என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனிமாத பவுர்ணமியையொட்டிபாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X
    ஆனிமாத பவுர்ணமியையொட்டிபாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    ஆனிமாத பவுர்ணமியையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பவுர்ணமியையொட்டி சாமி ஊர்வலமாக காராமணிக்குப்பம் சென்று, அங்கு தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பவுர்ணமியையொட்டி சாமி ஊர்வலமாக காராமணிக்குப்பம் சென்று, அங்கு தோப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா‌ பரவலையொட்டி விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தோப்பு உற்சவம் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலிலேயே நடைபெற்றது.

    இதையொட்டி பாடலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவமூர்த்தி சந்திரசேகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×