என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா
பொது பொருள்: பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இன்பம் அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன். சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எனிலடங்கள் பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழாவில் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் 15 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனிப் பெருவிழா கடந்த 18-ந் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 28-ந் தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்கார லீலையும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முன்தினம் முருகப்பெருமான் தெய்வானைக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலையில் தேரோட்டம் கோலகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தேரில் முருகப்பெருமான்-தெய்வானை எழுந்தருளினர். முதல் ஸ்தானிகர் சுவாமிநாதன் தேரில் நின்று வெள்ளை (பராம்பரிய துண்டு) வீசினார். உடனே அங்கு திரளாக கூடி இருந்த பக்தர்கள் குன்றத்து குமரனுக்கு அரோகரா, சுப்பிரமணியசாமிக்கு அரோகரா என்று விண்ணைத்தொடும் அளவிற்கு பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரைதொட்டு வணங்கி வடம்பிடித்து இழுத்தனர்.
தேரானது நிலையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டது. இதேவேளையில் விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத் தேர் முன்னே வலம் சென்றது. கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் தென்றலாய் மெல்ல, மெல்ல ஆடி அசைந்தபடி பெரிய தேர் வலம் வந்தது. சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை மகா தேர் சுற்றி வந்து 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது. தேர்நிலைக்கு வந்ததும் வாழைப்பழங்களை டஜன், டஜனாக சூறை விட்டு தங்களது நேர்த்தியை செலுத்தினார்கள். தேரோட்டத்தில் சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து இருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சிலர் காவடிகள், பால்குடங்கள் எடுத்து வந்து நேர்த்தியை செலுத்தி னார்கள். திருவிழாவின் நிறைவுநாளான இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா தலமாக விளங்கும் இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் ‘பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயத்தின் எதிரே வங்கக்கடல் அமைந்துள்ளதால் மேலும் சிறப்புடன் விளங்குகிறது.
உலக மக்களின் பாவங்களுக்காக 40 நாட்கள் உபவாசம் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த ஏசுவின் பாடுகளை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். ஏசு சிலுவையில் உயிர் விட்ட நாள் ‘புனிதவெள்ளி' ஆகவும், மீண்டும் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ெஜபம், மன்றாட்டு, திருப்பலி போன்றவை நடந்து வந்தது. கடந்த 28-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.
ஏசு சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக உள்ளதுபோல், நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள் என்றார். இந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவுகூரும் வகையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.
இதில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் தந்தையர்கள், அருள் சகோதரிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் பெரிய வியாழன் நிகழ்ச்சியில் பங்குத்தந்தையர்கள், சீடர்களின் பாதத்தை கழுவி முத்தமிடுவது வழக்கம்.
ஆனால் கொரோனா தொற்று பரவலின் காரணமாக பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதை தொடர்ந்து திவ்யநற்கருணை வழங்கப்பட்டது.
இன்று(வெள்ளிக்கிழமை) பேராலயத்தில் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப்பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்டவைகள் கலையரங்கில் நடைபெறுகிறது.
பின்னர் ஏசுவின் உருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பேராலய மேல் கோவிலுக்கு பவனியாக எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.. 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

தாயமங்கலம் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி தங்க கவசத்தில் முத்துமாரியம்மன் திருவீதி உலா வந்தார். 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 23-ந்தேதி இரவு காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து பொங்கல் வைபவம் மற்றும் மின்னொளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ம் திருநாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அங்கப்பிரதட்சணம், அலகு குத்துதல், கரும்பு தொட்டில் சுமந்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் தங்க கவசத்தில் எழுந்தருளிய முத்துமாரியம்மன் பக்தர்கள் வெள்ளத்தில் திருவீதி உலா வந்தார். 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தாயமங்கலம் கோவில் விழாவையொட்டி மதுரை, சிவகங்கை, காரைக்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும்.
இன்று புனித வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அந்த நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.
அந்த 40 நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையை புனித வெள்ளிக்கிழமையாகவும், துக்க நாளாகவும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்.
இந்த புனித வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளில் தேவாலயங்களில் மும்மணி நேர சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடத்தப்படும்.
சிலுவையில் அறையப்பட்ட நாளில் இருந்து 3-வது நாளில் இயேசு உயிர்ந்தெழுந்தார். அந்த நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடுவார்கள்.

சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன்.
சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன். பண்ணாரி என்ற இந்த இடத்தில் குடிகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களை கைத்தாங்கி காப்பாற்றும் மாரி அம்மனே, பண்ணாரி அம்மன் அல்லது பண்ணாரி மாரியம்மன் என்ற பெயர்கள் கொண்டு வீற்றிருக்கிறார். சுற்றிலும் அடர்ந்த காடாக இருக்கும் பண்ணாரியில் எப்போதும் யானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் எந்த காட்டு விலங்காலும் தனது பக்தர்களுக்கு தீங்கு நேராமல் காத்து வரும் அன்னையின் அருளே, பண்ணாரியின் பெருமை.
ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய தலமாக பெயர் பெற்று விளங்குகிறது பண்ணாரி மாரியம்மன் கோவில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாய் தோன்றி, இன்று மக்கள் மனதில் குடியேறி இருக்கும் பண்ணாரி அம்மனின் அருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
பண்ணாரி அருகே உள்ள காட்டு ஆறு தோரணப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்டாற்றில் எப்போதும் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கும். அதுமட்டுமின்றி இந்த பகுதி மிகவும் அமைதி குடிகொள்ளும் பகுதியாகவும் இருந்து வந்தது. இதனால் பண்ணாரியின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை மேய்க்கும் பகுதியாக இந்த இடத்தை தேர்ந்து எடுத்து வைத்திருந்தனர்.
அப்படி மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் தோரணபள்ளத்தில் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். மாடுகள் ஒருபுறம் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, காட்டாற்றின் மறுகரையில் புலிகள் தண்ணீர் குடிக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், பசுக்களை கண்ட புலிகள் அவற்றை துரத்துவதோ, புலிகளை கண்ட பசுக்கள் மிரண்டு ஓடுவதோ இல்லை என்ற அளவுக்கு அமைதி குடிகொண்டு இருந்தது. இதனால் கிராம விவசாயிகள் காட்டுப்பகுதியாக இருந்தாலும் பண்ணாரி பகுதியினை மாட்டு தொழுவங்கள் போடும் பகுதியாக பயன்படுத்தினார்கள். மாடுகளை கவனிக்க வேலையாட்கள் இருந்தனர்.
அவர்கள் பசுக்களை பகல் பொழுதில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதும், மாலையில் தொழுவத்தில் அடைத்து பாதுகாப்பதுமாக இருந்தனர். கன்று ஈன்ற பசுக்களில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று அக்கம்பக்கத்து கிராமங்களில் விற்றும் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த பகுதி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்ல குறுக்கு வழியாக இருந்ததால் வியாபாரிகள் நடைபயணமாகவும், வண்டிகள் கட்டிக்கொண்டும் பண்ணாரி வழியாக செல்வது உண்டு.
இப்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், பண்ணாரி பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தொழுவத்தில் காராம் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த பசு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. இதனால் அதிகம் பால் கறந்து விற்கலாம் என்று அந்த பசுவை கவனித்து வந்த வேலைக்காரர் நினைத்தார். ஆனால் அவர் பால் கறக்க அருகில் சென்று விட்டால் அவருக்கு பிடி கொடுத்ததே இல்லை. மற்ற நேரங்களில் எல்லாம் சாதுவாக இருக்கும் காராம்பசு பால் கறக்க சென்றால் மட்டும் அவரது கைக்கு பிடிபடாமல் சென்று விடும்.
கன்றுக்குட்டிக்கும் அது பால் கொடுப்பதில்லை என்பதை அவர் பார்த்து வியந்து போனார். இப்படி ஒரு பசுமாடு இருக்க முடியுமா என்று யோசனையில் இருந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி பசுவிடம் பால் குடிக்க ஓடிச்சென்றது. ஆனால், காராம் பசு, கன்றுக்குட்டியிடம் பிடி கொடுக்காமல் வேறு திசையில் ஓடியது. அதைப்பார்த்த வேலையாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார். வேகமாக ஓடிய பசு ஒரு இடத்தில் நின்றது. அதுவரை ஓடிய எந்த களைப்பும் இன்றி அது மிகவும் தெம்பாக அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்த அவருக்கு இன்னும் ஆச்சரியம். எங்கேயோ காட்டுக்குள் ஓடி காட்டு விலங்குகளிடம் பசு சிக்கிவிடுமோ என்று பயந்த அவருக்கு பசு ஒரே இடத்தில் அமைதியாக நின்றதால் பிடித்து விடலாம் என்று அவரது மனமும் அமைதியானது.
திடீரென்று அவரது மனம் அமைதியானது. தெய்வீக தென்றல் அந்த பகுதியில் வீசுவதை உணர்ந்தார். அவரது பார்வை பசுவின் மீதே இருந்தது. பசு அங்கிருந்த ஒரு வேங்கை மரத்தின் அடியில் சென்றது. அங்கு காணாம்புற்கள் ஓங்கி வளர்ந்திருந்தது. அதனுள் பசு நடந்து சென்றது. பசு புல் சாப்பிடத்தான் வந்திருக்கும் என்று நினைத்த வேலையாள் அமைதியாக நடந்து அருகில் வந்தார். ஆனால் என்ன ஆச்சரியம், பால்கறக்க பிடி கொடுக்காத காராம்பசு அங்கு ஒரு இடத்தில் தன்னிச்சையாக பாலை சொரிந்து கொண்டிருந்தது. பால் முழுவதும் முடிந்த பின்னர் எதுவும் நடக்காதது போன்று பசு தொழுவத்தை வந்து சேர்ந்தது.
தினமும் பால் கறக்கும் நேரத்தில் பசு காட்டுக்குள் செல்வதும் அங்கு தனிமையான இடத்தில் பால் சொரிந்து கொண்டு தொழுவத்துக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இதனை வேலையாளும் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதே நேரம் பசுமாட்டு பால் என்ன ஆனது என்று கேட்கும் முதலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்த அவர், உடனடியாக சென்று முதலாளியிடம் விவரத்தை கூறினார். ஆனால் அவருக்கு இது புதிய கதையாக இருந்தது. மேலும், வேலையாள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.
அவருக்கு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டியது இருந்தது. எனவே வேலையாள் கூறிய இடத்துக்கு தனது அக்கம்பக்கத்தினரையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவர்கள் வேலையாள் சொன்ன இடத்தில் மறைந்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பசு காணாம்புற்கள் வளர்ந்து இருந்த இடத்துக்கு வந்து வழக்கம்போல பாலை சொரிந்து விட்டு புறப்பட்டது. ஆச்சரியம் நீங்காத முதலாளியும் உடன் வந்தவர்களும் அங்கே வந்து வளர்ந்து இருந்த காணாம்புற்களை அகற்றினார்கள். வேங்கை மரத்தின் அடிப்பகுதியில் பசு பால்சொரிந்த இடத்தில் புற்கள் அகற்றப்பட்டபோது பாலின் ஈரம் காயவில்லை. அங்கே ஒரு சுயம்புலிங்கம் தென்பட்டது. லிங்கத்தில் பசு சுரந்த பால் வழிந்தோடியது. அவர்கள் அதைப்பார்த்து வியந்து நிற்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று அருள்வாக்கு கூறினார்.
'நான்... கேரளாவில் உள்ள வண்ணார்காட்டில் இருந்து, மைசூர் செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக வந்தேன். இந்த இடத்தின் இயற்கை சூழல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனிமேல் நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்வேன்...' என்று அவர் அருள் வாக்கு உரைத்தார். அதைக்கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அம்மா தன்னை வெளிப்படுத்தவே பசுவின் மூலம் விளையாடல் செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தனர். பண்ணாரியில் வெளிப்பட்ட காரணத்தால் இந்த மாரியம்மனை பண்ணாரி மாரியம்மன் என்று அழைத்தனர். சுயம்பு அம்மனுக்கு காணாம்புற்களால் கூரை வேய்ந்து ஒரு சிறிய கோவிலை உருவாக்கினர் அந்த கிராம மக்கள். அன்று முதல் அம்மனுக்கு வழிபாடு தொடங்கியது. கிராம மக்கள் தவறாமல் வந்து அம்மனை வழிபட்டனர். குண்டம் திருவிழா நடத்தப்பட்டது. வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த பண்ணாரி அம்மன் புகழ் எங்கும் பரவியது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பண்ணாரி அம்மன் அருள் ஒளி பரவியது. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தெய்வமாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார். கேரளாவில் இருந்தும் பண்ணாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பிரம்மநந்தி வீதிவிடங்கவிநாயகருக்கு பின்னால் உள்ளார். மழை வேண்டி இவர் மீது நீர் நிரப்பினால், மழை கொட்டும் என்பது ஐதீகம்.
திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்றவுடன், முதலில் இடது பக்கம் அமர்ந்துள்ள வீதிவிடங்க விநாயகரை வணங்க வேண்டும். பிரம்மநந்தி வீதிவிடங்கவிநாயகருக்கு பின்னால் உள்ளார்.
இவர் கண்கண்ட தெய்வம். மழை வேண்டி இவர் மீது நீர் நிரப்பினால், மழை கொட்டும் என்பது ஐதீகம். பசுக்கள் பால் கறக்காமல் இருந்தால், இவருக்கு அருகம்புல் சாற்றி, அதனை பசுவுக்கு கொடுத்தால் நன்றாக பால் கறக்கும் என்பர். தெற்கு பிரகாரத்தில் ஆகாச விநாயகர் அருள்பாலிக்கிறார். விநாயகரை வணங்கி விட்டு, மேற்கு நோக்கிச் சென்றால் துலாபார மண்டபம் உள்ளது. கோவிலின் வடக்கே கமலாம்பாள் சன்னதி உள்ளது.
இதேபோல, சண்முகர், சரஸ்வதி, பிரம்மலிங்கம், வசிட்ட லிங்கம், அத்திரி லிங்கம், பரத்வாஜலிங்கம், ரவுத்திர துர்க்கை ஆகியோர் திருவாரூர் தியாக ராஜர் கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விமானத்தின் கீழ் மூலஸ்தானம் இருக்க வேண்டும். ஆனால், தியாகேசர் உற்சவரானதால், சற்றுத்தள்ளி உள் மண்டபத்தில் உள்ளார். தீராத நோய், கடன் தொல்லை ஆகியவற்றை போக்க வல்லவர் ருணவிமோசனர்.

திருவெள்ளறை பெருமாள், தாயாருக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் பெருமாள், தாயார் புறப்பாடும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் இக்கோவில் உற்சவர் செந்தாமரைகண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்காக புறப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள், தாயார் எழுந்தருளினர்.
அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்னர் நள்ளிரவு வரை பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) அதிகாலை திருவெள்ளறை சென்றடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் வரும் 6-ந் தேதி காலை நடைபெறுகிறது.

கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கடந்த 28-ந் தேதி குருத்தோலை திருநாள் நடந்தது. அன்று முதல் ஈஸ்டர் திருநாள் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படும்.
இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் நாளை நடை பெறுகிறது. சீரோ மலபார் சபை ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.
மார்தோமா சபையின் ஆலயங்கள் மற்றும் தாம்பரம் பகுதியில் உள்ள இச்சபையின் ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.
பாடி பெத்தேல் ஆலயத்திலும் நாளை புனித வெள்ளி வழிபாடுகள் நடைபெறுகிறது. இதுபோல செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆலயம் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
பாரிமுனை, சின்னமலை, சாந்தோம், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெறும். கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சாந்தோம் ஆலயத்தில் பங்கேற்று நற்செய்தி அளிக்கிறார்.
சி.எஸ்.ஐ. கதிட்ரல் தேவாலயத்தில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்து கொள்கிறார். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பகல் 11.30 மணிக்கு புனித வெள்ளி வழிபாடு தொடங்கி 3 மணி நேரம் நடைபெறும். இதேபோல இ.சி.ஐ. பெந்தே கோஸ்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று மாலை புனித வியாழன் வழிபாடுகள் நடைபெறுகிறது. இதில் பாதம் கழுவும் சடங்குகள் நடக்கிறது. தொடர்ந்து நற் கருணை ஆராதனை நடை பெறுகிறது.
கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்போர் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
வருகிற ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றும் அனைத்து ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும்.
இதுவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அட்சதை தூவி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான்- தெய்வானைக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது.
இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணியளவில் கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு தங்கம், பவளம், வைடூரியத்திலான நகை அணிகலன்களாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் மணக்கோல அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியே பசுமலை மூலக்கரையில் உள்ள சந்திப்பு மண்டபத்திற்கு சென்றார். இதே வேளையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் புறப்பட்டு திருப்பரங்குன்றம் சந்திப்பு மண்டபத்திற்கு வந்தனர். வழி நெடுகிலும் உள்ள பல்வேறு மண்டபங்களில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதற்கிடையில் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்றது. விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்த மண மேடையான ஆறுகால் மண்டபத்தில் 11.05 மணிக்கு தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து 11.10 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், 11.15 மணிக்கு மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். முருகப்பெருமானின் பிரதிநிதியும், தெய்வானையின் பிரதிநிதியுமாக இருந்த பட்டர்கள் ஒருவருக்கொருவர் பூமாலை மற்றும் வஸ்திரங்கள் மாற்றிக் கொண்டனர்.
நாதசுவரம் ஒலிக்க, கெட்டி மேளம் முழங்க பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்கி அட்சதை தூவ, மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் அருள் பார்வையில் பகல் 11.45 மணிக்கு முருகப்பெருமான் தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடந்தது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பி பயபக்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நிமிடமே பெண்கள் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொண்டனர். ஏராளமான பக்தர்கள் மொய் எழுதினர். இரவு 7 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகே பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று காலை மகா தேரோட்டம் நடைபெறுகிறது.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடை காலத்தில் பரவும் நோய்களில் ஒன்றான அம்மை நோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய் தீர அம்மனை மனதார வேண்டிக் கொள்வார்கள். குறிப்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இதுபோல் மற்ற நோய்களுக்கும் அம்மனின் தீர்த்தம் மருந்தாக பயன்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் தெரிவித்தனர்.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், நேர்த்திக்கடன் நிறைவேற்றியவுடன் கூடைகளில் வாழைப்பழங்களை எடுத்து வருவார்கள். பின்பு அவற்றை கோவில் முன்பு நின்று பழங்களை சூறையிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த வேண்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டாண்டு காலமாக தொன்றுதொட்டு இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை யொட்டி நேற்று இரவு மின்னொளியில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தென் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவையொட்டி நேற்று இரவு மின்சார தீப அலங்காரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் தேர் கோவில் முன்பு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேரை ஏராளமான பக்தர்கள் இழுத்து வந்தனர். தேர் கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் 2-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றது.