search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kala bhairava"

    • எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டு பூஜித்தான்.
    • பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபு.

    கால பைரவர் வழிபட்டுப் பூஜை புரிந்த லிங்கம் காசி லிங்கம் என்ற பெயருடன் உள்ளது. சப்தரிஷிகள் காளத்தீஸ்வரரைப் பூஜித்த பின்னர் லிங்கப் பரம்பொருளைப் பிரதிட்டை செய்து வழிபட்டனர். இவர்கள் பூஜை செய்த ஏழு லிங்கங்களும் மற்றும் எமன் பூஜை செய்த எமலிங்கமும் சித்திரகுப்தன் வழிபட்ட சித்திரகுப்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. எமனுடைய சகோதரனான சனியும் காளத்தீஸ்வரரை வழிபட்டுப் பூஜித்தான்.

    மார்கண்டேயர், அகத்தியர், வியாசர் போன்ற பலப்பல முனிவர்களும் வாயுநாதனை வழிபட்ட பிறகு லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    இவர்கள் பூஜித்த லிங்கங்கள் மார்கண்டேய லிங்கம், அகத்திய லிங்கம், வியாச லிங்கம் என்ற திருநாமங்களுடன் விளங்குகின்றன. மகாபாரதம் எழுதத் தொடங்குவதற்கு முன்பு வியாசர் வழிபட்ட திருத்தரங்களில் திருக்காளத்தியும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களான சீனிவாசன், ராமன், கண்ணன் ஆகியோர் காளத்தி ஞானப்பிரகாசத்தைப் பூஜித்துப் பேறு பெற்றுள்ளனர்.

    சீனிவாசனும், வேணுகோபாலன் கோவிந்தராஜன் என்ற பெயர்களுடன் கண்ணனும் உள்ளனர். ராமன் பிரதிட்சை செய்து பூஜித்த லிங்கம் ராமச் சந்திரலிங்கம் என்ற திருநாமத்துடன் உள்ளது.

    சீதை, அனுமன், பரதன் ஆகியோர் பிரதிஷ்டை செய்த லிங்கங்களும் ராமன் சீதை உருவங்களும் உள்ளன. ராமனுக்கு அருள் புரிந்த காளத்தீஸ்வரர் ராமேஸ்வர் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியில் உள்ளார். இந்த லிங்கம் வெண்மையாக உள்ளது.

    பஞ்ச பாண்டவர்களில் மூத்தவனான தருமன் பிரதிட்டை செய்து பூஜித்த லிங்கம் தருமலிங்கம் என்ற பெயருடன் திகழ்கின்றது. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களுக்கு உரிய ஆறு ஆதாரச் சக்கர லிங்கங்களும் ஐந்து முகம் கொண்ட பஞ்சானன லிங்கமும் பூஜை செய்வதற்கு மிகச் சிறப்பாக விளங்குகின்ற ஸ்படிக லிங்கமும் உள்ளன. பின்புறம் எரிந்து கொண்டிரக்கும் விளக்கினால் ஸ்படிக லிங்கத்தில் அடிமுடியில்லாத ஜோதி தரிசனம் கிடைக்கின்றது.

    திருக்காளத்திக் கோவிலுக்குக் கல்லாலமரம், வில்வ மரம் ஆகியவை தலமரங்களாகவும் பொன்முகலி எனப்படும் ஸ்வர்ணமுகி நதி புனிதத் தீர்த்தமாகவும் விளங்குகின்றது. காளத்தி நாதர்த் திருக்கோயில் கோபுரங்களையும் மண்டபங்களையும் பிரகாரங்களையும் பலப்பல சன்னதிகளையும் கொண்டுள்ள பெரிய கோயிலாகும்.

    சோழர், பாண்டியர், விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர், நகரத்தார் ஆகியோர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. நூற்றியெட்டு லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சத அஷ்டோத்திர லிங்கம், ஆயிரம் லிங்கங்களைக் கொண்ட சகஸ்ரலிங்கம் ஆகியவற்றோடு சோழலிங்கம், பாண்டிய லிங்கம், தெனாலி லிங்கம் ஆகிய லிங்கங்களும் உள்ளன.

    இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்த ராமநாதன் செட்டியாரின் ஆள் உயரச் சிலையும் கோவிலில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் மிகப்பெரிய திருப்பணிக்கான திட்டம் வகுத்து அது அவருடைய வாழ்நாளுக்குள் முற்றுப் பெறாமல் நின்று போய் விட்டது என்பதைக் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு பெரிய கோபுரம் தெரியப்படுத்துகின்றது.

    கோவிலின் உள்ளே கல்வெட்டுக்களால் நிரம்பிய காசி விஸ்வநாதர்க் கோவில் மிகவும் சிதலமடைந்து உள்ளது. கொடி மரத்திற்கு அருகே பலிபீடம் லிங்கம் ஆகியவற்றை எட்டு யானைகள் சுமந்து நிற்பது போல் அமைந்துள்ளன. அருகே யோகியுடன் கூடிய சிறிய லிங்கம் உள்ளது.

    ஓங்கார வடிவமாகிய லிங்கத்தில் மகரப் பகுதியாகிய பீடமும் உகரப் பகுதியாகிய ஆவுடையாரும் இல்லாமல் அகரப் பகுதியாகிய பாணம் மட்டுமே உள்ள லிங்கமும் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் சன்னதியும் மற்றும் பலப்பல லிங்கங்களும் காணப்படுகின்றன. சிற்பத் தூண்களுடன் கூடிய லிங்க சன்னதிகளும் சிலந்தி, யானை, பாம்பு ஆகியவை சிவபூஜை செய்யும் திருக்காளத்தில் தல வரலாற்றைக் காட்டுகின்ற தனிச் சன்னதியும் உள்ளன.

    திரும்பிய பக்கமெல்லாம் சன்னதிகள்

    திருவண்ணாமலையில் மாணிக்க வாசகப் பெருமானுக்குக் காட்சி தந்தருளிய பரமனின் திருவடிகளுக்குச் சன்னதியுள்ளது போன்று திருக்காளத்தியிலும் ஈசன் திருவடிகள் காணப்படுகின்றன. திருவடிச் சன்னதியில் திருவடிகளுக்கு முன்பு நந்தியும் எழுந்தருளியுள்ளது.

    ஒருபுறம் விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்துள்ளது போன்றே மறுபுறம் மலையேறும் பாதையுள்ள கோபுரத்தின் அருகே மணிகங்கை என்னும் பொன் முகலி நதியைத் தோற்றுவித்த மணிகங்கேசர்க் கோவில் முற்றிலும் சிதைந்துள்ளது. உள்ளிருக்கும் மண்டபத்தின் சுவர்களில் பாம்பு சிலந்தி யானை ஆகியவை வாயுலிங்கப் பொருளை வழிபடுவதைக் காட்டும் வண்ண வண்ண அழகிய ஓவியங்கள் சிதைந்து போயுள்ளன.

    இந்த மண்டபத்தில் உள்ள படிகளில் ஏறிச் சென்றால் மேலே நான்கு முக லிங்க சன்னதி உள்ளது. நான்கு முகங்களையும் நன்றாகச் தரிசனம் செய்யும் வகையில் நான்கு புறமும் சிறு சிறு சாளரங்கள் உள்ளன. எல்லாச் சிவலாயலங்களிலும் உள்ளது போல் திருக்காளத்தீஸ்வரர்க் கோவிலிலும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

    பெரிய நடராஜர், சிறிய நடராஜர் என்று இரண்டு ஆடல்நாயகன் திருவுருவங்கள் உள்ளன. அறுபத்து மூவர் சன்னதியோடு திருமுறைச் சன்னதியும் உள்ளது. நந்தியும் சண்டீசரும் பைரவரும் தங்கள் தங்கள் பதவிக்கு ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். பட்டல பைரவர் என்ற சன்னதியில் நூல் சாற்றுவது மரபாக உள்ளது.

    பிரம்மன் சிரம் அரிவதற்காக பைரவரைத் தோற்றுவித்த பைரவநாதர் எனப்படும் சிவ பைரவரும் வேட்டை நாய்கள் சூழத் தனிச் சன்னதியில் எதிரே நந்தியோடு எழுந்தருளியுள்ளார். பிரணவப் பெருமாள் உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான் இந்தக் கோலத்தைப் போற்றியுள்ளார்.

    சுந்தர கணபதி, பாலகணபதி, வல்லப கணபதி, இலக்குமி கணபதி, உக்தி கணபதி, பூத கணபதி, சக்தி கணபதி என்று பலப்பல விநாயகர் திருவுருவங்களும் சன்னதிகளும் உள்ளன. இவையே யன்றி பாதாள விநாயகர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. கிணற்றில் இறங்குவது போன்று குறுகலான படிகள் வழியே இறங்கிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    உடுப்பி பால சுப்பரமணியர் சன்னதி, முருகன் சன்னதி என்று முருகனுக்குச் சன்னதிகள் உள்ளன.

    திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகப்பெருமானுக்கு ஆதியண்ணாமலையார்க் கோவில் கோவில் இருப்பது போன்று காளத்தியில் மலையுச்சியில் குடுமித் தேவரின் திருக்காட்சி பெற்ற கண்ணப்பருக்கு கோவில் உள்ளது. மலையுச்சியில் வில்வ மரத்தடியில் எழுந்தருளியுள்ள குடுமித் தேவரை சிவகோசரியார்எ ன்ற முனிவரும் கண்ணப்பரும் வழிபட்டனர்.

    பதினாறே வயதான கண்ணப்பர் முதல் முறையாக வேட்டைக்குச் சென்ற போது மலைமேலுள்ள குடுமித் தேவரைக் கண்டு ஆராத அன்பு கொண்டு அங்கேயே தங்கி விட்டார். ஆறு நாட்கள் உணவும் உறக்கமும் இன்றி சதாசர்வ காலமும் சிவ நினைவோடு குடுமித்தேவரின் அருகே இருந்தார்.

    ஒரு உறுப்புக்கு மாற்று உறுப்பு வைத்து சிகிச்சை செய்யும் மருத்துவம் உள்பட பல விதமான கலைகளையும் பதினாறே வயதான கண்ணப்பர் கற்றுத் தேர்ந்ததை Ôகலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்குÕ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றுகின்றார். வேறு யாருக்குமே இருக்க முடியாத இறையன்பினைக் கண்ணப்பர் கொண்டிருந்ததை இறைவனால் வலிந்து ஆட்கொள்ளப்பட்ட மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

    திண்ணன் ஈசனுக்குக் கண்டு அப்பியதால் கண்ணப்பன் என்று பெயர் பெற்றார். திருமாலும் இறைவனுக்குத் தாமரை மலராகத் தன் கண்ணை வைத்துப் பூஜை செய்ததால் தாமரைக் கண்ணன் என்று பெயர் பெற்றார். இருவருடைய வழிபாட்டிலும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள வேறுபாடு உள்ளது.

    விஷ்ணுவின் வழிபாடு பிரதிபலனை எதிர்ப்பார்த்து. பரம்பொருளிமிருந்து சுதர்சனச் சக்கரத்தைப் பெறுவதற்காக சிவபூஜை செய்தார். சிவபூஜை தடைப்பட்டு விட்டால் சக்கரம் கிடைக்காமல் போய் விடுமோ என்பதால் பூஜையைத் தடையின்றி முடிப்பதற்காக குறைந்து போன தாமரை மலருக்குப் பதிலாகத் தன் கண்ணைப் பறித்து வைத்து அதிர்த்துப் பூஜையை முடித்தார். இத்தகைய அன்பினை, பக்தியை எல்லோரிடத்திலும் காண முடியும்.

    ஆனால் கண்ணப்பர் வழிபாடு செய்தது இறைவனுக்காக எந்தவிதமான பிரதிபலனும் கருதாது ஈசனுக்காக தன் ஒரு விழியை மட்டுமன்று இரண்டாவது கண்ணையும் அர்ப்பணிக்கத் தொடங்கினார். இத்தகைய பக்தியை யாரிடத்திலும் காண முடியாது.

    தாட்சாயிணியாக, பார்வதியாக, மீனாட்சியாகப் பிறந்து வளர்ந்த போதும் மற்றும் காமாட்சி, விசாலாட்சி என்று எந்தப் பெயரில் எங்கு வந்த போதும் பல்லாண்டுகள் தவமும் பூஜையும் செய்த பின்புதான் பராசக்தியால் பரமேஸ்வரனைக் காண முடிந்தது. பரம்பொருளைக் கணவனாக அடைய வேண்டும், குற்றம் குறை நீங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

    ஆனால் கண்ணப்பரோ ஆறே நாட்களில் அகிலாண்டேஸ்வரரின் திருக்காட்சி கண்டு அவனது திருக்கரத்தால் தீண்டப் பெறும் பெறுதற்கு அரிய பெரும் பேறு பெற்றார். அவருடைய தன்னலமில்லாத பக்தி, இறைவனுக்காக இறைவனை வழிபட்ட மெய்யன்பு ஆயிரம் ஆண்டுகள் தேடித் திரி¢ந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாத பரமேஸ்வரனது திருக்காட்சியை ஆறே நாட்களில் கூட்டு வித்தது. மீண்டும் வந்து பிறக்காத பேரின்ப முக்தியையும் அருளச் செய்தது.

    கண்ணப்பரைப் போற்றாத பக்தர்கள் இல்லை எனலாம். சங்கப் புலவர்களின் பாடல் முதல் தற்காலத்துக் கீர்த்தனைகள் வரை கண்ணப்பர் போற்றப்படுகின்றார். கிடைத்துள்ள தேவாரத் திருமுறைகளை நோக்கும்போது ஏழு வயது வேதியர் சண்டீசரும் பதினாறு வயது கண்ணப்பருமே மிக அதிகமாகப் போற்றப்பட்டுள்ளனர்.

    மலையுச்சியில் உள்ள கண்ணப்பர்க் கோவிலில் ஆள் உயரப் பெரிய கண்ணப்பருக்கு அருகே அப்புனிதப் பெருமனைப் பெற்றெடுத்து உலகத்திற்குத் தந்த தாயாரின் சிறிய உருவம் அமர்ந்த நிலையில் உள்ளது. கண்ணப்பர் சிவகோசரியார் வழிபட்ட லிங்க மெய்ப்பொருள் இன்றும் வில்வ மரத்தடியில் திறந்த வெளியிலேயே உள்ளது.

    கண்ணப்பருக்கும் சிவகோசரியாருக்கும் திருக்காட்சி தந்த காட்சியருளிய நாதர்க் கோவிலும் கண்ணப்பர்க் கோவிலும் அருகருகே அமைந்துள்ளன. மலையுச்சியில் மட்டுமன்றி கீழே ஞானப்பிரகாசம் எழுந்தருளியுள்ள அடிவாரக் கோவிலில் கொடி மரத்திற்கு அருகேயும் கண்ணப்பர் உள்ளார்.

    காளத்திக் கணநாதரை தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அஞ்ஞானம் விலகுகின்றது. தீராத நோய் தீர்கின்றது. பிறவிப் பிணி நீங்கிப் பிறவாப் போரின்பம் உண்டாகின்றது. எல்லாவிதமான கிரக தோஷங்களும் குற்றங்குறைகளும் நீங்குகின்றன.

    சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.
    கபால பைரவர் காயத்ரி மந்திரம்

    ஓம் கால தண்டாய வித்மஹே
    வஜ்ர வீராய தீமஹி தந்நோஹ்
    கபால பைரவ ப்ரசோதயாத்

    சிவபெருமானின் ரூபமாக, தீய சக்திகளை அழிப்பதற்காக 64 பைரவர்களில் ஸ்ரீ கபால பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 108 முறை துதித்து செல்வது சிறப்பு. சனிக்கிழமைகள்,தேய்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் பைரவர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு பீடைகள் ஒழியும். ஜாதகத்தில் சந்திர மகாதிசை நடப்பவர்களுக்கு சந்திரனால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாது. உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகள் நீங்கும். எதிரிகள் பயம், தொல்லைகள், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த பரிகாரங்களை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? காலத்தால் மறுக்கப்பட்டவர்கள். காலம் கை கொடுக்காமல் கைவிடப்பட்டவர்கள். இதை எதிர்த்து நின்று மேலே வருகிறவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு 39 வயதிலிருந்து மிகவும் உச்சமாக இருக்கும். உச்சத்திற்கும் வருவார்கள். ஆனால் அதுவரைக்கு உண்டு இல்லை என்று ஆக்கும். குறிப்பாக 26 வயது வரை ஒரு வழியாக்கி விடும்.

    அத்தகைய கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.
    பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.

    மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவமூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

    பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

    பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.

    காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

    கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

    உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

    வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'அஷ்டமி திதி விரதம்' ஆகும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.
    அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது 'அஷ்டமி திதி விரதம்' என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் 'கோகுலாஷ்டமி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

    வைகாசி 'அஷ்டமி விரதம்' சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.
    சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.
    பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், வான் மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை. இந்தக் காலச் சக்கரத்தை இயக்குபவர் கால பைரவர்.

    பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது மேலும் சிறப்பு.

    இப்படிப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்டதாக, பெருந்தண்டலம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. இப்பெருவிழாவில் சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    விளம்பி வருடத்தில் (2018 - 2019) ஒவ்வொரு மாதமும் வரும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    அஷ்டமி நாள்    - அஷ்டமியின் பெயர்  -  பூஜை பலன்கள்

    வைகாசி 23 (6-6-2018) புதன்கிழமை இரவு : அதிக அஷ்டமி - தொழில் விருத்தி உண்டாகும்.

    ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி - கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

    ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி - கல்வியில் மேன்மை ஏற்படும்.

    ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல்    : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

    ஆவணி 18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி - லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

    புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை     : சம்புகாஷ்டமி - ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி    - சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

    கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி - தனவரவு உண்டாகும். காலபைரவாஷ்டமி  - கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

    மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி     - தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

    தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி    - மன பயம் விலகும்.

    தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல் :     உயர் பதவி கிடைக்கும்.

    மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி - போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

    பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி - திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

    இந்த நாட்களில் காலையில் சிவபெருமானையும் மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபடுதல் வேண்டும்.
    ×