என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விதமாக முன் மண்டபத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.
    கோவை வடவள்ளி அருகே மருதமலையில் பக்தர்களால் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இன்று கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையும், அதை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து தங்க கவசத்தில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் விதமாக முன் மண்டபத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார். காலை முதலே பக்தர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.  

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அதனை தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. மீண்டும் மாலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை திருவீதி உலா நடக்கிறது.
    “வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக் குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்” (ஏசாயா 45:11).
    வரும் காலம் எப்படி இருக்குமோ? என் குடும்பம் எப்படி செல்லுமோ? என் பிள்ளைகள் எப்படி இருப்பார்களோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வரும்காலம் ஆண்டவருடைய கரத்தில் இருக்கிறது.

    வேதம் சொல்லுகிறது “அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்’’ (தானி. 2:22).

    கர்த்தர் உங்கள் பிதாவாய் இருக்கிறபடியால், நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கலாம். கைரேகைப்படியோ அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ ஒன்றும் உங்களுக்கு நேரிடுகிறதில்லை.

    பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: “தேவன் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத்தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்’’ (தானி. 2:21).

    அந்த அருமை ஆண்டவர் உங்களைப் பார்த்து, நீங்கள் எனக்கு கட்டளையிடுங்கள் என்று சொல்லுகிறார். சற்று சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும் ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படி கட்டளையிடுவது. அது தான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்கு பிதா என்கிற பாசம். உங்களுக்கும், ஆண்டவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது.

    கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, அவருடைய குடும்பத்தில் வந்து சேரும்போது கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார்.

    கர்த்தருக்கு நீங்கள் கட்டளையிடும்படிதான் அவர் உங்களுக்கு அதிகாரங்களையும் ஆளுகையையும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும் போது அவைகள் நீங்குகிறது. அசுத்த ஆவிகளுக்கு கட்டளையிடும் போது அவைகள் ஓடி மறைகிறது. பொல்லாத மனுஷருக்கு கட்டளையிடும் போது அவர்கள் மறைந்து போகிறார்கள். திமிர்வாதக்காரனை நோக்கி நீ உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொன்னால் அவன் நடந்து போவான்.

    பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளை எல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களாக. நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும், அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை எல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

    “நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்’’ (1 சாமு.12:24).

    போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை.
    மதுரை சித்திரை விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
    மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    இன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

    இதையும் படிக்கலாம்...இந்த வார விசேஷங்கள்: 5.04.22 முதல் 11.04.22 வரை
    ஏப்ரல் மாதம் 5-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 11-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    5-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சதுர்த்தி விரதம்
    * சக்தி கணபதி விரதம்
    * மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்
    * சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி

    6-ம் தேதி புதன் கிழமை :

    * சுபமுகூர்த்த நாள்
    * வளர்பிறை பஞ்சமி
    * வசந்த பஞ்சமி
    * மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் பூத அன்ன வாகன பவனி
    * சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

    7-ம் தேதி வியாழக்கிழமை:

    * சஷ்டி
    * மதுரை மீனாட்சி சொக்கர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

    8-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * வளர்பிறை சப்தமி
    * மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் பவனி
    * சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

    9-ம் தேதி சனிக்கிழமை:

    * வளர்பிறை அஷ்டமி
    * சித்தயோகம்
    * அசோகாஷ்டமி
    * குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ரதோற்சவம்
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பறி லீலை
    * சந்திராஷ்டமம்: கேட்டை

    10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * வளர்பிறை நவமி
    * ஸ்ரீராம நவமி
    * குடந்தை ராமபிரான் ரதோற்சவம்
    * சமயபுரம் மாரியம்மன் உற்சவாரம்பம்
    * குற்றாலம் குற்றாலநாதர் அன்ன வாகன பவனி
    * சூரிய வழிபாடு நன்று
    * சந்திராஷ்டமம்: மூலம்

    11-ம் தேதி திங்கட்கிழமை:

    * சித்தயோகம்
    * தர்மராஜ தசமி
    * சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகன புறப்பாடு
    * மதுரை ஸ்ரீமீனாம்சி சொக்கநாதர் நந்தீஸ்வர யாளி வாகன பவனி
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
    * சந்திராஷ்டமம்: பூராடம்
    திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 15-ம் தேதி தேரோட்டமும், 16-ம்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
    திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்டதும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 11-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சுவாமி, அம்மன் புஷ்ப பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், பூதம், காமதேனு, அன்ன வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் திருவிழாவையொட்டி 15-ம் தேதியன்று தேரோட்டமும் 10-ம் திருநாளன்று 16-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதனையொட்டி பட்டிமன்றம், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.விழாவில் திருவெற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் மண்டகப்படி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவில் கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கோவில் ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    வருகிற 13-ந் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி தேரை அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 16-ந் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ந் தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ந் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் தனித்தனியாக புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5.45 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய சாமிகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை சென்றடையும்.

    பின்னர் காலை 6.30 மணிக்கு தியாகராஜர்-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தேரோட்டம் நடைபெற உள்ளது.

    தஞ்சை மேலவீதியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. தேரை பாதுகாக்க மரப்பலகை மற்றும் கண்ணாடியால் கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தையொட்டி அந்த கூண்டு அகற்றப்பட்டது. இந்தநிலையில் தேரை அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுகாலை நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகம், பூஜைகள் செய்யப்பட்டு பந்தக்காலுக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பந்தக்காலை மாவிலை தோரணங்கள், மலர்களால் அலங்காரம் செய்தனர். இதையடுத்து தேரில் பந்தக்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தேரோட்டத்தையொட்டி வருகிற 13-ந் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

    சிம்மவாகனம், சேவு வாகனம், ஹம்சவாகனம், அனுமந்த வாகனம், சூர்ய பிரபை, சந்திரபிரபை, மோகினி அவதாரம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணிய கோட்டி விமானம் ஆகியவற்றில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

    வருகிற 18-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20 மற்றும் 24-ந்தேதிகளில் தங்க பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 22-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    அதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந்தேதி முதல் மே 6-ந்தேதி வரை ஸ்ரீராமானுஜர் உற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி தினமும் காலையும், மாலையும் ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மே 4-ந்தேதி அதிகாலையில் திருத் தேர் நிகழ்ச்சி நடக்கிறது.
    பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது.
    எடப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சித்திரை தேர்த்திருவிழா நடைபெற வில்லை. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் கோகிலா தலைமையில், ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் திருவிழா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் 13 பேர் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    9-ந் தேதி முதல் தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 15-ந் தேதி திருக்கல்யாணமும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 20-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி தேர் சீரமைப்பு பணிகளுக்காக சிறப்பு பூஜைகள் செய்து தேர் வெளியே கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    தூக்க நேர்ச்சையில், ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோயிலை ஒருமுறை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங் கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று தூக்க நேர்ச்சை திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்று வருகிறது.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடைபெற ஒரு கோயிலும், தூக்க நேர்ச்சை நிறைவேற்ற மற்றொரு கோயிலும் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தன்று தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா மார்ச் 26-ம் தேதி கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கொட்டாரக்கரை நீலமனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இதில் 1,098 குழந்தைகள் தூக்க நேர்ச்சைக்கு பெயர் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தூக்க நேர்ச்சை இன்று காலையில் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு தூக்கக்காரர்களின் முட்டு குத்தி நமஸ்காரம் நடந்தது. காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளினார்.

    இதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தூக்க நேர்ச்சை துவங்கியது. தொடர்ந்து நடந்த தூக்க நேர்ச்சையில், ஒரே நேரத்தில் 4 பேர் தங்கள் கைகளில் தலா ஒரு குழந்தையை சுமந்தபடி கோயிலை ஒருமுறை சுற்றி வந்து, தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்து.

    இதன்படி தூக்க வில் 275 முறை கோயிலை வலம் வந்து நேர்ச்சை நிறைவேற்றப்படுகிறது. தூக்க நேர்ச்சை நிறைவுபெற்றபின் வில்லின் மூட்டில் குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவடைகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் ராமச்சந்திரன்நாயர், செயலர் மோகன்குமார், பொருளாளர் ஸ்ரீனிவாசன்தம்பி, துணைத் தலைவர் ஆர். சதிகுமாரன்நாயர், இணைச் செயலாளர் பிஜூகுமார், கமிட்டி உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன்நாயர், ஸ்ரீகண்டன்தம்பி, ஸ்ரீகுமாரன்நாயர், பிஜூ, ஏ. சதிகுமாரன்நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.
    மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை(செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர் வலம் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலில் மின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடந்தாலும், பிரம்மோற்சவ விழாவாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இடையே முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சுவாமி வழக்கம் போல் காலை, இரவு என இருவேளையும் மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் என்று சொல்லக்கூடிய திருவிழா நிறைவு நாளை முடிவு செய்து கொண்டு தொடங்க பெறுவதாகும். அதன்படி சித்திரை தீர்த்தத்தை கணக்கில் கொண்டு அமாவாசை கழித்த இரண்டொரு நாளில் கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழா தொடங்குகிறது.

    12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை(செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவில் வருகிற 12-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ந் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, தெற்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்பத்தில் நடைபெறும். இதற்காக அந்த பகுதியில் பக்தர்கள் அமர்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையிலும் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இதற்கான கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி கோவில் இணையதளத்தில் (WWW.maduraimeenakshi.Org) இன்று முதல் 7-ந் தேதி வரை பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். திருக்கல்யாண விழாவில் இரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.

    திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். திருக்கல்யாணத்திற்கு மறுநாள் வருகிற 15-ந் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 16-ந் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இதையும் படிக்கலாம்...இன்று பங்குனி மாத கிருத்திகை விரதம்
    கடக ராசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் நற்பலன்களை பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
    கடக ராசிக்குரிய நவகிரக நாயகன் சந்திர பகவான். எனவே கடக ராசியினர் தங்கள் ராசிக்குரிய திங்கட்கிழமைகளில் சிவபெருமான் கோயிலில், சிவனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டு வருவது அவர்களின் கிரக தோஷங்கள், கர்ம தோஷங்கள் போன்றவற்றை நீக்கும். பௌர்ணமி தினங்களில் முன்னிரவு நேரத்தில் வானில் தோன்றும் பூரண சந்திரனின் தரிசனம் செய்து வருவது உங்களின் மனதில் நேர்மறை சக்திகளை நிரம்பச் செய்யும்.

    சந்திர பகவான் ஒரு மனிதனின் தாயாருக்கு காரகனாகிறார். எனவே கடக ராசியினர் தினந்தோறும் தங்களின் தாயாரை வணங்கி அவர்களின் ஆசிகளை பெற்று செல்வது உங்களுக்கு பல நன்மைகளை உண்டாக்கும். மாதமொருமுறை கோயில்கள் மற்றும் துறவிகள், ஏழைகள் ஆகியோர்களுக்கு அரிசி தானமளிப்பதால் உங்களுக்கு ஏற்படவிருக்கின்ற எத்தகைய துரதிர்ஷ்டங்களையும் போக்கும் சிறந்த பரிகாரமாக இருக்கும். கோடை காலங்களில் மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலும், விலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டியும் அமைப்பது சிறந்தது. கோவில்களில் இருக்கும் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு அவ்வப்போது அரிசி பொரியை இரையாக அளித்து வருவதும் உங்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.
    ×