என் மலர்
ஆரோக்கியம்
போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நாம் அன்றாட உணவில் ஏராளமான காய்கறிகளை பயன்படுத்திவருகிறோம். காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், விளைச்சலுக்காகவும், அவைகளை பூச்சி, வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பர். அதை அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். எனவே சமைப்பதற்கு முன், காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும்.
புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவற்றை சமைக்கும் முன்பு, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடம் வைத்திருங்கள். பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.
முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்துங்கள்.
நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு முதலில் சொன்ன ஏதாவது ஒரு திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.
மல்லித்தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திஇஇரத்த ில் கொட்டி பிரிட்ஜில் வைத்திருங்கள். உபயோகப்படுத்துவதற்கு பத்து நிமிடம் முன்பு வினிகர் கலவையில் முக்கிவைத்து, பின்பு நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்துங்கள்.
முருங்கைக்காய், பீட்ரூட், கேரட் போன்றவற்றை நன்றாக அலசி தண்ணீரில் கழுவுங்கள். பின்பு தண்ணீரை துடைத்துவிட்டு, காட்டன் துணியை சுற்றி பிரிட்ஜில் வையுங்கள். உபயோகிப்பதற்கு முன்பு வெளியே எடுத்து, மேல் தோலை சுரண்டி விட்டு மீண்டும் கழுவி பயன்படுத்துங்கள்.
வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய்களை பிரஷ் மூலம் லேசாக உரசி தண்ணீரில் கழுவுங்கள். சில தடவை தண்ணீரில் அலசி, வினிகர் அல்லது புளி திரவத்தில் பத்து நிமிடங்கள் முக்கிவைத்து, கழுவி பயன்படுத்துங்கள்.
பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள்.
பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.
உங்கள் பங்கு என்ன?
உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக் குறைக்க, தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.
1. அன்பாகப் பேசுவது
2. பிறர் மீது அக்கறை காட்டுவது.
3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.
4. குறை கூறாமல் இருப்பது.
5. சொன்னதைச் செய்து கொடுப்பது.
6. இன்முகத்துடன் இருப்பது.
7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.
8. பிறரை நம்புவது.
9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.
10. பணிவு
11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.
12. பிறர் வேலைகளில் உதவுவது.
13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.
14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.
15. சுறுசுறுப்பு
16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.
17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.
18. நகைச்சுவையாகப் பேசுவது.
19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.
20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.
21. நேரம் தவறாமை.
22. தற்பெருமை பேசாமல் இருப்பது.
23. தெளிவாகப் பேசுவது.
24. நேர்மையாய் இருப்பது.
25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.
எதற்கும் யார் பொறுப்பு?
நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம் அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம். ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்க மின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன் இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள … பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.
2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.
3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.
5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.
6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.
7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.
8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.
9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்
10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.
“வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம். ”

நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். நல்ல சுத்தமான நெய் வாங்கி உணவில் மட்டுமல்லாது, உங்கள் சருமத்திற்கும் உபயோகித்து பெரும் பயன் பெறுங்கள்.
உதடு காய்ந்து, கருமையாக இருந்தால், நெய் தடவி வாருங்கள். மிருதுவான, ரோஸ் நிறத்தில் மாறிவிடும். கண்களைச் சுற்றி உள்ள கருமையைப் போக்க, பயப்படாமல் நெய் தடவலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. நல்ல விளைவையும் தரும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், குளிப்பதற்கு முன் நன்றாக தடவி ஊறவைத்து 15 நிமிடங்கள் களித்து குளித்துக்கொள்ளுங்கள். மிருதுவான, மென்மையான சருமம் கிடைக்கும்.
1. பாலுடன், கடலைமாவு மற்றும் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முகத்தில் பூசி 20 நிமிடம் ஊறவைத்து, கழுவுங்கள். அழகான பொலிவான முகம் கிடைத்துவிடும்.
2. ஒரு தேக்கரண்டி நெய்யோடு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் இதில் பச்சைப்பாலை கலந்து கொள்ளுங்கள். குளிர்காலங்களில் சருமம் வறண்டு போனால் இந்தக் முகப்பூச்சு உபயோகித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. ஆயுர்வேத மருத்துவத்தில் மிக அதிகமாக பங்குபெரும் நெய், புண்களுக்கும், சருமத்தில் உள்ள கரைகளுக்கும் எப்படி தீர்வாகும் என்று பார்க்கலாம். 100 கிராம் நெய்யில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள், பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் நன்றாக கலக்குங்கள். பின்னர் நீரை மட்டும் வடித்து விடுங்கள். இந்த முறையை எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ப்ளெண்டர் பயன்படுத்தலாம். 20 முறை குறைந்தது செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது, நெய் நிறம் மாறி வெள்ளை நிறமாகும். இதை உடலின் வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உட்கொள்ளக்கூடாது.
வெயிலில் சென்று கருத்த தோள்(skin), பருக்களால் ஏற்பட்ட கருமை, தழும்பு, அரிப்பு போன்ற எந்த சரும பிரச்சனைக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் கடுமையான வறண்ட சருமத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் நெய் சிறந்த தீர்வாக இருக்கும். ஒரு துளி நெய் எடுத்து முகத்தில், கை, கால்களில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். இதனால் சருமம் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சி இல்லாமல் பாதுகாக்கும்.
முகத்தில் சுருக்கங்கள் இருப்பின் நெய் தினமும் தடவ சுருக்கங்கள் நீங்கும். நெய்யில் விட்டமின் ஈ இருப்பதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.
குளிப்பதற்கு முன் வாசனை எண்ணெயுடன் 10 சொட்டு நெய் கலந்து கைகால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க சூப்பர் ஃபிரெஷாக உணர்வீர்கள்.
சருமம் பொலிவிழந்து களையிழந்து காணப்பட்டால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பிரெஷான பொலிவு பெறும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.
வறண்ட உதடுடன் போராடுகிறீர்கள் எனில் தினமும் நெய் தடவி வாருங்கள். வறட்சி மட்டுமன்றி பிங் உதடும் கிடைக்கும். தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து கருமையான உதடு மாறும்.

மல்லி(தனியா)யை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
தேவையான பொருட்கள் :
தனியா - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 8,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
வாணலியை சூடாக்கி தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.

சூப்பரான சத்தான தனியா துவையல் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். மார்பக புற்றுநோயை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எந்த உணவுகளில் உள்ளது என்று பார்க்கலாம்.
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
நமது உடல் ஆரோக்கியமாக இயங்க மிகவும் தேவையான கொழுப்பு அமிலங்களுள் முக்கியமானவை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள். இவற்றை நம் உடலால் தயாரிக்க முடியாது. உணவு மூலம் மட்டுமே பெறமுடியும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கும், பார்வைத்திறனுக்கும் முக்கியமானவை. கர்ப்பிணி பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இவை போதுமான அளவு கிடைக்கவில்லையென்றால் அது குழந்தையின் அறிவுக்கூர்மையை பாதிக்கும். இவை பெண்களுக்கு ஏற்படும்மூளை வளர்ச்சி குறைபாடு போனறவற்றை தடுப்பதோடு, சில வகை நோய்கள் ஏற்படாமலும் காக்கின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு எளிதில் கிடைக்கும் பல உணவுகளில் அதிக அளவில் உள்ளன. சோயா பீன்ஸ், வால்நட், மத்தி மீன், மீன் எண்ணெய், ஆளிவிரை, முட்டை, கீரை வகைகள், முளைகட்டிய தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக பச்சை புல் சாப்பிடும் விலங்குகளில் பால் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணங்கள் கொண்டது கறிவேப்பிலை. இது புற்றுநோய் மற்றும் இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட ப்ராக்கோலி சாப்பிட்டால். இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.
பப்பாளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால் அதனை உட்கொண்டால் புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச குழந்தைபருவ புற்றுநோய் தினம் என்பது குழந்தைப்பருவ புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதற்கும், ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சை, கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சுமார் 3 லட்சும் குழந்தைகள் பற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. லுகேமியா எனப்படும் ரத்தப்புற்றுநோய் தான் குழந்தைகளில் அதிகமாக காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்தால் குணப்படுத்தலாம். வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் வருத்தப்பட வேண்டிய உண்மை என்னவென்றால் வறுமை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் போதிய சிகிச்சையின்மை போன்ற காரணங்களால் பல குழந்தைகள் இதிலிருந்து மீள்வதில்லை என்பது தான் அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த நிலையை மாற்றுவற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
நாம் வசிக்கும் பகுதிகளிலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்க நேரிடலாம். அத்தகைய குழந்தைகளை பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் நம்மால் முடிந்த ஆதரவினை அளிக்க முன்வர வேண்டும்.

பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் எப்படி வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலேயே காதலர் தினம் எப்படி உருவானது என்பது குறித்தே இந்த செய்தி….
இன்று காதலர் தினம் உலகம் முழுவதும். காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு, பிப்ரவரி மாதம் பிறந்ததும் நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். ஒவ்வொருவரும் தனது காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் அவரின் அன்பை எப்படி பெறலாம், இன்றைய பொழுதை எவ்வாறு சந்தோஷமாக கழிக்கலாம் என்று சிந்தித்து இன்றைய பொழுத்தை போக்கி வருகின்றனர்.
ஆனால், பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் எப்படி வந்தது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அவர்கள் தெரிந்துகொள்ளும் வகையிலேயே காதலர் தினம் எப்படி உருவானது என்பது குறித்தே இந்த செய்தி….
பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர்.
இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் தொங்கியதாக வரலாறுகள் கூறுகிறது.
ரோமானிய அரசனாக கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று அறிவித்தாராம்.
இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்கினர்.
அரசனின் எதிர்ப்பை மீறி ரோமானிய பாதிரியார் வாலன்டைன் என்பவர் ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன், தனது மகளை வீட்டுச் சிறையில் வைத்தான்.
ஆனால், வாலண்டைன், அனைத்து காவலையும் மீறி, அந்த கண் தெரியாத இளம்பெண்ணுக்கு காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார்.
இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்தசூ பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது நடைபெற்றது பிப்ரவரி மாதம் 14ம் தேதி. ஆகவே அன்றைய தினத்தையே, காதலின் சின்னமாக வாலன்டைன்ஸ் டேவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காய்கறிகள், பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்களுக்கும், அவற்றின் நிறத்திற்கும் தொடர்பு இருக்கிறது. சிவப்பு நிறம் கலந்த உணவு பொருட்கள் எத்தகைய சத்துக்களை கொண்டிருக்கின்றன என்பது பற்றி பார்ப்போம்.

* சிவப்பு நிற காய்கறி பழங்களில் ஆன்டிஆக்ஸிடென்டுகள், அந்தோசயனின் போன்றவை அதிகம் இருக்கும். சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கும். ரத்த நாளங்கள், மூட்டுகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவும்.
* சிவப்பு நிற காய்கறிகள், பழங்களில் இருக்கும் லைகோபீன் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. உணவுகளில் காணப்படும் சிவப்பு வண்ண நிறமிக்கும் இதுதான் காரணமாகும்.
* வைட்டமின் ஏ, சி நிரம்பிய சிவப்பு நிற காய்கறிகள் புற்றுநோய், இதய நோய், கீல்வாத பாதிப்புக்கான அபாயத்தை குறைக்கும் தன்மை கொண் டவை. ஆரோக்கியமான சருமம் மற்றும் முடிகள், நகங்களுக்கும் இவை முக்கியமானவை.
* சிவப்பு நிற உணவு பதார்த்தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்கும் தன்மையும் கொண்டவை. அவைகளில் பொட்டாசியம் நிறைந்திருக்கும். இது இதயத்திற்கும், சீரான ரத்த அழுத்தத்திற்கும் இன்றியமையாதது.
*உடலில் உள்ள செல்களின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு எலட்ரோ லைட்டுகள் முக்கியமானவை. இவை சிவப்பு நிற பழங்களில் அதிகம் இருக்கின்றன. அத்துடன் சோடியம், மெக்னீசியமும் நிறைந்திருக்கின்றன. அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
* பிளவனாய்டுகள் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகளை அளிக்கின்றன. சிவப்பு நிற உணவுகளில் கியூவர்செட்டின் என்ற பிளவனாய்டு உள்ளது. இது ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
* தக்காளி, செர்ரி, ஆப்பிள், வெங்காயம், ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, பிளம்ஸ், சிவப்பு மிளகாய், குடைமிளகாய், சிவப்பு பீன்ஸ், தர்ப்பூசணி, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற சிவப்பு நிற காய்கறி, பழங்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.

ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள்.
சின்ன வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாமல் அச்சு அசலாக ஒரேமாதிரி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘யூனியோவலர்ட் ட்வின்ஸ்’ என்று மருத்துவ உலகில் அழைக்கிறார்கள்.
பெலோப்பியன் குழாயில் இருக்கும் கருமுட்டையோடு ஆணின் உயிரணு சேர்ந்து கருவானவுடனே அந்தக் கரு எதிர்பாராத விதமாக இரண்டாக உடைந்துவிடும். உடைந்த கருவின் இரண்டு பகுதிகளும் தனித்தனி கருவாக செல் பிரிந்து வளர்ந்து கொண்டு போய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையாக உருவெடுக்கிறது.
ஒரே கரு இரண்டாக உடைந்து உருவாவதால் இரட்டை குழந்தைகள் என்றாலும், நிறம், உயரம், ரத்த வகை என எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும். இந்த கரு சில சமயம் இரண்டாக உடையும்போது சரியாக பிரியாமல், லேசாக ஒட்டியபடியே நின்றுவிடும். இப்படியாக ஒட்டிப்பிறக்கும் இரட்டை குழந்தைகளை ‘சயாமிஸ் ட்வின்ஸ்' என்கிறார்கள்.
குழந்தைகள் எந்த அளவிற்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த குழந்தைகள் இருவருக்கும் ஒரே இதயம், இரண்டு சிறுநீரகம்,, இரண்டே கால்கள் என்று அமைகின்றன.
இன்னொரு வகையான இரட்டை பிறவியும் இருக்கிறது. இதில் ஒன்று ஆணாகவும் மற்றொன்று பெண்ணாகவும் கூட பிறக்கும். ஒன்று சிவப்பாகவும் மற்றொன்று சம்பந்தமே இல்லாத அளவுக்கு கருப்பாகவும் பிறக்கும். இப்படி ஒன்றுக்கொன்று கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை ‘பைனோவளர் ட்வின்ஸ்' என்று அழைக்கிறார்கள்.
இரட்டையர்களை கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரே மாதிரியாக பிறக்கும் இரட்டையர்களைவிட இருவருக்கும் சம்பந்தமே இல்லாமல் பிறக்கும் இரட்டையர்களே உலகில் அதிகம்.
இந்த வகை இரட்டைக்குழந்தைகள் உருவாவதற்கு காரணம் பெண்ணின் சினைப் பையில் பொதுவாக ஒரு கரு முட்டை மட்டுமே வெடித்து வெளிவரும். சில சமயங்களில் வெகு அபூர்வமாக இரண்டு கரு முட்டைகள் வெடித்து வெளியே வரும். அவை ஆணின் உயிரணுவோடு தனித்தனியாக சேர்ந்து இரண்டு கருவாகி ஒரே சமயத்தில் பிறப்பதுதான் வெவ்வேறு நிறம், வெவ்வேறு சாயலில் இருக்கும்.
இதெல்லாம் சரி, ஒரே பிரசவத்தில் நான்கு, ஐந்து என்றெல்லாம் குழந்தைகள் பிறக்கிறதே, அதற்கு என்ன காரணம் எனக்கேட்டால், எல்லாமே நவீன மருந்துகள் தரும் விபரீதம்தான், என்கிறார்கள், மருத்துவர்கள். குழந்தை பிறப்புக்காக கருமுட்டையை வெடிக்கச் செய்யும் ஊசிகளை போடும்போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக நான்கைந்து கருமுட்டைகளை வெடிக்கச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அந்த மருந்தின் வீரியம் ஒரே சமயத்தில் ஏழு முட்டைகளைக்கூட வெடிக்கச் செய்துவிடுகிறது.
இதுவரை ஒரே பிரசவத்தில் அதிகபட்சமாக 8 குழந்தைகள் பிறந்துள்ளன. அந்த குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் பெயர் நாடிய சுலேமன். 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகளை பெற்றெடுத்து அவர் சாதனை செய்துள்ளார்.

அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர்.
இன்று இருக்கும் குழந்தைகள் பயங்கர கெட்டிக்காரர்கள். தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக சாமர்த்தியம் நிறைந்தவர்கள். ஆனால், இதுவே பெற்றோகளுக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகின்றது. அனேக அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர். எனினும், அப்படியே குழந்தைகளை விட்டு விடவும் முடியாது.
1. நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது விருப்பம் இல்லாமல் இருந்தாலோ, நீங்கள் பேசுவதில் பயன் இல்லை. அதனால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்.
2. உங்கள் குழந்தை நீங்கள் கூறியதை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதனை கூறாதீர்கள். அவர்களாகவே உங்களிடம் வரும் வரை, நீங்கள் வேறு வேலையை பாருங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை கூறுவதால், அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம்.
3. ஒரு விடயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது அவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலை கொடுக்க நினைத்தாலோ, அவர்களிடம் அதிகம் வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள்,. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கு கட்டளை இடுங்கள்.
4. உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேச வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு செயலை செய்ய வேண்டினாலோ, முதலில் அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, அவர்களுக்கு அது பிடித்த வேலையா, அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று பாருங்கள்.
5. எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.
6. உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்காமல் உங்களுக்கு இம்சை கொடுத்தால், சண்டை போடாதீர்கள், மற்றும் கோபத்தை காட்டாதீர்கள். முடிந்த வரை பொறுமையாக இருங்கள். உங்கள் அமைதியே அவர்களை சிந்திக்க வைத்து, உங்கள் மீதான மரியாதையையும், பயத்தையும் உண்டாக்கும். இதனால், அவர்களே நாளடைவில், சிந்தித்து, உங்கள் பேச்சை கேட்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து, உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். கோபத்தை காட்டினால், அது எதிர்மறையாக முடிந்து விடக் கூடும்
7. உங்கள் குழந்தைக்கு தினமும் செய்ய வேண்டிய வேலை, வாரா வாரம் செய்ய வேண்டிய வேலை மற்றும் மாதா மாதம் செய்ய வேண்டிய வேலை என்று பட்டியலிட்டு அதனை வழக்கமாக்குங்கள், இப்படி செய்தால், அவர்கள் சில நாட்களிலேயே அந்த அட்டவணைக்கு பழகிக் கொண்டு, அவர்களாகவே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு சுலபமாகி விடும்.
8. உங்கள் குழந்தைகள் மட்டும் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று இல்லை. நீங்களும் சற்று காது கொடுத்து உங்கள் குழந்தை கூறுவதை கேட்க வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் தர வேண்டும்.
9. உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்களது விருப்பம், வெறுப்பு, என்று அனைத்தையும் கண்காணியுங்கள். அப்படி அவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான பாதையில் அவர்களை எடுத்து செல்ல முடியும், மேலும் உங்கள் பேச்சையும் அவர்களை கேட்க வைக்க முடியும்.
10. குழந்தைகளுக்கு எப்போது கட்டளையிடும் பாணியும், அதிகார தோரணையும் பிடிக்காது. அதனால் அவர்களுடன் எப்போதும் விளையாட்டு தனத்தோடு நீங்களும் குழந்தையாய் மாறி அவர்களுடன் சேர்ந்து வேலை பாருங்கள். இது அவர்கள் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்கள் பேச்சையும் கேட்கத் தொடங்குவார்கள். எப்போதும், அவர்களுக்கு ஏதாவது சுவாரசியமான கதை சொல்லி உங்கள் அன்பு வலைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டை தணிக்க சோற்றுக்கற்றாழையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோற்றுக்கற்றாழையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோற்றுக் கற்றாழை - 3
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
சிறியவெங்காயம் - 10
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - கால் கப்
குழம்பு மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தக்காளி - ஒன்று
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
சோற்றுக்கற்றாழையின் தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளலாம்
புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள் எடுத்து கொள்ளவும் அதை சேர்த்து நன்றாக வதக்கவும்
வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் புளி தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்
குழம்பு நன்றாக கொதித்து வரும்போது நறுக்கிய சோற்றுக் கற்றாழையை சேர்த்துக் கொள்ளலாம்
குழம்பு நன்றாக கொதிக்கும்போது தேங்காய் விழுதை சேர்க்கவும்.
பத்து நிமிடம் குழம்பு மூடி வைக்கவும் இப்போது குழம்பு நன்றாக கெட்டியாகவும் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி விடலாம்.

இப்போது மிகவும் சுவையான சோற்றுக்கற்றாழை குழம்பு தயாராகிவிட்டது