என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பூண்டை விரும்பாதவர்கள் கூட கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு அருமையான சுவையுடன் கூடிய பூண்டு பொடியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    பூண்டு - 1/2 கப்,
    உளுத்தம் பருப்பு - 1/4 கப்,
    துருவின தேங்காய் - 1/4 கப்,
    தனியா - ஒரு டேபிள் ஸ்பூன்,
    வரமிளகாய் - 10,
    சீரகம் - 1 டீஸ்பூன்,
    பெருங்காயப் பொடி - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    பூண்டை தோல் உரித்து நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டுகளை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இதேபோல் துருவிய தேங்காயை போட்டு வறுத்து எடுத்து அதனுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

    பின்னர் தொடர்ந்து மல்லி விதையை(தனியா) வறுக்கவும், இதை எடுக்காமல் அப்படியே வர மிளகாய்களை சேர்த்து வதக்கவும். வர மிளகாய் நன்கு வறுபட்டதும், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகம் இரண்டு பிரட்டு பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்.

    இப்போது கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

    அனைத்தையும் நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு கொர கொரவென்று அரைத்துக் கொள்ளுங்கள்.

    சூப்பரான பூண்டு பொடி ரெடி.

    பூண்டு பொடியை இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு சைட்டிஷ்சாக வைத்து சாப்பிடலாம். சட்னியே உங்களுக்கு தேவைப்படாது.

    இட்லி பொடியை விட பூண்டு பொடி அட்டகாசமாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பூண்டு பொடி ஒருமுறை செய்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். பிரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.
    காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது.
    தலைக்கு குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது காது சரியாகக் கேட்பதில்லை.

    `பட்ஸ்’ கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது என சிலர் சொல்வதை கேட்டு இருப்போம்.

    காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம். இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது.

    பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும். அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். `பட்ஸ்’ பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது.

    காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன. இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

    அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாட்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்ச் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர் உதவி தேவை.

    காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம். அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு, தலையை சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயை காதுக்குள் ஊற்றக் கூடாது, அப்படிச் செய்தால் காது பாதிக்கப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? என்பதை தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள்.
    * கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.
    * நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
    * குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
    * சிசேரியன் செய்ய வேண்டிய நிலை
    * எடை கூடுதல்
    * உயர் ரத்த அழுத்தம்
    * கரு கலைதல்
    * மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
    * டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்
    * வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
    * ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
    * நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
    * கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
    * கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    * பிறப்புநிலைக் கோளாறுகள்
    * பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு
    * மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.
    * மஞ்சள் காமாலை
    * ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)
    * பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்
    * குறைப் பிரசவம்
    * Hyaline membrane எனும் நுரையீரல் நோய்
    * மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).
    சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
    * நிறைய தண்ணீர் அருந்துதல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து லிட்டராவது தண்ணீரை குடிக்க வேண்டும்.

    * ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து முறை வெறும் நீரால் முகம் கழுவுதல் வேண்டும்.

    * முகத்தை கழுவும்போது காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ரோஸ் வாட்டரில் முகம் கழுவினால் சருமத்தில் உண்டான சூடு குறைந்து குளிர்ச்சி கிடைக்கும்.

    * ஜெல் பேஸ், ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்துதல் வேண்டும்.

    * பயத்தம் பருப்பு அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் குளியல் பொடி கொண்டும் முகத்தைக் கழுவலாம்.

    * வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது முகத்தை மூடி வெயில் நமது சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.

    * வெளியில் செல்லும்போது சூரிய ஒளி நேரடியாகத் தாக்காதவாறு சன் க்ரீம்களை பயன்படுத்தலாம். இது சருமத்தை சற்று பாதுகாக்கும்.

    * கைபேசிகள் வழியாக வெளியேறும் ரேஷர் கதிர்கள் முகத்தை தாக்கும் தன்மை கொண்டது. எனவே கைபேசி பயன்பாட்டை குறைப்பதுடன், தூங்கும்போது அருகில் வைப்பதை தவிர்த்தல் வேண்டும்.

    * சாலிட்டிரிக் ஆயில் அல்லது டீ ட்ரீ ஆயில் உள்ள ஃபேஸ் வாஷ்களை பயன்படுத்தினால் முகப்பரு கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    * ஆலுவேரா சருமத்திற்கு மிகவும் உகந்தது. ஆலுவேரா ஜெல்லை நன்றாக மசித்து அத்துடன் கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் இணைத்து முகத்தில் பேக் போடலாம். ஆலுவேராவில் உள்ள ஜெல் சருமத்தில் உள்ள எண்ணைத் தன்மையை இழுப்பதுடன், கஸ்தூரி மஞ்சள் முகப்பருவை கட்டுப்படுத்தும்.

    * வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து இரண்டையும் அரைத்து, அத்துடன் வெந்தயம் எசன்ஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதுவும் முகப்பருவை கட்டுப்படுத்தும்.

    * அதிகமாக பழம் மற்றும் பழச்சாறுகளை உணவாக எடுக்கலாம். காய்கறிகளையும் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

    * சரியாக நேரத்திற்கு உணவு சாப்பிடவில்லை என்றால் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் உருவாகும். இது முகப்பரு தோன்ற வழிவகுக்கும். எனவே குறிப்பிட்ட நேரத்தில் கொஞ்சமாகவாவது உணவை எடுக்க வேண்டும்.
    தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
    தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

    * பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

    * சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது.

    * அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும்.

    * ஆனால் மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சளி பிரச்சினை ஏற்படாது.

    குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
    * குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

    * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

    * உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

    * “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

    * பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

    * குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

    * குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

    * குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

    * வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    * குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

    இதையும் படிக்கலாம்.. கேரட் உருளைக்கிழங்கு சூப்
    ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 1,
    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையான அளவு,
    மிளகுத்தூள் - தேவையான அளவு,
    வெண்ணெய் - தேவைக்கு.

    செய்முறை:


    வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    ஆறிய பிறகு திறந்து மத்தால் கடையவும்.

    பின்னர் தேவையான அளவு தண்ணீர் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறலாம்.

    சூப்பரான கேரட் உருளைக்கிழங்கு சூப் ரெடி.

    பெருநகரங்களில் உள்ள சில இளம் பெண்கள் பெரும்பாலும் தாலி அணிந்து கொள்வதில்லை. அதனை ஒரு பேஷன் பொருள் போல கழற்றி வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் அணிந்துகொள்கிறார்கள்.
    காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மிக முக்கியமானது என்று கருதப்பட்ட சில விஷயங்கள், தேவையற்றது என்று ஒதுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதை காலமாற்றம் என்று சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள். பலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.

    தாலி நமது கலாசாரத்தோடு பின்னிப் பிணைந்தது. திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து முகூர்த்தம் நடைபெறுவது வரை எத்தனையோ விதமான சடங்கு, சம்பிரதாயங்கள், செலவுகள், மனித உழைப்புகள் இருக்கின்றன. அத்தனைக்கும் மையமாக இருப்பது தாலி. உற்றார், உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டப்பட்டு, போற்றப்படுகிறது. ஆனால் பெருநகரங்களில் உள்ள சில இளம் பெண்கள் பெரும்பாலும் தாலி அணிந்து கொள்வதில்லை. அதனை ஒரு பேஷன் பொருள் போல கழற்றி வைத்துவிட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் அணிந்துகொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் நடந்துகொள்ள என்ன காரணம்? இதோ சில பெண்களின் கருத்துக்கள்:

    கோமதி: (வீட்டு வேலை செய்பவர்)

    ‘‘நான் வீட்டு வேலை செய்து விட்டு வீடு திரும்ப இரவு ஆகிவிடுகிறது. தனியாக வர வேண்டியிருப்பதால் தாலி எனக்கு பாதுகாப்பானதாக தெரியவில்லை. அதனால் வீட்டார் அனுமதியுடன் தாலியை பத்திரமாக வீட்டில் கழற்றி வைத்துவிட்டுதான் வேலைக்கு கிளம்புவேன். தங்கத்திலான தாலி இல்லாவிட்டால் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எனக்கும் நிம்மதி வீட்டில் உள்ளவர் களுக்கும் நிம்மதி”

    ஸ்வேதா: ( தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்)

    “திருமணமான புதிதில் நான் தாலி பற்றி பேசவே தயங்கினேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, தவறாக நினைத்துவிடுவார்களோ என்றெல்லாம் பயந்தேன். தாலியை கழற்றி வைப்பதால் கணவர் உயிருக்கு ஆபத்து ஒன்றும் வந்து விடாது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அக்கம் பக்கத்தினர் தவறாக கருதிவிடுவார்கள் என்ற உறுத்தல்தான் இருந்துகொண்டிருந்தது. நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் பல பெண்கள் தாலி அணிவதில்லை. காரணம், நேரம் கெட்ட நேரத்தில் அலுவலகம் வரவேண்டி இருக்கும். அடிக்கடி ஷிப்ட் மாற்றிப் போடுவார்கள். வெளியே செல்லும் எல்லா நேரங்களிலும் தாலியைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க முடியாது. என் நிலைமையை உணர்ந்து குடும்பத்தினர் கொடுத்த அனுமதியின் பேரில் தாலியை கழற்றி வைத்துவிட்டு அலுவலகம் சென்று வருகிறேன் . முக்கியமான விேசஷங் களுக்கு மட்டும் அணிந்து கொள்வேன். இது மாதிரியான சமூக சிக்கல்களை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்”

    பிரியா: (உயர் அதிகாரி)

    “சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் குடும்பம் என்னுடையது. நான் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறேன். ஒரு ரசாயன உரத் தொழிற்சாலையில் மேலதிகாரியாக பணியாற்றுகிறேன். நான் தாலியை கழற்றிவைத்துவிட்டுதான் வருவேன். ஒரு முறை என் அலுவலகத்திற்கு என் மாமனாரும் மாமியாரும் வந்திருந்தனர். கழுத்தில் தாலி இல்லாததை பார்த்துவிட்டு, எங்கே தாலி? என்று கேட்டார் என் மாமியார். எதையோ சொல்லி அவர்களை சமாளித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தேன்.

    வீட்டிற்கு சென்றதும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தோடு சென்றேன். ஆனால் என் மாமியார் அருகில் வந்து, ‘நீ வேலை செய்யும் தொழிற்சாலையில் ரசாயனம் உள்ளது. அங்கே நீ தாலியை அணிந்தால் தங்கம் பாழாகிவிடும். ஆனால் கைப்பையில் தாலியை கழற்றிவைக்காதே. அதை யாராவது தூக்கிச் சென்றுவிடுவார்கள். அதனால் இனி தாலியை வீட்டிலேயே பத்திரமாக வைத்து விட்டு போ. சொந்தக்காரங்க வீட்டுக்கு வரும்போது கொஞ்சம் கவனமா இரு. ஓடிப்போய் கழுத்தில் தாலியை அணிந்துகொள்’ என்றார். எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன். இதுதான் இன்றைய உண்மை நிலை. நமது பாதுகாப்பு நமது கையில்தான் உள்ளது. யாரும் தாலியை அலட்சியப்படுத்தப் போவதில்லை. ஆனால் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டிய அதே நேரம் நம்மையும் நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

    காவல் துறை அதிகாரிகளும் இது பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்கள். திருடர்கள் பெரும்பாலும் குறிவைப்பது தாலியைதான். மற்ற நகைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தாலி நிச்சயம் தங்கத்தில் தான் இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு. அதனால்தான் பெண்களின் கழுத்தில் கைவைக்கிறார்கள்.

    தாலியைவிடவும், தாலியை சுமக்கும் பெண் உயிர் முக்கியமல்லவா!
    உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.
    சில பெண்கள் சராசரி உடல் எடையைவிட அதிக எடையில் இருப்பார்கள். திடீரென்று யாரோ சொன்ன ஆலோசனையின் பேரில் `டயட்’டில் இருந்து உடம்பை குறைத்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும்போது, அவர்கள் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவு அல்லது மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காரணமாக அவர்களது உடல் மீண்டும் ஏறிவிடும்.

    இப்படி உடல் எடையை ஏற்றிக்கொண்டும், குறைத்துக்கொண்டும் இருந்தால் அவர்களது முன்னழகு பாதிக்கப்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது, மார்பக தசைகளில் சுருக்கம் விழுந்து விடும் என்கிறார்கள் அவர்கள்.

    இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

    * மார்பக அழகுக்கு முக்கிய தேவை புரோட்டீன். இந்த புரோட்டீனில்தான் மார்பகம் சரியான `ஷேப்’பிலும், எடுப்பான தோற்றத்திலும் காட்சியளிக்கத் தேவையான கொலாஜன் இருக்கிறது. அதனால், புரோட்டின் அதிகம் உள்ள உணவு வகைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.

    * உங்களுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் மார்பகங்களை ஐஸ் வாட்டர் கொண்டு ஒற்றியெடுக்கலாம்.

    * முடிந்தவரை வெந்நீரில் குளிப்பதை பெண்கள் தவிர்த்துவிட வேண்டும். தொடர்ந்து வெந்நீரில் குளித்து வந்தால் மார்பகத் தசைகள் தொய்வடைந்து விடும். இதை ஆய்வு செய்தும் நிரூபித்து இருக்கிறார்கள். அதேநேரம், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெந்நீரில் குளிக்கும்போது மார்பகத்தில் வெந்நீர் படாமல் குளிக்கலாம்.

    வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில வகை பானங்களை பருகும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். இரவில் சாப்பிட்ட பிறகு 8-9 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் எழுந்திருக்கும்போது முதலில் சாப்பிடுவதை வயிறு, குடல் சட்டென்று உறிஞ்சிவிடும். வெறும் வயிற்றில் திரவ உணவுகளை பருகுவது நச்சுக்களை வெளியேற்றவும், பசியை அதிகரிக்கவும், எடையை குறைக்கவும், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    வெறும் வயிற்றில் என்னென்ன பானங்களை பருகலாம்? அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

    மஞ்சள் பால்: இந்திய உணவுகளில் மஞ்சள் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது. இது அனைத்து விதமான அழற்சியையும் போக்கும். குறிப்பாக சுவாச பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படக்கூடியது. சளி, இருமல் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    ஒரு கப் சூடான பாலில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். சுவைக்கு தேன் அல்லது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்ததும் இந்த மஞ்சள் பாலை பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பும் பருகலாம். மஞ்சள் பாலுடன் மிளகு, கிராம்பு சேர்த்தும் பருகலாம். இது தொண்டை புண்களையும் ஆற்றும்.

    சீரக நீர்: வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் பருகுவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். எடை குறைப்புக்கும் வழிவகுக்கும். எடையை குறைப்பதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்தலாம். இரண்டு கப் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி சீரகத்தை போட்டு கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    துளசி டீ: காலையில் எழுந்ததும் துளசி சாறு அல்லது துளசி டீ பருகுவது செரிமான செயல்முறையை எளிமையாக்க உதவும். குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஒரு கப் சூடான நீரில் சிறிதளவு துளசி சாறு கலந்தும் பருகலாம். சுவைக்கு சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

    இஞ்சி பானம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பானம் இது. ஒரு கப் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து ஆற விடவும். பின்னர் உலர்ந்த சாமந்தி பூ, இஞ்சி, ஆரஞ்சு தோல், லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்றவற்றை சிறிதளவு சேர்ந்து கொதிக்கவிடவும். கொதிக்க தொடங்கியதும் இறக்கி ஆறவைத்து பருகலாம். இந்த இஞ்சி பானம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

    கொத்தமல்லி பானம்: கொத்த மல்லி விதையில் இருந்து தயாரிக்கப்படும் நீரை பருகுவது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போட்டு இரவில் ஊறவைக்கவும். காலையில் அந்த நீரை வடிகட்டி பருகிவிடலாம். பின்பு கொத்தமல்லி விதைகளை சமையலுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    வேப்ப இலை டீ: வேப்ப இலையில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2 வேப்ப இலைகள், 4 துளசி இலைகள், ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் ஊற விடவும். அதில் 2 மிளகு, 2 கிராம்புகளை பொடித்து சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையை இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டிக்கொள்ளவும். ஓரளவு ஆறியதும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பருகலாம். இந்த டீயை ஒரு வாரம் தொடர்ந்து பருகி வந்தால் சருமம் பொலிவு பெறும்.

    காலையில் டீ, காபிக்கு மாற்றாக மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றை பருகுவது உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இதனை பருக விரும்பாதவர்கள் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகலாம்.

    வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.
    குழந்தைகள் காலைப்பொழுதை எப்படி தொடங்கினால், அன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

    * காலையில் புன்னகையோடு எழுந்திருங்கள். நம்பிக்கை எண்ணத்துடன் எழுந்திருங்கள். காலைச் சூரியனுக்கு, ‘குட் மார்னிங்’ வைக்கலாம். கண்களுக்கு நல்லது. வைட்டமின்-டி சத்தும் கிடைக்கும்.

    * மிதமான இளஞ்சூடான நீரை அருந்துங்கள்.

    * காலையில் வீசும் இளங்காற்றை ஐந்து நிமிடங்கள் சுவாசிக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்வது நல்லது.

    * வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடிய பிரெஷ் ஜூஸ், சத்துமாவுக் கஞ்சி, கூழ், காய்கறி சூப், உளுந்தங் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். அந்த நாளை நல்ல உணவோடு தொடங்கும் வாய்ப்பு இது.

    * பத்து நிமிடங்களாவது தியானம், யோகா போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். அல்லது கண்களை மூடி வெறும் சுவாசத்தை மட்டும்கூட கவனிக்கலாம்.

    * கோடை காலத்தில் குளிர்ந்த நீரிலும், மழை மற்றும் பனிக்காலத்தில் வெந்நீரிலும் குளிப்பது நல்லது. இதனால் உடல் பிரெஷ்ஷாக, சுறுசுறுப்பாக இருக்கும்.

    * ஒரு காகிதத்தில் இன்று நாம் செய்யவேண்டியவை என்னென்ன என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    * தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    * அன்றைய வேலையைத் தொடங்கும்போது ‘இன்று நான் சிறப்பாகச் செயல்படுவேன்’ என்ற உத்வேகத்தோடு தொடங்குங்கள். அந்த நாள் சிறப்பானதாக, உங்களுக்கானதாக அமையும்.

    எழுந்ததும் வேலைதான் செய்ய வேண்டும் என்றில்லை, பிடித்த விஷயத்தைக்கூடச் செய்யலாம். இசையைக் கேட்கலாம். கவிதை எழுதலாம். எது உற்சாகத்தை தருமோ, அந்த விஷயத்தைச் செய்யுங்கள்.

    ஒரு குடும்பத்தின் எதிர்காலம் அதன் வாரிசான குழந்தைகள் தான். அதற்காக இன்று தவம் கிடப்போர் ஏராளம். குழந்தையின் அருமை குழந்தை இல்லாத தம்பதியர்க்கு தான் தெரியும்.
    குழந்தை செல்வம் தான் மிக உயர்ந்த செல்வம். அதனால் தான் நம் பாரம்பரியத்தில் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது நலம் விசாரித்து விட்டு கேட்கும் முதல் கேள்வி என்னவென்றால், உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? என்பது தான். யாரும் சொத்து குறித்து கேட்பதில்லை. ஏனென்றால் குழந்தைகள் தான் ஒரு குடும்பத்தின் சொத்து. குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.

    கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இயற்கையே செய்யும் குடும்பக்கட்டுப்பாடு விகிதம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் மகப்பேறு கிட்டாத தம்பதிகள் ஊருக்கு ஊர் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குழந்தையில்லாத நிலை இன்று எங்கும் நிறைந்து இருக்கிறது.

    குழந்தை பெறுவதில்தான் ஒரு பெண் முழுமையடைகிறாள். ஒரு கணவன்-மனைவி தாம்பத்தியத்துக்கு கிடைக்கும் அன்பு பரிசு தான் குழந்தை செல்வம் தான்.

    குழந்தையின்மை எந்த அளவுக்கு சிக்கலானது. எந்த அளவு அது ஒரு பெண்ணை, ஒரு ஆணை பாதிக்கிறது? பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குழந்தையின்மை இருந்ததா? ஏன், மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. பைபிள் காலத்தில் கூட குழந்தை இல்லாத பல பெண்கள் குழந்தைபேறு பெறுவதற்கு அடிமைகளை வாடகை தாய்களாக பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன.

    தங்களுக்கு வாரிசு கேட்டு கடவுளை வேண்டாத பெண்களே இருக்க மாட்டார்கள். தன் வயிற்றில் சுமக்கக்கூடிய குழந்தைபேறு ஒரு அற்புத சுகம் என்று, அற்புதமான பரிசு என்று அதனை எதிர்நோக்காத பெண்களே இல்லை. ஆண்கள் மட்டும் விலக்கல்ல, சித்தப்பா மாமா என்று கூப்பிடும் சொந்தங்கள் இடையே அப்பா என்று அழைக்க தனக்கு ஒரு குழந்தை தேவை என்று மனசு அங்கலாய்க்கிற ஆண் கள் பலர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சொந்த பந்தங்களின் வீட்டு விழாக்களில் கூட பங்கேற்க முடியாமல் தவிக்கிறார்கள். ஏன் என்றால் அங்கு செல்லும் போது உறவினர்கள் கேட்கும் முதல் கேள்வி உனக்கு எத்தனை குழந்தை உள்ளது என்பது தான்.

    குழந்தை தான் ஒரு தம்பதியரின் வாழ்வை முழுமையாக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு தான் தெரியும் குழந்தையின்மையின் அருமை.
    வழக்கமாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் அப்பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்வார். அல்லது தத்தெடுத்துக் கொள்வார்கள். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் வழக்கமும் உள்ளது.

    இந்த நிலை எதற்கும் ஆட்படாமல் எந்த பெண்ணும் குழந்தைபேறு பெற முடியும். எந்த வயதிலும் குழந்தை பெற முடியும். திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் குழந்தை பேறுபெற முடியும் என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

    பகுதி1: குழந்தையின்மை என்பது குறையல்ல

    கருக்குழாய் அடைப் பானால் ( Fallopion tube Block ) தத்தெடுப்பு மற்றும் மறுமணம் என்ற நிலை மாறியது. 1978 July 25ல் செயற்கை கருத்தரிப்பு (IVE) முறையில் LOUTS BROWN பிறந்தது.

    பகுதி2: குழந்தையின்மை சிகிச்சை முறையில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம்.

    குருக்குழாய் (fallopian tube) அடைப்பா? கவலையில்லை. பெண்ணின் முட்டையை எடுத்து கணவரின விந்துடன் சேர்த்து IVF(Invitro fertilisation) முறையில் குழந்தை பெறலாம். ஆண்கருக்கு விந்தனுவே இல்லை (Azoospernia) என்றால் விந்துதானம் ஒன்றே வழி என்ற நிலை மாறி 1991 ICSI முறையில் ஜிணிஷிகி, றிணிஷிகி, முறையில் ஆணின் விந்துப் பையில் இருந்து விந்து எடுத்து மிசிஷிமி முறை யில் தன் மரபணுவில் குழந்தை பெறமுடியும்.

    பகுதி3: விந்தணுக்கள் தானம் பெற்று வேறு யாருடைய குழந்தையாவது பெற்றுகொள்வதா? எனக்கு ஒரு குழந்தை பிறக்குமா? என்பவாகளுக்கு இக்கிறது இஸ்சி (ICSI) முறை. பீசா, மீசா MISA முறையில் விந்தணுகளை எடுத்து இஸ்சி செய்யும் முறையில் குழந்தை பெறலாம்.

    கர்ப்பபையே இல்லை. பிறக்கும் பெற கர்ப்பபை இல்லை, நான் எப்படி தாயாக முடியும்? என்னுடைய ஜெனிடிக்கில் குழந்தை எப்படி பெற்று கொள்வது? அதற்கும் இருக்கிறது ஒரு வழி. வாடகை தாய் முறை. இதன் மூலமாக உங்களுடைய மரபியல் சார்ந்த குழந்தை பெற்று கொள்ள முடியும். மாதவிலக்கு நின்றுவிட்டது. என்னால் எப்படி குழந்தை பெற முடியும்? இப்படிபட்டவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கருமுட்டைகள் தானம் பெற்று குழந்தை பெற முடியும்.

    அதனால் குழந்தையின்மை ஒரு குறை யில்லை . எந்தவித குறைபாடுகள் இருந்தாலும் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். நவீன சிகிச்சை முறைகளினால் குழந்தை யின்மை என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. வயது மூப்பு, கர்ப்பபை கருக்குழாய் அடைப்பு போன்றவை குழந்தை பெறுவதற்கு தடையல்ல. எல்லாவற்றிற்கும் நவீன சிகிச்சை முறைகள் உண்டு.

    அம்மா என்று அழைக்க ஒரு குழந்தையும் அப்பா என்று அழைக்க ஒரு வாரிசையும் உருவாக்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக குழந்தையின்மை என்ற வார்த்தை அகராதியில் இனி இருக்கப்போவதில்லை. நவீன சிகிச்சை முறைகள் பல உள்ளன. இதன் மூலம் குறைபாடுள்ள தம்பதிகளும் நிச்சயம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.

    அது குறித்த விரிவான விளக்கங்களை அடுத்தடுத்த வாரங்களில் பார்க்கலாம்...

    டாக்டர் ஜெயராணி காமராஜ்
    72999 74701
    ×