search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு
    X
    அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு

    சத்துமிக்க அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு

    சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். அவரைக்காய், வெந்தய கீரை கூட்டை சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    அவரைக்காய் -1 கப்
    பாசி பருப்பு - 1/2 கப்
    வெந்தயக்கீரை - 1/2 கப்
    உப்பு -தேவையான அளவு
    தேங்காய் -சிறிதளவு
    சீரகம் -1 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் -3
    பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்

    செய்முறை :

    கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    அவரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கூட்டுக்கு தேவையான தண்ணீர் விட்டு பாசிப்பருப்பு மற்றும் அவரைக்காயை சேர்த்து வேக வைக்கவும்.

    மிக்சியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அவரை மற்றும் பருப்பு வெந்தவுடன் அரைத்து வைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

    கடைசியில் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    வெந்தய கீரை வேக பாத்திரத்தில் இருக்கும் சூடே போதுமானது.

    இப்போது அவரைக்காய் வெந்தக்கீரை பருப்பு கூட்டு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×