என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது.
தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதில் முககவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

கரும்பீஸ்வரர் கோவிலில் கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை கொள்ளிடக்கரையோரத்தில் கரும்பீஸ்வரர்(சிவன்) கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள் சூரிய ஒளி சிவன் மீது விழும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர்
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி வாரமாக கடந்த 28-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி நடந்தது.
ஏசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும் பெரிய வெள்ளி என்றும் கிறிஸ்தவர்கள் அழைக்கின்றனர். இந்த நாளை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கிறார்கள். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று புனித வெள்ளியை யொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி ஆலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சிலை வைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் கலையரங்கத்தில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தை, உதவி பங்குத்தந்தையர்கள் ஆகியோர் சிலுவை ஆராதணை செய்தனர்.
ஆண்டு தோறும் புனித வெள்ளி அன்று ஏசு சிலையின் பாதத்தை பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து கலையரங்கத்தில் இருந்து ஏசு சிலை ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டது. அபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையை ஆராதணை செய்தனர். பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக மேல்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் யாகப்பா ராஜரெத்லினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் ஆகிய சேவைகளை ஆண்டுக்கு ஒரு முறை நடத்த ஆலோசனை நடத்தி வருவதாக முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ். ஜவகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை 9 மணியில் இருந்து 10 மணிவரை பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ.) நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டு பதிவு செய்து கொண்டார்.
அப்போது பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு கே.எஸ்.ஜவகர்ரெட்டி தெரிவித்த பதில்களும் வருமாறு:-
வெங்கட், பிதாபுரம்: பக்தி சேனலில் அதிகளவில் காணிக்கை பற்றிய விளம்பரம் ஒளிப்பரப்பப்படுகிறது. திருமலையில் தங்கும் விடுதி அறைகளில் இருந்த வெங்கடாஜலபதி புகைப்படத்தை மீண்டும் வைக்க வேண்டும். அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஜவகர்ரெட்டி: பக்தி சேனலில் காணிக்கை வழங்கிய பக்தர்களை மட்டுமே அதிகளவில் ஒளிப்பரப்புகிறோம். காணிக்கைக்கான பிரசார நேரம் குறைக்கப்படும். திருமலையில் உள்ள அனைத்து விடுதி அறைகளிலும் பழுதுப் பார்ப்பு பணிகளை மே மாதத்துக்குள் முடிக்கப்படும். அறைகள் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சத்தியநாராயணா, ராஜமுந்திரி: திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது. தரிசன டோக்கன்கள் பெற்ற அன்றே பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். தரிசன டோக்கன் பெற்று 2 நாட்களுக்கு பிறகு கோவிலில் அனுமதிப்பதும், அதற்காக 2 நாட்கள் திருப்பதி, திருமலையில் பக்தர்கள் தங்கியிருப்பதும் சங்கடமாக உள்ளது.
ஜவகர்ரெட்டி: இந்தப் புகாரை அனைத்துப் பக்தர்களும் ஏற்கனவே தெரியப்படுத்தி உள்ளனர். கூட்டம் குறைவாக இருந்தால் அன்றே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கிறோம். கூட்டம் அதிகமாக இருந்தால் ஒரு நாள் விட்டு மறு நாள் அல்லது 2 நாட்களுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறோம்.

பிரபாகர், பெங்களூரு: திருமலையில் தியான மண்டபம் கட்டப்படுமா?
ஜவகர்ரெட்டி: திருமலையில் உள்ள ஆஸ்தானம் மண்டபத்தில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அங்குச் சென்று பக்தர்கள் தியானம் செய்யலாம்.
சீனிவாஸ், நெல்லூர்: திருமலையில் உள்ள ஓட்டல்களில் வைக்கப்பட்டுள்ள விலை பட்டியலை விட, இரு மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
ஜவகர்ரெட்டி: ஓட்டல்களில் வைத்துள்ள விலை பட்டியல் படி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எனப் பரிசீலனை செய்வோம். அதற்காக இலவச தொலைப்பேசி எண் குறிப்பிடப்படும். அதில் பக்தர்கள் ெதாடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேற்கண்டவாறு பக்தர்கள் ெதரிவித்த புகார்களுக்கு ஜவகர்ரெட்டி பதில் அளித்தார்.
கூட்டத்தில் கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி, பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, என்ஜினீயர் ரமேஷ்ரெட்டி, பக்தி சேனல் அதிகாரி சேஷாரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி மேலும் கூறுகையில், உற்சவர்களான ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிக்கு வாரத்தில் திங்கட்கிழமை அன்று விசேஷ பூஜை நடந்து வந்தது. அதேபோல் புதன்கிழமை அன்று சகஸ்ர கலசாபிஷேகம் நடந்து வந்தது.
மேற்கண்ட இரு சேவையின்போது உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வந்தது. அதில் உற்சவர் சிலைகளுக்கு சில சங்கடம் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆகம சாஸ்திர விதிப்படி ஆண்டுக்கு ஒரு முறை இரு சேவைகளை நடத்த ஆலோசனை செய்து வருகிறோம், என்றார்.
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்று மாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, செல்வ வளம் பெருகும்
அ. ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே
வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா !
ஆ. ஓம் கம் ஸ்ரீம் ஸெளம்யாய
லக்ஷ்மீ கணேச வரவரத
ஆம் ஹ்ரீம் க்ரோம்
ஸர்வஜனம் மே வஸமானய ஸ்வாஹா !
இ. வக்ர துண்ட ஏகதம்ஷ்ட்ராய க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
கம் கணபதயே வரவரத ஸர்வஜனம் மே
வஸமானய ஸ்வாஹா ஓம் க்லீம் ஸெள:
ஈ. பிப்ராண- சுக- பீஜபூரக- மிலந்-மாணிக்ய
கும்பாங்குசாந்
பாசம் கல்பலதாம் ச கட்க வில
ஸஜ்ஜ்யோதி: ஸுதா நிர்ஜர
ச்யாமே நாத்த-ஸரோருஹேண
ஸஹிதம் தேவீ த்வயம் சாந்திகே
கௌராங்கோ வரதாந- ஹஸ்த ஸஹிதோ
லக்ஷ்மி கணேசோவதாத்

தமிழகத்தில் பக்தர்கள் அதிக அளவில் கூடும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில கோவில்களை பார்க்கலாம்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவில்,
காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்,
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில்,
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில்,
கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோவில்,
கோவை கோனியம்மன்,
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்,
நத்தம் மாரியம்மன்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில்.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் மூலவரான குகநாதீஸ்வர பெருமானுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 1- ந் தேதி கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் 10 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வர பெருமானுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடந்தது.
மதியம் 12.30 மணிக்கு சாமிக்கு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சதுர்த்தி தினத்தில் விநாயகரை விரதம் இருந்து வழிபடும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது சங்கடஹர சதுர்த்தி எனவும், அமாவாசை தினத்திற்கு நான்காவதாக வருவது சதுர்த்தி தினம் எனப்படுகிறது. இந்த இரண்டு சதுர்த்தி தினங்களும் விநாயகர் பெருமானை வழிபடுவதற்குரிய சிறந்தத தினமாக இருக்கிறது. அதிலும் தெய்வீக மாதமாக இருக்கும் பங்குனி மாதத்தில் வரும் சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்து விநாயக பெருமானை வழிபடுவதால் நன்மைகள் பல உண்டாகிறது.
சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம்.
பங்குனி சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, உணவு ஏதும் உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதனாகிய விநாயகப்பெருமான் நினைவோடு விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கோ அல்லது அவரது சந்நிதிகோ சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனை, பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.
பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று மேற்கூறிய முறையில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்கள் நீங்க பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து பல வகையான கஷ்டங்களை சந்தித்து வருபவர்களுக்கு, அக்கஷ்டங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுக்கு இருக்கும் மந்த புத்தி நீங்கி, அறிவுகூர்மை உண்டாகி கல்வி, கலைகளில் சிறப்பார்கள். கடன்கள் இல்லாத வாழ்க்கை வாழும் சூழல் ஏற்படும். செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் பொம்மைக்கு பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளியில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமுமான இக்கோவிலில் சப்தஸ்தான விழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரை ஆகிய ஊர்களில் வலம் வந்து அந்தந்த ஊர் பல்லக்குகளுடன் நேற்றுமுன்தினம் இரவு அய்யம்பேட்டை வந்தடைந்து.
தொடர்ந்து மதகடி பஜார் அருகில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பல்லக்கு கோவிலை சென்றடைந்தது.
விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் நிர்வாகிகள், ஏழூர் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் மேற்பார்வையில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் தலைமையில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீசார் செய்திருந்தனர்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் புத்தம் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து அதை கரும்பு தொட்டில் கட்டி குழந்தையை அதில் வைத்து நிலக்கோட்டை முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள்.
பின்னர் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலை மூன்று முறை சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இதையடுத்து தொட்டில் கட்டிய கரும்புகளை கோவில் முன்புள்ள நிர்வாகிகளிடம் ஒப்படைத்து காணிக்கையாக செலுத்துவார்கள். மாரியம்மன் கோவிலை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கரும்புகள் பெருகிய வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் கூறும்போது, அம்மனின் அருளால் ஆண்டுதோறும் கரும்புத் தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு ஆண்டாள் கோவிலில் 108 மலர்களால் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு ஆண்டாள் கோவிலில் 108 மலர்களால் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து நேற்று புஷ்ப யாகம் நடைபெற்றது. மல்லி, முல்லை, ரோஜா, தாமரை உள்ளிட்ட 108 வகையான மலர்களால் புஷ்பயாகம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாளும், ெரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
புஷ்ப யாகத்தை காண விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். புஷ்ப யாகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலில் யாககுண்டம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.