search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேர்த்திருவிழா
    X
    தேர்த்திருவிழா

    நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை தேர்த்திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது.
    எடப்பாடியில் உள்ள பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சித்திரை தேர்த்திருவிழா நடைபெற வில்லை. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளதால் தேர்த்திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் கோகிலா தலைமையில், ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி உத்தரவின் பேரில் திருவிழா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் 13 பேர் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேர்த்திருவிழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    9-ந் தேதி முதல் தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் சாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 15-ந் தேதி திருக்கல்யாணமும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 4 நாட்கள் தேரோட்டம் நடைபெறுகிறது. 20-ந் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி தேர் சீரமைப்பு பணிகளுக்காக சிறப்பு பூஜைகள் செய்து தேர் வெளியே கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×