என் மலர்
ஆன்மிகம்

குகநாதீஸ்வரர்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் 1,008 இளநீர் அபிஷேகம்
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் மூலவரான குகநாதீஸ்வர பெருமானுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 1- ந் தேதி கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி 1,008 இளநீர் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டும் இளநீர் அபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் 10 மணிக்கு மூலவரான குகநாதீஸ்வர பெருமானுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடந்தது.
மதியம் 12.30 மணிக்கு சாமிக்கு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story