என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    உங்களுக்கு சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்குமா..? அப்போ நிச்சயம் அதன் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கூந்தலில் நெய் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    நெய்யை லேசாக சூடு செய்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துக்கொள்ளுங்கள். கூந்தலை கூடுதல் மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவும். கூந்தல் நன்றாக வளரும்.  கூந்தலுக்கு நல்ல கண்டிஷன் செய்ததுபோல இருக்கும். கூந்தலை வறண்டு போகாமல், ஆரோக்கியமாக ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்,.

    1. பொடுகுத் தொல்லை : நெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டு ஊறவைக்கவும். பின்னர் கழுவி விடுங்கள்.

    2. கூந்தல் நிறம் குறைந்திருந்தால் : எலுமிச்சை சாறுடன் நெய் சேர்த்து கூந்தலில் தேய்த்துக்கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறியதும் குளித்து விடுங்கள். உங்கள் கூந்தலில் இயற்கையான பொலிவைப் பார்க்கலாம்.

    3. இளநரை மற்றும்  சொரியாசிஸ் : இளநரை மற்றும் சொரியாசிஸ் உள்ளவர்கள், மருத்துவ குணம் கொண்ட நெய் தடவி மசாஜ் செய்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

    4. கூந்தல் அடர்திக்கு : நெய்யோடு, நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்யுங்கள். விரைவில் உங்கள் கூந்தல் உதிர்வது குறைந்து நன்றாக வளரும். 
    புடவையில் அசத்தும் பெண்களின் வீடியோ ஒன்றும் புதிதில்லை. அந்தந்த காலத்தில், ஒவ்வொரு டிரெண்டிங்கிற்கு ஏற்ப, பல புடவை சாகச வீடியோக்கள் பிரபலமாகி இருக்கின்றன.
    ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பரூல் அரோராவிற்கு, கடந்த ஆகஸ்டு மாதம் வரை புடவை கட்டவே தெரியாது. உண்மையை சொல்லப்போனால், அவரது உடை அலமாரியில் புடவையே கிடையாதாம். தோழியின் புடவையை இரவல் வாங்கி, அணிந்து கொண்டார். புடவை கட்டியபடி, பரூல் அரோரா அடித்த ‘சம்மர்சாட்’ பல்டிகள், இணையத்தில் வைரலாகின. அதோடு, அவருக்கு ஜிம்னாஸ்டிக் உலகில் மாறுபட்ட அடையாளத்தை உண்டாக்கின.

    ‘‘சேலை அணிந்து பணிக்கு செல்வதும், இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிப்பதும் கடினம் என பெண்கள் நினைக்கிறார்கள். நானும் அப்படிதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் புடவை அணிந்து கொண்டு சுலபமாக பல்டி அடித்த பிறகே, என்னுடைய புரிதல் தவறு என உணர்ந்தேன். இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு, பல்டி அடிப்பதை விடவும், புடவையில் பல்டி அடிப்பது சுலபமாக இருந்தது’’ என்றார் அரோரா.

    புடவையில் அசத்தும் பெண்களின் வீடியோ ஒன்றும் புதிதில்லை. அந்தந்த காலத்தில், ஒவ்வொரு டிரெண்டிங்கிற்கு ஏற்ப, பல புடவை சாகச வீடியோக்கள் பிரபலமாகி இருக்கின்றன. புடவையில் ஜாக்கிங் சென்றது, புடவை அணிந்து பாராசூட்டில் பறப்பது, பிரபலங்கள் புடவையில் தற்காப்பு கலை பயில்வது, வெளிநாடுகளில் புடவை அணிந்தபடியே மாரத்தான் போட்டிகளில் பங்கேற்பது... என ஒவ்வொரு சீசனிலும், புடவை சாகச வீடியோக்களும், அதன்மூலம் புடவை அணிந்த பெண்களும் பிரபலமாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த கருத்து என்ன தெரியுமா..? ‘புடவை கலாசாரத்தை இந்திய பெண்களிடம் மீட்டெடுப்பதும், உலக அளவில் புடவையை டிரெண்டிங் ஆக்குவதுதான்’

    சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற மென்பொறியாளர், ஏராளமான புடவைகளை வாங்கி குவித்து, இணையத்தில் வைரலானார். அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு புடவை அணிந்தபடி, மாரத்தானில் ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    ‘‘ஐ.டி.துறை பெண்கள், புடவைகளை விரும்புவதில்லை. மாறாக நவீன உடைகளையே வாங்கி அணிந்து கொள்கிறார்கள். ஆனால் நான் அதிலிருந்து மாறுபட விரும்பினேன். அதனால்தான் புடவைகளை வாங்கி குவித்தேன். புடவையோடு மாரத்தானில் ஓடினேன். என்னை முன்மாதிரியாக கொண்டு, இன்று ஐ.டி.துறையில் நிறைய பெண்கள் புடவை அணிந்து அலுவலகம் செல்கிறார்கள். அந்தவகையில், என்னுடைய முயற்சி, வெற்றிப்பெற்றதாக உணர்கிறேன்’’ என மனம் மகிழும் ஜெயந்தியை தொடர்ந்து, கிராந்தி சல்வி என்ற பெண்ணும் பெர்லின் மாரத்தானில் புடவையில் ஓடி உலக கவனத்தை ஈர்த்தார். இவ்விரு சம்பவங்களுக்கு பிறகு பெங்களூரு நகரில், புடவையில் ஓடும் ஓட்டப்பந்தயங்கள் அதிகளவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆரம்பத்தில் 30 பெண்களுடன் ஆரம்பித்த ‘புடவை மாரத்தான்’ போட்டியில் 2019-ம் ஆண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புடவை வீராங்கனைகள் கலந்து கொண்டு, ஓடினர்.

    மும்பையை சேர்ந்த அதா சர்மா என்ற நடிகை, சில ஆண்டுகளுக்கு முன்பு புடவையில் தற்காப்பு கலை பயின்று, வைரலானார். இவரை தொடர்ந்து, புனேவை சேர்ந்த ஷிதல் மஹாஜன் என்ற சாகச பெண், புடவை அணிந்து கொண்டு பாராசூட் மூலம் பறந்து அசத்தினார். அதுபற்றி ஷிதல் மஹாஜன் பகிர்ந்து கொள்கிறார்... ‘‘நான் புடவைக்கு பதிலாக நவ்வாரி எனப்படும் உடையை அணிந்து கொண்டேன். இதுவும் புடவை ரகம்தான். ஆனால் கால் சட்டை அணிவதுபோல, புடவையை காலில் சுற்றிக்கொள்ளவேண்டும். நிறைய இடங்களில் ஊக்குகள் குத்தி, நவ்வாரி புடவையை கட்டிக்கொள்வோம். வானில் பறக்கும்போது ஏற்படும் உடை அசவுகரியத்தை போக்கவே, நவ்வாரியை தேர்த்தெடுத்தேன். புடவையில் பல புதுமைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் புடவை கட்டி, விண்ணில் பறந்த முதல் பெண் நான் என்பதில், பெருமிதம் கொள்கிறேன்’’ என்று அசத்தலாக பேசும் ஷிதல், இனி மேற்கொள்ள இருக்கும் எல்லா வான்வெளி சாகசங்களையும், புடவை அணிந்தே நிகழ்த்த இருக்கிறாராம்.

    இதுமட்டுமா..? நடனமாடுவது, அலுவலக மீட்டிங் நடத்துவது, சர்க்கஸ் செய்வது என எல்லா செயல்களிலும் புடவையை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதற்கு ‘#புடவை சேலஞ்ச்’ என்ற பெயரையும் வைத்துவிட்டனர். புடவையில் செய்யும் சாகசங்களை எல்லாம், ‘#புடவை சேலஞ்ச்’ என்ற ஹாஷ்டாக் வழியாக பகிர்வதுடன், மற்ற பெண்களையும் புடவையில் சாகசம் செய்ய அழைப்பு விடுக்கின்றனர்.

    ஆனால் மும்பையை சேர்ந்த இரட்டையர்கள் ரம்யா ராவ் மற்றும் காவ்யா இதுதொடர்பாக மாற்று கருத்தை முன்வைக்கிறார்கள்.

    ‘‘நானும், என் சகோதரி காவியாவும், சிறு வயதில் இருந்தே புடவை அணிகிறோம். எங்களுக்கு புடவை புதிதாக தோன்றவில்லை. ஏனெனில் என் அம்மா அணிகிறார். பாட்டி அணிகிறார். நாங்களும் சிறுவயதில் இருந்தே அணிகிறோம். புடவை அணிந்துதான் சைக்கிள் ஓட்டினோம். மலை ஏறினோம். ஏரிகளில் நீச்சல் அடித்தோம். ஆனால் இன்றைய பெண்கள், இதை டிரெண்ட் ஆக்குகிறார்கள். புடவை கலாசாரத்தை அழிப்பதும் நாம்தான். அதை கொண்டாடுவதும் நாம்தான். வருந்துவதா..?, மகிழ்வதா..? என்ற குழப்பத்தை இந்த புடவை சேலஞ்ச் ஏற்படுத்துகிறது’’ என்ற கருத்துடன் விடைகொடுத்தனர்.
    மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அடிக்கடி மீன் சாப்பிடலாமா என்று அறிந்து கொள்ளலாம்.
    மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தினமும் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    * மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.

    * தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச் சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.

    * மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப் பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.

    * மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி போன்றவை மனநல பிரச்சினைகளை தடுக்க உதவும்.

    * மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு அவை சேருவதையும் தடுக்கும். முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவுகளை சாப்பிட வேண்டும்.

    * மீன் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆழ்ந்த தூக்கத்தை வரவழைக்கும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவும். தினமும் மீன் சாப்பிடுகிறவர்கள் அளவுக்கு அதிகமாக அதனை சாப்பிடக்கூடாது.
    10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 பெண்களில் 6 பேர் சமையலுக்காக செலவிடும் நேரத்தை குறைத்திருக்கிறார்கள். அதில் மிச்சப்படுத்தும் நேரத்தை தங்கள் தனிப்பட்ட நலனுக்காக செலவிடுகிறார்கள் என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. அங்கு 75 சதவீத பெண்கள் தங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்வதற்கு தினமும் சராசரியாக 30 நிமிடங்களை ஒதுக்கிவிடுகிறார்கள். சமைப்பதற்கு குறைவான நேரத்தை செலவிடுவது தங்களது தனிப்பட்ட நலன்களை பேணி காக்க உதவுகிறது என்பது 84 சதவீத பெண்களின் கருத்தாக இருக்கிறது.

    ஆனாலும் அவர்கள் வெளி உணவுகளை விட வீட்டில் சமைக்கும் உணவைத்தான் ஆரோக்கியமாக கருதுகிறார்கள். சர்வேயின் படி, தினமும் சமையலுக்கு 100 நிமிடங்களையும், குழந்தை பராமரிப்புக்கு 133 நிமிடங்களையும் சராசரியாக செலவிடுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, கடைக்கு சென்று பொருள் வாங்குவது போன்ற வேலை களுக்கும் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

    40 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களை பொறுத்தவரை, 61 சதவீதம் பேர் சமையல் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு அதிக நேரம் செலவிடுகிறார்கள். பண்டிகைகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள் நடக்கும் சமயங்களில் வீட்டு வேலைகள் அதிகரிப்பதாக 97 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளார்கள். சமையல், துப்புரவு பணிக்குத்தான் அதிக நேரம் செலவாகுவதாகவும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    வீட்டில் பாலின சமத்துவம் நிலவ வேண்டும் என்பதும் பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அதேவேளையில் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதில் இளம் தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகரித்து வருவதும் சர்வேயில் தெரியவந்துள்ளது. 21-25 வயதுக்குட்பட்ட பெண்களில் 74 சதவீதம் பேர் தங்கள் கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதாக குறிப்பிடுகிறார்கள். இது மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.

    பத்தில் ஒன்பது ஆண்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. தானே, நவி மும்பை, மும்பை, புனே போன்ற நகரங்களில் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
    மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?
    மாதவிடாய் நாட்களில் வலி, வீக்கம், பதற்றம், மனச்சோர்வு, முதுகுவலி போன்ற பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாயின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு கூடும். புரோஜெஸ்டிரானும் உயர்ந்து செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய் நெருங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தென்படும். மாதவிடாய் காலத்தில் என்னென்ன உணவுமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

    * உப்பில் சோடியம் உள்ளது. அது மாதவிடாய் காலகட்டத்தில் உடலில் உள்ள தண்ணீரின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் காரணமாக வயிற்று பகுதியில் வலி உண்டாகும். எனவே அந்த நாட்களில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் உப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடியம் கலந்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும்.

    * காபி பருகுவதும் வலியை அதிகப்படுத்திவிடும். மாதவிடாய் கால பிற நோய்த்தொற்று அறிகுறிகளையும் அதிகப்படுத்திவிடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. காபி உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற உதவும்.

    * காய்கறிகள், கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழங்கள், வெண்ணெய், தக்காளி போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவு களை உட்கொள்ள வேண்டும். இவை வலியை குறைக்க உதவும். மேலும் உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தவும் பொட்டாசியம் உதவும். தேவையற்ற கழிவுகளை சிறுநீர் வழியாக அதிகம் வெளியேற்றவும் வழிவகுக்கும். மாதவிடாய் நாட்கள் நெருங்கும்போதே இத்தகைய உணவு பழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும்.

    * வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகரிக்கும். அதனால் இன்சுலின் அளவும் அதிகமாகும். சிறுநீரகங்களும் அதிக சோடியத்தை தக்கவைக்கும் நிலை உருவாகும். எனவே மாதவிடாய் சமயத்தில் கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

    * உடற்பயிற்சி செய்வதையும் அந்த நாட்களில் தவிர்க்கக்கூடாது. சிறிது நேரம் செய்யும் உடற்பயிற்சிகள் கூட உடலுக்கு இதமளிக்கும். வலி, வீக்கம், தசைபிடிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகளை கையாளவும் உதவும். அதற்காக கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. வீட்டுக்குள் கூட நடைப்பயிற்சி செய்யலாம். வீட்டு வேலைகளையும் செய்யலாம். பாலசனா, உத்ராசனா, புஜங்காசனா போன்ற யோகாசனங்களையும் செய்யலாம்.
    குழந்தைகளுக்கு தினமும் பழங்களை சாப்பிட கொடுப்பது உடலுக்கும் நல்லது. பழம் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள்.
    தேவையான பொருட்கள்

    ஆப்பிள் - 1
    பேரீச்சம் பழம் - 4
    பால் - 1 டம்ளர்
    தேன் - தேவையான அளவு
    பட்டை பொடி - 1 தேக்கரண்டி

    செய்முறை

    ஆப்பிள் பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பேரீச்சம் பழத்தை விதையை நீக்கி கொள்ளவும்

    மிக்சியில் ஆப்பிள், பேரீச்சம் பழத்தை போட்டு அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பட்டைத்தூள், பால் சேர்த்து மேலும் அரைக்கவும்,

    கண்ணாடி கப்பில் துருவிய ஆப்பிள் துண்டுகளைப் போட்டு அதன் பின் பழச்சாறையும் பாலும் தேவையான அளவு தேன் சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சத்தான மிகவும் சுவையான ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக் தயார்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
    பெண்களுக்கு அழகு மிகவும் அவசியம். அதனால் அவர்கள் இயற்கையான முறையில் அழகை மேம்படுத்தலாம். ஆனால் செயற்கையான அழகுக்கு அடிமையாகிவிடக்கூடாது. மேலும் வயதுக்குதக்கபடிதான் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி அலங்காரம் செய்துகொள்ளவேண்டும். இளம் பருவத்திலேயே தேவையற்ற அழகு சிகிச்சைகளை மேற்கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதல்ல.

    அழகில் பெண்கள் தவிர்க்கவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள்!

    1. பேஷியல் 30 வயதுக்கு முன்பு வேண்டாம்

    பெண்களின் முகத்தில் பொலிவையும், மென்மையையும் உருவாக்க துணைபுரிவதுதான் ‘பேஷியல்’. பலவகையான பேஷியல்கள் இப்போது நடைமுறையில் உள்ளன. அதை பார்த்து பெண்களும் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் 15 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு பேஷியல் தேவையில்லை. ஏன்என்றால் இந்த வயதில் பெண்களின் முகம் இயல்பாகவே அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். 30 வயதுக்கு மேல் பேஷியல் செய்துகொள்ளலாம். இரவுப் பணி செய்யும் பெண்களின் முகத்தில் முப்பது வயதுக்கு மேல் சுருக்கமும், இறுக்கமும் தோன்றும். அவர்களுக்கு பேஷியல் பொலிவைத் தரும். பழங்களை பயன்படுத்தி செய்யும் புரூட் பேஷியல் சிறந்தது.

    2. வாக்சிங் செய்வதை குறையுங்கள்

    நரையை மறைப்பதற்காக செய்யப்படும் ‘டை’, புற்றுநோயை உருவாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. டையில் இருக்கும் ரசாயனங்கள் முடியை பலவீனமாக்குகின்றன. சிலருக்கு அலர்ஜியை உருவாக்குகிறது. மேலும் அடிக்கடி டை பூசினால், சருமத்தின் நிறமும் மாறும். அதனால் டை பூசுவதை குறையுங்கள். தேவைப்பட்டால் ஹெர்பல் டையை பயன்படுத்துங்கள்.

    வாக்சிங் செய்யும் பெண்கள் சருமத்திற்கு நான்கு முதல் 6 வாரங்கள் வரை இடைவேளை கொடுக்கலாம். முடி துளிர்த்த உடனே வாக்சிங் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. அடிக்கடி வாக்சிங் செய்வது சருமத்தில் அலர்ஜியையும், பருக்களையும் தோற்றுவிக்கும்.

    3. கூந்தலுக்கு வேண்டாம் ரசாயனம்

    கூந்தல் நீண்டு மினுமினுப்பாக காட்சியளிக்க பெண்களில் சிலர் ஸ்ட்ரெயிட்டனிங் மற்றும் ஸ்மூத்னிங் போன்றவைகளை செய்கிறார்கள். ஆனால் இவைகளுக்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அயர்னிங் போன்றவை கூந்தலை பலவீனப்படுத்தி வறண்ட தன்மையை உருவாக்குகிறது. முடி விரைவாக முறிந்துபோகவும் செய்யும். இவைகளை அடிக்கடி செய்தால் மண்டை ஓட்டின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சொறி போன்றவையும் தோன்றும். ரசாயனத்தால் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு முடி அதிகமாக உதிரவும் செய்யும். அதனால் கூந்தலுக்கு ரசாயன பயன்பாட்டை குறைத்திடுங்கள்.

    4. அழகு நிலைய சிகிச்சைகள் அவசியமில்லை

    முகத்தில் தோன்றும் புள்ளிகள், பருக்கள், படைகள் போன்ற பலவற்றையும் பல்வேறு அழகு நிலையங்களில் நீக்குகிறார்கள். ஆனால் இதை எல்லாம் சரும நோய் டாக்டர்கள் செய்வதுதான் மருத்துவரீதியிலான அணுகுமுறையாக இருக்கும். இதற்கான சிகிச்சைகளுக்கு மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்களை பயன்படுத்துவார்கள். அவைகளை மிகுந்த சுத்தத்தோடும், கவனத்தோடும் பராமரிக்கவேண்டும். அதனால் இத்தகைய சரும சிகிச்சைகளில் பெண்கள் அதிக கவனத்தை செலுத்தவேண்டியது அவசியம்.

    5. பிளீச்சிங் அடிக்கடி வேண்டாம்
    பெண்களின் முகத்தில் இருக்கும் கறுப்பு ரோமங்களுக்கு நிற வித்தியாசத்தை உருவாக்குவது, பிளீச்சிங். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கவும் இது உதவும் என்றாலும், இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரசாயனப் பொருட்கள் முக சருமத்திற்கு கெடுதல் உருவாக்குபவைகளாக இருக்கின்றன. அது தற்காலிகமாக நிறத்தை தந்தாலும், அடிக்கடி உபயோகித்தால் முகத்தில் கறுப்பு நிற படைகள் போன்று தோன்றும். இயற்கையான மிருதுத்தன்மை பாதிக்கப்பட்டு சருமம் கெட்டியாகிவிடும். அடிக்கடி பிளீச் செய்தால் முகத்தில் குழி போன்றும் உருவாகும். பிளீச்சிங் ஏஜெண்டில் இருக்கும் ரசாயனங்கள் கண்களுக்கும் எரிச்சலையும் தோற்றுவிக்கும். அதனால் பிளீச்சிங்கை தவிர்ப்பது நல்லது.
    குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும்.
    வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறையத் தொடங்கும். அது பச்சிளம் குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் நீரிழப்பை பற்றி புரிந்துகொள்வது கடினம். குழந்தையின் சுபாவத்தையும், செயல்பாடுகளையும் கொண்டே அதை அறிந்துகொள்ள முடியும். பச்சிளம் குழந்தைகளை பொறுத்தவரையில் சிறுநீர், மலம் இவை இரண்டும் சீராக வெளியேறுகிறதா? என கவனிக்க வேண்டும்.

    குழந்தையின் வாய் பகுதி மற்றும் உதடுகள் வறண்டு காணப்படுகிறதா? என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். நாக்கு மற்றும் உமிழ் நீரின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை கொண்டே குழந்தை தாகமாக இருப்பதை யூகித்துவிட முடியும். வாய், உதடு, முகத்தில் நிலவும் வறட்சி சரும தோல்கள் உதிர்வதற்கு காரணமாகிவிடும்.

    குழந்தைகள் அழும்போது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும். அப்படி கண்ணீர் வராமல் அழுதால் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். எனவே உடனடியாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்க வேண்டும். ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை தொடர்ந்து கொடுப்பதற்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தினமும் ஐந்து, ஆறு முறை டயாப்பர் மாற்ற வேண்டியிருக்கும். குழந்தை கழிக்கும் சிறுநீரின் அளவு, அதன் நிறத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால் நீரிழப்பு பிரச்சினையாக இருக்கக்கூடும். குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் எளிதில் சோர்ந்துபோய்விடுவார்கள். முகத்தில் மகிழ்ச்சி இன்றி சோர்வு வெளிப்படும்.

    நீரிழப்பு பிரச்சினை இருந்தால் குழந்தை தூக்க நிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். ஆதலால் குழந்தையின் தூக்க சுழற்சி நேரத்தை கண்காணிக்க வேண்டும். அது சீராக இல்லையென்றால் அதுவும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறியாகும். குழந்தைக்கு பசியாக இருந்தாலோ, தாகம் எடுத்தாலோ அழுது கொண்டிருக்கும். அதையும் கவனத்தில் கொண்டு அதன் தேவையை நிவர்த்தி செய்ய வேண்டும்.
    ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?
    ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்.

    என்ற வள்ளுவனின் சொல்லுக்கேற்ப ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தன் மகனை இந்த உலகம் சான்றோன் எனக் கூறக் கேட்பதை விட பெருமிதம் தரக் கூடியது வேறு எதுவாக இருக்க முடியும்?!

    இதுவே ஒவ்வொரு பிள்ளைக்கும் பெருமிதம் தரக் கூடியதாக இருப்பது எது தெரியுமா?

    தன்னுடைய உலகமான தன் பெற்றோர் தன்னைப் புகழ்வதைக் கேட்பதே.

    ஆனால் இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள்.

    இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.

     அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.

    பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார்.

    நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
    உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.

    ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.

    இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.

    வாழ்வியல் பட்டறை ஒன்றில், எப்போது பார்த்தாலும் என் கணவர் என்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று அங்கலாய்த்த பெண்ணிடம் அந்த பயிற்சியாளர் கேட்டார், ‘உங்கள் பையன் எப்படி இருக்கிறான் நன்றாகப் படிக்கிறானா?’

    நாம் கணவரைப் பற்றி பேசினால் இவர் அதற்கு பதில் சொல்லாமல் நம் பையனைப் பற்றி கேட்கிறாரே என்று சம்பந்தமில்லாத அவர் கேள்வியால் கொஞ்சம் எரிச்சலடைந்த அந்தப் பெண், “படிப்பு பரவாயில்லை நல்ல மார்க் தான் வாங்குகிறான். ஆனால் பொறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லை. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. அவன் தம்பியிடம் எதற்கெடுத்தாலும் சண்டை, அப்படி, இப்படி என குறைகளை ஒரு ஆதங்கத்தோடு அடுக்கிக் கொண்டே போகத் தொடங்கினார். அவர் முடிப்பதற்காகக் காத்திருந்த பயிற்சியாளரும், அது முடிவதாகத் தெரியவில்லை என்பதால் வேறு வழியில்லாமல் அவர் குறைகளினூடே இடை மறிக்கிறார்.
    இதையெல்லாம் நீங்கள் என்னிடம் தான் சொல்கிறீர்களா இல்லை உங்கள் பிள்ளையிடமும் சொல்லி இருக்கிறிர்களா?

    என்ன கேட்கிறீர்கள் அவனிடம் சொல்லாமலா ஒவ்வொரு முறையும் அவன் குறைகளை சுட்டிக் காட்டுவதிலே தான் என் பொழுதே போகிறது.
    “ஏன்?” இது பயிற்சியாளர்.

    சொன்னால் தானே தெரியும் .அப்போது தானே திருந்துவான். அவன் அவனைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். ஆனால் எங்கே திருத்திக் கொள்கிறான், கோபம் தான் படுகிறான். நாம் ஏதோ அவனிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று எரிச்சல் தான் வருகிறது அவனுக்கு என்றார். சற்று முன் தன் கணவர் தன்னிடம் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார் என்று எரிச்சல் பட்ட அந்தப் பெண்.

    இது தான் நிதர்சனம். நாம் குறை சொல்லும்போது நாம் அவர்கள் அக்கறை எடுத்து திருத்துகிறோம் என்று பலமாக நம்புகிறோம். ஆனால் இதுவே நம்மை யாராவது குறை சொன்னால,” ஏன் இப்படி இருக்கிறாரகள்?! எப்போது இவர்கள் திருந்துவார்கள் என்று பலவீனமாகித் துடிக்கிறோம்.

    படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம். அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.

    நாம் செய்வது சரிதானா? வாழ்வியல் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

    பிள்ளைகளை நாம் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள், “தாங்கள்” எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகி தன்னிடம் ஏதோ குறை இருப்பதாக நம்பத் தொடங்கி விடுகிறார்கள். அதனால் மற்றவர்களை விட்டும் தனித்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தன் மனதில் இருப்பதை பிறரிடம் சொல்ல அச்சப்பட்டு தனக்குள்ளே பேசிக்கொள்ளும் இயல்பை வளர்த்துக் கொள்வதோடு, தன் பெற்றோர்கள் தங்களை வெறுக்கிறார்கள் என மன உளைச்சலுக்கும் அவர்கள் ஆளாகி விடுகிறார்கள் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.

    தவிர, குறைகளோடும் நிறைகளோடும் தன்னை நேசிக்க நம் பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுத்தால் தானே, அப்படி தன்னை நேசிக்கக் கூடிய ஒருவராக நம் பிள்ளைகளை நாம் வளர்த்தால் தானே அவர்களாலும் குறை களோடும் நிறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொண்டு நேசிக்க முடியும். இல்லையென்றால் இப்படித்தானே அவர்களும் மற்றவர்களிடம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

    உண்மையில், குறை சொல்ல வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாமல் ஏற்படுமாயின், நாம் கொஞ்சம் நேரம் அதற்காக ஒதுக்கி நாம் எதற்காக இந்தக் குறையை சொல்கிறோம், அந்தக் குறையை மட்டும் திருத்திக்கொண்டால் அந்தப் பிள்ளை எவ்வளவு பெரிய சாதனையாளனாக வரமுடியும் என்று நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக அது இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒரு குறையை சொல்ல முற்படும் போது அந்தக் குழந்தையுடைய பத்து நிறைகளை அது தாங்கி வர வேண்டும்.

    நீ சோம்பேறி, நீ எதற்கும் இலாயக்கில்லாதவன் என்று நம் பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என பெற்றோர்கள் போகிற போக்கில் குறை சொல்லிவிடலாம். ஆனால் இதை மீண்டும் மீண்டும் ஒரு பிள்ளை கேட்கும் போது அதை அவன் ஆழ்மனம் நம்பத் தொடங்கி அவனையு மறியாமல் அவன் அதுவாகவே மாறி விடுகிறான்.
    குறைகளைக் கேட்டு கேட்டு வளரும் பிள்ளைகள் வளர்ந்த பிறகும் யார் என்ன சொன்னாலும் அது அவர்களுக்கு குறை சொல்வதாகவேப்படும். மனதில் ஆறாத ரணம் ஏற்பட்டு என்றென்றும் அது ஒரு உறுத்தலாகவே மாறி விடுகிறது.

    அதனால் நாம் அவர்கள் நிறையில் கவனம் வைத்து,முற்றிலுமாக குறை சொல்வதை தவிர்த்து விடுவது அல்லது முடிந்த வரை குறைத்து விடுவது தான் நல்லது.
    குறைகளை சுட்டிக் காட்டுவதை விட்டும் நிறைகளைக் காண்பதே சிறந்த பலன் தரும்” என அறிவுறுத்துகிறார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த புத்த தத்துவவாதியும் சிறந்த கல்வியாளருமான “டைசகு இக்கிடா”.

    நிறைகள் பெரும்பான்மையாக சுட்டிக் காட்டப் படும்போது குறைகள் தானாக நிவர்த்தி செய்யக் கூடியதாக ஆகிவிடும் என ஆருடம் சொல்கிறார் அமெரிக்க பத்திரிகையாளர் “ஜூடித் மார்ட்டின்”.

    இதில் ஆழ்மன இயல் சொல்லும் இரகசியம் என்ன தெரியுமா, நீங்கள் அவர்களின் நிறைகளைப் பார்த்து தட்டிக் கொடுத்தால் அதில் அவர்கள் கவனம் செல்லும். அந்த நிறை வட்டம் பெரிதாகிக் கொண்டே போகும். அப்படிப் போகப் போக நீங்கள் சுட்டிக் காட்டாத, கவனிக்கப்படாத குறைகள் சுருங்கி, சுருங்கி, ஒரு புள்ளியாய் மறைந்து அவர்களை விட்டும் நீங்கி விடும் அல்லது அது அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் மாறி விடும்.

    ஆனால் அதே நேரம் நீங்கள் குறைகளையே சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தால் அந்த குறைகள் அவர்களிடம் விடாப்பிடியான கறையாகி மாறி விடும் வாய்ப்புண்டு என்று நமக்கு எச்சரிக்கை தருகிறது.

    உண்மைதானே எதற்கு தண்ணீர் ஊற்று கிறோமோ, அது தானே உயிர் பெறும்.
    Email:fajila@hotmil.com
    பெண்கள் குண்டாக இருப்பதால் மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை.
    நாம் வாழும் இந்த உலகம், குண்டான மனிதர்களால் நிரம்பி வழியப்போகிறது. கிட்டத்தட்ட இப்போது 50 கோடி பேர் அளவுக்கு அதிகமான உடல் எடையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது நூறு பேரில் பத்துபேர் உடல் எடை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசவத்திற்கு பின்புதான் பெண்களின் உடல் எடை அதிகமாகும் என்ற கருத்து இருந்தது. இப்போது பள்ளியில் படிக்கும் பருவத்திலே, பூப்படையும் காலத்திலே சிறுமிகள் அதிக எடைகொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்லூரிப்பருவத்திலும், கல்யாண காலகட்டத்திலும் பெண்கள் குண்டாக இருப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக அளவில் ஆண்களைவிட பெண்களே பெருமளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

    இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சத வீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சத வீதம். சமூக நிலையும், பொருளாதார நிலையும்கூட அதிக உடல் எடைக்கு காரணமாகிறது.

    உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் அளவும் அதிகரிக்கிறது. ஏழைகள் அதிக கலோரி கொண்ட உணவுகளை உண்பதில்லை. உண்டாலும், அவர்கள் உழைக்கும் வர்க்கமாக இருப்பதால் கலோரி எளிதாக செலவாகிவிடுகிறது.

    குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல்- மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைப்பிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகமாக இருக்கின்றன. ஆனால் அதை தொடர்ச்சியாக கடைப்பிடிப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மாயாஜாலம்போல் அதிரடியாக உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமே பலரிடமும் இருக்கிறது. அப்படி அதிரடியாக உடல் எடையை குறைப்பது ஆபத்தான செயல் என்பதை பலரும் புரிந்துகொள்வதில்லை.

    உடல் எடையை குறைக்க 1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடப்பது இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும்.

    அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பெண்களை அது அதிகமாக தாக்குகிறது. தற்போது பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அதற்கு அதிக உடல் எடை ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை, அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்பட காரணமாக இருக்கிறது. அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படையும் நிலையும் உருவாகிறது.

    இப்போது ஆணும், பெண்ணும் அதிக எடையுடன் இருப்பதால், கல்யாண வாழ்க்கையில் இணையும் ‘எடை கூடிய தம்பதிகளின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதிக எடைகொண்ட தம்பதிகளின் பாலியல் வாழ்க்கை அவ் வளவு திருப்திகரமாக அமைவதில்லை. குண்டான உடல் அவர்களது பாலியல் செயல்பாடுகளுக்கு தடையாக இருக்கிறது.

    மனது நிறைய ஆசை இருந்தாலும், அதை நிறைவேற்ற பெரும்பாலன நேரங்களில் உடல் ஒத்துழைக்காத நிலை தோன்றுகிறது. விரும்பியதுபோல் எல்லாம் அவர்களால் பாலியல் உறவு நிலைகளை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. அதனால் அவர்களுக்கு பாலியல் உறவு மீது சலிப்பும், விரக்தியும் தோன்றுகிறது. அப்படிப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் வரை பாலியல் உறவுகளில் இருந்து விலக விரும்புகிறார்கள். அப்போது அவர்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக நீலப்படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களை, அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. அதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    உடல் எடை அதிகரித்தவர்கள் எண்ணிக்கை இப்போது உயர்ந்துகொண்டிருப்பதால், அவர்களை கருத்தில்கொண்டும் பாலியல் நிபுணர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் பாலியல் உறவை மேம்படுத்திக்கொள்ளவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் வழிகாட்டுகிறார்கள். அவர்களுக்கு தக்கபடியான உணவு வகைகளையும் பரிந்துரைக்கிறார்கள். மனோரீதியாக அவர்கள் பாலியல் நாட்டம் கொள்ள தேவையான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்குகிறார்கள்.

    உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க...

    உடல் எடை என்பது அதிரடியாக கிடுகிடுவென உயர்வதில்லை. வெகுகால உணவுப் பழக்கமும், பல வருட வாழ்வியல் முறைகளும் படிப்படியாக உடல் எடையை உயர்த்துகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அதனால் ஒவ்வொருமுறை உணவுக்காக வாயை திறக்கும்போதும் உங்களுக்கு அது தேவைதானா? தேவையில்லாமல் ருசிக்காக அதை திணிக்கிறீர்களா என்பதை நினைத்துப்பாருங்கள்.

    உணவின் அளவைக் குறையுங்கள். சாப்பிட்ட உணவும் உடலில் அப்படியே கொழுப்பாக படிந்துவிடாத அளவுக்கு என்ன செய்யவேண்டும் என்றும் சிந்தியுங்கள்.

    வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறையும் என்பதை கவனத்தில்கொள்ளுங்கள்.

    உடலுழைப்பு குறையும்போது உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், உடலை வேலைக்கு பழக்குங்கள். உடலை சொகுசுக்கு அடிமையாக்கிவிடாதீர்கள்.

    தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சீரற்ற நிலை தோன்றுவதாலும் உடல் எடை அதிகரிக்கும். அதனால் தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

    பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதாலும் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.

    மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்து கின்றனர். அதனால் பாதி அளவு திருப்தி ஏற்பட்டதும் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்.

    குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக்கொண்டே இருப்பது, அவர்களது உடல் உடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

    அதிக கொழுப்பு சத்துள்ள பீட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவதால் உடல் எடை கூடும்.

    தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது மிக தவறானது. இதனால் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடுகிறது.

    உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது தவறான முன்னுதாரணம். பெண்கள் உடல் எடையால் அவதிப்பட இது முக்கிய காரணம்.

    புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது.
    பெண்கள் அலுவலகம் செல்லும் சூழலும், அலுவலகத்தில் சந்திக்கும் நெருக்கடிகளும் பெரும்பாலும் அவர்கள் மனம் மட்டுமே அறிந்த உண்மை... அதுபற்றி மனம் திறக்கிறார்கள் சில திருமணமாகாத பெண்களும், இல்லத்தரசிகளும்...
    பெண்கள் இப்போது படித்துவிட்டு வேலைக்கு செல்கிறார்கள். கைநிறைய சம்பாதிக்கிறார்கள். மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், நிஜம் அவ்வளவு மகிழ்ச்சிதருவதாக இல்லை. அவர்கள் அலுவலகம் செல்லும் சூழலும், அலுவலகத்தில் சந்திக்கும் நெருக்கடிகளும் பெரும்பாலும் அவர்கள் மனம் மட்டுமே அறிந்த உண்மை... அதுபற்றி மனம் திறக்கிறார்கள் சில திருமணமாகாத பெண்களும், இல்லத்தரசிகளும்...

    கர்ப்பகாலத்தால் கவலை வந்தது

    வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மும்பை பெண் தனிஷா:

    “அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட, நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றில் நான் வேலைபார்க்கிறேன். நாங்கள் ஆண்டுதோறும் அதிக அளவிலான வியாபார இலக்கை அடைவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்துக்கொண்டிருக்கும் சூழலில் நான் கர்ப்பம் தரித்தேன். பிரசவ சமயத்தில் விடுமுறை எடுத்தேன். 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தேன்.

    எனது கர்ப்பகால விடுமுறை முடிந்து திரும்பியபோது, எனது அலுவலகம் ரொம்பவே மாறி இருந்தது. நான் அலுவலகத்தின் எதிர்பார்ப்புக்கேற்ப என்னை மாற்றிக் கொள்ள ரொம்ப போராடினேன். அந்த இடைவேளையில் எனக்கு கீழ் பணிபுரிந்த உதவியாளர் பதவி உயர்வு பெற்று மேலே சென்றுவிட்டார். இன்று நான் அவரிடம் ரிப்போர்ட் வழங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. எனது முன்னுரிமை இப்போது மாறிவிட்டது. நான் வித்தியாசமாக உணர்கிறேன். அலுவலக நிர்வாகம், முழுநேரமும் பணியில் பக்தியாக இருப்பவர்களையே நாடுகிறது. நமது குடும்பசூழலை அவர்கள் கவனத்தில்கொள்ளவே மாட்டார்கள். பெண்கள்தான் வேலையையும், வாழ்க்கையையும் அனுசரித்து பேலன்ஸ் செய்ய வேண்டி இருக்கிறது. நான் என் வேலைக்கு விசுவாசமாக இல்லாவிட்டால், புறக்கணிக்கப்பட்டுவிடுவேன். இந்த நிலையில் இரண்டாவது குழந்தையைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருக்கிறது”

    புத்திசாலித்தனத்தைக்காட்ட வழியில்லை

    பெங்களூருவில் பணியாற்றும் சாய்ரா மோகன்:

    “நான் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில் பணி செய்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து இது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் வேலை. பெண்கள் இந்தப் பிரிவில் வேலைசெய்ய நீண்டகாலம் கலாசார தடையும், பெண்களை புறக் கணிக்கும் எண்ணமும் இருந்துவந்தது. ஆண்களின் மனோபாவம் இங்கு கவலைதருகிறது. அலுவலக சந்திப்பில் தொழில்நுட்பம் பற்றி பெண்கள் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. நாம் அவர்கள் பக்கமாக சாய்ந்து அனுசரித்துச் செல்ல வேண்டும். நான் கோபித்துக் கொண்டால், எனது சகிப்புத்தன்மையை இழந்தால், அலுவலகத்தில் உள்ள எனது குழுவினராலும், தலைவராலும் வெறுக்கப் படுவேன். நான் இதை அறிந்து கொண்ட பின்பு எனது புத்திசாலித்தனங்களை எளிதில் வெளிப்படுத்துவதில்லை. பணி நெறிமுறைக்கு உட்பட்டே செயல்பட ஆரம்பித்தேன். என்னால் முடியும் என்றாலும், எல்லோரும் முடியாது என்றால், நானும் அவர்களோடு சேர்ந்து, ‘ஆமாம்.. முடியாது’ என்று கூறிவிடுவேன். இதுதான் இப்போதைக்கு எனது புத்திசாலித்தனமாக இருக்கிறது”

    பெண்களுக்கு என்ன தேவை?

    அலுவலகம் செல்லும் பெண்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்கிறார்கள்:

    அலுவலகத்தில் பெண்களின் எண்ணிக்கையையும், அவர்களுக்கான பாதுகாப்பையும் அதிகப்படுத்த வேண்டும்.

    வழிகாட்டிகள், ஆலோசகர்கள், கண்காணிப்பாளர்கள் பணி களுக்கு பெண்களை நியமிக்க வேண்டும்.

    தலைமைப் பொறுப்புகளிலும் பெண்களை நியமித்தால் வளர்ச்சிக்காக அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஆதிக்கமனப்பான்மையுடன் பெண்களுக்கு உயர் பொறுப்புகளை வழங்க தடைபோடக்கூடாது.

    தாய்மார்களின் பணி மற்றும் கடமைகளை புரிந்து கொள்ள ஆண்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

    கர்ப்பகாலத்தில் போதிய ஓய்வும், இடைவேளையும், பொருந்தக்கூடிய பணியும் வேண்டும்.

    பெண்கள் அமைதியாக இருந்து பணியை செய்யும் சூழலை அலுவலகங்களில் உருவாக்கவேண்டும்.

    அவர்களது திறமைக்கு முழுமையான அங்கீகாரமும் தேவை.

    ஆண்களால் அலட்சியம்

    டெல்லியை சேர்ந்த நிஷா:

    “வேலைக்கு வரும் பெண்களை சக ஆண்கள் பார்க்கும் பார்வை வித்தியாசமானது. அவர்கள் வேறுமாதிரியான தொந்தரவுகளை தராதபோதும், பெரும்பாலான வேலைகளை பெண்களின் தலையிலே கட்டப்பார்ப்பார்கள். அதனால் பெண்கள் அதிக வேலைப்பளுவை தாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளாதபோது ஒன்றும் தெரியாதவள் என்று முத்திரைகுத்தப்படுவோம் அல்லது ஆண்களால் அலட்சியப்படுத்தப்படுவோம். அது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தும். அதை தாக்குப்பிடிக்க முடியாத பெண்கள் வேலையைவிட்டு வெளியேறும் சூழ்நிலைகூட உருவாகும்”

    சிக்கல்கள் பலவிதம்...

    உலக பொருளாதார மன்றம், பணிஇடத்தில் உள்ள உலக அளவிலான பாலின விகிதாச்சார அறிக்கையை 2017-ல் வெளியிட்டது. அதில் இந்தியாவில்தான் உலகிலேயே மிக குறைவான பெண் பணியாளர்கள் இருப்பது தெரியவந்தது. 28.5 சதவீதம் பெண்களே பணியில் உள்ளார்களாம். இதிலும் மூன்றில் 2 பங்கு பெண்கள் பொருளாதார சிக்கலால், கட்டாயத்தின் காரணமாக பணிக்கு வருபவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இந்திய நிறுவனங்கள் இப்போதுதான் பெண்களை பணிக்கு அமர்த்த பழகி வருகின்றன என்கிறது அந்த புள்ளி விவரம்.

    வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும், அலுவலக வேலையையும் இரட்டைச்சவாரிபோல் தொடரவேண்டியதிருக்கும். அலுவலக வேலைகள் ஒருபுறம் நெருக்கடியை கொடுக்க, அங்கு ஆண்கள் பெண்கள் மீது திணிக்கும் வேலைச்சுமையும், அழுத்தங்களும் வேறுவகையில் இருக்கும்.

    வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை, அதற்குரிய பராமரிப்பு மையங்களில் விட்டுச்செல்கிறார்கள். குழந்தைகளை பராமரிக்கும் “டே-கேர்” மையங்களுக்கு இந்தியாவில் உறுதியான விதிமுறைகள் எதுவும் கிடையாது. அதனால் குழந்தை நலன் சார்ந்த பிரச்சினைகளையும் பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்தால், குழந்தை பராமரிப்பு மையங்கள் தரும் தொந்தரவுகளையும் தாங்கவேண்டியதிருக்கிறது. அதனால் தாயாகிவிட்ட பெண்கள் பகுதி நேர வேலைகளையே பெரிதும் விரும்புகிறார்கள்.

    தங்கள் திறமைகளாலும், அரசு விதிமுறைகளாலும், சமீபகாலமாக நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண் களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் சமயோசிதமாக நடந்துகொள்ளும் முறையும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. ஒரு வேலையை இழந்தாலும், புதிய பணியில் சேருவது, அடுத்தவேலையை உருவாக்கிக் கொள்வது பற்றிய விழிப்புணர்வும் அவர்களிடம் அதிகரித்துள்ளது.
    சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். அவரைக்காய், வெந்தய கீரை கூட்டை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    அவரைக்காய் -1 கப்
    பாசி பருப்பு - 1/2 கப்
    வெந்தயக்கீரை - 1/2 கப்
    உப்பு -தேவையான அளவு
    தேங்காய் -சிறிதளவு
    சீரகம் -1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் -3
    பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்

    செய்முறை :

    கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கூட்டுக்கு தேவையான தண்ணீர் விட்டு பாசிப்பருப்பு மற்றும் அவரைக்காயை சேர்த்து வேக வைக்கவும்.

    மிக்சியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அவரை மற்றும் பருப்பு வெந்தவுடன் அரைத்து வைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

    கடைசியில் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    வெந்தய கீரை வேக பாத்திரத்தில் இருக்கும் சூடே போதுமானது.

    இப்போது அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×