என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி, புனித தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சந்தன கருப்புசாமி கோவிலுக்கு வந்தனர்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அதிகாலை உலுப்பகுடி அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி, மஞ்சள் ஆடைகள் அணிந்தனர். பின்னர் அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சந்தன கருப்புசாமி கோவிலுக்கு வந்தனர்.
பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். இதில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டினர். அதன்பிறகு இரவு 9 மணிக்கு அம்மன் குளத்தில் இருந்து கம்பம் நகர் வலமாக கொண்டுவரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
திருவிழாவில் வருகிற 19, 23, 26-ந்தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்னொளி ரதத்தில் நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருகிறார். இந்த விழா நாட்களில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், மாவிளக்கு, கரும்பு தொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி கழுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் ‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
1. திருக்கடையூர்: எமதர்மனைக் காலால் உதைத்த இடம்
2. திருக்கண்டியூர்: பிரம்மனின் தலையைக் கொய்த இடம்
3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்
4. திருவழுவூர்: யானையின் தோலை உரித்த இடம்
5. திருப்பறியலூர்: தட்சனை சம்ஹாரம் செய்த இடம்
6. திருக்கோவிலூர்: அந்தகாசுரனை வதம் செய்த இடம்
7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த இடம்
8. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதம் செய்த இடம்
பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக தீபாராதனை, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.
9-ம் திருநாளான 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளலும், அதைத் தொடர்ந்து 9 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது.
வழக்கமாக விழா நாட்களில் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவனந்தபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
1997, 2009 ஆகிய ஆண்டுகளில் பொங்கலிடுவதில் உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக கொண்டாட கோவில் அறக்கட்டளை தீர்மானித்து உள்ளது.
நடப்பு ஆண்டு பொங்கல் விழா குறித்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழாக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொங்கல் விழா நாளை மறுநாள் (19-ந் தேதி) காலை 9.45 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கோவில் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளை நடிகர் நெடுமுடி வேணு தொடங்கி வைக்கிறார். அதே மேடையில் அவருக்கு இந்த ஆண்டுக்கான அம்பா விருது கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது.
பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு விழாவின் 9-வது நாளான வருகிற 27- ந் தேதி நடைபெறும். அதாவது மாசி மாதத்தின் கார்த்திகை நட்சத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் விழா நடக்கிறது. 10-வது நாள் 28-ந் தேதி இரவு குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறும்.
27-ந் தேதி காலை 10.50 மணிக்கு கோவில் பண்டார அடுப்பில் பொங்கல் வழிபாடு நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கோவில் வளாகம், தெருவீதிகள் மற்றும் சாலையோரங்களில் பொங்கலிட அனுமதி இல்லை. ஆனால் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட்டு வழிபாடு நடத்த தடை இல்லை. மாலை 3.40 மணிக்கு பொங்கல் நிவேத்யம் செய்யப்படும். கோவில் பூசாரிகள் பொங்கல் நிவேத்ய சடங்குகளில் பங்கேற்க மாட்டார்கள்.
விழாவையொட்டி சிறுவர்களுக்கான குத்தியோட்ட நேர்ச்சை கொரோனா பரவலை தொடர்ந்து பண்டார ஓட்டத்துடன் முடித்து கொள்ள தீர்மானிக்கப்பட்டு உள்ளது. அதே போல் 10 வயது முதல் 12 வயது வரையிலான சிறுமிகளுக்கான தாலப்பொலி நேர்ச்சை வழிபாடுகளும் கட்டுப்பாட்டுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 11-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 12-ந்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது.
அதைத்தொடர்ந்து மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நேற்று நடந்தது. திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் அம்மனுக்கு மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்த பின் கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா தலைவர் ஏ.கந்தசாமி தலைமையில் சபா மண்டபத்தில் இருந்து அம்மனுக்கு சாத்துப்படி செய்யப்படும் மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் ஆகியவை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது.
அதன்பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் புடவை, திருமாங்கல்யம் சாத்துப்படி செய்தல் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் டவுன் மார்க்கெட் குமரன் தெரு சாம்பான் குலத்தினர் சார்பில், பாலக்கொம்பு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ரதவீதிகள் வழியே சுற்றி கோவிலை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து பாலக்கொம்பு கோவிலில் ஊன்றப்பட்டது. அதன்பிறகு பக்தர்கள் பாலக்கொம்புக்கு மஞ்சள் நீர் ஊற்றினர். இதனையடுத்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மஞ்சள் வண்ண துணியில் சிங்க வாகனத்தில் கோட்டை மாரியம்மன் அமர்ந்து இருப்பதை போன்று வரையப்பட்ட கொடி தயார் நிலையில் இருந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கொடியில் உள்ள அம்மன் படத்திற்கு கண் திறப்பு நடந்தது.
அதைத்தொடர்ந்து பகல் 12 மணி அளவில் கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சுற்றி இருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று கோஷம் எழுப்பினர்.
இதில் விஸ்வகர்மா அறக்கட்டளை செயலாளர் ஆனந்தன், சங்க செயலாளர் சந்தானம், இணை செயலாளர் சின்னு, சங்க நிர்வாகிகள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு விஸ்வகர்ம அறக்கட்டளை இயக்குனர் குமரேசன் மற்றும் நண்பர்கள் சார்பில் அன்னதானம் நடந்தது.
மாலை 5 மணி அளவில் கோவிலில் உள்ள கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணி அளவில் அம்மன் மின்னொளி தேரில் எழுந்தருளி வீதிஉலா தொடங்கி ரதவீதிகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தது. இரவு கோவில் கலையரங்கில் திண்டுக்கல் விஸ்வகர்ம இளைஞர் சங்கம் சார்பில் இன்னிசை கச்சேரி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் 11-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதியில் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 11-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகா சங்கர ஹோமம், காலை 8 மணிக்கு சங்கனூரில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
காலை 10 மணிக்கு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.

திவ்யப் பிரதோஷம்
பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.
தீபப் பிரதோஷம்
பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். இது தீபப் பிரதோஷம் ஆகும்.
அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம்
வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, ‘சப்தரிஷி மண்டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபடுவதும், சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதுமே அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.
மகா பிரதோஷம்
ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.
குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, ‘தண்டீசுவர ஆலயம்.’ திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ‘திருப்பைஞ்ஞீலி’ சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ‘ஸ்ரீவாஞ்சியம்’ சிவ ஆலயம், கும்ப கோணம் - கதிராமங்கலம் சாலையில் உள்ள ‘திருக்கோடி காவல்’ சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்பாக வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.
உத்தம மகா பிரதோஷம்
சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது.
கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இதனை லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றும் சொல்வது உண்டு. இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று வருவதால், தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.
இதையொட்டி தேவாலயங்களில் இன்று காலை சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும்.
தவக்காலமான 40 நாட்களின் தொடர்ச்சியில் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் நிகழ்வுகளும் நடைபெறும். அதன்பின்னர் புனித வெள்ளியும் கடைப்பிடிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-வது நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.

வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டவர்கள், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆவார்கள். இவர்களில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர், சிவனின் ஆனந்தத் தாண்டவங்களை தரிசித்த தலங்கள் ‘நவ புலியூர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒன்பது ஆலயங்களையும் மிகச் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பெரும்பற்றப்புலியூர்
இந்தப் பெயரைக் கேட்டதும் இது எங்கே இருக்கிறது என்று மலைக்கத் தேவையில்லை. பிரசித்திப் பெற்ற சிதம்பரம் ஆலயத்தின் மற்றொரு பெயர்தான் இது. மேலும் தில்லை, பொற்புலியூர் என்ற பெயர்களும் இந்த தலத்திற்கு உண்டு. இங்கு பதஞ்சலி வகுத்த பூஜா சூத்திரப்படியும், வியாக்ரபாதர் வகுத்த புஷ்பார்ச்சனைப் படியும், தினமும் நடராஜருக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சமயக்குரவர்கள் நால்வரும் வழிபட்ட முக்கியமான திருக்கோவில், சிதம்பரம் ஆகும்.
திருப்பாதிரிப்புலியூர்
கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது, திருப்பாதிரிபுலியூர். ‘பாதிரி’ என்ற மரத்தை தலமரமாக கொண்டிருப்பதாலும், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இது இப்பெயர் பெற்றது. பாதிரி மரத்தின் அடியில் அமர்ந்து தவம் இருந்ததன் பலனாக பார்வதி தேவி இறைவனை மணம்புரிந்த தலம் இதுவாகும். இறைவனின் பெயர் ‘பாடலீஸ்வரர்’, இறைவியின் திருநாமம் ‘பெரியநாயகி’ என்பதாகும்.
எருக்கத்தம்புலியூர்
வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், தற்போது ராஜேந்திரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில்தான் வியாக்ரபாதர் வழிபட்ட நீலகண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. இறைவியின் திருநாமம் ‘நீலமலர்க்கண்ணி’ என்பதாகும். இந்த ஆலயத்தின் தல மரமாக, வெள்ளெருக்கு உள்ளது. முருகப்பெருமான், உருத்திரசன்மராக தோன்றி வழிபட்டதால் ‘குமரேசம்’ என்றும், தேவகணங்கள் வழிபட்டதால் ‘கணேசுரம்’ என்றும் பெயர் வழங்கப்படுகிறது. கடலூரில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் எருக்கத்தம்புலியூர் உள்ளது.
ஓமாம்புலியூர்
சிதம்பரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஓமாம்புலியூர். இத்தல மூலவராக உயர்ந்த பீடத்தில் தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இறைவனின் திருநாமம், ‘துயர் தீர்த்த நாதர்’ என்னும் ‘பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்’ என்ப தாகும், இறைவியின் பெயர் ‘பூங்கொடிநாயகி.’ பார்வதி தேவிக்கு, தட்சிணாமூர்த்தியாக இருந்து பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்ததாலும், வியாக்ரபாதர் வழிபட்டதாலும் இந்த திருத்தலத்திற்கு ‘ஓமாம்புலியூர்’ என்று பெயர் வந்தது.
கானாட்டம்புலியூர்
கடலூர் மாவட்டத்தில் உள்ளது, கானாட்டம்புலியூர். பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. இத்தல இறைவனின் பெயர், பதஞ்சலிநாதர் என்பதாகும். இறைவியின் திருநாமம், கண்ணார்குழலி. சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் வழிபட்டால், நன்மைகள் பல பெறலாம். சிதம்பரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், கானாட்டம்புலியூர் உள்ளது. ஓமாம்புலியூரில் இருந்தும் இந்த ஆலயத்திற்குச் செல்லலாம்.
சிறுபுலியூர்
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிறுபுலியூர். இத்தல இறைவன், ‘வழித்துணைநாதர், மார்க்கபந்தீஸ்வரர், கங்காளநாதர்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இத்தலத்தை அடைந்தபோது இரவு வேளை வந்துவிட்டது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் காட்சி தந்து, யாத்திரை நிறைவேற உதவி செய்தனர். எனவே இத்தல இறைவன் ‘வழித்துணைநாதர்’ என்று பெயர் பெற்றார். இங்கு பெருமாளுக்கும் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாளின் திருநாமம் ‘அருள்மாகடலமுத பெருமாள்’ என்பதாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. இங்கு பெருமாள், புஜங்க சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வியாக்ரபாதர், பெருமாளை பூஜித்த நிலையில் காட்சி தருகிறார்.
அத்திப்புலியூர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அத்திப்புலியூர் திருத்தலம். இங்குள்ள சிதம்பரேஸ்வரர் கோவிலில், வியாக்ரபாதர் வழிபாடு செய்திருக்கிறார். ‘அத்தி’ என்றால் ‘யானை’ என்று பொருள். இங்கு யானையும், புலிக்கால் கொண்ட வியாக்ரபாதரும் வழிபாடு செய்ததால் இது ‘அத்திப்புலியூர்’ ஆனது. மூலவர் திருநாமம் ‘சிதம்பரேஸ்வரர்’ என்பதாகும். இவர் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கிறார். இறைவியின் பெயர், சிவகாமசுந்தரி. இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவலிங்கத்தின் பின்புறம் சோமாஸ்கந்தரை தரிசனம் செய்யலாம். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், அகத்தியர் ஆகியோருக்கு, தன்னுடைய திருமணக் காட்சியை இறைவன் காட்டி அருளிய இடம் இது. இந்தத் தலம் ‘தட்சிண கேதாரம்’ என்றும் போற்றப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்வேளூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், அத்திப்புலியூரை அடையலாம்.
பெரும்புலியூர்
திருவையாறுக்கு வடமேற்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில், பெரும்புலியூர் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, வியாக்ரபாத முனிவர் வழிபாடு செய்துள்ளார். இங்குள்ள இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர், இறைவியின் பெயர், சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தில், கல்லால் வடிக்கப்பட்ட நடராஜர் மூர்த்தம் இருக்கிறது.
தப்பளாம்புலியூர்
திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தப்பளாம்புலியூர். சுயம்புவாக தோன்றி வீற்றிருக்கும் இத்தல இறைவனின் திருநாமம், வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம், நித்யகல்யாணி. வியாக்ரபாதருக்கும், மண்டூக மகரிஷிக்கும் இறைவன் அருள்பாலித்த தலம் இது. இந்த ஆலயத்தில்தான், வியாக்ரபாதருக்கு இருந்த புலிக்கால் மற்றும் புலிக்கையை இறைவன் நீக்கி அருளியதாக தல புராணம் சொல்கிறது. பதஞ்சலி, வியாக்ரபாதர், மண்டூக மகரிஷி ஆகிய மூவரும், ஈசனின் திருநடனக் காட்சியை கண்டு களித்த தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு கல்லால் வடிக்கப்பட்ட, நடராஜர் மூர்த்தம் உள்ளது.

பஞ்சமி திதியானது, ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும்.
ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் பஞ்சமி திதியை, ‘கருட பஞ்சமி’ என்பார்கள். இந்த தினத்தில் கருடனை வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும். அதே போல், ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளில் வரும் பஞ்சமி திதியானது, ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது சகல சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும். இந்த இரண்டு பஞ்சமி தினங்களைத் தவிர்த்து, ‘வசந்த பஞ்சமி’ என்ற சிறப்புமிக்க தினமும் உள்ளது. ஆனால் அது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரிய அளவில் கொண்டாடுவது இல்லை.
ஏனெனில் தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை ஒட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் வட நாட்டில் இந்த நிகழ்வை துர்க்கை வழிபாடாக நடத்துவார்கள். வசந்த பஞ்சமி தினத்தைத்தான், வடநாட்டினர் சரஸ்வதியை வழிபடுவதற்கான விழாவாக கடைப்பிடிக்கிறாா்கள். தமிழ்நாட்டில் முன் காலத்தில் காமன் பண்டிகை என்ற பெயரில் வசந்த பஞ்சமி கொண்டாடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உலகத்தில் உள்ள அண்ட சாரசரங்களையும், அதில் பல்வேறு விசித்திரமான உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, அவற்றின் மூலமாக திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் இந்த உலகமானது மிகவும் அமைதியாக, ஒலிகள் இன்றி இருந்தன. இது பிரம்மதேவனின் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது. அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தி யது. அதில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் வைத்திருந்தாள். அதோடு தன்னுடைய மடியில் வீணை ஒன்றைத் தாங்கி, அதை தன் கரங்களால் மீட்டத் தொடங்கினாள். அதில் இருந்து தெய்வீகமான இசை வெளிப்பட்டது. அந்த இசையின் மூலமாக, பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் ஓசை நயம் பெற்றன. கடல் பெரும் இரைச்சலுடன் அலைகளை உண்டாக்கின. ஆறுகள் ஓடும் சத்தம் சலசலக்கத் தொடங்கியது. மனிதன் மொழியறிவைப் பெற்றான். காற்று பெரும் சத்தத்துடன் வீசத் தொடங்கியது. மற்ற அனைத்து உயிரினங்களும் தங்களது இருப்பை சத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்தின.
இதைக் கண்ட பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அவளே ‘சரஸ்வதி.’ மேலும் அந்தப் பெண்ணை தன்னுடைய நாக்கில் அமர்த்திக்கொண்டார். சரஸ்வதி தோன்றிய நாளே ‘வசந்த பஞ்சமி’ என்று சில புராணங்கள் சொல்கின்றன. இந்த சிறப்புமிக்க நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம். வடமாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பாா்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்ற நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது.
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அன்றைய தினம் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபாடு செய்வார்கள். அன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ் வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர் மாலை அணிவிப்பார்கள். பூஜையில் வைக்கப்படும் பிள்ளையார் கூட, மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். சரஸ்வதிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற நைவேத்தியங்களாகவே இருக்கும். பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படி மஞ்சள் வண்ணம் பூசப்படுவதாக சொல்கிறார்கள். இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடை களையே அணிவார்கள். குஜராத் மாநிலங்களில், இளைஞர்கள் பல வண்ண பட்டங்களை காற்றில் பறக்கவிடுவார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோவில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோவில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன் நாதர் கோவில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி திருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து கோபுர வாசல்கள் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் தான் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள அம்மன் சன்னதி வழியாக பொது தரிசனத்துக்கும், தெற்கு கோபுரம் வழியாக கட்டண தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அர்ச்சனை போன்ற பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
நிபந்தனைகளை பின்பற்றி சுவாமி, அம்பாளை தரிசனம் மட்டும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வந்தது. பழைய நடைமுறையை போல, சுதந்திரமாக தரிசனம் செய்யவும், பூஜைகளை நடத்தவும், அர்ச்சனை செய்யவும் எப்போது அனுமதிப்பார்களோ என ஏங்கி வந்தனர்.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் அனைத்து கோபுரவாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 11-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களை கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாகவும் அனுமதிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 திசைகளிலும் உள்ள கோபுரங்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூஜை, அர்ச்சனை செய்வதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் தூக்கத்திருவிழா வருகிற 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி நடக்கிறது.

இதுபற்றி கோவில் நிர்வாக செயலாளர் மோகன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பத்ரகாளியம்மன் கோவில் தூக்க திருவிழா வருகிற 9-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது. குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை 18-ந் தேதி நடக்கிறது. தூக்க நேர்ச்சையில் கலந்து கொள்பவர்கள் பெயர் பதிவு 1-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு தூக்க நேர்ச்சையில் பெயர் பதிவு செய்தவர்கள், இந்த ஆண்டு தூக்க நேர்ச்சை நடக்கும் தினத்தன்று, தூக்க நடைக்கு நிறுத்தல் நேர்ச்சை செய்து கொள்ளலாம். விழா நாட்களில் பக்தர்கள் கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.