
நிபந்தனைகளை பின்பற்றி சுவாமி, அம்பாளை தரிசனம் மட்டும் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இது பக்தர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வந்தது. பழைய நடைமுறையை போல, சுதந்திரமாக தரிசனம் செய்யவும், பூஜைகளை நடத்தவும், அர்ச்சனை செய்யவும் எப்போது அனுமதிப்பார்களோ என ஏங்கி வந்தனர்.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வழக்கம் போல் அனைத்து கோபுரவாசல்கள் வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்றும், பூஜை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 11-ந்தேதி தினத்தந்தியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களை கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாகவும் அனுமதிக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 திசைகளிலும் உள்ள கோபுரங்களின் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூஜை, அர்ச்சனை செய்வதற்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.