
எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கும் நாம் நமக்காக ஏன் சிறிது நேரம் ஒதுக்க கூடாது? நம்மை பராமரித்து கொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் நாம் நிச்சயம் நமக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் நமக்கு பிடித்த கைவினை பொருளை செய்வது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சூடான தேநீரை ருசித்து பருகுவது என்று எதை வேண்டுமானலும் செய்யலாம்.
ஒருநாளில் ஐந்து நிமிடம் மட்டும் தான் உங்களுக்காக கிடைக்கிறது என்றால் சிறிதும் தாமதிக்காமல் அந்த நேரத்தை உங்களுக்காக செலவிடுங்கள். அந்த ஐந்து நிமிட நேரத்தில் சிறிது நேரம் வெளியில் நடக்கலாம். அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சுவாசிக்கலாம்.
பொதுவாக நீங்கள் தினமும் எழுந்திருக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்பாக எழுந்தீர்கள் என்றால் அந்த பதினைந்து நிமிட நேரத்தில் ஒரு பத்திரிக்கை படித்தல், நடைப்பயிற்சி செய்தல், தியானத்தில் ஈடுபடுதல் அல்லது உங்களை ஆற்றுப்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட முடியும்.
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்காக நேரத்தை ஒதுக்குவது மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் நாம் ஆற்றும் எந்த கடமையிலும் நம்மால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும்.