தால் அதை ‘பெயில்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் ஆரோக்கியத்தில் தோல்வியடைந்தால், அதை ‘நோய்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறது. பணவிஷயத்தில் தோல்வியடைந்தால் ‘பணக்கஷ்டம்’ என்று உங்கள் மனது ஏற்றுக்கொள் கிறது. இப்படி நீங்கள் எந்த துறையில் தோல்வியடைந்தாலும் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதை ஒரு அனுபவபாடமாக எடுத்துக்கொண்டு, அடுத்து வெற்றியை நோக்கிச்செல்லும் அளவுக்கு தயாராகிவிடுகிறீர்கள். ஆனால் காதலில் தோல்வி யடைந்தால் மட்டும் ஏன் சோர்ந்து போய் அழுத கண்களோடு அலைகிறீர்கள்.

    பெண் என்றால் காதல் வரும். காதல் வந்தால் அதிலும் தோல்வி யும் வரத்தானே செய்யும். காதல் தோல்வியை ஏன் வாழ்க்கைத்தோல்வியாக கருதுகிறீர்கள். காதலைத் தவிர வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னது?’ என்று கேட்டேன். அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

    அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பின்பு, ‘நாளையும் நீங்கள் வாருங்கள். முக்கியமான சிலரை நீங்கள் சந்திக்கலாம். அந்த சந்திப்பு உங்களுக்கு மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்’ என்றேன்.

    மறுநாள் அவர்கள் வந்தார்கள். அவர்களுக்காக நான்கு பெண்கள் காத்திருந்தார்கள். அந்த நால்வரும் கடந்த வருடம் காதலில் தோல்வி அடைந்து, அந்த தோல்வியை வெற்றியாக்கிக்கொண்டு வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் உயர்ந்தவர்கள். அந்த நால்வரும் இந்த இருவருடன் கலந்துரையாடினார்கள்.

    ‘காதல் தோல்வியை நம்மை போன்ற பெண்களின் மனது ஏற்றுக்கொள்வது சற்று கடினம்தான். நானும் சிறிதுகாலம் உங்களை போன்று கவலையோடுதான் இருந்தேன். அப்போது காதலர்கள் பிரிந்துபோகும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சினிமாக்களாக தேடிப்பிடித்து பார்த்தேன். என் மீதே எனக்கு சுயபச்சாதாபம் ஏற்பட்டு நான் அழுதுவிடுவேன் என்பதற்காக, பலநாட்கள் என்னையே நான் கண்ணாடியில்கூட பார்க்காமல் இருந்தேன். ஆனால் அந்த காதல் தோல்விதான் வாழ்க்கையில் எனக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கித் தந்தது.

    திடீரென்று ஒருநாள் கண்ணாடியில் என்னை பார்த்தபோது, எனக்குள்ளே ஒரு தீப்பொறி உருவானதுபோல் இருந்தது, அப்போது என்னை பார்த்து நானே சில கேள்விகளை கேட்டேன். ‘காதலித்த அந்த ஒரே ஒரு நபருக்காக மட்டுமா நீ படைக்கப்பட்டாய்? அந்த காதலைத் தவிர உனக்கு வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லையா?’ என்ற கேள்விகளை என்னிடமே நான் கேட்டேன். அப்போதுதான் காதல் தோல்விக்கு பின்பு அதையே நினைத்து அழுது, பொன்னான காலத்தை இழந்துவிட்டதை நான் உணர்ந்தேன். அப்போதே ‘நான் தோற்கப்பிறந்தவள் அல்ல’ என்று உறுதிபட கூறிவிட்டு, எனக்கு பிடிக்காத சட்டையை கழற்றி தூரவீசியது போல் அவனது நினைவுகளை என்னிடம் இருந்து அகற்றினேன். அதற்கு தியானமும், மியூசிக் தெரபியும், கவுன்சலிங்கும் கைகொடுத்தது.

    அதன் பிறகு என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் உருவானது. என் முழு திறமையையும் பணியில் வெளிப்படுத்தினேன். காதலித்த காலகட்டத்தில் எங்கள் நிறுவனத்தில் ஆயிரம் பேரில் ஒருத்தியாகத்தான் நான் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது அதே நிறுவனத்தில் ‘ப்ராஜெக்ட் ஹெட்’டாக உயர்ந் திருக்கிறேன்.

    காதலித்தபோது ஊர்சுற்றி கண்டபடி சாப்பிட்டு என் உடல் குண்டாகியிருந்தது. பின்பு உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டேன். உடற்பயிற்சி செய்தேன். இப்போது மாதத்தில் ஒருநாள் மலையேற்றப் பயிற்சிக்கு செல்கிறேன். நிறைய சுற்றுப்பயணம் செய்கிறேன். காதல் தோல்விதான் எனக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைக் காட்டியது. இப்போது எனக்கு அதிக தைரியம் வந்திருக்கிறது. என் தோற்றத்திலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தியிருக்கிறேன். முன்பு நீள கூந்தல் வளர்த்தேன். இப்போது குட்டையாக வெட்டிக்கொண்டு கூடுதல் அழகுடன் ஜொலிக்கிறேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னாள். அடுத்து அவள் திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிட்டிருக்கிறாள்.

    இன்னொரு பெண் ‘நான் காதல்வசப்பட்டிருந்தபோது இரவும் பகலும் அதை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பேன். அந்த காதலை வெற்றியடைய வைப்பது மட்டுமே லட்சியம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காதலில் தோல்வியடைந்து, என்னையே நான் சுயபரிசோதனை செய்ய ஆரம்பித்த பின்புதான் வாழ்க்கையில் எதிலெல்லாம் நான் தோல்வியடைந்தேன் என்பதும், என் வாழ்க்கை லட்சியங்கள் என்னென்ன என்பதும் புரிந்தது. அதன் பின்பு விட்ட இடத்தில் இருந்து மீண்டும் புதிய லட்சியங்களை நோக்கி ஓடத் தொடங்கினேன். இப்போது நானும் எனது கலைத் துறையில் பிரபலமானதொரு பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்’ என்று தன்னம்பிக்கையுடன் சொன்னாள்.

    முன்பு காதலில் தோல்வியடைந்து, அதன் பின்பு வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொட்ட அந்த நான்கு பெண்களும், தற்போது காதலில் தோல்வியடைந்து கண்ணீருடன் அலைந்துகொண்டிருக்கும் இந்த பெண்களுக்கு, பல்வேறுவிதமாக நிஜங்களை புரிய வைத்தார்கள். தங்களுக்குள் நட்பையும் பலப்படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கொடுத்த கவுன்சலிங்கில் அவர்களுக்குள் நல்ல மனமாற்றங்கள் ஏற்பட்டது.

    பெண்களே இனி ‘காதலில் தோல்வி அடைந்துவிட்டேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். ‘அந்த காதல் கைகூடவில்லை’ என்று சொல்லிவிட்டு, அதை மறந்திடுங்கள். கைகூடாத காதல் வாழ்க்கையில் சகஜமானது. அது கவலைக் குரியதோ, கண்ணீருக்கு உரியதோ அல்ல. விரைவாக அதில் இருந்து மீண்டு, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும். வாழ்க்கை காதலுக்கு மட்டுமானதல்ல! வாழ்க்கை எல்லையற்ற கடல்போன்றது!

    -விஜயலட்சுமி பந்தையன்.
    சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். முகப்பரு தொந்தரவை தவிர்க்க எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    முகப்பரு தொந்தரவை தவிர்க்க விரும்பும் பெண்கள் விலக்க வேண்டிய உணவுகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    * சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடுவது ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்திற்கும் கேடுவிளைவிக்கும். சருமம் பொலிவிழப்பதோடு முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். மேலும் சர்க்கரை அதிகம் கலந்த உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும்.

    * சரும பளபளப்புக்கும், தண்ணீருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. போதுமான அளவு தண்ணீர் பருகும்போது உடலில் உள்ள நச்சுக்கள், கழிவுகள் வெளியேறும். அதன் காரணமாக இயல்பாகவே சருமத்தில் ஜொலிப்பு தன்மை நிலைத்திருக்கும். தண்ணீர் குறைவாக பருகும்போது சருமம் பொலிவு இழப்பதுடன் வேறுபல உடல் உபாதைகளும் உருவாகும்.

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுப்பதோடு சருமத்திற்கும் கெடுதல் ஏற்படுத்தும். அதில் சேர்க்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், சர்க்கரை, செயற்கை மசாலா பொருட்கள் உடல் நலனை பாதித்துவிடும். ஆதலால் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்துவிட்டு காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    * சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் ஊட்டசத்துமிக்க உணவுகள்தான் உதவும். துரித உணவுகள், காரம் கலந்த மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

    * கிரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பெர்ரி பழங்கள், பச்சை காய்கறிகள், பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் போன்றவை சருமத்தை பளிச்சிட வைக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சாப்பிடும் உணவு பழக்கத்தை பொறுத்துதான் சரும ஆரோக்கியம் அமைந்திருக்கும். அதை விடுத்து அழகு சாதன பொருட்கள் மூலம் அழகை மெருகூட்ட முயற்சிப்பது மட்டுமே சரும பொலிவுக்கு கைக்கொடுக்காது.
    குணமானவர்களில் 4-ல் ஒருவருக்கு இதில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 43 சதவீதம் பேரும் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்கள்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு பின் பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்காக சென்னை மாநகராட்சி, நோய் கட்டுப்பாட்டுக்குழு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் உள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். இதற்காக பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை அதாவது நோய் குணமடைந்து 12 முதல் 14 வாரம் ஆனவர்களை தேர்வு செய்து அவர்களிடம் தற்போதைய நிலையை கேட்டு அறிந்தனர்.

    கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள், ஆக்சிஜன் சிகிச்சை பெற்றவர்கள், வேறு பல நோய்கள் இருந்தும் கொரோனாவுக்கு ஆளானவர்கள், வீட்டிலேயே தனிமையில் இருந்து குணமானவர்கள் என 4 பிரிவாக பிரித்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

    இதற்காக நோயில் இருந்து குணமான 1,001 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் 405 பேர் ஆண்கள், 596 பேர் பெண்கள்.

    அவர்களிடம் கேட்கப்பட்டதில் பெரும்பாலானவர்கள் கொரோனா குணமடைந்ததற்கு பிறகு பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்படுவதாக கூறினார்கள். அதாவது சளி பிரச்சினை, மூச்சுத்திணறல், சோர்வு, உடல்வலி, முதுகு வலி, முடி உதிர்தல், எடை குறைதல், தூக்கமின்மை, படபடப்பு, மூட்டுவலி, உடல் நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள்.

    அதாவது குணமானவர்களில் 4-ல் ஒருவருக்கு இதில் ஏதாவது ஒரு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 43 சதவீதம் பேரும் அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்கள்.

    குறிப்பாக 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதம் பேருக்கு அதிக பின் பாதிப்புகள் இருந்தன. 30 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களில் 24 சதவீதம் பேருக்கு பின் பாதிப்புகள் இருந்தது.

    சிலருக்கு நோய் பாதிப்பு அறிகுறி இல்லாமலேயே கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களுக்கும் பின் பாதிப்புகள் உள்ளன.

    குணமானதற்கு பிறகு பாதிப்பு இருப்பதாக கூறியவர்களில் 36.6 சதவீதம் பேர் எடை குறைந்து விட்டதாக தெரிவித்தனர். 30.7 சதவீதம் பேர் முடி உதிர்வதாகவும், 27.3 சதவீதம் பேர் சோர்வாக இருப்பதாகவும், 22.7 சதவீதம் பேர் தூக்கமில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார்கள்.

    மேலும் 14.7 சதவீதம் பேர் நோய் குணமானதற்கு பிறகும் வாசனை நுகர்வு திறன் திரும்ப வரவில்லை என்று தெரிவித்தனர். 6.7 சதவீதம் பேர் தொடர்ந்து மூச்சுத்திணறல் இருப்பதாக கூறினார்கள்.

    ஏற்கனவே கொரோனாவால் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்கள் குணமானதற்கு பிறகும் அதிக பாதிப்புகள் இருப்பது தெரிய வந்தது.

    முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.
    இந்த உலகத்தில் ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கென ஓடி ஓடி உழைத்து தரமான கல்வியும் சொத்தும் சேர்த்து வைப்பதே முதற்கடமையாக கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பெற்றொர்கள் தர வேண்டிய, குறிப்பாக ஒரு தாய் தரவேண்டிய முக்கியமான சொத்து என்ன தெரியுமா? ‘தாய்ப்பால்’ தான். குழந்தைப் பிறந்த ஒரு மணி நேரத்தில் சுரக்கும் சீம்பாலை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தருவது மிக மிக அவசியம். முதல் ஆறு மாதங்களும் தாய்ப்பால் ஊட்டப்பட்ட குழந்தை பிற்காலத்தில் வரக்கூடிய உடல் பருமன், சர்க்கரை வியாதி, கேன்சர் போன்ற பல வகை வியாதிகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.

    இயற்கையிலேயே குழந்தைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்ப்பால் நன்றாகவே சுரக்கும்.ஒரு சில பெண்களுக்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தாய்ப்பால் தர இயலாமல் போகலாம்.மற்றபடி, தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கும் சுரக்க வைப்பதறக்கும் பல வழிமுறைகள் உள்ளன.பால் கொடுக்கும் தாய் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.பருப்பு, பால், நெய், கீரை வகைகள், முட்டை, பழவகைகள், கொட்டைகள் போன்றவை தினமும் உணவில் இருக்க வேண்டும்.நன்றாகத் தண்ணீர் குடிக்கவேண்டும்.

    குழந்தை வாய் வைத்து பால் உறிய உறியதான் தாயின் நரம்பு மண்டலத்திற்கு சிக்னல் சென்று நன்றாக பால் சுரக்கும்.அந்த சிக்னல்களை சரியாக அறிவதற்குத் தான் தாய்ப்பால் ஊட்டும்பொழுது பெண்கள் மற்றெந்த சிந்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவியல் கூறுகிறது.நம் முன்னோர்களும் இதனால் தான் பால் கொடுக்கும் பொழுது தாயும் சேயும் தனிமையாக ஒரு அறையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    சில பல காரணங்களால் புட்டிப்பாலுக்கு மாறிவிட்டால், அக்குழந்தை மீண்டும் தாய்ப்பாலை ஏற்றுக்கொள்வது மிக மிக கடினமாகிறது.எனவே குழந்தைப்பெற்ற ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை வெறும் தாய்ப்பால் மட்டுமே தருவேன் என்று உறுதி கொள்ளவேண்டும். பால் கொடுப்பதிலும் குடிப்பதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பிரத்யேகமாக இதற்கென்றிருக்கும் “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” அதாவது “தாய்ப்பால் ஆலோசகர்” களை அணுகி தீர்வுக் காணலாம்.

    தாய்க்கு மார்பகக் காம்பு சரியாக இல்லாதிருத்தல் (அ) சிறியதாக இருத்தல், உள்நோக்கி இருத்தல், பால் கொடுக்கும் பொழுது குழந்தையை சரியான முறையில் வைத்துக்கொள்ளாமை என இவற்றில் எதுவாய் இருந்தாலும் பால் சரியாக சுரக்காது, பால் பத்தாமல் குழந்தை அழுதுக் கொண்டிருக்கும். இந்த சவால்களுக்கு, “லேக்டேஷன் கன்சல்டன்ட்ஸ்” சரியான தீர்வை கற்றுத்தருவார்கள்.இன்று பல மருத்துவமனைகளில் முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில் இத்தகைய ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.

    தாய்ப்பால் சுரப்பதில் “முன்பால்” “பின்பால்” என இருவிதமாக சுரக்கிறது. பால் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து முதல் ஐந்து நிமிடங்களுக்கு “முன்பால்” வரும்.இதில் தண்ணீர் சத்து அதிகமாக இருக்கும்.இதனால்தான் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு தனியாக தண்ணீர் தர தேவையில்லை.இதன் பின்னர் வரும் “பின்பால்” புரதம், கொழுப்பு, கலோரிச் சத்து, வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்தது. இதுவே குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவேதான் ஒரு பக்கம் முழுமையாக குடித்து முடித்தபின்பு மறுபக்கம் பால் புகட்டவேண்டும், அல்லது ஒருமுறை ஒரு மார்பகத்தில் பால் கொடுத்தால் அடுத்தமுறை தரும்பொழுது அடுத்தப்பக்கம் தர வேண்டும். இவ்வாறு செய்வதனால் குழந்தைக்கு நீர் மற்றும் புரதச் சத்து முழுமையாக கிடைத்து நன்கு வளர உதவும்.

    தாய்ப்பால் குடிக்கும் குழந்தை பசி நீங்கி நன்கு தூங்க ஆரம்பிக்கும்.ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை சிறுநீர் கழிக்கும்.மூன்று அல்லது நான்கு முறை மலம் கழிக்கும்.தினம் 15--20 கிராம் எடை ஏறும்.சில தாய்மார்கள் குழந்தை பச்சையாக மலம் கழிக்கிறது என்று கவலை கொள்வார்கள்.அவ்வாறு கவலைகொள்ள தேவை இல்லை.குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு அதன் குடலில் உற்பத்தியாகும் பித்த நீர் சரியாக உணவுடன் கலக்காமல் மலத்துடன் வெளியேறுவதால் மலம் பச்சையாக இருக்கும்.குழந்தை வளர வளர அது சரியாகிவிடும்.மேலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளில் அதிகமாக மலம் கழித்தலோ அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை மலம் கழித்தாலோ நார்மல் தான், அதற்கும் கவலைத் தேவை இல்லை.
    கொரோனா லாக்டவுன் காலகட்டங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் போது உருவான மன நெருக்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழலை கடந்து செல்வதற்கான எளிதான வழிகளை இங்கே பார்க்கலாம்.
    பரபரப்பான உலகில் அனைவரும் வீட்டு வேலைகள் அலுவலக பணிகள் இதர விஷயங்கள் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். அடுத்தவரை திரும்பிப்பார்க்க கூட பலருக்கு நேரம் இருப்பதில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையில் பல சமயங்களில் மனதில் ஒருவித வெறுமை ஏற்படுவதை உணர்ந்திருப்போம். அந்த நேரங்களில் மனம் எந்த விஷயத்திலும் ஈடுபாடு கொள்ளாமல் வெறுமையாக மாறி விடும். யாருடனும் பேசவோ அல்லது பழகவோ தோன்றாது. குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலகட்டங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் போது உருவான மன நெருக்கடியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழலை கடந்து செல்வதற்கான எளிதான வழிகளை இங்கே பார்க்கலாம்.

    சூழலை ஏற்றுக்கொள்ளுங்கள்

    அனைவரது வாழ்க்கையிலும் இவ்வாறான நெருக்கடிகள், குறிப்பிட்ட காலகட்ட்ங்களில் ஏற்படுவது சகஜம் என்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக வெறுமை உணர்வுகளில் சிக்கித் தவிப்பது பிச்சனையை அதிகப்படுத்தும். அதனால் நிலைமையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு எவ்வித சிந்தனைகளும் இன்றி அமைதியாக இருக்க முயற்சிப்பதே சிறந்த வழியாகும்.

    தியானம் செய்யுங்கள்

    ஓரிடத்தில் அமைதியாக சில நிமிடங்கள் அமருங்கள். அந்த சமயத்தில் எவ்வித உணர்வு தோன்றினாலும் அதை பெரிதுபடுத்தாமல் மனதின் இயக்கத்தை அமைதியாக கவனிக்கப்பழகுங்கள். சூழலை எப்படி சரி செய்வது என்பதை பற்றி சிந்திக்கக்கூடாது. மனதின் இயக்கத்தை ஒரு பார்வையாளராக இருந்து அமைதியாக கவனித்து கொண்டிருப்பதே போதுமானது.

    இசையை கேளுங்கள்

    மனதில் துயரங்களுக்கு மாமருந்து இசை என்ற கருத்து முற்றிலும் உண்மை. மனம் அமைதியற்ற சூழலில் இருக்கும் போது விருப்பமான இசையை கேட்பது அமைதியை ஏற்படுத்தும். அமைதியான மனநிலை உருவாக இசையை விட நல்ல மருந்து வேறு இல்லை. உங்களுக்கு பிடித்த பாடலை கண்களை மூடி கொஞ்ச நேரம் கேட்கலாம்.

    நடைப்பயிற்சி செய்யுங்கள்

    மனதில் வெறுமை ஏற்படும் சமயங்களில் வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அதனால் குறைந்த பட்சம் மாடியில் கொஞ்ச நேரம் காற்றாட அமர்ந்திருப்பது காலாற நடப்பது என்று கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்யலாம். வெளிக்காற்றை சுவாசிக்கும் போது மனதில் இறுக்கம் அகன்று விடும்.

    நண்பர்களிடம் பேசுங்கள்

    மனதில் சற்றே அமைதி ஏற்பட்டவுடன் நெருங்கிய நண்பர்களிடம் தொலைபேசியிலோ அல்லது நேரில் சந்தித்தோ பேசலாம். மற்றவரிடம் மனம் விட்டு அன்பாக பேசுவதால் மனம் லேசாகும். நம்மை சுற்றி அன்பான மனிதர்கள்  இருப்பதை உணர்வதும் மனவெறுமைக்கு நல்ல மருந்தாகும்.

    ஆன்லைனில் கற்றுக்கொள்ளுதல்

    தற்போது ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு மீட்டிங்குகள் நடைபெறுகின்றன. அமர்ந்த இடத்தில் இருந்தே பல கலைகளை கற்றுக்கொள்வதும்துறை சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் பேசுவதை கேட்பதும் சுலபமாக மாறியிருக்கிறது. பிடித்தமான விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். அதனால் கவனம் வேறு பக்கம் திசை திரும்புவதுடன் மனதில் ஏற்பட்ட வெறுமை உணர்வை அகற்றி ஊக்கமாக செயல்படுவதற்கான வழிகள் உருவாகும்.
    ஸ்வீட் கார்ன் மிகவும் சத்து நிறைந்தது என்பதோடு அத்துடன் கேரட், மாங்காய், தேங்காய் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான பலன்களைப் பெறலாம்.

    தேவையான பொருட்கள்

    சோளம் வேகவைத்து உதிர்ந்தது - 1 கப்
    கேரட் துருவியது - சிறிதளவு
    மாங்காய் துருவியது - சிறிதளவு
    தேங்காய் துருவியது - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
    கடுகு, பெருங்காயத்தூள், சில்லி ஃப்ளோக்ஸ் - சிறிதளவு

    செய்முறை

    சோளக்கதிரை வேகவைக்கும் பொழுதே உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    பின்பு சோளமணிகளை உதிர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, கேரட் துருவியதைப் போட்டு வதக்கி (பச்சை வாசம் போவதற்காக) பின்பு வேக வைத்த சோளம், பெருங்காயத்தூள் போட்டு ஓரளவு வதங்கிய பின்பு உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.

    சில்லி ஃப்ளோக்ஸ் போட்டு ஒரு கிளறு கிளறி மாங்காய்த் துருவல் மற்றும் தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கலாம்.

    கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து பரிமாறலாம்.

    இப்போது ஸ்வீட் கார்ன் கேரட் மாங்காய் சுண்டல் ரெடி.

    உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும்.
    அழகில் அக்கடை கொண்ட பலரும், முகம், கை, கால்களுக்கான பாராமரிப்புகளை மட்டுமே தினமும் மேற்கொள்கிறார்கள். கழுத்துப்பகுதிக்கான பராமரிப்பில் கவனம் செலுத்துவதில்லை. தலை மற்றும் உடலை இணைக்கும் முக்கியமான உறுப்பாக விளங்கும் கழுத்தை முகத்தை போல் பராமரிப்பது அவசியம். இல்லாவிட்டால் கழுத்தை சுற்றிலும் உள்ள சருமத்தின் நிறம் கருமையாக மாறி விடும்.

    முகத்துக்கு பேஷியல் செய்யும் போது கழுத்துப் பகுதிக்கும் செய்ய வேண்டும். அடிக்கடி சோப் கொண்டு சுத்தம் செய்தால் கருமை நிறம் நீங்கும் மேலும் அவ்வப்போது சிறிது நல்லெண்ணெய்யை சூடாக்கி அதை கழுத்து பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம். அதன் மூலம் ரத்த நாளங்கள் நன்றாக இயங்குவதுடன் ரத்த ஓட்டம் சீராசி சருமத்தில் உள்ள சுருக்கஙகள் நீங்கும்.

    கழுத்தின் அணியும் நகைகளை  3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது முக்கியம். கவரிங் நகைகளை அணியும் போது அவற்றால் ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக அணியும் போது அவற்றின் நிறம் மாறியிருந்தாலோ பாசி படர்ந்திந்தாலோ அவற்றை பயன்படுத்தக்கூடாது நகைகளை கழற்றிய பின்னர் குளிர்ந் நீரால் கழுத்தை சுற்றிலும் கழுவுவது நல்லது.

    உடல் பருமன் கொண்டவர்களின் கழுத்தை சுற்றிலும் அதிக சதை வளர்ச்சி ஏற்படும். அது கழுத்தின் அழகை குறைக்கும். தகுந்த பயிற்சிகளை செய்வதன் மூலம் கழுத்தை அதுகாக மாற்ற முடியும். அதற்கான பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.

    காலை அல்லது மாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இந்த பயிற்சிகளையும் சேர்த்து செய்யலாம்.

    * தரையில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும கீழுமாக 5 முறை அசைக்க வேண்டும்.

    *நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறமாக திருப்பி சில நொடிகள் அப்படியே இருந்து பின்னர் மீண்டும் நேராக பார்க்க வேண்டும். இதே போல் இடது புறமும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.

    * கைகளை தாடை மேல் வைத்து கழுத்தை பின்னால் சாய்த்து சில நொடிகள் கழித்து கழுத்தை நேரக்க வேண்டும். இதனால் நரம்புகள் மற்றும் சருமத்தில் உள்ள இறுக்கம் அகலும். இதையும் 5 முறை செய்யலாம்.

    * கைகளை கழுத்தின் பின்பக்கத்தில் வைத்த படி கழுத்தை முன்பக்கமாக சாய்க்க வேண்டும். இதையும் 5 முறை செய்யலாம்.

    * மேற்கண்ட பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ரத்த ஓட்டமும், கழுத்து தசையின் வளர்ச்சியும் சீராகி அழகிய சங்கு போன்ற கழுத்தை பெற முடியும்.
    கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நீதி நெறிகளையும் சரியான அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால் சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
    குழந்தைகளின் உலகம் முற்றிலும் மாறுபட்டது. பார்க்கும் விஷயங்களையும் கேள்விப்படும் செய்திகளையும் அவர்களது கற்பனை திறனுக்கேற்பவே புரிந்து கொள்வார்கள். அதனால் தான் தாத்தா, பாட்டிகள் வாழ்வியல் நெறிகளை கதைகளின் வடிவில் குழந்தைகளுக்கு சொல்வார்கள். தினமும் கதைகளை கேட்கும் குழந்தைகளின் கற்பனை திறன் நன்றாக வளர்ச்சி பெறுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கதைகளின் மூலம் வாழ்வியலுக்கான நீதி நெறிகளையும் சரியான அணுகுமுறைகள் பற்றியும் அறிந்து கொள்வதால் சிக்கலான சூழ்நிலைகளில் கூட எளிதாக சமாளிக்கும் திறமை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    ஆழமாக மனதில் பதியும்

    எந்த விஷயத்தையும் கதைகளில் வடிவில் குழந்தைகளுக்கு சொல்லும் போது எளிதாக நினைவில் நிற்கும். நீதி நெறிகள், பள்ளி பாடங்கள் பொது அறிவு சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை சுவாரசியமான கதைகளாக கூறினால் ஆழ்மனதில் அழியாமல் பதியும்.

    ஒழுக்க நெறிகளை வளர்க்கலாம்.

    தங்களுடைய சுதந்திரமான போக்கில் பெரியவர்கள் தலையிட்டு அறிவுரை வழங்குவதை குழந்தைகள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதனால் அறிவுரைகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆர்வமூட்டும் வகையில் நன்னெறிக்கதைகளாக சொல்ல வேண்டும். அவர்களது இயல்புக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை அறிந்து அதன் மூலம் நன்னெறிகளை வலியுறுத்தும் கதைகளை கூறுவது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக அமையும்.

    கதை வடிவில் பாடங்கள்

    பாட நூல்களில் உள்ள வரலாற்று சம்பவங்களை மதிப்பெண் அடிப்படையில் குழந்தைகள் படிக்கும் போது அவை அவர்களது மனதில் பதிவது இல்லை. பாடங்கள் கதைகளாக உருவகம் செய்து சொல்லும் போது அதன் உள்பொருள் அவர்களது மனக்கண்ணில் காட்சிகளாக விரியும். அதனால் பாடங்களில் உள்ள பெயர்கள் உள்ளிட்ட இதர குறிப்புகள் மனதில் எளிதாக பதிந்து விடும்.

    கதைகளால் ஏற்படும் நன்மைகள்

    அன்போடு கதைகளை சொல்லும் பெற்றோரிடம் பிள்ளைகளுக்கு பாசப்பிணைப்பு அதிகரிக்கும். கதையில் சொல்லப்பட்ட காட்சிகளை கற்பனை செய்து கொள்வதால் குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். அதனால் வளர்ந்த பிறகு எதையும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து செயல்படுவார்கள். கதை கேட்கும் பழக்கம் காரணமாக கைப்பேசி விளையாட்டுகளுக்கு அடிமையாகி உடல் மற்றும் மனஆரோக்கியம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும்.

    கதை சொல்லும் முறை

    இரவு நேரத்தில் குழந்தைகள் தூங்குவதற்கு முன்னர் கதை சொல்லலாம். அவர்களது வயதுக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து சொல்லி அவற்றிலிருந்து கேள்வி  கேட்பது குழந்தைகளின் கவனத்தை ஒரு முகப்படுத்த உதவும். கதை சொல்லி முடித்த பின் அதன் சாராம்சத்தை அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில் திரும்பவும் சொல்ல வைத்து பாராட்டலாம். திகிலூட்டும் பேய் கதைகள், மற்றவர்களை தந்திரமாக ஏமாற்றும் கதைகள், மூட நம்பிக்கைகளை வளர்க்கும் கதைகளை குழந்தைகளுக்கு சொல்வதை தவிர்க்க வேண்டும்.
    மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள்.
    பெண்களை இரண்டுவிதமான புற்றுநோய்கள் பெருமளவு தாக்குகின்றன. அவை: மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய். உலக அளவில் கணக்கிட்டால் சுவாசப்பகுதியில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பிடித்திருக்கிறது.

    மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தன்மை கொண்டது என்று கருதப்படுகிறது. நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது வந்திருந்தாலும் அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். 12- வயதுக்கு முன்பு வயதுக்கு வந்துவிட்டாலும், 55-வயதுக்கு பின்பு மாதவிலக்கு நிலைத்துப்போனாலும் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு நிலைத்த பின்பு உடல் எடை அதிகரிக்கும் பெண் களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

    கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசங்கள், மது போன்றவைகளை தவிர்ப்பது மார்பகபுற்று நோயை தடுக்கும். கர்ப்பத்தடை மாத்திரைகள், மாதவிலக்கு நாட்களை தள்ளிப்போடுவதற்காக உட்கொள்ளும் மாத்திரைகள், குழந்தையின்மைக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் ஹார்மோன் தன்மைகள் போன்றவை மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்துவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

    30 வயதிற்கு பின்பு முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெண்களும், ஒரு தடவை கூட கர்ப்பமே ஆகாத பெண்களும், 45 வயதைக்கடந்த பெண்களும் இந்த நோய்க்கான எச்சரிக்கை உணர்வினை கடைப்பிடிக்கவேண்டும்.

    மார்பகங்களில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் ஏதாவது தோன்றியிருந்தாலும், அந்த கட்டிகளை ஆபரேஷன் மூலம் நீக்கியிருந்தாலும் கவனமாக இருங்கள். பிற்காலத்தில் ஒருவேளை அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.

    கருப்பை வாய் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் பகுதி, பெண்களின் பிறப்பு உறுப்பின் உள்பகுதியில் அமைந்திருக்கிறது. பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பித்து மூன்று வருடங்கள் கடந்த பின்பு, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். 30 வயதைக் கடந்த பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை ‘பாப்ஸ்மியர்’ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 65 முதல் 75 வயதுக்கு உள்பட்ட மூதாட்டிகள் இந்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டியதில்லை.

    பரிசோதனையில் பாதிப்பு இருப்ப தாக கண்டறிந்தால், அது முதல் நிலை அல்லது இரண்டாவது நிலையில் இருந்தால் 85 முதல் 95 சதவீத நோயாளிகளை குணப்படுத்தி விடலாம். அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும் குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

    ஹுயூமன் பாபிலோமா என்ற ஒருவகை கிருமிகள்தான் இந்த நோய்க்கு காரணம். அவை கருப்பைவாய் திசுக்களை கடந்து சென்று, அந்த திசுக்களில் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது திடீரென்று ஏற்படும் மாற்றமல்ல. பல வருடங்களாக நடப்பதாகும்.

    இளம் பருவத்திலே பாலியல் தொடர்பில் ஈடுபடுகிற பெண்கள், இளம் வயதிலே பிரசவிக்கும் பெண்கள் போன்றவர்களுக்கும் இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    ஒரு குழந்தை கண்டிராத பழைய உலகத்தை ஏற்கனவே அறிந்துவைத்து ஆற்றுப்படுத்துகிற ஆசான்தான் தந்தை. தாய்ப்பால் ஊட்டிக் குழந்தையைக் கண்ணயரச் செய்கிறவள் தாய்; அறிவுப்பால் ஊட்டிக் குழந்தைக்குக் கண்திறப்புச் செய்கிறவன் தந்தை.
    ஒரு மகனைச் சான்றோன் ஆக்குவதே தந்தையின் தலைக்கடன். அதற்குக் கல்வி தரவும், நல்லொழுக்கம் பேணவும், அறத்திற்கு புறம்பானவற்றை அழிக்கும் மறத்தைக் கற்பிக்கவும் ஒரு தந்தை கடமைப்பட்டவனாகிறான். எனவேதான் ஒரு மனிதனின் வாழ்வில் தந்தை என்பவன் எல்லா வயதிலும் எல்லாக் காலங்களிலும் முன்னுரிமை பெறுகிறான்.

    யாரோ ஒருவரின் தியாகத்தால்தான் ஒரு குடும்பம் நிலைபெறுகிறது. ஒரு குடும்பம் நிலைபெறுவது யாரால் என்ற கேள்வி முக்கியமானது. எவன் ஒருவனின் தியாகத்தால் குடும்பம் நிலைபெறுகிறதோ அந்த தியாகசீலரால்தான் குடும்பம் என்ற கட்டமைப்பு கட்டுக்குலையாமல் கட்டியெழுப்பப்படுகிறது. “உங்கள் கூட்டுக் குடும்பத்தின் வெற்றி ரகசியம் என்ன?” என்று நடிகர் திலகம் சிவாஜியை ஒருமுறை கேட்டேன். “அது வேற ஒண்ணும் இல்ல வைரம். எவன் சம்பாத்தியத்தில் ஒரு குடும்பம் நடக்கிறதோ, அவன் தன் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்பதை மறந்துவிட வேண்டும்” என்று தெளிந்த தத்துவம் சொன்னார்.

    ஒரு குடும்பத்தை நிர்மாணிக்க நிலைநிறுத்த ஒரு தந்தை அடைகிற மெய்வருத்தம் கண்ணுக்குப் புலப்படும்; அவன் ஈட்டுகிற வருமானம் புலப்படும். ஆனால், குடும்பத்தைக் கரைசேர்க்க அவன் அடைகிற கண்ணுக்குத் தெரியாத அவமானங்கள் கணக்கில் வருவதில்லை. தன் தந்தை எங்கெங்கே அவமானப்பட்டிருப்பார் என்று கணக்குப்போடத் தெரிந்த மகன்களால் கண்ணீரை நிறுத்த முடியாது. ஆனால், அடுக்குமாடிகளில் குடியிருக்கிற ஐ.டி இளைஞன் யாரும் தன் தந்தையின் படத்தை வீட்டில் மாட்டி இருப்பதாய்ச் சாட்சி இல்லை. திருமணத்திற்குமுன் காதலி படத்தையும், திருமணத்திற்குப் பின்பு தன் குழந்தையின் படத்தையும் கைபேசியில் காட்சிக்கு வைத்திருப்பதைப்போல் எந்த இளைஞனும் தந்தையின் படத்தைக் கைபேசியில் காட்சிப்படுத்தவில்லை.

    உன் தந்தையை நீ எப்படி மதிக்கிறாய் என்பதைத்தான் உன் மகன் உற்று கவனித்து வருகிறான். உன்னை அவன் மதிப்பதற்கும் உன்னிடமே ஒத்திகை பார்க்கிறான். சினிமாக்களால் தாயை நேசிக்கத் தெரிந்த ஒரு பாசாங்குப் பாசம்கூட தந்தையின்மீது பெரும்பாலும் இல்லை. ஒரு செடிக்குத் தாய் தண்ணீர் ஊற்றுகிறாள்; தந்தைதான் உரம் போடுகிறான். உரம் கெட்டவாசனை அடிப்பதாய்த் தோன்றும். அதனால் தண்ணீரைப்போல் உரம் நேசிக்கப்படுவதில்லை. ஆனால், அதுதான் உறுதி தருகிறது.

    தந்தைக்கும் மகனுக்குமான உறவு தமிழ்ச் சமூகத்தில் எப்போதும் ஒரு பெரும் பிரச்சினையாகவே திகழ்கிறது.

    “நீ எங்கே பறந்தாலும் நூல் என் கையில் இருக்கட்டுமே!” என்று தகப்பன் நினைக்கிறான். “என்னை விட்டுவிட்டால் இன்னும் கொஞ்சம் உயரப் பறப்பேனே!” என்று மகன் தவிக்கிறான். விதைத்தவன் நான்தானே என்ற தினவு தந்தைக்கும், விளைந்தவன் நான்தானே என்ற திமிர் மகனுக்கும் எல்லாத் தலைமுறைகளிலும் இருந்தே வருகிறது. குடும்பம், அரசியல், தொழில் என்று எல்லா நிலைகளிலும் இதுவே நிகழ்கிறது.
    ×