என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் காலையில் பாடி வந்தால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும்.
    அழகிய மதுரையில் மீனாட்சி
    அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி
    நான்மாடக் கூடலிலே அருளாட்சி
    தேன்மொழி தேவியின் தேனாட்சி
    சங்கம் முழங்கிடும் நகரிலே
    சங்கரி மீனாளின் கருணையிலே
    மீன்கொடி பறக்கும் மதுரையிலே
    வான்புகழ் கொண்டாள் தாயவளே
    அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்
    ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்
    வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்
    கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்
    முத்து பவளம் மரகத மாணிக்கம்
    பொன் ஆபரணம் பூண்டாள்
    சக்தி மனோகரி சந்தர கலாதரி
    தென் மதுராபுரி ஆண்டாள்
    சித்திரை மாதம் தேவி மீனாட்சி
    சொக்க நாதரை மணந்தாள்
    பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட
    அற்புத லீலைகள் புரிந்தாள்

    மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.
    இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
    ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாறாக
    ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே
    ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார்
    ஊரில்அஞ்சிலே ஒன்று வைத்தான்
    வன் நம்மை அளித்துக் காப்பான்

    வானர தலைவன் வீர கேசரி அஞ்சனா தேவியின் மைந்தனான அனுமனின் புகழ் பாடும் துதி இது. இந்த துதியை தினமும் காலை, மாலை என நேரம் கிடைக்கும் போதெல்லாம் 27 முறை முதல் 108 முறை வரை துதிப்பது நல்லது. செவ்வாய், சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அனுமன் சந்நிதியில் அனுமனுக்கு தீபம் ஏற்றி இந்த துதியினை படித்து வந்தால் உங்களை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள், கிரக தோஷங்கள் நீங்கும். தம்பதிகள் ஒற்றுமை மேலோங்கும். தைரியம், மனஉறுதி ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வார் அனுமன்.

    நீண்ட நாட்கள் திருமணம் தடைபட்டு வரும் பெண்கள் கீழ்கண்ட ராகு - கேது வழிபாட்டை செய்து விரைவில் திருமணம் கூடி வர பெறலாம்.
    கேது காயத்ரி

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    சூல ஹஸ்தாய தீமஹி
    தந்நோ கேது ப்ரசோதயாத்

    ராகு காயத்ரி

    ஓம் நகத்வஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ராகு ப்ரசோதயாத்
    பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
    கணேசர் துதி ஓம் செல்வ விநாயகனே சரணம்
    சரணம் ஓம் சக்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் சித்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் அரசமர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஆதி நந்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெள்ளெருக்கு விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஸ்ரீசக்ர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ஷண்முக விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெற்றி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வக்ரதுண்ட விநாயகனே சரணம் சரணம்
    ஓம் சுந்தர விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கமல விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வெங்கடேச விநாயகனே சரணம் சரணம்
    ஓம் பிரசன்ன விநாயகனே சரணம் சரணம்
    ஓம் ரத்ன விநாயகனே சரணம் சரணம்
    ஓம் கற்பக விநாயகனே சரணம் சரணம்
    ஓம் லக்ஷ்மி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் பம்பா விநாயகனே சரணம் சரணம்
    ஓம் நவசக்தி விநாயகனே சரணம் சரணம்
    ஓம் வினைதீர்த்த விநாயகனே சரணம் சரணம்

    விண்ணின் நாயகனாகிய கணேசர் எனப்படும் விநாயகர் பெருமானுக்குரிய துதி இது. இந்த துதியை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு வெளியில் செல்வதற்கு முன்பு 3 முறை துதித்து விட்டு செல்வது நல்லது. செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று, விநாயகருக்கு தீபமேற்றி இந்த துதியை 27 முறை படிப்பதால் உங்களின் மனக்கவலைகள் தீரும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சீக்கிரம் முடிவிற்கு வரும். பணம் சம்பந்தமான விடயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். வளமை பெருகும். மன அமைதி உண்டாகும்.

    மனித வாழ்க்கையில் பணம் என்பது ஒரு இன்றியமையாத இடத்தை பெறுகிறது. மனிதர்களின் மனக்கவலைகள் 90 சதவீதம் இந்த பணத்தை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. இப்படி வாழ்வாதாரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் தடை, தாமதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் போக்கி பணம் சம்பந்தமான விவகாரங்களில் நமக்கு அதிர்ஷ்டத்தை தருபவர் விநாயகர் பெருமான். அவருக்குரிய இந்த துதியை தினமும் படிப்பதால் நன்மைகள் உண்டாகும்.
    தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது.
    வாஸ்து ஸ்லோகம்

    ஓம் வாஸ்து புருஷாய நம
    ஓம் ரத்தலோசனாய நம
    ஓம் க்ருஷ்யாங்காய நம
    ஓம் மஹா காயாய நம

    அனைவரின் வீட்டையும் ஆட்சி புரியும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்குரிய வாஸ்து ஸ்லோகம் இது. தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது. மாதத்தில் வரும் வாஸ்து தினத்தில், வாஸ்து புருஷருக்குரிய நேரத்தில் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.

    வாஸ்து சாஸ்திரம் என்பது நமது பாரத நாட்டின் மிகவும் தொன்மையான ஒரு கலையாகும். தேவலோக சிற்பியான மயன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் வகையில் இக்கலையை மனித குலத்திற்கு தந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு மனையிலும் வாஸ்து பகவான் எனப்படும் வாஸ்து புருஷன் வீற்றிருக்கிறார். அவரின் அருளை அதிகம் தரும் இந்த வாஸ்து ஸ்லோகத்தை வீட்டில் துதிப்பதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
    சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும்.
    நோய் நொடிகளில்லாத உடலை போன்ற ஒரு சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கூற்றாகும். மனிதர்கள் அனைவருமே தங்களை எத்தகைய நோய்களிலிருந்தும் காப்பாற்றி கொள்வதற்கு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நோய்கள் அவர்களை அண்டாது என்பதற்கு எந்த ஒரு உத்திரவாதமும் கிடையாது. நம்மை எத்தகைய நோய்கள் தாக்காமல் இருக்கவும், ஜுரம் போன்ற நோய்கள் விரைவில் நீங்கவும் துதிக்க வேண்டிய “சிவ பெருமான் ஸ்லோகம்” இதோ.

    ஹரி ஓம் நமசிவய ஓம் நமசிவய சுவாஹா

    சிவபெருமானுக்குரிய சக்தி வாய்ந்த தாந்தரீக மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் துதித்து வருவது உங்களின் உடல்நலத்தை மேம்படுத்தும். பல வகையான ஜுரம் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களின் ஜுரம் நீங்க இந்த மந்திரத்தை உங்களால் எவ்வளவு எண்ணிக்கையில் முடியுமோ, அவ்வளவு எண்ணிக்கையில் உரு ஜெபித்து வந்தால் உங்கள் உடலை பற்றியிருக்கும் எப்படிப்பட்ட ஜுரங்களும் சிவனின் அருளால் நீங்கும்.

    மேலும் உங்களுக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஜாதக தோஷங்களையும் இந்த மந்திரத்தை துதிப்பதால் போக்க முடியும். இன்ன பிற நோய்கள் ஏற்படாதவாறு உடல்நலத்தை காக்கும். இந்த மந்திரத்தை சிவபெருமானை தியானித்து துதித்து வந்தால் பல விதமான நோய்கள் விரைவில் நீங்கும்.
    உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.
    சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த மாணிக்க வாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந்நூலின் முதல் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றுகிறது. அத்துடன் உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகிறது.

    இப்பாடலைப் பொருள் உணர்ந்து சொல்லுபவர்கள் சிவபெருமானின் திருவடிகளை அடைவார்கள் என்று வலியுறுத்துகின்ன. உயிர், தான் செய்யும் வினைகளின் விளைவுகளினால் மீண்டும் மீண்டும் உலகில் பிறந்து அழுந்துவதில் இருந்து விடுதலை பெற்றுச் சிவனை அடைவதற்காக இறைவனை வேண்டுவதாக அமைந்திருப்பது இப்பாடல்.

    நமச்சிவாய வா அழ்க! நாதன்தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க!
    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான்தாள் வாழ்க!
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!

    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க!
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
    புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
    கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
    சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

    ஈசன் அடிபோற்றி! எந்தை அடிபோற்றி!
    தேசன் அடிபோற்றி7 சிவன் சேவடி போற்றி!
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி!
    மாயப் பிறப்பறுக்கம் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி!

    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
    சிவன், அவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச்சிவபுரா ணந்தன்னை
    முந்தை விளை முழுதும் ஓய உரைப்பன்யான்,

    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்கி
    எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலிறைஞ்சி,
    விண்ணிறைந்து, மண்ணிறைந்து மிக்காய் விளக்கு ஒளியாய்
    எண் இறந்து எல்லையிலாதானே! நின்பெறுஞ்சீர்
    பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்.

    புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகிப்
    பல்விருகம், ஆகி, பறவையாய்ப் பாம்பாகி,
    கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
    வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்,
    செல்லா அநின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்!
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்!
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள்
    ‘ஐயா’ எனவோங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!

    வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம்விமலா!
    பொய்ஆயின எல்லாம் போய் அகல வந்தரளி,
    மெஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே!
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!

    ஆக்கம், அளவு, இறுதி இல்லாய், அனைத்து உலகும்
    ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய்,
    போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்,
    நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
    மாற்றம், மனம்கழிய நின்ற மறையோனே!

    கறந்தபால், கன்னலொடு, நெய்கலந்தாற் போலச்
    சிறந்து, அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று,
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்7
    நிறங்கள்ஓர்ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
    மறைந்து இருந்தாய் யெம்பெருமான்
    வல்வினையேன் தன்னை!

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம், பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டி,
    புறம்தோல் போர்த்து, எங்கும் புழுஅழுக்கு மூடி,
    மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகி, கசிந்துஉள் உருகும்
    நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி,
    நிலம்தன்மேல் வந்தருளி நீள் கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே!
    மாசு அற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே!
    தேசனே! தேன்ஆர்! அமுதே! சிவபுரனேஷ
    பாசம்ஆம் பற்றுஅறுத்து, பாரிக்கும் ஆரியனே!
    நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சம்கெடப்

    பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
    ஆரா அமுதே அளவுஇலாப் பெம்மானே!
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
    நீராய் உருக்கி, என் ஆர்உயிராய் நின்றானே!
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே!

    அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையுமாம்
    சோதியனே! துன்இருளே! தோன்றாப் பெருமையனே!
    ஆதியனே!, அந்தம், நடுஆகி, அல்லானே!
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே!
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார்
    தம் கருத்தின்

    நோக்கிய நோக்கே! நுணக்குஅரிய நுண்உணர்வே!
    போக்கும், வரவும், புணர்வும் இலாப் புண்ணியனே!
    காக்கும் எம் காவலனே! காண்பரிய பேர் ஒளியே!
    ஆற்றுஇன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர்ஒளி ஆய், சொல்லாத நுண்உணர்வுஆய்.

    மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்!
    ஊற்றுஆன உண்ஆர் அமுதே! உடையானே!
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன், ‘என்ஐயா’ அரனே ‘ஓ?’ என்று என்று

    போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு, மெய்ஆனார்
    மீட்டு இங்கு வந்து, வினைப்புறவி சாராமே,
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே!
    நள் இருளில் நட்டம் பயின்றுஆடம் நாதனே!
    தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே!

    அல்லல் பிறவி அறுப்பானே! ‘ஓ’ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து

    திருச்சிற்றம்பலம்

    மாணிக்கவாசக சுவாமிகள் திருவடிகளே சரணம்.
    தினமும் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
    சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரிதமந்தாரசாகினே
    சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
    பக்தாபீஷ்டப்ரதாயாஸ்து பவரோகவிநாசினே
    ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்
    சுப்ரமண்ய மங்களாஷ்டகம்.

    பொதுப்பொருள்:

    பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும் அழகா னதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே சுப்ரமண்யப் பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன-மரண ரோகத்தைப் போக்குகிறவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும் தைரியமும் கொண்டவரே, முருகப்பெருமானே, நமஸ்காரம்.

    ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.
    பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த குரு பகவான் நவகிரகங்களில் சுபகிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவரின் வாழ்க்கை நிலை பன்மடங்கு உயரும் என்பது ஜோதிட வாக்கு.

    “குணமிகு வியாழக் குரு பகவானே
    மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
    ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
    க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி”
    இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
    உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம்
    க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம்
    ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம்
    அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம்

    பயன்கள்: ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.
    இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும்.
    மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா
    ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
    சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
    ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!

    - ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி

    பொதுப்பொருள்: அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். மஹேஸ்வரி என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும்.

    (இத்துதியை தினமும் தூங்கச் செல்லும் முன் பாராயணம் செய்தால் நாம் செய்திருக்கக்கூடிய பாவங்கள் அனைத்தும் நீங்கும். அடுத்து பாவம் செய்ய இயலாதவாறு மனம் பக்குவப்படும். அப்படியே அறியாமல் செய்துவிட்டாலும், அந்தப் பாவங்களும் அன்னை புவனேஸ்வரியால் மன்னிக்கப்படும்)
    இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.
    ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
    காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
    நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
    பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.

    (பராசரபட்டர் அருளியது)

    பொதுப்பொருள்:

    ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.

    ×