என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    ஆனி மாதத்தில் பவுர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாக இந்த ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி கருதப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். மாலையில் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு மாலை அணிவித்து நைவேத்தியம் செய்து படைத்து விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இரவு வானில் பிறையை பார்த்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது போன்ற முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றி உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும். ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
    வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சக்தி அம்மா முன்னிலையில் சிறப்பு யாகம் நடந்தப்பட்டது. இந்த யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீபுரத்தில் நாராயணி பீடம் உள்ளது. நாராயணி பீடத்தில் நாராயணிக்கு மாலை அணிந்தால் தீராத பிரச்சினைகள் தீரும். அனைத்து தடைகளும் நீங்கி, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். அம்மனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை குழந்தைகளுக்கு அளித்தால் நல்ல ஞானமும், சிறந்த கல்வியும் அமையும்.

    இந்த பீடத்தில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகம் நடத்தப்படும்.

    அந்த வகையில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளத்துக்காகவும், உலக மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விடுபடவும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சக்தி அம்மா முன்னிலையில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தப்பட்டது.

    இந்த யாகத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்ததையொட்டி கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
    கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்ததையொட்டி கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

    கொரோனா தொற்று பரவல் விகிதம் 16 சதவீதத்திற்கும் கூடுதல் உள்ள இடங்களில் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா? என்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்தியது.

    இந்தநிலையில் ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். சகல மங்களங்களும் உண்டாகும்.
    ஸ்ரீகணேஸாயநம:

    1 : ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
    நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
    ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    2: தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
    காமதஹம்கருணாகர லிங்கம்
    ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    3: ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
    புத்திவிவர்த்தனகாரண லிங்கம்
    ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    4 : கனகமஹாமணிபூஷித லிங்கம்
    பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
    தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    5: குங்குமசந்தனலேபித லிங்கம்
    பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்
    ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    6: தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
    பாவைர்பக்திபிரேவச லிங்கம்
    தினகரகோடிப்ரபாகர லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    7: அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
    ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்
    அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    8: ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
    ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
    பராத்பரம் பரமாத்மக லிங்கம்
    தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

    பொருள்:

    ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

    லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
    ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததே

    மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன்,
    எவர் படிப்பாரோ... அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
    ஆனி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது. ஆனி மாதத்தில் ( ஜூன்- ஜூலை) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    27.6.2021 ஞாயிறு திரிதியை திருவோணம் அமிர்த யோகம் காலை 8-9

    28.6.2021 திங்கள் சதுர்த்தி அவிட்டம் சித்த யோகம் காலை 12-1

    1.7.2021 வியாழன் சப்தமி உத்திரட்டாதி சித்த யோகம் காலை 10.30-11.30

    4.7.2021 ஞாயிறு தசமி அசுவினி சித்த யோகம் காலை 8-9

    7.7.2021 புதன் திரயோதசி ரோகிணி சித்த யோகம் காலை 9-10

    16.7.2021 வெள்ளி சப்தமி ஹஸ்தம் அமிர்த யோகம் காலை 6-7.30
    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலையில் உற்சவர் சுவாமிகள் இருப்பிடத்தில் கும்பம் வைத்து, வேள்வி செய்து, சுவாமி-அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு சிறப்பு தீபாராதனையுடன் ஆனித்திருவிழா நிறைவு பெற்றது.
    நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
    வடைமாலை:

    அனுமானுடைய தாய் அஞ்சலிதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. இதனலையே சிலர் ஆஞ்சநேய வடைமாலையை அணிவிப்பர்

    வெண்ணெய் சாத்துதல்:

    வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை ,அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

    ஜெய் ஸ்ரீ ராம் என்று மாலையாக அணிவித்தல்:

    ராம் ராம் என்று எழுதி மாலையாக அணிவித்தல் நமக்கு எல்லா ஷேமங்களையும் அள்ளி வழங்கும் மகிமை கொண்டது.

    வாலில் பொட்டு வைப்பது:

    அனுமனுக்கு சக்தி முழுவதும் தன் வாலில் தான். வாலிலிருந்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சுற்றுமுடிவதற்குள் நினைத்த காரியம் சித்தியாகிறது என்ற நம்பிக்கை.
    பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது.
    பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திர நாளன்று அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. மழைவளம் பெருகவும், உலகநலன் வேண்டியும், மக்கள் பசி, பிணியின்றி வாழவும் இந்த பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவில் பாரவேல் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக தங்க சப்பரத்தில் 3 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டும், 108 சங்குகளில் புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தை வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கலச பூஜை நடைபெற்றதை தொடர்ந்து 108 சங்குகளுக்கு முன்பு கந்த ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றது. பின்பு தங்க சப்பரத்தில் வைக்கப்பட்ட கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து கலசங்கள், 108 வலம்புரி சங்குகள் கோவில் உட்பிரகாரம் சுற்றிவந்து மூலவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்பு மஞ்சள் நிற அன்னத்தால் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, கிரீடம் வைக்கப்பட்டு சுத்த அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் சித்தனாதன் சன்ஸ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.
    காரைக்கால் மாங்கனி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மாம்பழங்கள் இறைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை பக்தர்கள் இணையதளத்தில் தரிசித்தனர்.
    இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, இந்த கோவில் பிரகாரத்தில் மாங்கனித் திருவிழா எளிமையாக நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டும் தொற்று காரணமாக மாங்கனித் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக பக்தர்கள் மாங்கனி இறைப்பு நேற்று நடந்தது. முன்னதாக கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் பிரகார உலா நடைபெற்றது. அப்போது மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுதுபடைத்தார். மதியம் 2 மணிக்கு மேல் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழாவில் நேற்று இரவு பரமதத்தருக்கு 2-வது திருமணம், அதை தொடர்ந்து, புனிதவதியார் புஷ்ப பல்லகில் செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் எளிமையாக நடைபெற்றது.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார்.
    சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
    * மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.

    * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.

    * கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.

    * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.

    * மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.

    * தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.

    * நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.

    * தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப்பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.

    * கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயககரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.

    *  சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.

    *  சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.

    *  தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.

    * ஓசூர்-பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.

    * திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    *  திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.

    *  கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.

    *  திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.

    * தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.
    ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயர் செவ்வங்கி மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம விதிப்படி சாமிக்கு தினசரி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

    நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆனிமாத பவுர்ணமியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயா் செவ்வங்கி மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.

    கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பவுர்ணமியையொட்டி சாமி ஊர்வலமாக காராமணிக்குப்பம் சென்று, அங்கு தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பவுர்ணமியையொட்டி சாமி ஊர்வலமாக காராமணிக்குப்பம் சென்று, அங்கு தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா‌ பரவலையொட்டி விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தோப்பு உற்சவம் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலிலேயே நடைபெற்றது.

    இதையொட்டி பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவமூர்த்தி சந்திரசேகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×