என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு
    நாம் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என சேர்ந்து போய் விட கூடாது. நம்மால் அவர்களை போல முன்னேற முடியுமா அந்த அளவிற்கு பொருளாதாரம் இல்லை என துவண்டு போய் விட கூடாது. பணம் இல்லை என்பது மட்டும் வாழ்க்கையில் வறுமை இல்லை. திறமைகளே இல்லாமல் வாழ்வதும் வறுமை தான். உலகத்தில் கடினமானது தன்னைத்தான் அறிந்து கொள்வது தான். தன்னிடத்தில் உள்ள திறமைகள் என்ன? மேலும் என்னென்ன திறமைகளை நம்மால் பெற முடியும்? அவற்றை அடைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் என்ன? என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருவரிடம் உள்ள திறமையை பணத்தை பயன்படுத்தியோ, அதிகாரத்தை பயன்படுத்தியோ பெற முடியாது. திறமை என்பது வெள்ளம் போன்றது. குறிக்கோள், லட்சியம் என்ற கரை இருக்குமானால் அந்த தண்ணீர் விவசாயத்திற்கு, குடிநீருக்கு என்று பல வகையில் பயன்படும். கரைகள் இல்லை என்றால் ஊருக்குள் புகுந்து பல உயிர்களை, உடமைகளை அழித்து விடும். எனவே குறிக்கோள், இலக்கு இல்லாத திறமை செயல்வடிவம் பெறாது.

    வாழ்க்கை எண்ணற்ற சவால்கள் நிறைந்தது. உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகளையும், பின் விளைவுகளையும் எதிர்கொள்ள திறமை நிச்சயம் தேவை. எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மன உறுதியை, நீங்கள் பெற்றுள்ள திறமைகள் தான் அளிக்கும்.

    அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாக, பலருடைய வாழ்க்கையை காண்பதன் வாயிலாக நாம் பெறுவது தான் அனுபவ அறிவு. நாம் காண்கின்ற, கேட்கின்ற நிகழ்வுகள் செய்திகள் வாயிலாக தான் அறிவை பெறுகிறோம். தன்னம்பிக்கையின் வாயிலாக, கற்பனையின் வாயிலாக, பயிற்சிகளின் வாயிலாக, கல்வி ஞானத்தின் வாயிலாக, கேட்டு உணர்வதன் வாயிலாக எதையும் கற்று கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் வாயிலாக திறமைகளை வளர்த்து கொள்ளலாம்.

    தீப்பொறி போன்ற உங்கள் திறமைகள் தீப்பந்தங்களாக மாறட்டும். செயல்திறன் என்கின்ற தீ வானத்தை எட்டட்டும். தீப்பந்தத்தை கீழ்நோக்கி காண்பித்தாலும் தீ மேல் நோக்கி தான் எரியும். எனவே திறமை என்கின்ற தீப்பந்தத்தை உருவாக்குங்கள். செயல்திறன் என்கின்ற தீ வெற்றியை நோக்கியே எரியும். நாளைய குறிக்கோள் ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றால் போல் திட்டமிட்டு வாழ்ந்தால் வெற்றி சொந்தக்காரர்களாக எப்போதும் நாம் இருக்கலாம்.
    மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.
    மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன.

    மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன.

    பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இது பலருக்கு அசௌகரியத்தை  ஏற்படுத்துகிறது. இதனால் மொச்சையை ஒதுக்கி வைக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் மொச்சையை வேகவைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.

    மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது.

    மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடப்படுகிறது.

    மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.

    மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.

    பப்பாளி மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்...
    பப்பாளி விதைகள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராகவும், வலியை குறைப்பதிலும் பயன்படுகிறது. வயிற்றுவலி, படர் தாமரை ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

    சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்...

    பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும் விளையக் கூடியது. மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது.

    தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட 100 கிராம் பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு தீங்கு தரும் நோய் காரணிகளை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது. அதேபோல பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது.

    தோல் பளபளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும் ‘வைட்டமின் ஏ’ அவசியம். பப்பாளியில் போலிக் அமிலம், பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயாமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலுக்கு புத்துணர்ச்சி வழங்கும். வளர்ச்சிதை மாற்றத்திலும் பங்கெடுக்கும்.

    புத்துணர்ச்சி மிக்க பப்பாளியில், அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. 100 கிராம் பப்பாளி 257 மில்லிகிராம் பொட்டாசியம் கொண்டுள்ளது. உடற்செல்கள் மற்றும் சருமம் பளபளப்புத் தன்மையுடன் விளங்க பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதிலும் இது உதவி புரிகிறது.
    ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம்.
    கர்ப்பமாக இருக்கும் முதல் 10-12 வாரங்களில் முடிந்தளவு டாப்ளர் ஸ்கேனை தவிர்க்கலாம். பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தால் மட்டுமே செய்யவும். அதுவும் மருத்துவரின் பரிந்துரைப்பு மிக மிக அவசியம்

    முடிந்தவரையில் 3D மற்றும் 4D ஸ்கேன் வகைகளைத் தவிர்க்கலாம்.

    மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    வீட்டில் எந்த வித கருவியையும் தெரியாமல் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய முயற்சிக்க வேண்டாம்.

    அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் அனைத்துக் குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிப்பது கடினம்.

    ஏனெனில், குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை (Hydrocephalus) முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இந்தக் கோளாறு கர்ப்பத்தின் பிற்பகுதிக் காலத்தில் தெரிய வரலாம் என்பதால் இப்படிச் சந்தேகம் இருப்பவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவது நல்லது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனலாம்.

    கர்ப்பப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் பார்க்க முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மீண்டும் ஸ்கேன் எடுப்பார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்து இருக்கும். அதனால் சில பாகங்கள் சரியாகப் பார்க்க முடியும்.

    ஒல்லியான உடல் அமைப்பு உள்ளவர்களுக்கு, குழந்தையின் குறைபாடுகளை எளிதாகக் காண முடியும். ஆனால், உடற்பருமனாக, குண்டாக உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடிவது கடினம். அப்போது கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவது இயல்பான விஷயம்தான்.

    முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.
    நிதி நிர்வாகம் என்பது ஒரு தனிக்கலை. திட்டமிட்டு செயல்பட்டால் நிதியை சேமிக்க முடியும். சேமித்ததை பல மடங்காக பெருக்கவும் முடியும். நிதியை திட்டமிட்டு ஒழுங்குபடுத்த வயது முக்கியம் அல்ல. எதையும் துணிச்சலுடன் அணுகும் மனோபாவம் நிரம்பி இருக்கும் இளம் வயதில் ஓர் அணுகுமுறையும், வயது ஏற ஏற அதற்கேற்ப அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளும் தன்மையும் மனிதர்களுக்கே உரித்தான பண்புகளாகும்.

    இதன்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்மை நாமே சீர்தூக்கி பார்த்து நிதியை நிர்வகிக்க தேவையான வழிமுறைகளை காண்போம். நீங்கள் 30 வயதுக்குட்பட்டவராக இருந்தால், எத்தகைய இடர்பாடுகளையும், சவால்களையும், சந்திக்கும் துணிச்சல் இயற்கையாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் மாதாந்திர வரவு செலவுக்கணக்கு திட்டத்தை தயாரித்து கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது அவசியமாகும். பின்னாளில் நீங்கள் கச்சிதமாக திட்டமிட்டு செயல்பட இந்த பழக்கம் பெரிதும் துணை நிற்கும்.

    அதுபோல் நீண்ட கால வரி சேமிப்பு திட்டங்களில் இந்த காலகட்டத்திலேயே முதலீடு மேற்கொள்வது சிறந்ததாகும். செல்போன், கடன் அட்டை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தும்போது அதற்கான மாதாந்திர தொகையை ஒழுங்காக செலுத்தி வருவதற்கு முன்னுரிமை அளியுங்கள். நிலம், வீடு வாங்க வங்கிகளிடம் கடன் உதவிக்கு அணுகும் போது உங்களின் திட்டமிட்ட நிதி நிர்வாகத்திற்கு அவை சான்றாக அமையும். எந்த வகையில் நமது முதலீட்டை பெருக்கலாம் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை ஆர்வமுடன் அறிந்து கொள்ள முயலுங்கள்.

    ஒவ்வொரு முதலீட்டிலும் ஆதாயம், இடர்பாடு என இரண்டும் கலந்திருக்கும். நீங்கள் செய்துள்ள முதலீட்டின் தன்மை குறித்து முன் எச்சரிக்கையாக ஒரு திட்ட வரையறையை தயார் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் முதலீட்டு இனங்களை தேவைக்கேற்ப மாற்றி அமைத்து இடர்பாடு, இழப்பு போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளலாம்.

    30 முதல் 40 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பராமரிப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். இதற்கு சிறு தொகையை முதலீடு செய்து வாருங்கள். மிகப்பெரிய செலவுகளை சமாளிக்க இந்த முதலீடு உங்களுக்கு துணை நிற்கும். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு முன்பு, காப்பீட்டு காலம், முதிர்வின் போது கிடைக்கும் தொகை உள்ளிட்ட பலதரப்பட்ட விவரங்களையும் முகவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒரு வீட்டை வாங்குவதற்கு செய்யும் முதலீட்டிற்கும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டு கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள வித்தியாசத்தை கவனித்து கொள்ளுங்கள்.

    முதலீட்டிற்கு சற்றும் பொருந்தாத வாடகை வருவாயை விட வேறு இனங்களில் முதலீடு செய்து கூடுதல் வருவாயை பெற வாய்ப்பிருந்தால் அந்த வழியை நாடுங்கள்.

    எனினும் வீடு, நிலம் விற்பனை துறையின் வளர்ச்சியால் மூலதனத்தின் மீதான வருவாய், ஒரு சில ஆண்டுகளில் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணவீக்க பாதிப்புளை சமாளிக்க கூடிய வகையில் உங்கள் குழந்தைகளின் கல்வி செலவு இருக்குமாறு பார்த்து கொள்வது திறமையுள்ள நிதி நிர்வாகத்தில் அடங்கி உள்ளது எனலாம்.

    40 முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் எப்போது ஓய்வு பெறுவது என்று முடிவெடுக்கும் காலம் இது. உங்கள் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ஓய்வு காலத்திற்கு போதுமா என்பதை முடிவு செய்து அதற்கேற்ப ஆதாயம் அதிகம் வரும் முதலீட்டை தேர்ந்தெடுங்கள். திடீரென ஏற்படும் செலவுகளை சமாளிக்க வழிவகை செய்யும் முதலீட்டு இனங்களை தேர்ந்தெடுங்கள். இதற்காக குறிப்பிட்ட காலம் வரை மூலதனத்தை திரும்ப பெற முடியாத திட்டங்களை தவிருங்கள். ஓய்விற்கு பிறகு மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை அளிக்க கூடிய நிதித்திட்டங்களை தேர்வு செய்யுங்கள். இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் கடன்கள் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன என்று சிந்தியுங்கள். சேமிப்பிற்கு தொகையை ஒதுக்குவதை விட கடன்களை அடைப்பதற்கு அத்தொகையை செலவிட்டு நிம்மதியான வாழ்க்கையை நாடுங்கள்.

    50 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் ஓய்விற்கு பின் கிடைக்கும் தொகை, முதலீட்டின் மீதான வருவாய் போன்றவற்றை கணக்கிட்டு கொண்டு வாழ்க்கை நடைமுறையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இதனால் ஓய்விற்கு பிறகு எழும் பதற்றம், தடுமாற்றம், ஆற்றாமை போன்ற பிரச்சினைகளை தவிர்த்து எப்போதும் போல் இயல்பாக வாழலாம். உயில் எழுதவில்லை என்றால் அதை எழுதி வையுங்கள். முறைப்படி அதை பதிவு செய்ய மறக்காதீர்கள். இதனால் வாரிசு சண்டையை தவிர்க்கலாம். ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு காலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். ஓய்விற்கு பிறகு உங்கள் முதலீடுகளில் இருந்துகிடைக்கும் தொகையை என்ன செய்யலாம் என முடிவு செய்து அதற்கேற்ப செயல்படுங்கள். மறு முதலீட்டின் மூலம் வருவாயை பெருக்க திட்டமிட்டால் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

    60 வயதுக்குமேல் உள்ளவர்கள் ஏற்கனவே எழுதிய உயிலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அதை உடனே செய்து விடுங்கள். உங்கள் பேரக் குழந்தைகளுக்கு வரிச்சலுகைகளை கொண்ட முதலீட்டு திட்டங்களை பரிசாக வழங்குங்கள். அவசர காலத்தில் உடனடியான பணத்தேவைக்கு குறிப்பிட்ட தேவையை ரொக்கமாக கையில் வைத்திருங்கள். தேவைக்கு அதிகமான மூலதனம் இருப்பதாக கருதினால் சமூக நலப்பணிகளுக்கு விரும்பும் தொகையை அன்பளிப்பாக வழங்கி மன அமைதியையும், திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுங்கள்.
    மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். இன்று மொச்சையில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மொச்சை - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - ஒன்று,
    குடைமிளகாய் - ஒன்று,
    ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உலர்திராட்சை - 20 கிராம்,
    பாதாம் - 10
    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:


    வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

    பாதாமை 3 மணி நேரம் ஊற வைத்து நீள வாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி (விதை நீக்கி), குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உலர்திராட்சை, பாதாம், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான மொச்சை சாலட் ரெடி.

    திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.
    ஆயத்த ஆடைகள் (ரெடிமேட்) போல புடவைகளிலும் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது புதுவரவாக உள்ளது. அதிலும், திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான்.

    மற்ற ஆயத்த ஆடைகளைப் போலவே இவ்வகை ஆயத்தப் புடவைகளும் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சில நொடிகளிலேயே இவற்றை உடுத்திக் கொள்ளும் விதத்தில் தைத்து தயார் நிலையில் இருப்பவை இவ்வகைச் சேலைகள்.

    மேலே இடுப்புப் பட்டையில் அட்ஜஸ்ட் செய்து அணிவது போல் கொக்கியானது கொடுக்கப்பட்டு புடவையின் கீழ்ப்புறம் ஃபிரில்களுடன், தோள்பட்டையில் அமரும் ஃபீளீட்டுகள் கூட அப்படியே அணிந்து கொள்வது போல் ரெடிமேடாக வரும் புடவைகளுக்கு ஏற்றார் போன்ற தைக்கப்பட்ட சோளிகள் பல்வேறு டிசைன்களில் அட்டகாசமாக வருகின்றன.

    நீளமான பாவாடையின் கீழ்ப்புறம் அழகிய ஃபிரில்களானது அதிக சுருக்கங்களுடன் தைக்கப்பட்டு தனியாக உள்ளது. அதற்கு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் அழகிய கற்கள் பதித்த வேலைப்பாட்டுடன் நெட்டட் சோளிகள் இருக்க பாவாடையின் துணியிலேயே துப்பட்டாவானது மடிப்புகளுடன் சோளியின் முன்புறம் இணைக்கப்பட்டு பக்கவாட்டில் வளைவாகத் தொங்கி சோளியின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை அணியும் பொழுது அவை பார்ப்பதற்கு புடவையை நவீனமாக அணிந்தது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. மிக அழகான வண்ணங்கள் மற்றும் மென்மையான துணி ரகங்களில் வரும் இவற்றை “காக்ரா புடவைகள்” என்றும் அழைக்கிறார்கள்.

    புடவைகளின் கீழ்ப்புறம் மூன்று அடுக்குகளாக ஃபிரில் வைத்து வரும் புடவைகள் பிளெயின் வண்ணத்திலும், பல்வேறு பிரிண்ட்டுகளுடனும், புடவையானது பிளெயின் வண்ணத்திலிருக்க ஃபிரில்கள் பூப்போட்ட டிசைன்களுடனும் இருப்பது போன்றும் தோள்பட்டையில் புடவை மடிப்புகளை இணைத்து அதன் மேல் அழகிய புரோச்சுகள் வைத்து வருபவை அசத்தலாக உள்ளன.

    சோளிகளில் அழகிய வண்ணக் கற்கள், சமக்கிகள், முத்துக்கள் வைத்து செய்யப்படும் வேலைப்பாட்டின் அச்சு அசலாக புடவை மடிப்பின் ப்ரோச்சிலும் வேலைப்பாடுகள் இருப்பது மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

    ரஃபல் புடவைகள் அல்லது ரெடிடுவேர் புடவைகள் என்று அழைக்கப்படும் இவற்றின் பல்லுவும் ஒவ்வொரு விதமாக உள்ளது. புடவைகளில் வரும் ஃபிரில்கள் பல்லுவிலும் நெளியாக வந்து குறுகிய உயரமுடையவையாக இருப்பது புடவைக்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

    ஸ்கர்ட் போல அணிந்து கொள்வது ஒரு மாடல் என்றால் ரேப் அரவுண்டு மாடல் மற்றொரு வகையாக உள்ளது. இந்தப் புடவைகளில் வரும் வண்ணச் சேர்க்கைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். அேத போல் புடவைகளில் வரும் பளபளப்பு கண்ணைக் கவரும் விதமாக உள்ளன.

    மிகவும் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் இவ்வகைப் புடவைகள் ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்தே கிடைப்பது மற்றொரு சிறப்பாகும்.

    தோள்பட்டையில் பல்லுவிற்கு பட்டையாக மடிப்புகள் இல்லாமல் குழாய் போன்று சுருட்டி அதன்மேல் அழகிய வேலைப்பாடுகளுடன் வருவதும் அமர்க்களமாக உள்ளது.

    சோளியானது ஸ்லீவ் லெஸ்ஸாக பிளெயின் நிறத்திலிருக்க அதன்மேல் எம்பிராய்டரி செய்யப்பட்ட கோட்டின் கீழ்ப்புறம் ஃபிரில்கள் இடுப்புவரை தொங்குவது போல் இருக்க அதன்மேல் புடவையை அணிந்து கொள்ளலாம். இவை “த்ரீ பீஸ்” மாடல் என்று அழைக்கப்படுகின்றது.

    இவ்வகை ஆயத்த புடவைகள் அனைத்துமே மிகவும் மென்மையான துணி ரகங்களில் செய்யப்பட்டவையாக இருப்பதால் இவற்றை அணியும் பொழுது அணிந்தவரின் உடல்வாகை ஒல்லியாக காட்டும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

    அதேபோல் புடவையின் கலரிலேயே சோளி இருப்பது ஒருவகை என்றால் புடவை நிறத்திற்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளி இருப்பது மற்றொரு வகை. வெல்வெட் துணிகளில் வேலை பாட்டுடன் சேலைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் சோளிகள் வருவது மற்றொரு வகை. இவ்வகைப் புடவைகள் பெரும்பாலும் அதிக ஃப்ளேர்கள் இருப்பது போன்றே வடிவமைப்படுகின்றன.

    ஸ்லீவ்லெஸ் சோளிக்கு நெக்லஸ் மாடல் அருமையான வேலைப்பாட்டுடன் வரும் சிறிய கோட். இதை அணிய விருப்பமில்லை என்றால் தனியாகக் கழற்றி விடலாம். இந்த நெக்லஸ் மாடல் கோட்டை அணியும் பொழுது வேறு கழுத்தணி அணிவதற்கு அவசியமே இருக்காது. இவையும் “த்ரீ பீஸ்” புடவை என்றே அழைக்கப்படுகின்றது.

    கௌன் டைப்பில் வரும் புடவைகளும் புதுவரவே கழுத்திலிருந்து இடுப்பு வரை வேலைப்பாட்டுடன் டாப்பானது இருக்க இடுப்பிலிருந்து தரையைத் தொடும் அளவுக்கு பிளெயின் நிறத்துணியானது ஃப்ளேர்களுடன் டாப்புடன் இணைப்பட்டு பல்லுவும் பட்டாயாகத் தைக்கப்பட்டு அப்படியே அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது. டாப்பில் வேலைப்பாட்டிலேயே இடுப்பில் அணிவதற்கு பெல்ட்டானது கொடுக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் மணிகள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட “ஷ்ரக்கானது” ரெடிமேட் புடவைகளின் மேல் தனியாக அணிந்து கொள்வது போல் வந்திருப்பது புதுமையாகவும் மிகவும் அருமையாகவும் உள்ளது.


    தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
    இந்த வருட தீபாவளியை புதுமையாக கொண்டாட, தீ காயம் உண்டாக்காத புஸ்வாணம் அறிமுகமாகி உள்ளது. இதற்கென பிரத்யேக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, இந்த நவீன ரக புஸ்வாணத்தை தயாரித்துள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த புஸ்வாணங்களை குழந்தைகள் வாங்கி சோதனை செய்து பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது, புது துணிகளுக்கும், இனிப்புகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை போன்று பட்டாசுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நடுத்தர குடும்பத்தில் கூட பட்டாசு வாங்க ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டில் ஒதுக்குவது உண்டு.

    இந்திய தேவையில் 90 சதவீத பட்டாசுகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கான பட்டாசுகள் கடந்த சில மாதங்களாகவே இங்குள்ள பட்டாசு ஆலைகளில் மும் முரமாக தயாரிக்கப்பட்டு வந்தன. வழக்கத்தை போல எதிர்பார்த்த அளவில் பட்டாசு உற்பத்தி நடைபெறவில்லை என்றாலும், குழந்தைகளையும், இளைஞர் களையும் கவரும் வகையில் பல புதிய ரக பட்டாசுகள் இந்த ஆண்டு அறிமுகமாகி உள்ளன. குறிப்பாக இரவு நேரம் மட்டும் வெடிக்கப்படும் பேன்சி ரக பட்டாசுகள் பல அளவுகளில், பல வண்ணங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்துள்ளன. அதே போல் குழந்தைகளை கவரும் வகையில் ஹெலிகாப்டர், கார், சிங்கம், வாத்து, டிரோன், பம்பரம், டிஜிட்டல் கிராக்கர்ஸ் போன்றவையும், இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான வெடிகளும் பட்டாசு சந்தைகளை அலங்கரித்துள்ளன.

    இதுதொடர்பாக சிவகாசி பட்டாசு உற்பத்தி, விற்பனையாளர்கள் கூறும் போது, “பட்டாசு தொழிலுக்கு பல்வேறு பிரச்சினைகள் வந்த போதும், தமிழக அரசு பட்டாசு தொழிலை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

    ஒருநாள் பண்டிகைக்காக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 8 லட்சம் பேர் வருடம் முழுக்க உழைத்து வரும் நிலையில் அவர்களின் உழைப்பு மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், பட்டாசு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமையும்” என்றனர்.
    பிற மாநில புடவைகளை அவற்றின் பாரம்பரிய நகை மற்றும் புடவையை கட்டும் முறையுடன் அணியும்போது அது மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
    மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது என கர்ப்ப காலத்தில் பெண்களின் வித்தியாச தேடல் காலங்காலமாகத் தொடர்கிற ஒன்றே. கர்ப்பிணிப் பெண் கேட்டால் முடியாதெனச் சொல்லாமல், இவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் ஆட்கள் நிறைய பேர். மசக்கையின் போது இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

    ‘‘கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக இருக்கும். வாந்தி உணர்வு இருக்கும். மாங்காய், நெல்லிக்காய் மாதிரி புளிப்புப் பொருட்களை சாப்பிட்டால் வாய்க்கு இதமாக இருக்கும். அதே நேரத்தில் புளிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகமாக்கி நெஞ்செரிச்சல், எதுக்களிப்பு ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு பொதுவாக இரும்புச்சத்து குறைவாக இருக்கும். இதனால் சிலர் சாம்பல் சாப்பிடுவதை விரும்புவார்கள். சாம்பலை சாப்பிடவே கூடாது.

    உப்பும், காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்புண்டு. கர்ப்பிணிகள், ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் கடைசியாகதயிரோ அல்லது நீர் மோரோ எடுத்துக்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.
    முதுமையிலும் ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்பினால் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருக வேண்டும். இது ஹீமோகுளோபின் அளவை சீராக நிர்வகிக்க உதவும்.
    முதுமைக்கான அறிகுறியை வெளிப்படுத்தும் சரும சுருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இளமையை பாதுகாக்கலாம். சரும அழகையும் மெருகேற்றிக்கொள்ளலாம். அதற்கு பீட்ரூட் உதவுகிறது. இதனை உட்கொண்டால் ஹுமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். சமீபத்திய ஆய்வு ‘‘தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்தோடு இளமையை பாதுகாக்க உதவும். மூளையின் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு அரணாகவும் விளங்கும்’’ என்று குறிப்பிடுகிறது.

    முதுமையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று, நைட்ரிக் ஆக்ஸைடு. வயது அதிகரிக்கும்போது நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தி குறைய தொடங்கும். அதன் காரணமாக ஆரோக்கியம், அறிவாற்றல் திறன் குறையும். ரத்த நாளங்களின் செயல்பாடும் பாதிப்புக்குள்ளாகும். அதனால்தான் வயதானவர்கள் நினைவுத்திறன் குறைவு, இதயம் சார்ந்த வாஸ்குலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பீட்ரூட்டில் கனிம நைட்ரேட் உள்ளது. அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் உதவி யுடன் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படுகிறது.

    இங்கிலாந்தில் உள்ள எக்செட்டர் பல்கலைக்கழகம், ஆரோக்கியமான நிலையில் இருக்கும் முதியோர்களை இரு குழுவாக பிரித்து ஆய்வு மேற்கொண்டது. ஒரு குழுவினருக்கு மட்டும் நைட்ரேட் நிறைந்த பீட்ரூட் சாறு தினமும் இரண்டு முறை வழங்கப்பட்டது. ஆய்வின் முடிவில் பீட்ரூட் ஜூஸ் பருகியவர்களிடம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நல்ல பாக் டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் நோய்த்தொற்று பாதிப்புகளும் குறைந்திருந்தது.

    இதுபற்றி ஆராய்ச்சியாளர் அனி வனதாலோ கூறுகையில், ‘‘உணவில் பீட்ரூட் போன்ற நைட்ரேட் நிறைந்த உணவுகளை சேர்ப்பது சரும நலனுக்கு நல்லது. அதன் மூலம் 10 நாட்களில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை மேம் படுத்த முடியும். அது பல்வேறு வகைகளில் உடலுக்கு நலனை ஏற்படுத்தி, இளமையை பாதுகாக்க உதவும். இளைஞர்கள் மற்றும் வயதானவர்களிடையே வாய்வழி பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒப்பிட்டு முந்தைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் நைட்ரேட் நிறைந்த உணவை பரிசோதித்த வகையில் எங்களின் ஆய்வு சிறப்பானதாக அமைந்திருக்கிறது’’ என்கிறார்.

    முதுமையிலும் ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்பினால் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் பருக வேண்டும். இது ஹீமோகுளோபின் அளவை சீராக நிர்வகிக்க உதவும். ரத்த சிவப் பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்யும். சாலட், பொரியல், குழம்பு என ஏதாவதொரு வகையில் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    பச்சை பயிறு என்று அழைக்கப்படும் பாசிப்பயறை சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து மற்றும் புரத சத்தானது கிடைக்கிறது.
    தேவையான பொருட்கள்:

    பாசி பயிறு - 200 கிராம்
    புழுங்கல் அரிசி - 50 கிராம்
    உளுந்து, வெந்தயம் - 25 கிராம்

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை
    எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3

    செய்முறை:

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும்.

    காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி உப்பு சேர்த்து 2 மணி நேரம் புளிக்க விடவும்.

    தாளிக்க பொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.

    சூப்பரான பாசிப்பயிறு பணியாரம் ரெடி.

    இதையும் படிக்கலாம்..சூப்பரான பீட்ரூட் பிரியாணி
    வாழ்வில் பெரிய வெற்றிகள் தரும் சந்தோஷத்தை விட மனதுக்கு பிடித்த சின்ன விஷயங்களை செய்யும் போதோ, சிறு வெற்றிகள் கிடைக்கும் போதோ ஏற்படும் சந்தோஷமே மன மகிழ்ச்சியின் உச்சம் பெறுகிறது.
    வாழ்க்கையை நல்ல முறையில் வழிநடத்தி செல்வது மகிழ்ச்சியான உணர்வுகள் தான். எண்ணங்கள் வார்த்தைகள், செயல்கள் என நாம் செய்யும் எந்தவொரு விஷயமும் மற்றவரை பாதிக்காமல் இருந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்பை கொடுத்து அன்பை பெறுகையில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும். தன்னலாம் கருதாத அன்பு, மகிழ்ச்சியின் அளவைக்கூட்டும், இன்பத்தை அளிக்கும்.

    மகிழ்ச்சி என்பது நமக்குள் இருக்கும் உணர்வு. அதை வெளியில் இருந்து பெற முடியாது. காலை எழும்போது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து புன்னகைப்பதில் தொடங்கி, முகம் தெரியாக நபருக்கோ, வாயில்லாத ஜீவனுக்கோ உதவுதல், பறவைகளின் இசை, காற்றில் அசையும் மரம் என நம்மை சுற்றியிருக்கும் அனைத்தையும் ரசிப்பது, நமக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுவது வரை அனைத்துமே மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழிவகுக்கும்.

    உறவுகளுக்கு, குடும்பத்துக்கு, நண்பர்களுக்கு இடையில் அன்பை பகிரவும், மகிழ்ச்சியை உண்டாக்கவும் பணம் செலவழிக்க தேவையில்லை. சிறிது நேரத்தை செலவழித்தால் போதுமானது. மகிழ்ச்சியான மனநிலை நமக்குள் புத்துணர்வை உண்டாக்கும். அந்த புத்துணர்வு நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் பரவும்.

    வாழ்வில் பெரிய வெற்றிகள் தரும் சந்தோஷத்தை விட மனதுக்கு பிடித்த சின்ன விஷயங்களை செய்யும் போதோ, சிறு வெற்றிகள் கிடைக்கும் போதோ ஏற்படும் சந்தோஷமே மன மகிழ்ச்சியின் உச்சம் பெறுகிறது.
    ×