என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம்.
இறைவன் பெயர்- புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர் - சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்புவனம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.

கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.
திருவிளையாடல்: திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
எப்படிப் போவது
மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்புவனம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்புவனம் செல்லலாம். திருப்புவனம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்புவனம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623611

திருவெண்காடு அருகே நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருவெண்காடு அருகே நாங்கூர் வண் புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது.
ேதரோட்ட விழாவையொட்டி சாமியும், அம்மனும் மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் திரளான பக்தர்கள் மேள தாளம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதையடுத்்து தேர் நிலையத்ைத வந்தடைந்தது.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5-வது வாரமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தஆண்டு பூச்சொரிதல் திருவிழா கடந்தமாதம் 7-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல்விழா நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று 5-வது வாரமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

மேலும், பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஏராளமான பக்தர்கள் பூக்களை தட்டு மற்றும் கூடைகளில் சுமந்து சென்று சமயபுரம் நால்ரோட்டில் இருந்து, கடைவீதி வழியாக கோவிலுக்குள் சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.
கடைசி வார பூச்சொரிதல் விழா என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு மற்றும் வழிப்பறி செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியில் சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந்தேதி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும்.
லால்குடி அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். வருகிற 13-ந்தேதி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். இதனை அடுத்து 14-ந்தேதி விடையாற்றி விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அன்பில் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
நம் குழந்தைகளுக்கு ஒன்றென்றால், நாம் துடித்துப் போய்விடுவோம். அவர்களின் ஒரு சின்ன தலைவலியைக் கூட நம்மால் தாங்கிக் கொள்ளமுடியாது. அந்தக் குழந்தை, சின்னச் சின்ன நோய்கள் வந்து சரியாகச் சாப்பிடாமல் இருக்கும். அப்படியே சாப்பிட்டாலும், சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடும். சாப்பிடாததாலும் சாப்பிட்டதை வாந்தி எடுத்துவிட்டதாலும் இரவில் தூங்காமல், எதற்காகவேனும் அழுது கொண்டே இருக்கும். இதை பாலாரிஷ்ட நோய் என்பார்கள்.
இந்தப் பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்கவும் குழந்தைகள் சத்தாக ஆரோக்கியதுடன் வலம் வரவும் வளரவும் இந்த ஸ்லோகம் உதவும்.
பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:
குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் முடியவில்லையோ, உணவின்மையால் தவித்து அழுகிறார்களோ அப்போதெல்லாம் சொல்லுங்கள். குழந்தைகள் உடனே துள்ளிக்குதித்து ஆடத் தொடங்குவார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.
இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொற்றிக் கொண்டது.
இயேசு சிலுவையில் இறந்த வேளையில், எருசலேம் கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை, இரண்டாக கிழிந்தது யூத குருக்களின் மனதில் ஒரு திகிலை ஏற்படுத்தி இருந்தது. கடவுளையும் மனிதரையும் பிரித்துக் கொண்டிருந்த அந்த திரை கிழிந்தது, இயேசு இறைமகனாக இருப்பாரோ என்ற எண்ணத்தை அவர்கள் உள்ளத்தில் விதைத்தது. அவராக உயிர்த்தெழுந்து வரவில்லை என்றாலும், அவரது சீடர்களே உடலை மறைத்து வைத்துவிட்டு வதந்தியைப் பரப்பலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு.
சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்திய யூத சமயத் தலைவர்கள்,இயேசுவின் கல்லறைக்கு முத்திரையிட்டு, காவல் வீரர்களைக் கொண்டு அதை கவனமாக காவல் காக்க ஏற்பாடு செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்னல் வடிவில் வந்த வானதூதர் இயேசுவின் கல்லறையைத் திறந்தார். இடி சத்தத்தில் மயங்கி விழுந்த காவல் வீரர்கள் எழுந்து பார்த்தபோது, கல்லறைக்குள் இயேசுவின் உடலை காணவில்லை. யூத சமயத் தலைவர்களுக்கும் இந்த தகவல் சென்றது. ஆனால் அவர்கள், இயேசுவின் உடல் திருடப்பட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டனர்.
மறுபக்கம் இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருட்கள் தடவி மரியாதை செலுத்த வந்த பெண் சீடர்கள், கல்லறையை மூடியிருந்த கல் அகற்றப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்து விட்டதாக அறிவித்தனர். இந்த செய்தியை அப்பெண்கள் இயேசுவின் மற்ற சீடர்களிடம் கூறியபோது அவர்கள் நம்பவில்லை. அவ்வேளையில் கல்லறை அருகில் நின்று அழுது கொண்டிருந்த மகதலேன் மரியாவுக்கு இயேசு காட்சி அளித்து, தாம் உயிரோடு இருப்பதை உறுதி செய்தார். இந்த நிகழ்வை,
“ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்”
என்று மகாகவி சுப்ரமணிய பாரதியார் பாடியுள்ளார்.
இதையடுத்து, யூத சமயத் தலைவர்களுக்கு பயந்து, பூட்டிய அறைக்குள் தஞ்சம் அடைந்து கிடந்த சீடர்களுக்கு முன்பும் இயேசு தோன்றினார். சிலுவையில் அறையப்பட்டதால், தமது கைகளிலும் கால்களிலும் விலாவிலும் ஏற்பட்ட காயங்களை அவர்களுக்கு காட்டினார். இதனால் அவர் உயிர்த்து எழுந்தது உண்மை என்பதை சீடர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாற்பது நாட்களாக பலமுறை காட்சி அளித்த இயேசு, அவர்களோடு பந்தியில் அமர்ந்து உணவு உண்டதாகவும், தமது நற்செய்தியை அறிவிக்க அவர்களைத் தயார் செய்ததாகவும் பைபிள் கூறுகிறது.
உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளில் ஒலிவ மலைக்கு சீடர்களை அழைத்து சென்ற இயேசு, உலகெங்கும் சென்று தம்மைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கட்டளையிட்டார். அவரை கடவுளாக நம்புவோருக்கு, தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் ஞானஸ்நானம் வழங்குமாறும் ஆணையிட்டார். உலகம் முடியும் வரை தமது சீடர்களோடு இருப்பதாக வாக்களித்த இயேசு, அவர்கள் கண் முன்பாகவே விண்ணகத்திற்கு ஏறி சென்றார். அப்போது அவர்களுக்கு தோன்றிய வானதூதர்கள், உலகின் முடிவில் மக்களுக்கு தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள அரசராக இயேசு மீண்டும் வருவார் என்று கூறி மறைந்தனர்.
எருசலேமுக்கு திரும்பிய சீடர்கள், இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் இருந்து வந்த இறைமகன் என்றும், மரணத்தை வெற்றி கொண்ட ஆண்டவர் என்றும் மக்களிடம் போதித்தனர். சீடர்களின் வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் பலரும் இயேசுவை கடவுளாகவும், தங்கள் மீட்பராகவும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் அனைவரும், நட்புறவுடன் வாழ்வதிலும், உடைமைகளை பொதுவாக கொண்டு பிறரது துயர் துடைப்பதிலும் ஆர்வமாக செயல்பட்டனர். சீடர்கள் வழியாக ஆண்டவர் இயேசு பல்வேறு அற்புதங்களை செய்தார். இதனால், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த வேகமான வளர்ச்சி யூத சமயத் தலைவர்களின் கண்களை உறுத்தியது. சீடர்களை பிடித்து, அடித்து உதைத்த அவர்கள், உயிர்த்த இயேசுவின் பெயரால் போதிக்கக்கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போதும், யூத குருக்களால் இயேசு உயிர்த்தெழவில்லை என உறுதியாக கூற முடியவில்லை. பலவித துன்பங்களை சந்தித்தாலும், இயேசுவுக்கு சான்று பகர்வதை சீடர்கள் நிறுத்தவில்லை. இயேசுவின் பெயரால் அதிக அளவில் அற்புதங்கள் நிகழ்ந்ததால், பாலஸ்தீன் நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கிறிஸ்தவம் விரைந்து பரவியது. இயேசுவின் சீடரான புனித தோமா அந்த காலத்திலேயே தமிழகத்திற்கு வந்து பலரையும் கிறிஸ்தவர்களாக மனந்திருப்பினார்.
இதனிடையே, பாலஸ்தீன் நாட்டில் கிறிஸ்தவ சமயத்தை தீவிரமாக எதிர்த்த சவுல் என்ற இளைஞர், கிறிஸ்தவர்களை அழித்தொழிக்க கொலை வெறியுடன் செயல்பட்டார். இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொண்ட பலரையும் கைது செய்து சிறையில் அடைக்க செய்தார். ஸ்தேவான் என்ற கிறிஸ்தவரின் கொலைக்கு உடந்தையாக இருந்தார். தாமாஸ்கஸ் நகருக்கு செல்லும் வழியில், திடீரென வானத்தில் இருந்து வீசிய பேரொளியால் அவர் குதிரையுடன் தடுமாறி விழுந்தார்.
அப்போது, “சவுலே, சவுலே ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?” என்ற குரல் ஒலித்தது. “ஆண்டவரே நீர் யார்?” என்று திருப்பிக் கேட்டார் சவுல். “நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்” என பதில் வந்தது. அத்துடன் கிறிஸ்தவர்கள் மீதான அவரது கொலைவெறி அடங்கியது. பவுல் என்ற பெயருடன் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று, “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்.
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்த காரணத்தாலே, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின் என்று உலக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. நரபலி உள்ளிட்ட கொடூரங்கள் கிறிஸ்தவ சமயத்தின் பரவல் காரணமாகவே முடிவுக்கு வந்தன. உலகெங்கும் அடிமை முறை ஒழிந்ததற்கும், ஆண் - பெண் சமத்துவம் ஏற்படவும், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை கேட்டு பெறவும் கிறிஸ்தவ போதனைகளே வித்திட்டன. இவ்வாறு, இயேசுவின் உயிர்ப்பு இந்த உலகில் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போர் அனைவருக்கும் மாற்றமும், புதுவாழ்வும் கிடைப்பது உறுதி என்று பைபிள் கூறுகிறது. அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்!
தமிழகத்திற்கு வந்த இயேசுவின் சீடர் :
உயிர்த்த இயேசு முதல் முறை தம் சீடர்களுக்கு தோன்றியபோது, பன்னி ருவரில் ஒருவரான தாமஸ் அங்கு இல்லை. “ஆண்டவரை கண்டோம்“ என்று மற்ற சீடர்கள் கூறியபோது, “அவ ருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும் பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட் டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று தாமஸ் பதில் கூறினார். ஒரு வாரத்துக்கு பிறகு, தாமசும் இருந்தபோது இயேசு தம் சீடர்கள் முன்பு தோன்றினார்.
அப்போது அவர் தாமஸைப் பார்த்து, “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. சந்தேகப்படாமல் நம்பிக்கைகொள்” என்றார். உடனே தாமஸ் இயேசுவைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி அவரை பணிந்து வணங்கினார். இயேசு அவரிடம், “நீ என் னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப் புக்கு உறுதியான சான்றாக அமைந்தது.
அப்போது தாமஸ் பெற்ற நம்பிக்கையே, பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து இந்தியாவுக்கு வந்து இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை அவருக்கு வழங்கியது. கி.பி.52ல் கேரளாவுக்கு வந்திறங்கி ஏராளமான மக்களை மந்திருப்பிய தாமஸ், ஏழு இடங்களில் திருச்சபையை நிறுவினார். பின்னர் தமிழகத்தின் பல இடங்களில் இயேசுவைப் பற்றி போதித்த தாமஸ், இறுதியாக சென்னைக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நற்செய்தி அறிவித்த தாமஸ், இங்குள்ள பலரையும் இயேசுவை கடவுளாக ஏற்கச் செய்ததாக அறிகிறோம்.
கி.பி.72ல் செயின்ட் தாமஸ் மவுன்டில் செபம் செய்து கொண்டிருந்த அவரை, கிறிஸ்தவத்தின் எதிரிகள் சிலர் ஈட்டியால் குத்தி கொலை செய்தனர். தாமஸின் உடல், சாந்தோம் பேராலயம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள அவரது கல்லறையை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் வருகின்றனர். இயேசுவின் சீடர்களை அவருக்காக உயிரைக் கொடுக்கும் அள வுக்கு தூண்டியது அவரது உயிர்த் தெழுதலே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
-டே.ஆக்னல் ஜோஸ்.

11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டரில் உள்ளது, திருச்சேறை திருத்தலம். இங்கு செந்நெறியப்பர் கோவில் அமைந்துள்ளது.
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள், அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற்பிறவி தீவினைகள் நீங்கவும், இப்பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் இந்த ஆலயத்தில் அருளும் செந்நெறியப்பரை வணங்கலாம் என்கிறது தல வரலாறு.
இதனால்தான் இந்த இறைவனை ‘ரிண விமோஷன லிங்கேஸ்வரர்’ என்றும் அழைக்கிறார்கள். 11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.

கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்சவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம்.
கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா பிரம்மோற்சவம். இதனை படைப்புக் கடவுளான பிரம்மா பூலோகத்திற்கு நேரில் வந்து நடத்துவதாக ஐதீகம். கோயிலுக்கு வந்து வழிபட முடியாதவர்கள் கூட பிரம்மோற்சவ வீதியுலாவின் போது இறைவனைத் தரிசிக்கும் பேறு பெறுகின்றனர்.
பிரம்மோற்சவத்தை 9 நாட்களாவது நடத்த வேண்டும் என்பது விதி. விழா நடக்கும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆறாகப் பிரிப்பர். 12நாள் திருவிழா நடந்தால் பைத்ருகம், 9நாள்- சவுக்கியம், 7நாள்- ஸ்ரீகரம், 5நாள்- பார்த்திவம், 3நாள்- சாத்விகம், ஒருநாள் மட்டும் நடத்துவதற்கு "சைவம்'.
திருவிழாவின் முதல்நாள், கோயில் கொடிமரத்தில் கொடியேற்ற வேண்டும். திருவிழாவை முறையாக நடத்தாவிட்டால், அரசுக்கும், மக்களுக்கும் தீங்கு நேரும் என ஞானோத்திர ஆகமம் கூறுகிறது.

திருகண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில், திருஆலம்பொழில் என்ற இடத்தில் ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிவஸ்தலம் பெயர் - திருவாலம்பொழில்
இறைவன் பெயர் - ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வரர்
இறைவி பெயர் - ஞானாம்பிகை
பதிகம் - திருநாவுக்கரசர் - 1
இவ்வாலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் விளங்குகிறது. மேற்கு நோக்கிய சந்நிதி. கோபுர வாயில் இருபுறமும் துவார பாலகர் உள்ளனர். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. அடுத்துள்ள மண்டபத்தில் வலதுபுறம் நவக்கிரக சந்நிதியும், இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேரே கருவறையில் இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கருவறைச் சுற்றில் சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நால்வர் சன்னதி, மூல விநாயகர், பஞ்சலிங்கம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானையுடன் முருகர், நவக்கிரகம், காசி விசாலாட்சி, நடராஜர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தல இறைவனை காசிபர், அஷ்டவசுக்கள் ஆகியேர் பூஜித்துள்ளனர். இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக உள்ளார்.
திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் இத்தலத்திற்கான தம் பதிகத்தில் தென் பரம்பைக் குடியின் மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து ஊரின் பெயர் பரம்பைக்குடி என்றும், கோவிலின் பெயர் திருவாலம் பொழில் என்றும் அந்நாளில் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இத்தலக் கல்வெட்டிலும் இறைவன் பெயர் "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படிப் போவது
திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 5 கி.மி. தொலைவில் உள்ளது. கண்டியூரிலிருந்து நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழியாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.
ஆலய முகவரி
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
திருவாலம் பொழில்
திருவாலம் பொழில் அஞ்சல்
திருப்பந்துருத்தி - S.O.
(வழி) திருக்கண்டியூர்
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613 103

ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய்த்தாழி உற்சவத்தின்போது கையில் வெண்ணெய் குடத்துடன் ராஜகோபாலசாமி எழுந்தருளும் அழகை பக்தர்கள் கண்குளிர தரிசிப்பார்கள்.
ராஜகோபாலசாமி கோவிலில் அர்த்தமண்டபம், மூன்றாம் கோபுரம் ஆகியவற்றை முதலாம் குலோத்துங்க மன்னன் கட்டினார்.
மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் வல்லாள மகாராஜன் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கருட வாகன மண்டபம், யானை வாகன மண்டபம், பலகனி மண்டபம், வெண்ணெய்த்தாழி மண்டபம், புன்னை வாகன மண்டபம் என 7 மண்டபங்கள் உள்ளன. கோவிலுக்கு கிழக்கு பக்கமுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 154 அடி ஆகும். மேற்கு கோபுரம் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது அழகுற காணப்படுகிறது.
தெப்பத்திருவிழா
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ஆண்டுதோறும் நடைபெறுவது போல ராஜகோபாலசாமிக்கும் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறுகிறது. கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி மாதத்தில் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா, ஆடி மாதத்தில் செங்கமலத்தாயார் தேர்த்திருவிழா, மார்கழி மாதத்தில் ராப்பத்து, பகல்பத்து உற்சவம், ஏகாதசி திருவிழா போன்ற விழாக்கள் மிக சிறப்பு வாய்ந்ததாகும். பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்களும், விடையாற்றி விழா 12 நாட்கள் என 30 நாட்கள் திருவிழா நடைபெறும்.
அதில் வெண்ணெய்த்தாழி, கருடசேவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மன்னார்குடிக்கு பெருமை சேர்ப்பது ஹரித்ரா நதி தெப்பக்குளம் ஆகும். 23 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தின் நடுவில் வேணுகோபாலன் திருக்கோவில் உள்ளது.
வெண்ணெய்த்தாழி உற்சவம்
நான்கு கரைகளிலும் வீதிகள் உள்ளன. குளத்தின் தெற்குகரை நீண்ட படிக்கட்டுகளை கொண்டது. நான்கு கரைகளிலும் ஆஞ்சநேயர், ராமர், விநாயகர், சீனிவாசன் ஆகியோருக்கு கோவில்கள் அமைந்துள்ளன.
வெண்ணெய்த்தாழி உற்சவத்தின்போது கையில் வெண்ணெய் குடத்துடன் ராஜகோபாலசாமி எழுந்தருளும் அழகை பக்தர்கள் கண்குளிர தரிசிப்பார்கள். இந்த உற்சவம் பக்தர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சம். வீதி உலா வரும் ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் உற்சாகம் பொங்க வெண்ணெய் தெளித்து வழிபடுவார்கள். அப்போது பக்தி வெள்ளம் கரைபுரண்டோடும்.
சகல செல்வங்களையும் தரும் ராஜகோபாலனை தரிசிக்க அனைவரும் வருகை தந்து ராஜகோபாலனின் அருள் பெற வேண்டும் என எஸ்.எம்.டி கருணாநிதி பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீகௌரியின் வடிவங்களை விரதம் இருந்து வழிபடுவதன் மூலமாக நாம் அத்தனை பலன்களையும் ஒரு சேர பெற முடியும். அந்த வகையில் எந்த கௌரியை விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ஈசனின் இடப்பக்கம் உறையும் அன்னை பராசக்தியின் வடிவங்களில் ‘கௌரி ரூபம்’ தனித்துவமான சிறப்புகொண்டது. தவ வடிவம் கொண்ட சக்தியே, ‘கௌரி’ எனப்படுகிறாள். 108 கௌரி வடிவங்களில் 16 வடிவங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. சோடஷ கௌரிகள் என்று வணங்கப்படும் இந்த ஸ்ரீகௌரியின் வடிவங்களை வழிபடுவதன் மூலமாக நாம் அத்தனை பலன்களையும் ஒரு சேர பெற முடியும். அந்த வகையில் எந்த கௌரியை வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள்.
கவுரி தேவியை 108 வடிவங்களில் ஞானியர் போற்றி வழிபட்டனர். அதில் முக்கியமான 16(சோடஷ) வகை கவுரி வடிவங்களை பார்ப்போம்...
ஞான கவுரி...
ஒருமுறை சிவத்தைவிட சக்தியே உயர்ந்ததென்ற கர்வம் பார்வதிதேவிக்கு தோன்றியது. இதனை உணர்ந்த சிவன் உலக உயிர்களின் அறிவை நீக்கினார். இதனால் உலகில் பல குழப்பங்கள் நேர்ந்தது. இதைக்கண்டதும் அன்னையின் கர்வம் காணாமல் போனது. உலகம் இயங்க சக்தி மட்டும் போதாது என்பதை உணர்ந்து இறைவனுக்கு பணிந்தாள். இதையடுத்து தன்னுடைய உடலில் சரிபாதியாக சேர்த்து அறிவின் அரசியாக்கியதால் அவளுக்கு ஞான கவுரி என பேர் வந்தது. இவளை பிரம்மன் கார்த்திகை மாத வளர்பிறையில் வன்னி மரத்தின் அடியில் வைத்து வழிபட்டான். அந்நாள் ‘ஞான பஞ்சமி’ கவுரி பஞ்சமி என அழைக்கப்படுது. இவளுடன் ஞான வினாயகரும் வீற்றிருப்பார். இவள் மக்களுக்கு உயர்ந்த ஞானத்தையும், கல்வியையும் அளிக்கிறாள்.
அமிர்த கவுரி....
உயிர்களின் ஆயுளை நீட்டிக்க வல்லது அமிர்தம். அது தேவலோகத்திலிருக்கும் இந்திரன் வசம் உள்ளது. மிருத்யுஞ்ஜயரான சிவப்பெருமானின் தேவியாக இருப்பதால் இவளுக்கு அமிர்த கவுரி எனப்பேர் உண்டானது. இவளுக்குரிய நாள் ஆடி மாத பௌர்ணமி ஆகும். ஜல ராசியான கடக மாதத்தில் இவளை வழிப்படுவதால் ஆயுள் விருத்தியாகும். வம்சம் செழிக்கும். திருக்கடையூர் அபிராமி இவளின் அம்சம்.
சுமித்ரா கவுரி.....
உலக உயிர்களுக்கு உற்ற சினேகிதி இவள்.* உலக உயிர்களின் தோழியாகத் திகழும் அம்பிகையை, ‘அன்பாயி சினேகவல்லி’ என்று போற்றுகின்றன புராணங்கள். திருவாடானையில் அருளும் அம்பிகைக்கு சினேகவல்லி என்று பெயர். இவளையே வடமொழியில் ‘சுமித்ரா கவுரி’ என்கிறார்கள். இந்த கவுரியை விரதமிருந்து வழிபட்டால் நல்ல விதமான நட்பும், சுற்றமும் வாய்க்கும்.
சம்பத் கவுரி..
வீடு, தனம், தான்யம், பசு, ஆடு, வயல்..எனப்படும் சொத்துக்களை சம்பத்துகள் என சொல்வர். ஒரு வீட்டில் இருக்கும் ஆடு, மாடுகளை கணக்கில்கொண்டு பெரியாளாய் நினைச்சதெல்லாம் ஒருகாலம். இன்னிக்கு கார், மொபைல், நகை மாதிரி அன்று கால்நடைகள் மனிதனின் அந்தஸ்தை உயர்த்தி காட்டும். அத்தகைய உயர்ந்த சம்பத்துகளை அளிக்கவல்லவள் இவள். இவள் பசுவுடன் காட்சி அளிப்பாள்.கவுரிதேவியே பசுவாக உருவெடுத்து சிவனை வழிப்பட்ட கதை பல உண்டு. காசி அன்னப்பூரணி இவளது அம்சம். பங்குனி வளர்பிறை திருதியை தினத்தில் இவளை வழிபட்டால் வீட்டில் தனம், தான்யம் உட்பட அனைத்து செல்வங்களும் குறைவில்லாமல் இருக்கும்.
யோக கவுரி...
யோக வித்தைகளின் தலைவி இவள். சித்தர்களுக்கெல்லாம் தலைவனான சிவனுடன் இணைந்து யோகேஸ்வரியாக காசியில் வீற்றிருக்கிறாள். இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் இந்த இடத்திற்கு யோகேஸ்வரி பீடம் என அழைக்கப்படுது. சித்தர்களுக்கு யோகங்களை அள்ளி வழங்குவதால் இவளுக்கு யோகாம்பிகைன்னும் பெயருண்டு.
வஜ்ர ச்ருங்கல கவுரி....
உறுதியான, ஆரோக்கியமான உடலே மூலதனம். அத்தகைய உடலை உயிர்களுக்கு அளிப்பவள் இவள். ச்ருங்கலம் என்பதற்கு சங்கிலி என அர்த்தம். அமுத கலசம், கத்தி, சக்கரத்துடன் நீண்ட சங்கிலியை தாங்கி காட்சி தருவாள். நோய்கள் அண்டாமலும், முக்தியையும் அளிப்பது இவளது பணி.
சாம்ராஜ்ய கவுரி...
அன்பும், வீரமும் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு தலைமை பண்பு தானாய் வந்து சேரும். அத்தகைய தலைமை பண்பை அள்ளி தருபவள் இவள். ராஜராஜேஸ்வரி எனவும் இவளை அழைப்பர். மதுரை மீனாட்சி இவளது அம்சம்.
த்ரைலோக்ய மோஹன கவுரி...
சுயம் கவுரி....
சிலருக்கு இன்னார்தான் வாழ்க்கை துணையா வரனும்ன்னு ஒரு ஆசை இருக்கும். மனசுக்குள் அவங்ககூட குடும்பமே நடத்துவாங்க. அப்படி ஆசை இருப்பவங்க இவளை நினைத்து வழிப்பட்டால் நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் காட்சி அளிப்பவள். திருமணத் தடையை நீக்குபவள். இவளுக்கு சாவித்திரி கவுரி எனவும் பெயர். சத்தியவான், சாவித்திரி கதை தெரியும்தானே?! அந்த சாவித்திரி இவளை வணங்கிதான் கணவன் உயிரை மீட்டெடுத்தாள்.
சத்யவீர கவுரி....
நாக்கு பிழறலாம்.. வாக்கு பிழறக்கூடாதுன்னு சொல்வாங்க. இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே! எல்லோராலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றலை அளிப்பவள் இந்த சத்யவீர கவுரி’.இவளை ஆடி மாத வளர்பிறை திரயோதசி நாளில் வழிபடலாம். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் ன்னு சொல்வாங்க.
கஜ கவுரி....
யானை முகம் கொண்ட வினாயகரை தன் மடியில் அமர்த்தியபடி காட்சி அளிப்பதால் இப்பெயர் உண்டானது. இந்த அன்னையை ஆடி மாத பௌர்ணமி திதியில் வழிபாடு செய்து வழிப்பட்டால் குழந்தை பக்கியம் உண்டாகும். வம்சம் விருத்தியாகும்.
வரதான கவுரி...
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் அடுத்தவருக்கும் கொடுக்க பலருக்கு மனதிருக்காது. அடுத்த வேளை சோறுக்கு உத்தரவாதமில்லாத நிலையிலும் தனக்கு கிடைத்த உணவை சிலர் பகிர்ந்துப்பாங்க. அத்தகைய கொடை உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் வாழ்பவள் இவள். கேட்ட வரத்தை அள்ளி, அள்ளி வழங்குவதால் இவளுக்கு வரதான கவுரின்னு பேர்.
சொர்ண கவுரி....
ஒரு பிரளயத்தின் முடிவில் அலைகடலின் நடுவே சொர்ணலிங்கம் ஒன்று தேவர்களுக்கு கிடைத்தது. அதை வைத்து அவர்கள் பூஜித்துவர, பொன்மயமாக ஈசனும், பார்வதிய்ம் வெளிப்பட்டனர். அதனால் இவளை சொர்ண வல்லி என போற்றினர். ஆவணி மாத வளர்பிறை திருதியை திதியில் வழிப்பட்டால் வறுமை நீங்கி, குலதெய்வத்தின் அருள் கிட்டும்.
விஸ்வபுஜா மகா கவுரி...
தீவினை பலன்களை, நல்வினை பலன்களாய் மாற்றுபவள். அனைத்து உயிர்களுக்கும் இன்பம் அளிப்பவள். தூய எண்ணங்களை மனதில் வளர செய்பவள். ஆசைகளை பூர்த்தி செய்வதால் பூர்த்தி கவுரி என்றும் பெயர். சித்திரை மாத வளர்பிறை திருதியை திதியில் இவளை வழிபடுவது நல்ல பலனை தரும்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம். சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.
இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை அனைவரும் கட்டிக்கனும். பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக்கனும். நோன்பு சட்டியில் வைத்த பலகாரங்களை அந்த வீட்டினரே சாப்பிடனும். நோன்புக்கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக்கூடாது., மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்து சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள்ன்னு எஞ்சியவகளை ஆற்றில் விட்டு விட்டுனும். ஒருவேளை இந்த பழக்கம் இல்லாதவங்க, நோன்பு எடுக்க ஆசைப்பட்டா, அவங்க கைக்கு இந்த நோன்பு கயிறு கிடைச்சா, அதை ஒரு செம்புல நெல் நிரப்பி, மஞ்சத்துணியால கட்டி தீட்டு படாம பரண்மேல் வச்சிடுவாங்க. மறுவருசம் அதை திறந்து பார்க்கும்போது நெல்லின் அளவு வளர்ந்திருந்தா அவங்க நோன்பு எடுக்கலாம்ன்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.

ஆசை என்னும் மாய வலையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசை. மனுசனாய் பொறந்த எல்லாருக்கும் ஆசை இருந்தே தீரும். ஆசை தப்பில்ல. அது நியாயமான ஆசையாய் இருக்கும்வரைக்கும்... மாய வலையில் சிக்கி சீரழிபவர்களை கரை சேர்ப்பவள் இவள். இவளை வழிபட்டால், உற்சாகமும், தெய்வீக களையும் அந்து சேரும். காசியில் நந்தகூபரேஸ்வரர் ஆலயத்தில் த்ரைலோக்ய மோஹன கவுரி அருள் புரிகிறாள்.
சிலருக்கு இன்னார்தான் வாழ்க்கை துணையா வரனும்ன்னு ஒரு ஆசை இருக்கும். மனசுக்குள் அவங்ககூட குடும்பமே நடத்துவாங்க. அப்படி ஆசை இருப்பவங்க இவளை நினைத்து வழிப்பட்டால் நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை, மணமகனாக மனதில் நினைத்தபடி நடந்து செல்லும் கோலத்தில் காட்சி அளிப்பவள். திருமணத் தடையை நீக்குபவள். இவளுக்கு சாவித்திரி கவுரி எனவும் பெயர். சத்தியவான், சாவித்திரி கதை தெரியும்தானே?! அந்த சாவித்திரி இவளை வணங்கிதான் கணவன் உயிரை மீட்டெடுத்தாள்.
சத்யவீர கவுரி....
நாக்கு பிழறலாம்.. வாக்கு பிழறக்கூடாதுன்னு சொல்வாங்க. இந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்கள் ஒரு சிலரே! எல்லோராலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றலை அளிப்பவள் இந்த சத்யவீர கவுரி’.இவளை ஆடி மாத வளர்பிறை திரயோதசி நாளில் வழிபடலாம். இந்த வழிபாட்டை ஜெயபார்வதி விரதம், ஜெய கவுரி விரதம் ன்னு சொல்வாங்க.
கஜ கவுரி....
யானை முகம் கொண்ட வினாயகரை தன் மடியில் அமர்த்தியபடி காட்சி அளிப்பதால் இப்பெயர் உண்டானது. இந்த அன்னையை ஆடி மாத பௌர்ணமி திதியில் வழிபாடு செய்து வழிப்பட்டால் குழந்தை பக்கியம் உண்டாகும். வம்சம் விருத்தியாகும்.
வரதான கவுரி...
கோடி கோடியாய் சொத்திருந்தாலும் அடுத்தவருக்கும் கொடுக்க பலருக்கு மனதிருக்காது. அடுத்த வேளை சோறுக்கு உத்தரவாதமில்லாத நிலையிலும் தனக்கு கிடைத்த உணவை சிலர் பகிர்ந்துப்பாங்க. அத்தகைய கொடை உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் வாழ்பவள் இவள். கேட்ட வரத்தை அள்ளி, அள்ளி வழங்குவதால் இவளுக்கு வரதான கவுரின்னு பேர்.
சொர்ண கவுரி....
ஒரு பிரளயத்தின் முடிவில் அலைகடலின் நடுவே சொர்ணலிங்கம் ஒன்று தேவர்களுக்கு கிடைத்தது. அதை வைத்து அவர்கள் பூஜித்துவர, பொன்மயமாக ஈசனும், பார்வதிய்ம் வெளிப்பட்டனர். அதனால் இவளை சொர்ண வல்லி என போற்றினர். ஆவணி மாத வளர்பிறை திருதியை திதியில் வழிப்பட்டால் வறுமை நீங்கி, குலதெய்வத்தின் அருள் கிட்டும்.
விஸ்வபுஜா மகா கவுரி...
தீவினை பலன்களை, நல்வினை பலன்களாய் மாற்றுபவள். அனைத்து உயிர்களுக்கும் இன்பம் அளிப்பவள். தூய எண்ணங்களை மனதில் வளர செய்பவள். ஆசைகளை பூர்த்தி செய்வதால் பூர்த்தி கவுரி என்றும் பெயர். சித்திரை மாத வளர்பிறை திருதியை திதியில் இவளை வழிபடுவது நல்ல பலனை தரும்.
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி திதியில் ஆரம்பித்து, தீபாவளி அமாவாசை அன்று முடிக்க வேண்டும். அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம். சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.
இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல் உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
நோன்பின் முடிவில் நோன்புக்கயிறை அனைவரும் கட்டிக்கனும். பெண்கள் கழுத்திலும், ஆண்கள் கைகளிலும் கட்டிக்கனும். நோன்பு சட்டியில் வைத்த பலகாரங்களை அந்த வீட்டினரே சாப்பிடனும். நோன்புக்கயிறை எக்காரணம் கொண்டும் தொலைத்துவிடக்கூடாது., மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து நோன்பில் வைத்து சாப்பிட்ட பலகாரம், கயிறு, வெற்றிலை, பாக்கு, பூக்கள்ன்னு எஞ்சியவகளை ஆற்றில் விட்டு விட்டுனும். ஒருவேளை இந்த பழக்கம் இல்லாதவங்க, நோன்பு எடுக்க ஆசைப்பட்டா, அவங்க கைக்கு இந்த நோன்பு கயிறு கிடைச்சா, அதை ஒரு செம்புல நெல் நிரப்பி, மஞ்சத்துணியால கட்டி தீட்டு படாம பரண்மேல் வச்சிடுவாங்க. மறுவருசம் அதை திறந்து பார்க்கும்போது நெல்லின் அளவு வளர்ந்திருந்தா அவங்க நோன்பு எடுக்கலாம்ன்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க.
சீர்காழி நங்கநலதெரு முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி அருகே மேலத் தென்பாதி நங்கநல தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பின்னர் முத்துமாரியம்மனுக்கு இளநீர், பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று காலை சட்டைநாதர் கோவிலில் இருந்து வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகளோடு பால்குடம், அலகு காவடி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.