என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி

    வீர வடிவேலனாகிய முருகப்பெருமானின் பெருமையை கூறும் தமிழ் ஸ்தோத்திரம் இது. இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பதது சிறப்பானதாகும். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் முருகபெருமான் படத்திற்கு வாசமுள்ள மலர்களை சாற்றி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றிய பின்பு இந்த ஸ்தோத்திரத்தை 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்கள் தொழில், வியாபார இடங்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். வீட்டில் வீண் பொருள் விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலை உயரும்.
    பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எதிரிகள் தொல்லை, சொத்து பிரச்சனைகள் தீரும்.
    ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

    பக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் மனதில் பைரவரை நினைத்து 27 முறை துதித்து வருவது சிறப்பு. மாதத்தில் செவ்வாய்கிழமை வருகிற தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரின் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனம் செய்து, விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துஷ்ட சக்தி மற்றும் மாந்திரீக ஏவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். வீடு, நிலம் போன்ற சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.
    தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது
    தமிழ் வருடங்கள் அறுபதில் விகாரி வருடம் பற்றி முற்காலத்தில் சொல்லப்பட்ட வருஷாதி வெண்பா பாடல் இது:

    பாரவிகாரி தனிற் பாரண நீருங்குறையும்
    மாரியில்லை வேளாண்மை மத்தியமாம்- சேரார்
    பயம் அதியமுண்டாம் பழையோர்கள் சம்பாத்
    தியவுடமை விற்றுண்பார் தேர்.

    இதன் பொருள்:

    விகாரி வருடத்தில் மழை குறைவினால் குளம், கிணறு, ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறையும். அதனால் பயிர் விளைச்சல் குறையும். வேளாண்மை திருப்திகரமாக இருக்காது. நட்புக் குறைவு ஏற்படும். ஒருவரோடு ஒருவர் சேர்ந்து பழகுவதில் பயம் அதிகம் உண்டாகும். பற்றாக்குறை அதிகரிப்பினால் நம் முன்னோர்கள் மற்றும் தாய், தந்தையர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை உருவாகும்.
    திருமகளான லட்சுமி தேவியின் அம்சம் கொண்ட செடி துளசி செடியாகும். இந்த தெய்வீக துளசி செடியை வணங்கி வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் உண்டாகும்.
    யன்மூல ஸர்வ தீர்த்தாளி யன் மத்யே ஸர்வ தேவதா
    யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தம் நமாம்யஹம்
    ஓங்கார பூர்விகே தேவி ஸர்வதேவ ஸ்வரூபிணி
    ஸர்வ தேவமயே தேவி சௌமாங்கல்யம் ப்ரயச்சமே

    உங்கள் வீட்டில் துளசி மாடத்தில் இருக்கும் துளசி செடி உள்ள இடத்தை நீரால் கழுவி, அரிசி மாவு கோலமிட்டு, துளசிச் செடிக்கு நீரூற்றி, துளசி செடியின் இலைகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து, விளக்கேற்றி மேலே இருக்கும் துளசி ஸ்லோகத்தை 18 முறைகள் துதிப்பதால் உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். திருமணமான பெண்களின் மாங்கல்ய பலம் நீடிக்கும். மந்திரம் துதித்து முடித்ததும் முடிவில் துளசி செடியின் நீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு துளசி செடியை வணங்க வேண்டும்.
    புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.
    பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே
    அம்மா நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே
    மோக்ஷதாயகியே அரணருளாகவே
    ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே
    அம்மா வரதாயகி சித்தகௌரி
    மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா
    மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம்,
    சுப மங்களம் ஸர்வ சைதன்யரூபாம்
    தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி ஹ்ரீங்கார
    ரூபிணீம் தேவீம் தியோ யோந ப்ரசோதயாத்

    புவனம் எனும் மனிதர்கள் வாழும் பூமி உட்பட அண்ட சரசாரங்களை படைத்து காத்தருளும் தேவி அன்னை புவனேஸ்வரி. அவளுக்குரிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் துதிப்பது நல்லது. தேவி வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை காலை வேளையில் அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்களுக்கு வறுமை நிலை உண்டாகாது. தன, தானிய லாபங்கள் ஏற்படும். மிகுந்த தைரியமான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.
    27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும்.
    சீலமாய் வாழ சீரருள் புரியும்
    ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
    சூரியா போற்றி சுந்தரா போற்றி
    வீரியா போற்றி வினைகள் களைவாய்.

    உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ் ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் உறுதிபெறும்.
    இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம்.
    திருவிளக்கு போற்றி

    1. பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
    2. போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
    3. முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
    4. மூவுலகம் நிறைந்திருந்தாய் போற்றி
    5. வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
    6. இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
    7. ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
    8. பிறர்வயமாகாப் பெரியோய் போற்றி
    9. பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
    10. பேரருட் கடலாம் பொருளே போற்றி
    11. முடிவில் ஆற்றில் உடையாய் போற்றி
    12. மூவுலகும் தொழும் மூத்தோய் போற்றி
    3. அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
    14. ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
    15. ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
    16. இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி
    17. மங்கள நாயகி மாமணி போற்றி
    18. வளமை நல்கும் வல்லியை போற்றி
    19. அறம்வளர் நாயகி அம்மே போற்றி
    20. மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி
    21. மின்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
    22. தையல் நாயகித் தாயே போற்றி
    23. தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
    24. முக்கட்சுடரின் முதல்வி போற்றி
    25. ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
    26. சூளாமணியே சுடரொளி போற்றி
    27. இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
    28. அருள் பொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
    29. அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி
    30. இல்லக விளக்காம் இறைவி போற்றி
    31. சுடரே விளக்காம் தூயோய் போற்றி
    32. இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
    33. எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
    34. ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
    35. அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
    36. தூண்டு சுடரனைய ஜோதி போற்றி
    37. ஜோதியே போற்றிச் சுடரே போற்றி
    38. ஓதும் உள்ஒளி விளக்கே போற்றி
    39. இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
    40. சொல்லக விளக்காம் ஜோதி போற்றி
    41. பலர்காண் பல்லக விளக்கே போற்றி
    42. நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
    43. உலப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
    44. உணர்வுசூழ் கடந்ததோர விளக்கே போற்றி
    45. உடம்பெனும் மனையக விளக்கே போற்றி
    46. உள்ளத்தகழி விளக்கே போற்றி
    47. மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
    48. உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
    49. இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
    50. நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
    51. ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
    52. அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
    53. ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
    54. தில்லைப் பொது நட விளக்கே போற்றி
    55. கருணையே உருவாம் விளக்கே போற்றி
    56. கற்பனை கடந்த ஜோதி போற்றி
    57. அற்புதக்கோல விளக்கே போற்றி
    58. அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
    59. சிற்பர வியோம விளக்கே போற்றி
    60. பொற்புடன் நஞ்செய் விளக்கே போற்றி
    61. உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி
    62. கள்ளப்புலனைக் கரைப்பாய் போற்றி
    63. உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
    64. பெருகு அருள்சுரக்கும் பெருமான் போற்றி
    65. இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி
    66. அருவே உருவே அருவுரு போற்றி
    67. நந்தா விளக்கே நாயகியே போற்றி
    68. செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி
    69. தீபமங்கள் ஜோதி போற்றி
    70. மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
    71. பாகம் பிரியா பராபரை போற்றி
    72. ஆகம முடிமேல்அமர்ந்தாய் போற்றி
    73. ஏகமாய் நடஞ்செய் எம்மான் போற்றி
    74. ஊழி ஊழி உள்ளோய் போற்றி
    75. ஆழியான் காணா அடியோய் போற்றி
    76. ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
    77. அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
    78. முந்தைய வினையை முடிப்போய் போற்றி
    79. பொங்கும் கீர்த்திப் பூரணீ போற்றி
    80. தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
    81. அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
    82. இருநில மக்கள் இறைவி போற்றி
    83. குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
    84. ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
    85. தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
    86. பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
    87. எத்திக்கும் துதி எந்தாய் போற்றி
    88. அஞ்சலென்றருளும் அன்பே போற்றி
    89. தஞ்சமென்றவரைச் சார்வோய் அன்பே போற்றி
    90. ஓதுவார்அகத்துறை ஒளியே போற்றி
    91. ஓங்காரத்துள்ளொளி விளக்கே போற்றி
    92. எல்லா உலகமும் ஆனாய் போற்றி
    93. பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
    94. புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி
    95. செல்வாய செல்வம் தருவாய் போற்றி
    96. பூங்கழல் விளக்கே போற்றி போற்றி
    97. உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
    98. உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
    99. செல்வ கல்வி சிறப்பருள் போற்றி
    100. நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
    101. விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
    102. நலம் எலாம் உயிர்க்கு நல்குக போற்றி
    103. தாயே நின்னருள் தருவாய் போற்றி
    104. தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
    105. போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
    106. போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
    107. போற்றி என் அன்புபொலி விளக்கே போற்றி
    108. போற்றி போற்றி திருவிளக்கே போற்றி

    இந்த 108 திருவிளக்கு போற்றியை வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலும், கோவில்களில் நடத்தப்படும் விளக்கு பூஜையின் போதும் கூறி வழிபடலாம். இந்த விளக்கு பூஜை மூன்று தேவியரின் அருளை பெற்று தருவதாகும். வீட்டிலோ அல்லது கோவிலிலோ விளக்குக்களை ஏற்றி, வழிபாடு செய்யும் போது செய்பவர்களின் குடும்பத்தில் வறுமை நிலை நீங்கும். நோய் நொடிகள் அண்டாது. தீய சக்திகள் எதுவும் அவர்களை அண்டாது. விரும்பிய காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும்.

    அஷ்டமத்து சனி, ஜென்ம சனி, கண்ட சனி, ஏழரை சனி நடப்பவர்கள் இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும்.
    மந்திரம்:

    நீலாஞ்சன ஸமாபாசம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
    சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்ரம்

    பொதுவான பொருள்: “நீல நிற மலையைப் போல் தோற்றம் கொண்ட சனி பகவானே, சூரியனின் புத்திரனும் எமதர்மனின் சகோதரனுமானவனே, “சாயா” “மார்த்தாண்ட” என்கிற சூரியபகவானின் மைந்தனே, மிக மெதுவாக சுழல்பவனே, உனக்கு என் பணிவான வணக்கங்கள்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.

    இம்மந்திரத்தை சனிக்கிழமைகளில் நீராடிய பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கும் அந்த கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கும் மரத்திற்கும் கருப்பு எள் கலந்த நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி, இம்மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் காக்கைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். இதனால் சனி பகவான் மனம் குளிர்ந்து உங்களுக்கு அவரின் தசை காலங்களில் ஏற்படும் கஷ்டங்களின் கடுமை தன்மையை குறைப்பார்.
    வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    வீர ஆஞ்சநேயருக்கு உகந்த ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை எழுதிய மகா ஞானி ஸ்ரீ துளசிதாஸர். இவர் ராம, ஆஞ்சநேய தரிசனம் பெற்ற மகான். வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னால் இதை பாராயணம் செய்யலாம். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸாவைப் பாராயணம் செய்தால் அங்கே ஸ்ரீ ஹனுமானே சூட்சும வடிவில் எழுந்தருள்வான்.

    ஸ்ரீஅனுமன் சாலீஸா

    புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரெள பவன குமார்|

    பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்||

    ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர|

    ஜய கபீஸ திஹுலோக உஜாகர||

    ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார்

    பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்||

    ராமதூத அதுலித பலதாமா|

    அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா||

    மஹாவீர் விக்ரம பஜரங்கீ|

    குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ||

    கஞ்சன பரண விராஜ ஸுவேசா|

    கானன குண்டல குஞ்சித கேசா||

    ஹாத் வஜ்ர ஒள த்வாஜ விராஜை|

    காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை||

    சங்கர ஸுவன கேசரி நந்தன|

    தேஜ ப்ராதப மஹா ஜகவந்தன||

    வித்யாவான் குணீ அதி சாதுர|

    ராம காஜ கரிபே கோ ஆதுர||

    ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா|

    ராம லஷண ஸீதா மன பஸியா||

    ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா|

    விகட ரூப தரி லங்க ஜராவா||

    பீம ரூப தரி அஸுர ஸங்ஹாரே |

    ராமசந்த்ர கே காஜ ஸ(ம்)வாரே ||

    லாய ஸஜீவந லகந ஜியாயே |

    ஸ்ரீ ரகுபீர ஹரஷி உர லாயே ||

    ரகுபதி கீந்ஹீ பஹுத படாஈ |

    தும மம ப்ரிய பரதஹீ ஸம பாஈ ||

    ஸஹஸ பதந தும்ஹரோ ஜஸ காவை(ம்) |

    அஸ கஹி ஸ்ரீபதி கந்ட லகாவை(ம்) ||

    ஸநகாதிக ப்ரஹ்மாதி முநீஸா |

    நாரத ஸாரத ஸஹித அஹீஸா ||

    ஜம குபேர திக்பால ஜஹா(ம்) தே |

    கபி கோபித கஹி ஸகே கஹா(ம்) தே ||

    தும உபகார ஸுக்ரீவஹி(ம்) கீந்ஹா |

    ராம மிலாய ராஜ பத தீந்ஹா ||

    தும்ஹரோ மந்தர பிபீஷந மாநா |

    லங்கேஸ்’வர ப ஏ ஸப ஜக ஜாநா ||

    ஜுக ஸஹஸ்ர ஜோஜந பர பாநூ |

    லீல்யோ தாஹி மதுர பல ஜாநூ ||

    ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீ(ம்) |

    ஜலதி லாங்கி கயே அசரஜ நாஹீ(ம்) ||

    துர்கம காஜ ஜகத கே ஜேதே |

    ஸுகம அநுக்ரஹ தும்ஹரே தேதே ||

    ராம துஆரே தும ரகவாரே |

    ஹோத ந ஆஜ்ஞாயா பிநு பைஸாரே ||

    ஸப ஸுக லஹை தும்ஹாரீஸரநா |

    தும ரச்சக காஹூ கோ டர நா ||

    ஆபந தேஜ ஸம்ஹாரோ ஆபை |

    தீநோ(ம்) லோக ஹா(ந்)க தே கா(ம்)பை ||

    பூத பிஸாச நிகட நஹி(ம்) ஆவை |

    மஹாபீர ஜப நாம ஸுநாவை ||

    நாஸை ரோக ஹரை ஸப பீரா |

    ஜபத நிரந்தர ஹநுமத பீரா ||

    ஸங்கட தே ஹநுமாந சுடாவை |

    மந க்ரம பசந த்யாந ஜோ லாவை ||

    ஸப பர ராம் தபஸ்வீ ராஜா |

    திந கே காஜ ஸகல தும ஸாஜா ||

    ஔர மநோரத ஜோ கோஇ லாவை |

    ஸோஇ அமித ஜீவந பல பாவை ||

    சாரோ(ம்) ஜுக பரதாப தும்ஹாரா |

    ஹை பரஸித்த ஜகத உஜியாரா ||

    ஸாது ஸந்த கே தும ரகவாரே |

    அஸுர நிகந்தந ராம துலாரே ||

    அஷ்ட ஸித்தி நௌ நிதி கே தாதா |

    அஸ் பர தீந ஜாநகீ மாதா ||

    ராம ரஸாயந தும்ஹரே பாஸா |

    ஸதா ரஹோ ரகுபதி கே தாஸா ||

    தும்ஹரே பஜந ராம கோ பாவை |

    ஜநம ஜநம கே துக பிஸராவை ||

    அந்த கால ரகுபர புர ஜாஈ |

    ஜஹா(ம்) ஜந்ம ஹரி-பக்த கஹாஈ ||

    ஔர தேவதா சித்த ந தர ஈ |

    ஹனுமத ஸேஇ ஸர்ப ஸுக கர ஈ ||

    ஸங்கட கடை மிடை ஸப பீரா |

    ஜோ ஸுமிரை ஹநுமத பல பீரா ||

    ஜை ஜை ஜை ஹநுமாந கோஸா ஈ(ம்) |

    க்ருபா கரஹு குரு தேவ கீ நாஈ(ம்) ||

    ஜோ ஸத பார பாட கர கோஈ |

    சூடஹி பந்தி மஹா ஸுக ஹோஈ ||

    ஜோ யஹ படை ஹநுமாந சாலீஸா |

    ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா ||

    துளஸீதாஸ ஸதா ஹரி சேரா |

    கீஜை நாத ஹ்ருதய மஹ(ம்) டேரா ||

    பவந தநய ஸங்கட ஹரந , மங்கல மூரதி ரூப |

    ராம லஷந ஸீதா ஸஹித, ஹ்ருதய பஸஹு ஸுர பூப ||
    முருகனின் இந்த மந்திரத்தை பங்குனி உத்திர தினமான இன்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும்.
    ஓம் சரவணா பாவாய நமஹ
    ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
    தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
    ஓம் சுப்ரமண்யாய நமஹ
    குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.
    திருக்கருகாவூர் ஸ்லோகம்

    ஹமவத் யுத்தரரே பார்ச்வே
    ஸுரதா நாம யக்ஷிணி
    தஸ்ய ஸ்மரண மாத்ரேண
    விசல்யா கர்பிணிய பேது

    குழந்தை பாக்கியத்தை அருளும் திருக்கருக்காவூர் ஸ்ரீ கர்பரக்ஷம்பிகை அம்மனின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் திருமணமான தம்பதிகள் இருவரும் கர்பரக்ஷம்பிகை அம்மனை மனதில் நினைத்தவாறு துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் தம்பதிகள் இருவருமோ அல்லது பெண்கள் மட்டுமோ அருகிலுள்ள ஏதேனும் அம்மன் கோயிலுக்கு சென்று, விளக்கேற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் திருமணமாகி கர்ப்பம் தரிக்காமல் இருக்கும் பெண்கள் அம்பிகையின் அருளால் கருத்தரிப்பர்.

    பிரசவ காலத்தில் பெண்களுக்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏதும் ஏற்படாமல் காக்கும். கரு கலைவது, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படாமல் தடுத்து சுக பிரசவத்தில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பிறக்க செய்யும்.
    சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.
    கபால பைரவர் காயத்ரி மந்திரம்

    ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி தந்நோஹ்
    கபால பைரவ ப்ரசோதயாத்

    சிவபெருமானின் ரூபமாக, தீய சக்திகளை அழிப்பதற்காக 64 பைரவர்களில் ஸ்ரீ கபால பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 108 முறை துதித்து செல்வது சிறப்பு. சனிக்கிழமைகள்,தேய்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் பைரவர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு பீடைகள் ஒழியும். ஜாதகத்தில் சந்திர மகாதிசை நடப்பவர்களுக்கு சந்திரனால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாது. உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகள் நீங்கும். எதிரிகள் பயம், தொல்லைகள், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
    ×