என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    விதம் விதமாக சமைத்து தரச்சொல்லி அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்றே வித்தியாசமாக பாஸ்தா பாயாசம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளின் பிறந்த நாள் போன்ற விழாக்களின் போது அவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாஸ்தா அல்லது மக்ரோனி - முக்கால் கப்
    பால் - 2 கப்
    வெல்லப்பாகு - அரை கப்
    ஏலக்காய் - 2
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    முந்திரி மற்றும் உலர் திராட்சை - தேவை
    பச்சரிசி மாவு (வறுத்தது) - 1 1/2 டேபிள்ஸ்பூன்

    செய்முறை

    அடிகனமான அகன்ற பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்கும் நீரில் பாஸ்தாவை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    பின்பு மற்றொரு அடி கனமான  பாத்திரத்தில் நெய்யை ஊற்றி முந்திரி உலர் திராட்டை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    வறுத்த முந்திரி, உலர்திராட்டைகளை வடிகட்டி எடுத்துவிட்டு அந்த பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

    பால் நன்றாக  கொதிக்க ஆரம்பித்ததும் அதில் வேகவைத்த பாஸ்தாவை சேர்க்கவும்.

    பால் சுண்ட ஆரம்பிக்கும் வேளையில் அரிசி மாவை கட்டியில்லாமல் கரைத்து பாலில் சேர்த்து கிளறவும். கலவை நன்றாக கொதித்து வரும்போது நசுக்கிய ஏலக்காயை சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி வெல்லப்பாகை சேர்த்து கலக்கவும்.

    அருமையான பாஸ்தா பாயாசம் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. வளர்ந்து வரும் இணைய தொழில் நுட்பத்திலும், மொபைல் சாதனங்களின் பயன்பாட்டிலும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
    உலக மககளின் பெரும்பாலான செயல்காடுகளும் இணையவழியாகவே நடந்தன. அதே நேரத்தில் இணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருமளவு அதிகரித்துள்ளன. பல பெண்கள் இணையவழி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். வளர்ந்து வரும் இணைய தொழில் நுட்பத்திலும், மொபைல் சாதனங்களின் பயன்பாட்டிலும் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    பாஸ்வேர்ட் எனும் கடவுச்சொற்களை எக்காரணம் கொண்டும் யாருடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கடவுச்சொற்களை நண்பர்கள், உறவினர்கள், நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது தற்செயலாகவோ அல்லது தெரிந்தோ அவை தவறாக பயன்படுத்தப்படலாம்.

    வெப் கேமரா மூலமாக உங்களுக்கே தெரியாமல் உங்களை கண்காணிக்கும் திறன் கொண்ட செயலிகள் பல உள்ளன. எனவே கணினி, லேப்டாப்போன்றவற்றில் கேமராவின் பயன்பாடுகள் முடிந்த பிறகு கேமராவை பயன்படுத்தக்கூடிய செயலிகளுக்கு கேமரா அனுமதியை முடக்கி விடவும். பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் கேமராவின் லென்சை மூடிவைக்கவும்.

    நெருக்கமானவர்களுடன் எடுத்துக்கொண்ட படங்கள் செய்திகள் போன்றவறை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    இணையத்தின் வழியாக உங்களுக்கு அறிமுகமானவர்களை, மக்கள் இல்லாத இடங்களில் தனியாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களை பற்றி குடும்பத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே அவர்களை சந்திக்க வேண்டும்.

    கணினி டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்றவற்றில் வைரஸ் தடுப்பு மென்பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனால் தேவையற்ற மென்பொருட்கள் நமது தகவல்களை திருடுவதைத்தடுக்கலாம்.

    இலவசமாக கிடைக்கிறது என்று எல்லாமென்பொருட்களையும் உங்கள் சாதனங்களில் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டாம். இதனால் வைரஸ், ஸ்பைவேர் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் உங்கள் சாதனங்களில் நுழைய நேரிடும்.

    சமூக வலைத்தளங்களில் நண்பர்கள் பட்டியலை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். விரும்பத்தகாத நபர்களிடம் இருந்து வரும் நட்பு கோரிக்கைகளை கட்டாயமாக தவிர்த்து விட வேண்டும்.
    நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.
    கொரோனா வைரஸ் பீதியால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை நிறைய பேர் தேடிப்பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம்.

    குழந்தைகள் ஐஸ்கிரீம்களை விரும்பி சாப்பிடுவார்கள். அதில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனால் ஐஸ்கிரீம்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் சாக்லேட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை நோயெதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.

    ஒயின், பீர் உள்பட எந்தவகையான மதுவாக இருந்தாலும் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதிக்கச் செய்துவிடும். அதுதவிர பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

    உடலுக்கு உடனடி ஆற்றல் வழங்கும் எனர்ஜி பானங்களும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறானவை. அதில் இருக்கும் காபின் தூக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இரவில் சரியாக தூங்காவிட்டால் அதுவே நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாடுகளை மோசமாக்கி விடும்.

    எண்ணெய்யில் பொரித்த உணவுகள், உருளைக்கிழங்கில் தயாராகும் சிப்ஸ்கள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கலாம். ஆனால் அவை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு எதிரானவை. அவற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    துரித உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடியவை. அதில் கலோரிகள், கொழுப்புகள், சர்க்கரை, சோடியம் போன்றவை அதிகம் கலந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்க வைத்துவிடும்.

    பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். உப்பில் கலந்திருக்கும் சோடியம் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை முடக்கும் தன்மை கொண்டவை.

    உடல் பருமனும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு பங்கம் விளைவிக்கும். உடல் எடையும், உயரமும் சீராக இல்லாவிட்டால் நோய் எதிர்ப்பு திறனின் செயல்பாடுகளுக்கு இடையூறாகிவிடும்.
    நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்! இன்றே செய்வீர் கல்வி தானம்.
    கல்வி என்பது வெறும் எழுதுவதும், படிப்பதும் அல்ல. ஒருவரின் அறிவு பெருகவும், அவரது வாழ்க்கை உயரவும் அடிப்படையானது கல்விதான். கல்வி அறிவு பெற்ற ஒருவரால் பிறரைச் சார்ந்திராது கவுரவத்துடன் வாழ முடியும். கல்வி என்பது எந்த ஒரு விஷயத்திலும் அதன் காரணத்தை அறிவது ஆகும். எழுத, படிக்க கற்றுக் கொள்வதன் மூலம்தான் காரண அறிவினைப் பெற முடியும். இந்த காரண அறிவுதான் அனைத்து நாடுகளின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆகின்றது.

    • பல பிரிவுகளில் பாடங்களை படித்து, புரிந்து அதனை அவரவர் வாழ்வில் பயன்படுத்துவதே படிப்பு. இந்த பயன்பாட்டின் மூலம் ஒருவர் தன் வாழ்வின் தரத்தினையும், மற்றவர்களின் வாழ்வின் தரத்தினையும் உயர்த்த முடியும்.
    • படிப்பு வாழ்வின் பல உண்மைகளை நம்மை அறிய வைக்கும்.
    • கல்வியால் மட்டுமே உலகை வெல்ல முடியும். கத்தியால் அல்ல.
    • கல்வியை கொண்டு நாம் வாழ்வினை கற்பதில்லை. மாறாக வாழ்வே கல்விதான்.
    • கல்வி ஒன்றே ஒருவருக்கு என்றும் குறையாத மரியாதையினையும், மதிப்பினையும் சமுதாயத்தில் பெற்றுத் தருகின்றது. இதனைத்தான் நம் முன்னோர், “கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்றனர்.
    • வெற்றிகளை குவிக்கும் மன்னர்கள் கூட கற்றறிந்த சான்றோர்களையே தன் ஆலோசகர்களாக வைத்திருந்தனர்.
    • குழந்தைகளுக்கும், இளைய சமுதாயத்திற்கும் கல்வி ஒன்றே அவர்களின் வாழ்க்கையும், வருங்காலமும் ஆகும்.இவர்களே நாட்டின் வருங்கால தூண்கள்.

    சிறு வயதில் கற்கும் கல்வி அக்குழந்தைகளின் வாழ்வின் அடிப்படை ஆகும். இக்குழந்தைகள் உடல் நலத்தோடும், மன நலத்தோடும் வளர்ந்து உயர் நிலை அடைய இக்கல்வி உதவும். சிறு வயதில் மனதில் படியும் நல்ல கருத்துகளே எதிர் காலத்தில் அவர்களால் சமுதாயத்தில் நிகழும் தீமைகளை அழிக்க உதவும். கல்வி மனதில் உறுதியினை உண்டாக்கும் வலிமை படைத்தது. மனிதன் உலகில் வாழவும், உலகை எதிர் கொள்ளும் சக்தியையும் கல்வி வெகுவாய் அளிக்கின்றது. படிக்கும் பிள்ளைகள் நல்ல பிரஜைகளாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    கல்விக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

    • மனிதனுக்கு உறுதியான நிலையான வாழ்வினை கல்வியே அளிக்க முடியும்.
    • மனித வாழ்வின் தரத்தினை கல்வியே உயர்த்துகின்றது.
    • கல்வியே ஒருவருக்குத் தன்னம்பிக்கையினைத் தரும்.
    • கல்வி அறிவு மனிதனை அநேக நேரங்களில் தவறான வாழ்க்கைக்குச்செல்லாமல் தவிர்த்து விடுகின்றது. 
    • வாழ்வு மகிழ்ச்சியானதாக மாற மனிதனுக்கு கல்வியே அவசியமாகின்றது.
    • நல்ல வேலையும், சம்பளமும் கல்வியால் எளிதாய் கிடைக்கின்றது.
    • நாட்டின் வளம் ஓங்குகின்றது.

    உணவு, பொருள், செல்வம் இவற்றினைப் போல் அல்லாது கல்வி குறையவும் குறையாது. முடிந்தால் கூடிடவும் செய்யும். கைவசமே இருக்கும். திருட்டே போகாது.

    இப்படிப்பட்ட கல்வியினை நாம் நம் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது அளித்து விடுகின்றோம். மிக நல்லது. பாராட்டுதற்குரியது. ஆனால் அது மட்டுமே போதுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். என்ன காரணம்? இப்பொழுது அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை முடிந்து திறக்க இருக்கின்றன. நடுத்தர வர்க்கம் கூட பள்ளிச் செலவுகளால் சற்று கஷ்டப்படும் காலம். 

    தண்ணீருக்காக குடத்தினை எடுத்துக்கொண்டு இரவு, பகலாய் அலைவதும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதுமே மிகப் பெரிய பிரச்சனையாக அநேகருக்கு இருக்கும் கால கட்டமாக இப்போது உள்ளது. இந்த நேரத்தில் அவர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அடிப்படை தேவைகளான புத்தகம், உடை, வாட்டர் பாட்டில், ஷ¨, பள்ளி கட்டணம் என எத்தனை கஷ்டங்கள் இருக்கும் என்பதனை சற்று சிந்திப்போமா! இவர்களுக்கு நாம் எந்த விதத்திலாவது உதவிட முடியுமா என்று யோசித்து இருப்போமா? சரி இவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று நினைத்தால் இவர்களை எங்கு தேடி செல்வது என்று நினைக்கின்றீர்களா? எங்கும் செல்ல வேண்டாம்.

    உங்கள் கண் எதிரிலேயே இருக்கின்றார்கள். உங்கள் வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய வரும் உதவியாளர்களை சற்று உற்றுப் பாருங்கள். ஒரு நாள் அவர்கள் வரவில்லையென்றால் நமக்கு வாழ்வே இருண்டுவிடும். அவர்களுக்கு 2 வேளை உணவோ, நல்ல நாளோ, பண்டிகையோ, உடல் நல பாதிப்போ, குடும்ப பாதிப்போ இல்லாத ரோபோக்களாக அவர்களை நடத்துவார்கள் அநேகர். ஒருநாள் லீவுக்கு கறாராய் சம்பளம் பிடிக்கும் தனவான்களும் நம்மிடையே நிறைய உண்டு.

    நம்மை நாம் சற்றாவது மாற்றிக் கொள்வோமே! நம் வீட்டு உதவியாளர்களின் பிள்ளைகளுக்கு நம்மால் முடிந்த ஒரு சிறிய அளவு உதவி செய்யலாமே.

    • கல்வி கட்டணத்திற்காக முடிந்த அளவு கொடுக்கலாம்.
    • பள்ளிப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், ஷ¨, செருப்பு, யூனிபார்ம் வாங்கிக் கொடுக்கலாம்.
    • நம் குழந்தைகள் படித்த பழைய புத்தகங்களை கொடுக்கலாம்.
    • எதுவுமே முடியாதா? அவர்கள் படிக்கும் பள்ளிக்கு செல்லுங்கள். அவர்கள் டீச்சரோடு அவர்களைப் பற்றி கேட்டறியுங்கள். தேவைப்படின் வாரம் இருமுறையாவது அவர்களுக்கு இலவச டியூசன் எடுக்கலாமே.

    உண்மையில் நாம் ஒருவருக்கு செய்யும் உதவி அவருக்கே தெரியாமல் செய்வதே உயர்ந்தது ஆகும். நூறு ரூபாய் டியூப்லைட்டில் உபயம் என தனது பெயரினை கொட்டை, கொட்டையாய் டியூப் லைட்டினை விட பெரிதாய் எழுதி விளம்பரப்படுத்தும் பலர் நம்மிடமே உள்ளனர். 

    அது போல் கல்வி தானத்திலும் நாம் செய்து விடக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வேண்டுமெனில் நம் குழந்தைகள் மட்டும் படித்தால் போதாது. அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் பாதுகாப்பான சமுதாயம் அமையும். ஆக நாம் செய்யும் எந்த தானத்திலும் நாம் உணராவிட்டாலும் சிறிது சுய நலம் கலந்து தான் உள்ளது. பரவாயில்லை. அனைவரும் ஒரு குழந்தைக்காவது கல்வி உதவி செய்து ஆத்ம திருப்தி பெறுவோம்!

    அதிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி இந்த காலத்தில் எத்தனை அவசியம் தெரியுமா? ‘பெண் படித்தால் ஒரு குடும்பமே படித்ததற்கு சமம்’ என்பது மிக உண்மையே. மேலும் கல்விதான் ஒரு பெண்ணுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் திறனையும், தன்னம்பிக்கையினையும், தைரியத்தினையும், சமயோசித புத்திசாலி தனத்தினையும் அளிக்கின்றது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்தகு குணங்கள் மிக அவசியமாகும்.அதற்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி அவசியம். அன்றாடம் இளம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை கேட்கும், பார்க்கும் அவல நிலை நீங்க பெண் குழந்தைகளுக்கும் கல்வி தானம் செய்யுங்கள்.

    உடனே உங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆதரவற்றோருக்கு உதவும் பல நல்ல சேவை நிறுவனங்களை சரி பார்த்து அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். முடியும் பொழுது தனியாகவோ, கூட்டாகவோ உங்களால் முடிந்ததைச் செய்யலாமே!

    நீங்கள் செய்யும் கல்விதானம் காலத்திற்கும் அழியாதது. ஆக நாம் பிறந்ததில் ஒரு துளியாவது உலக நன்மைக்காக அமைவது குறித்து மகிழ்வு கொள்வோம்!
    இன்றே செய்வீர் கல்வி தானம்.
    சுரைக்காய் இளநீர் ஜூஸ் சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.
    தேவையான பொருட்கள் :

    சுரைக்காய் - ¼ கிலோ
    புதினா - சிறிதளவு
    இளநீர் - 200 மி.லி

    செய்முறை:

    சுரைக்காயின் மேற்பரப்பு தோலை முழுவதுமாக நீக்கிக்கொள்ளவும். 

    பின்னர் பொடியாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் புதினா சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 

    அதனுடன் இளநீர் சேர்த்து வடிகட்டி பரிமாறவும். 

    தேவையெனில் இந்து உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

    ஆரோக்கிய பலன்:

    சிறுநீர் தொற்று பாதிப்பை சரிப்படுத்தும். ரத்தத்தில் யூரியாவின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க துணை புரியும். சிறுநீரகத்தையும், ஈரலையும் பாதுகாக்கும். மூச்சுதிணறலையும் சரிசெய்யும்.

    குறிப்பு:

    இது குளிர்ச்சி தன்மை அதிகம் கொண்டது. சளி பிடித்திருந்தால் இதை பருகக்கூடாது. கர்ப்பிணிகள் குறைந்த அளவிலே பருகவேண்டும்.
    பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன.
    ஜவுளித் தொழில்நுட்பத்தில் என்னதான் புதுமைகள், நவீனங்கள் வந்தாலும், காலத்தை வென்று நிற்கும் பழங்கால கலைநுட்பங்களுக்கு அவை ஈடாகாது. அப்படிப்பட்ட பழங்காலக் கலைகள் எண்ணற்றவை இந்தியாவில் இருந்தாலும், பாந்தினி புடவையின் பாரம்பரியம் தனித்துவமானது. குஜராத்தி, ராஜஸ்தான் போன்ற வடஇந்திய பாரம்பரிய ஜவுளிகளில் பளிச் நிறம் கொண்ட, விதவிதமான டிசைன்களில் சாயமேற்றப்பட்ட புடவைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். வரையப்பட்ட டிசைனுக்கு ஏற்ப, துணியை விரல்நகங்களைப் பயன்படுத்தி சுங்கிட்டு அதன் பின்பு சாயமேற்றித் தயாரிக்கப்படும் புடவை வகைகள்தான் பாந்தினி புடவைகள்.

    இவ்வகைப் புடவைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, மற்றும் கருப்பு. இதில் பயன்படுத்தப்படும் முக்கிய நிறங்கள் இயற்கையானவை. முடிச்சிட்டு சாயமிடும் முறை கைகளால் செய்யப்படுவதால், அது சிறந்த வண்ணங்களின் காம்பினேஷன் ஆக வெளிப்படுகிறது.

    சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பாந்தினியின் வெவ்வேறு நிறங்கள், வெவ்வேறு அர்த்தங்கள் அளிப்பதாக நம்புகின்றனர். உதாரணத்திற்கு, புதிதாக திருமணமானவர்கள் சிவப்பு நிறம் அணிந்தால் நல்லதிர்ஷ்டமாம் என்பது பராம்பரியமான நம்பிக்கையாக கருதப்படுகிறது.

    பாந்தினி ரகப் புடவைகள் பருத்தி, மஸ்லின், பட்டு உள்ளிட்ட துணிகளில் தயாராகின்றன. இந்த டிசைனில் புடவைகள் மட்டுமல்லாமல், காக்ரா சோளி, சுடிதார் ஷால், டர்பன் போன்ற ஆடைகளும் தயாராகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் விருப்பத்துக்குரிய புடவைகளாக விளங்கிவரும் பாந்தினி சேலைகளை மக்கள் அதிகம் விரும்புவதால், இவற்றின் தேவையும் விற்பனையும் கடந்த சில பத்தாண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாகத் திருமணம், விழாக்காலங்களில் அதிகம் உடுத்தப்படுகிறது.

    புடவை கடைகளிலும், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலும் இப்போது பரபரப்பாக விற்பனை ஆவது லினன் புடவைகள். லினன் எனபது ஆளி (Flax) செடியின் நாரிலிருந்து தயாராகும் ஒரு நூல். பருத்தி போன்றே மிகவும் மென்மையானது. இதனை தயாரிக்கும் முறை சிறிது கடினமானதால், பருத்தியை விட விலை அதிகமாக இருக்கும். லினன் ஆடைகள் நூலிழைகளின் நடுவே மிகுந்த இடைவெளியுடன் காணப்படும். அதிகம் உறிஞ்சும் தன்மை மற்றும் விரைவில் உலரும் தன்மை கொண்டதால் வெப்ப பிரதேசத்தல் உள்ளவர்கள் உடுத்தஏற்ற ஆடை ரகமாகும். லினன் ஆடைகள் வேலைக்கு செல்பவர்கள் அணிய உகந்தவை.
    கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது.
    கருப்பை புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையில் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் இந்த நோயில் இருந்து மீண்டு விடலாம்.

    பொதுவாக மாதவிடாய் முடிவடையும் காலகட்டத்தில் கருப்பையில் வீக்கம் ஏற்படக்கூடும். குறிப்பாக 50 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களின் கருப்பையில் வீக்கம் தோன்றலாம். அதுபோல் கருத்தரிக்கும் காலகட்டத்திலும் கருப்பையில் வீக்கம் தோன்றக் கூடும். கருப்பையின் உள் பகுதியில் இருக்கும் எண்டோமெட்ரியத்தின் செல்கள் அசாதரணமாக வளரும்போது எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோய் பெண்கள் தாய்மை அடையும் திறனை அழிக்கக்கூடும்.

    மாதவிடாய் காலம் தவிர மற்ற சமயத்தில் திடீரென்று உறுப்பு பகுதியில் ரத்தப்போக்கு அல்லது வேறு திரவம் வெளியேறுவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் அது எண்டோமெட்ரியல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டால் பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. மாதவிடாய் நின்ற பிறகு ரத்தப்போக்கு ஏற்படுவதும் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்பகட்ட அறிகுறியாக இருக்கலாம்.

    வறுத்த, பொரித்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாதது, மன அழுத்தத்தை எதிர்கொள்வது போன்றவையும் கருப்பையில் வீக்கம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. அதனால் கருத்தரிக்க முடியாமை, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். இது தவிர கருப்பையில் ஏற்படும் அழற்சியும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வயிற்று பிடிப்பு, மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்குடன் வலி, அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, உடல் பலவீனம், இடுப்பை சுற்றி கொழுப்பு படிவது, கால்வலி, வீக்கம், உடல் உறவின்போது கடுமையான வலி போன்றவை கருப்பை அழற்சிக்கான அறிகுறிகளாகும்.

    கருப்பையின் ஆரோக்கியத்திற்கு முறையான உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும் முக்கியமானது. போதிய உடல் உழைப்பு இல்லாவிட்டாலோ, உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலோ கருப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரத்தம் சரியாக சென்றடையாது. அதாவது உடல் இயக்க செயல்பாடு இல்லாவிட்டால் கருப்பை தசைகள் பலவீனமடைந்துவிடும்.

    தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். அது போல் எளிமையான உடற்பயிற்சிகளையாவது சில நிமிடங்கள் செய்ய வேண் டும். அவ்வாறு செய்து வந்தால் கருப்பை தசைகள் நெகிழ்வடையும். யோகா செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.

    கருப்பை வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் கைகொடுக்கும். பழச்சாறு மற்றும் காய்கறிகளை சாறு எடுத்து பருகலாம். இவை கருப்பை வீக்கத்திற்கு நிவாரணமளிக்கும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.

    ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிதளவு இஞ்சியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து காபியாக தயாரித்து வாரத்தில் ஓரிருநாட்கள் பருகலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாலில் ஆளி விதைகளை சேர்த்து கொதிக்கவைத்தும் பருகலாம். பாலில் மஞ்சள் கலந்து தினமும் இரண்டு வேளை பருகுவதும் நல்லது. பாதாம் பால் பருகுவதும் இதமளிக்கும்.
    பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்கும் நாம் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.
    பெண்களாகிய நாம் குடும்பத்தினரின் தேவைக்காக நேரம் ஒதுக்குதல், அலுவலகப்பணிகளுக்காக நேரம் ஒதுக்குதல், தொழிலை முன்னேற்ற நேரம் ஒதுக்குதல் என்று நேரத்தை மிக நேர்த்தியாக திட்டமிட்டு கையாள்கிறோம், அதே நேரத்தில் நமக்கே நமக்காக என்று ஒருநாளில் சிறிது நேரம் ஒதுக்குகிறோமா? என நம்மை நாம் கேள்வி கேட்போம். இல்லை என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக இருக்கும்.

    எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது? நம்மை பராமரித்து கொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் நாம் நிச்சயம் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நமக்கு பிடித்த கைவினை பொருளை செய்வது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான தேநீரை ருசித்து பருகுவது என்று எதை வேண்டுமானலும் செய்யலாம்.

    ஒருநாளில் ஐந்து நிமிடம் மட்டும் தான் உங்களுக்காக கிடைக்கிறது என்றால் சிறிதும் தாமதிக்காமல் அந்த நேரத்தை உங்களுக்காக செலவிடுங்கள். அந்த ஐந்து நிமிட நேரத்தில் சிறிது நேரம் வெளியில் நடக்கலாம். அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்கலாம்.

    பொதுவாக நீங்கள் தினமும் எழுந்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாக எழுந்தீர்கள் என்றால் அந்த பதினைந்து நிமிட நேரத்தில் ஒரு பத்திரிக்கை படித்தல், நடைப்பயிற்சி செய்தல், தியானத்தில் ஈடுபடுதல் அல்லது உங்களை ஆற்றுப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியும்.

    உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் நாம் ஆற்றும் எந்த கடமையிலும் நம்மால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும்.
    அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
    நாம் அனைவரும் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அழகை பொறுத்தவரையில் முகம் மற்றும் கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு கொடுக்க மறந்து விடுவோம். நமது உடலின் பாரத்தை சுமப்பதே கால்கள் தான். அத்தகைய கால்களை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள ஒரு சில டிப்ஸ்...

    அழுக்குகள் இருப்பதால் தான் கால்கள் பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகின்றன. கால்களுக்கான ஸ்கிரப்பர் போட்டு ஊற வைத்து தேய்க்கும் போது இறந்த செல்கள் நீங்கி, நன்கு சுத்தமாக இருக்கும். கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் கால்களை ஊறவைத்து பின்பு நன்றாக தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    காலணிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருகக வேண்டும். ஸ்டைலுக்காக தேர்ந்தெடுக்கும் காலணிகளால் கூட கால்களுக்கு அதிகமான பிரச்சனைகள் வரலாம். நாம் நடப்பதற்கு ஏதுவான வகையில் காலணிகளை தேர்ந்தேடுக்க வேண்டும்.

    பாதங்களை அதிகமாக பாதிப்பவை, பித்த வெடிப்புகளும், விரல் இடுக்குகளில் ஏற்படும் புண்களும் தான். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்பு தண்ணீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

    மருத்துவ மூலிகைகளான மஞ்சளும், வேம்பும் பாதங்களை பாதுகாப்பபதில் மிக முக்கியமானவை, வேப்பிலை, மஞ்சளுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசலாம்.

    கால்கள் தாங்கும் அளவிற்று தண்ணீரை சூடுபடுத்தி அதில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும், அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம்வைத்திருந்து பின் ஸ்கிரப்பர் போட்டு தேய்த்து கழுவினால்பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு பாதம் பட்டு போன்று மென்மையாக காணப்படும்.

    குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கபோகும் முன் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி விட வேண்டும். இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பித்து வந்தால் கால்களை அழகாக வைத்து கொள்ளலாம்.
    பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?
    பருவடைதல் மனமும் உடலும் சேர்ந்து மாற்றம் பெறும் நேரம். இந்த நேரத்தில் மனதிற்கும் உடலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது பெண்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய பருவம். இந்த நேரத்தில் உணவு விஷயத்தில் என்னவெல்லாம் சேர்க்க வேண்டும் என தெரியுமா?

    புரதத்திற்கு பருப்பு வகைகளையும், கால்சியத்திற்கு முருங்கைக்கீரை சேர்த்த கேழ்வரகு அடை, இவற்றையும் துத்தநாகத்திற்கு எள்ளையும், வாரத்திற்கு இரண்டு முறை சேர்த்து கொள்ளலாம்.

    வாரத்தில் மூன்று நாட்கள் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள கீரை மசியல், கீரைப்பொரியல் என கீரையைப்பருப்புடன் சேர்த்து சேர்த்து கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை துவையலாகவோ, சட்னியாகவோ சேர்த்து கொள்ளலாம்.

    வாரம் ஒருமுறை மீன் சேர்த்து கொள்ள வேண்டும். பொரித்த மீனை விட குழம்பு வைத்த மீன் சேர்த்து கொள்வது நல்லது. அதிலும் புரதம் அதிகம் இருக்கும் சிறிய வகை மீன்கள் நல்லது.

    தினமும் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. சைவ உணவு உண்பவர்கள் பருப்பை கட்டாயம் தினமும் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    எள், வால்நட், பாதாம், முந்திரி இவற்றுடன் உலர் திராட்சையும் பேரீச்சம்பழமும் சேர்த்து உருண்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும். தினம் ஒரு உருண்டை சாப்பிடலாம்.
    வாழை இலை இட்லியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தோல் நோய்கள் குணமாகும், முகம் அழகு பெரும். அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும்.
    தேவையான பொருட்கள்

    இட்லி மாவு - 2 கப்
    வாழை இலை - தேவையான அளவு

    செய்முறை

    வாழை இலையை நன்றாக கழுவி வட்ட வடிவமாகவோ, சதுர வடிவமாகவோ வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இட்லி தட்டின் குழிகளின் எண்ணிக்கைக்கு இணையாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

    வழக்கம் போல இட்லி துணிக்கு பதிலாக வெட்டி வைத்த வாழை இலையை வைத்து மாவு ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான வாழை இலை இட்லி தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.
    ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.

    இந்த தலைவலி ஒவ்வொருவருடைய உடல்நிலையை பொறுத்து மாறு படக்கூடியது. சிலருக்கு சில மணி நேரம் வலி இருக்கும். சிலருக்கு காலை முதல் மாலை வரை பாடாய் படுத்திவிடும். சிலருக்கு இரவில் தூங்கி எழுந்தால்தான் சரியாகும். ஒற்றைத்தலைவலி வந்தால் ஓரிரு நாட்கள் வரை அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். வலி இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்க வைத்துவிடும்.

    பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில்தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டு பக்கமும் வலிக்கும். அந்த சமயத்தில் கண் இமை பகுதிகளில் வலியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரவில் நன்றாக தூங்காமல் இருப்பது, சரியான நேஇரத்தில் உணவு சாப்பிடாதது, பசித்தாலும் குறைவாக சாப்பிடுவது போன்றவை ஒற்றைத்தலைவலிக்கான பொதுவான காரணங்கள்.

    சிலருக்கு காரணத்தை கண்டறிய முடியாதபடி பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடிக்கடி வந்து கொண்டேஇருக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் நீண்ட நேரம் வலி இருந்து கொண்டிருக்கும். வலி அதிகரிக்கும்போது கண் இமைகளில் கடும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பார்வை தெளிவாக தெரியாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

    ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையும். நாளடைவில் மறதி ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அடிக்கடி இந்த தலைவலி வரும். மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது ‘மைக்ரேன்’ தலைவலிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா யாருக்காவது ஒற்றைத்தலைவலி இருந்தால் பரம்பரை ரீதியாகவும் பின் தொடர்ந்து வரும்.

    வேலைப்பளு அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகமாகி அதன் காரணமாகவும் உண்டாகும். அப்போது வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசும். சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான் பிரச்சினை இருப்பதாக நினைப்பார்கள். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் மூளை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
    ×