என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
வடபழனி முருகன் கோவில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படுவதையொட்டி பக்தர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று, வடபழனிமுருகன் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலய பிரதிஷ்டை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி நடந்தது. திருப்பணிகளை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் நடந்து வந்தன.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. வடபழனி முருகன் கோவிலிலும் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தமிழக அரசு தற்போது அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் வடபழனி முருகன் கோவில் திறக்கப்பட்டு கோவில் கோபுரம், சன்னதிகளின் விமானம் உள்ளிட்டவற்றை புனரமைக்கும் பணி, உற்சவர் சன்னதி, பக்தர்கள் தங்குவதற்கான ஓய்வறை கட்டுவது உள்ளிட்ட திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை வடபழனி முருகன் கோவில் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. காலை 6.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

பக்தர்களை வரவேற்க நேற்று மாடவீதி முழுவதும் லாரியில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு, மாநகராட்சி ஊழியர்கள் பீளிச்சிங் பவுடர்கள் போட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து பிரகாரத்தில் கோலம் போட்டு, முழுவதும் சாம்பிராணி, ஊதுவர்த்தி கொழுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணிந்து வரும் பக்தர்கள், தெற்கு கோபுர வாசலில் கால்களை கழுவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. அத்துடன் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்படுகிறது. பக்தர்கள் 10 அடி சமூக இடைவெளியில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு விபூதி, உதிரி பூ, சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ராதேவி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீ கணபதி சஹஸ்ரநாமம் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கொண்டது. அதைத் தினமும் கூற முடியாதவர்கள் ,சஹஸ்ரநாமத்தில் உள்ள சில சுலோகங்களைத் தினமும் ஜெபித்து வருவதால் பல பலன்களை அடையலாம்.
1.காரியத்தடைகள் நீங்க:-
மஹாகணபதிர் புத்தி பிரிய :க்ஷிப்ர பிரசாதன :|
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமா புத்தரோ க நாசன||
இதைத் தினமும் 18 தடவை ஜெபித்து வர எல்லாக் காரியங்களிலும் தடைகள் நீங்கும்.ஏதேனும் ஒரு செயலில் இறங்கும் இந்த ஸ்லோகத்தை 18 தடவை ஜெபித்து பின்னர் துவங்க வெற்றி உண்டாகும்.
2.எதிரிகளால் துன்பம் நேராமல் இருக்க
வஜ்ராத்யஸ்த்ர பரீவார:கனசண்ட ஸமாஸ்ரய :|
ஜயோஜய பரீவார :விஜயோ விஜயாவஹ :||
இதைத் தினமும் 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து சங்கல்பம் செய்து ஜெபித்து வர எதிர்ப்புகள் ,எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
3.கல்வியில் முன்னேற்றம் உண்டாக :-
சரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரி நந்தன ஸ்ரீ நிகேதன :|
குருகுப்த பதோ வாசா சித்தோ வாகீஸ்வரேச்வர :||
இதைத் தினமும் 18 தடவை கிழக்கு நோக்கி அமர்ந்து கல்வி,கலைகளில் உயர்வுபெற வேண்டிச் சங்கல்பம் செய்து ஜெபித்து வர நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
4.செல்வம் பெருக,தியானம் சித்திக்க :-
தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :|
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண:||
இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும் ,ஆன்மீக,தியான நிலையில் உயர்வும் கிட்டும் .
5.நாகதோஷம் நீங்க,புத்திர ப்ராப்தி உண்டாக :-
ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|
ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||
இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும்.சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் உண்டானால் அது விலகி குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதை அரசமரமும்,வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ஜெபிக்க நிறைவான பலன் கிடைக்கும்.
6.வழக்குகள்,எதிர்ப்புகளை வெல்ல
மேதாத :கீர்த்தித:சோகஹாரி தௌர்பாக்ய நாசன :|
பிரதிவாதி முகஸ்தம்ப: துஷ்ட சித்த பிரசாதன :||
வாக்குவாதம்,வழக்குகளுக்குச் செல்லும் பொழுது இந்த ஸ்லோகத்தை 27 தடவை தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து குங்குமம் அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.
7.கிரக தோஷ பாதிப்புகள் விலக :-
ராசிஸ் தாரா திதிர் யோக : வார :காரண அம்சக :|
லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு :சப்தர்ஷயோ த்ருவ:||
ராஹூர் மந்த:கவிர் ஜீவ :புதோ பௌம சசீ ரவிஹி :|
கால: ஸ்ருஷ்டி :ஸ்திதிர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்||
இந்த ஸ்லோகத்தை 27 தடவை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர கிரகதோஷம் நீங்கும்.

அற்புதமான ஆஞ்சநேயரை, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள்!
சாளக்ராம ஆஞ்சநேயரை வழிபட்டால், வாழ்வில் சந்தோஷமும் நிம்மதியும் நிச்சயம் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சென்னை அருகில் உள்ள புதுப்பாக்கம் மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் சந்நிதியை வழிபட்டு, அதன் பக்கவாட்டில் உள்ள நவக்கிரக சந்நிதியையும் தரிசித்து விட்டு கஜகிரி எனும் மலையை ஏறிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் மலை உச்சியில் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் அழகை தரிசனம் செய்யலாம். இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். எதிரில் சீதாதேவி, லட்சுமணன் சமேதராக ராமபிரான் அற்புதமாகக் காட்சி தந்தருள்கிறார். ராமபிரானின் திருவடிக்கு அருகிலும் அனுமன் உள்ளார்.
வீர ஆஞ்சநேயரின் வலது திருப்பாதம் தரையில் ஊன்றி, இடது திருப்பாதம் உயர்த்தி தரையில் படாமல், பறப்பதற்குத் தயாராக இருப்பதுபோல் அமைந்துள்ளது. அவரது நாபிக் கமலத்தில் தாமரையும், வாலில் மணியுடன் தலைக்கு மேல் வால் தூக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு அபயம் தந்து அருள்கிறார்.
கோயில் பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் ராமாயணக் காட்சிகள் அழகிய சித்திரங்களாக செதுக்கப்பட்டு மிளிர்கின்றன. அவற்றில் சேது பாலம் அமைத்தலும், ஆஞ்சநேயர் சூரியனைப் பழம் என்று கருதி பிடிக்கச் செல்லுதலும், சிவபெருமானின் உடம்பு முழுவதும் ஆக்கிரமித்தருளும் ஆஞ்சநேயர் சிற்பமும் உயிரோட்டமானவை.
அற்புதமான ஆஞ்சநேயரை, வெண்ணெய் சார்த்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் பெற்று இனிதே வாழ்வீர்கள்!
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தற்போது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து முடிந்தது. ஆண்டுதோறும் இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். தற்போது பக்தர்களுக்கு அனுமதி இன்றி திருவிழா நடந்து முடிந்தது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கிழக்கு வாசல் பகுதியில் நின்று கோபுரத்தை நோக்கி தரிசனம் செய்தனர்.

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா மற்றும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாக்கள் கொரோனா ஊரடங்கால் கோவில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஆனி மாதம் பவுர்ணமி அன்று நடைபெறும் முப்பழ உற்சவமும் பக்தர்கள் இன்றி நேற்று மாலையில் நடந்தது. இதில் மூலவர் கள்ளழகர் சுந்தர ராஜ பெருமாள் மற்றும் தேவியர்களுக்கும், உற்சவர் சுவாமிக்கும் பட்டர்களின் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக சுவாமிக்கு முன்பாக மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் வைத்து படைக்கப்பட்டது.
அப்போது சர்வ அலங்காரத்தில் சுவாமி தேவியர்களுடன் காட்சி தந்தார். ஊரடங்கின் காரணமாக பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆகம விதிப்படி அடுத்த ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதற்காக திருப்பணிகள் தொடங்குவது எப்போது? என்று பக்தர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டில் அஸ்தம் நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் கோவில்கள் தோறும் ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மரபு..
அதன்படி இந்த கோவிலை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் ஆட்சி மாற்றமும், அறங்காவலர்கள் பதவி காலமும் முடியும் நிலை ஏற்பட்டதால் ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே (2012-க்கு பதிலாக) 2011-ல் பூசம் நட்சத்திரத்தில்"லகு"கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திட்டமிட்டப்படி கோவிலின் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரத்தில் தங்க கலசம் பொருத்துவது உள்பட சில திருப்பணிகள் நடக்காமல் போனது. இதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்த நாளையும், அதன் நட்சத்திரத்தையும் குறிக்கும வகையில் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து பூசம் நட்சத்திரத்தன்று வருடாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஆகம விதிப்படி வருகின்ற 2022-ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். இதில் திருப்பணிகுழுக்கள் அமைப்பது, திருப்பணி குழுக்களால் திருப்பணிகளுக்கு மதிப்பீடு தயார்படுத்தப்படுவதோடு அதை அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதற்காக குறைந்தபட்சமாக ஒரு மாதங்கள் உருண்டோடிவிடும். திருப்பணிகளுக்காக உபயதாரர்கள் தயார்படுத்தப்பட வேண்டும். அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏழு நிலை ராஜகோபுரத்தில் தங்ககலசம் பொருத்துவதற்கு உபயதாரர்களாக தொழில் அதிபர்களை தயார்படுத்த வேண்டும். இதில் சில மாதங்கள் உருண்டோடி விடும். திருப்பணிகளில் ராஜகோபுரம் மற்றும் கோவில் முழுவதுமாக வர்ணம் தீட்டும் பணிகளில ்சில மாதங்கள் உருண்டோடி விடும்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றால் அதன் துணைக்கோவில்களான மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் புதியபடிக்கட்டு பாதையிலுள்ள விநாயகர் கோவில் திருப்பணிகள் செய்து மகாகும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கமாகும். ஆகவே திருப்பணிகளுக்கு பல மாதங்கள்அவகாசம் தேவை.
தற்போதைய நிலையில் கோவிலுக்கு துணை கமிஷனர் நியமிக்கப்படாத நிலை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.மதுரை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தபோதிலும் ஆனி ஊஞ்சல் திருவிழா கூட உள்திருவிழாவாக நடத்துவதற்கு கூட தன்னிச்சை முடியாத நிலை இருந்து வருகிறது.
திருப்பணிகளுக்கு தனிக்கவனம் செலுத்த துணை கமிஷனர் தேவை என்ற நிலை உள்ளது. அதனால் திருப்பணிகள் தொடர்பாக பேச்சு கோவில் வட்டாரத்தில் இல்லாத நிலை உள்ளது. மேலும் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவிலில் ஆகமவிதிப்படி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி முடித்து இருக்க வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடத்தப்படாத நிலையே அங்கு நீடித்து வருகிறது. இத்தகைய நிலையை தவிர்ப்பதற்காக கோவிலுக்கு துணை கமிஷனர் நியமிக்கப்படுவதோடு திருப்பணிகள் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

நம்முடைய நாவை விட சக்தி வாய்ந்த ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அது ஒரு சமயம் சொர்க்கத்தின் திறவுகோலாக இருக்கும். மற்றொரு சமயம் நரகத்தின் வாசல்படியாகவும் மாறும்.
வேதங்களைக் கற்றுக்கொடுத்து வந்த ஒரு குருவுக்கு, மிகவும் அழகான மகள் இருந்தாள். அவளை மணம் முடிக்க பலரும் போட்டி போட்டனர். ஆனால் அறிவில் சிறந்தவனுக்கே தன்னுடைய மகளைத் தருவது என்று குரு முடிவு செய்திருந்தார். தன் மகளிடமும் அதற்கான அனுமதியைப் பெற்றிருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “என்னுடைய மகளை மணம் முடிக்க நினைப்பவர்களிடம் நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவர்களுக்கே என்னுடைய மகளை திருமணம் செய்து வைப்பேன்” என்றார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குருவின் வீட்டு முன்பாக கூடிவிட்டனர். அவர்களிடம் குருவானவர், “இந்த உலகத்திலேயே இனிமையான ஒரு பொருளைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
மறுநாள் அனைவருமே ஒவ்வொரு பொருளை கையோடு கொண்டு வந்திருந்தனர். ஒருவர் தேன் கொண்டு வந்திருந்தார். ஒருவர் இனிப்பு மிகுந்த கரும்பைக் கொண்டு வந்திருந்தார். இப்படி அவரவர் அறிவுத் திறனுக்கு எட்டியது போல் அவர்களின் இனிமையான பொருள் இருந்தது. அந்தக் கூட்டத்தில், குருவிடம் நீண்டநாளாக சீடனாக இருந்த ஒரு இளைஞனும் இருந்தான். அவனைப் பார்த்த குரு, “நீயுமா..?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சீடன், “குருவே உங்கள் மகள் மீது உள்ள ஈர்ப்பால் நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இதுநாள் வரை நீங்கள் எனக்கு குருவாக இருந்து, வைத்த அனைத்து போட்டியிலும் நான் பங்கேற்றிருக்கிறேன். அதே போன்ற ஒரு அறிவுப் போட்டியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இதில் நான் வெற்றி பெற்றதாக நீங்கள் ஒப்புக்கொண்டாலே போதுமானது. உங்கள் மகளை எனக்கு மணம் முடித்துத் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று கூறினான்.
தன் சீடனை நினைத்து பெருமைபட்டுக் கொண்ட குரு, அவன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்த்தார். அவன் தான் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியை குருவிடம் நீட்டினான். அதை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
“என்ன இது” குரு அதிர்ந்து போய் கேட்டார்.
“குருவே.. நீங்கள்தான் உலகிலேயே இனிமையான பொருளைக் கொண்டுவரச் சொன்னீர்கள். நாவை விட சிறந்த பொருள் ஏது? மனித நாக்கை கொண்டு வரமுடியாது என்பதால்தான். ஒரு குறியீட்டிற்காக கசாப்புக் கடையில் இருந்து ஆட்டின் நாக்கை வாங்கி வந்தேன். நாவில் இருந்து இனிமையான சொற்கள் பிறக்கின்றன. அது சோகத்தில் இருப்பவனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. நோயாளியை குணப்படுத்துகிறது” என்றான்.
அதைக் கேட்ட குரு முதல் கேள்விக்கான போட்டியில், அவனே வென்றதாக அறிவித்தார்
அடுத்த கேள்வியாக குரு சொன்னது, “உலகத்திலேயே கசப்பான ஒரு பொருளைக் கொண்டு வாருங்கள்.”
மறுநாளே.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு வந்தனர். சிலர் பாகற்காய், இன்னும் சிலர் எட்டிக்காய், இன்னும் சிலர் வேப்பங்காய் என்று தாங்கள் கொண்டு வந்ததை காட்டினர். குருவின் சீடன் மீண்டும் அதே ஆட்டின் நாக்கை கொண்டு வந்திருந்தான்
குரு கோபமாகிவிட்டார். “என்ன விளையாடுகிறாயா? இனிப்பானது எது என்று கேட்டபோது கொண்டு வந்த அதே நாக்கை இப்போதும் நீட்டுகிறாயே” என்றார்.
சீடன் நிதானமாக “குருவே.. நாவை விட கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியாக இருப்பவனை துயரத்தில் தள்ளிவிடுகிறது. நட்பாக இருப்பவனை பகையாக மாற்றிவிடுகிறது. எனவே இதுதான் உலகிலேயே கசப்பான பொருள்” எனறான்.
தன் சீடனின் அறிவைக் கண்டு மகிழ்ந்த குரு, அவனையே வெற்றியாளனாக அறிவித்து தன் மகளையும் மணம் முடித்து வைத்தார்.
ஆம்.. நம்முடைய நாவை விட சக்தி வாய்ந்த ஒரு பொருள் உலகத்திலேயே இல்லை. அது ஒரு சமயம் சொர்க்கத்தின் திறவுகோலாக இருக்கும். மற்றொரு சமயம் நரகத்தின் வாசல்படியாகவும் மாறும்.

சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
பல குடும்பங்களில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்திற்குள்ளேயும் சண்டை, சச்சரவு ஏற்பட்டு மனஅமைதி குறையும். அதுபோன்ற நேரங்களில் ‘யார் கொடுத்த சாபமோ நமது வாழ்க்கை இப்படி இருக்கின்றதே’ என்று புலம்புவார்கள்.
சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
* பெற்றோரால் ஏற்படும் சாபங்கள் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
* சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது. குறிப்பாக திசை மாறிய நந்தியைத் தோ்ந் தெடுத்து வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.
* சுமங்கலி சாபம் நீங்க, திருதியை திதியில் சோமாஸ்கந்தர் மற்றும் அதிகார நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.
இதுபோன்றே அனைத்து சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. ‘பாவத்திற்கு விமோசனம் உண்டு. ஆனால் சாபத்திற்கு விமோசனம் இல்லை’ என்பார்கள். சாப விமோசனத்திற்கு என்று தமிழகத்தில் ஏராளமான தலங்கள் உள்ளன. வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் அங்கு சென்று வழிபட்டு வந்தால் தடைகள் அகன்றோடும்.

மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில், பஞ்சமூர்த்திகள் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியுடன், காரைக்கால் மாங்கனி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போ இந்த ஆண்டும் காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் மாங்கனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
ஆனால், காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு பக்தர்கள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அந்தவகையில், மாங்கனி திருவிழாவின் 5-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில், பஞ்சமூர்த்திகள் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியுடன், காரைக்கால் மாங்கனி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் உபயதாரர்கள், குறைவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் கிராமத்தில் அருட்பாலிக்கிறார் ஸ்ரீ மதங்கீஸ்வரர். நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று அவன் அருளாலே அவன் தாள் வணங்கி வரும் அடியார்களது வாழ்வில் ராஜயோகத்தினையும், பதினாறு வகை செல்வங்களையும் பெற்று மகத்தான வாழ்வு வாழ்ந்து வருவது கண்கூடு. தலத்தின் இறைவனாக மதங்கீஸ்வர சுவாமியும், இறைவியாக ஸ்ரீ ராஜமாதங்கீஸ்வரி அஞ்சனாட்சி அம்பிகையும் அருட்பாலிக்கிறார்கள். சகல கலைகளுக்கும் அதிபதியாக திகழ்கின்ற அம்பிகையாக காட்சி தருகின்றாள். அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் சொன்ன பதினாறு பேறுகளை பெற இத்தல இறைவியை மனம், மொழி, மெய் ஒன்றுபட ஆத்மார்த்தமாக பூஜித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.
மகாசரஸ்வதி தேவிக்கே இத்தல ஈஸ்வரி வித்யாப்யாசம் செய்ததால் இத்தல இறைவியை வழிபடுவோர் கல்வி, உயர்பதவி, தொழில் மேன்மை பெறுவர் என்பது ஐதீகம். திருமணத் தடைகள் நீங்கி இனிய இல்லறம் நல்லறமாக அம்பிகை அருளால் அமையும். இத்தலத்தில் ராஜகோபுரம் இல்லை. இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஆனந்த மகாகாளி வடக்கு திசை நோக்கி ஆனந்த கோலத்தில் எழுந்தருளியுள்ள இத்தாயை வழிபட்டால் ஆனந்த வாழ்வை பெறலாம். இத்தலத்தில் இரு நந்திகள் வீற்றிருக்கின்றன. அவை கிழக்கு நோக்கி உள்ள நந்தியின் பெயர் சுவேத நந்தி. மேற்கு நோக்கி உள்ள நந்தி பெயர் மதங்க நந்தி எனவும் வழங்கப் பெறுகிறது. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய என்று இவ்விரு நந்தியம் பெருமான்களை பிரதோஷ தினங்களில் மனமுருக தரிசித்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராஜயோகம் கிடைக்க திருவருள் பெற்றவர் மட்டுமே இத்திருத்தலத்தை தரிசிக்க முடியும் என்று கூறுவர். பராசவனம் என்பது திருநாங்கூரின் புராண கால பெயராகும். பராசவனத்தில் மதங்காசிரமத்தில் கடுந்தவம் புரிந்த மதங்க மாமுனிவரின் வேண்டுதல்படி திருமால் பன்னிரு மூர்த்திகளாகி பராசவனத்தில் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி சர்வேஸ்வரனை வழிபட்டதாக பராசவனப் புராணம் கூறுகிறது. சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் தம் திருமுறையில் இத்தலத்தைப் பற்றி பெரிதும் போற்றி உள்ளார். சுந்தரர் காலம் 9ஆம் நூற்றாண்டு எனும்போது இத்தலமும் அதற்கும் முந்தியது எனலாம்.
சங்க இலக்கியங்களில் திருநாங்கூர் பற்றி உள்ளது பெருஞ்சிறப்பு.
பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் “நாங்கூர் வேளிர்” என்ற குருநில மன்னன் மகளை கரிகாற்சோழன் திருமணம் செய்து கொண்டதாக தகவல் உள்ளது. எனவே கரிகாற் சோழனின் மனைவி நாங்கூரைச் சேர்ந்தவர் என்பது தெளிவாகின்றது. சைவ சமயப் பெரியோர்களில் ஒருவரான சேந்தனார் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடியவர். இவர் திருநாங்கூரைச் சேர்ந்தவர். நாங்கூர் சேந்தன் என்று போற்றுகின்றனர். மதங்க மகரிஷிக்கு இத்தல அம்பிகையே மகளாகத் தோன்றி திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரரை மணம் புரிந்தார் என்று பராசவன புராணம் கூறுகின்றது.
கோயில் அமைந்த விதமும் மகா அற்புதம். இத்தல கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், சுற்றுப்பிராகாரம், திருச்சுற்று மதில் கொண்டு கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் கிழக்கு புறத்தில் இடது பக்கத்தில் மாதங்கீஸ்வரி சந்நதியும், சண்டிகேசஸ்வரர் சந்நதியும் உள்ளது. திருச்சுற்றின் வடக்குப் புறத்தில் தெற்கு திசை நோக்கி காளி சந்நதியும், அடுத்து மதங்கமுனி சந்நதியும் உள்ளது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நதி அமைந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீமுருகப் பெருமான் ஸ்ரீ வள்ளி தெய்வானை சந்நதிகளும், வடமேற்கு மூலையில் மகாலட்சுமி, ஸ்ரீதேவி, பூதேவி சந்நதிகளும் திகழ்ந்து அருட்பாலிக்கின்றனர்.
இத்தல சிற்பங்கள் முற்கால சோழர்காலத்தை சார்ந்தவையாகும். ஒவ்வொன்றும் எழில் நலம் மிகுந்து காணப்படுகின்றன. திருச்சுற்று சந்நதிகளிலுள்ள நாராயணி சிற்பம், நவகிரக சிற்பங்கள் அருள் ததும்பும் விதமாக வீற்றிருக்கின்றன. அர்த்த மண்டபத்தில் கி.பி. 12, 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகப் பெருமான், பைரவர், சூரியன், தெய்வச் சிற்பங்கள் தனிச்சிற்பங்களாக உள்ளது.
108 வைணவ திவ்ய திருப்பதிகளில் பதினொன்று திருநாங்கூரில் அமைந்துள்ளது மிகவும் விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் 11 கருட சேவை உற்சவம் நடைபெறும். மிக மிக விசேஷம் இந்த 11 கருட சேவை உற்வசம் தை அமாவாசைக்கு மறுதினம் திருநாங்கூரில் ஸ்ரீ நாராயண பெருமாள் திருக்கோயிலில் நடைபெறும். இதேபோன்று 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருக்கல்யாண அருள்மழை பொழியும் திருக்காட்சி வைபவம் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆண்டு முதல் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது பெருஞ் சிறப்பாகும்.
தலவிருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது. திருநாங்கூர் சைவமும் வைணவமும் சங்கமிக்கும் தண்வயல் சூழ் தெய்வத் திருத்தலம். பதினொரு வைணவ திருப்பதிகளையும் 11 (ஏகாதசி) ருத்ரர்களையும் தரிசிப்போர்க்கு ஸ்ரீவைகுண்டம் திருக் கயிலாய் மகா தரிசனம் செய்த பெரும் புண்ணியம் சித்திக்கும். பதவி, பட்டம், புகழ், செல்வாக்கு, செல்வங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை பெறவும், இழந்த நல்ல விஷயங்களை மீண்டும் பெற்று ராஜயோகத்துடன் பரிபாலனம் செய்யக்கூடிய உச்சத்தை வாழ்வில் பெற இத்தல இறைவியான ஸ்ரீ ராஜமாதங்கியையும் ஸ்ரீ மதங்கீஸ்வரரையும் மனதாற வழிபட்டாலே போதும். திருத்தலம் நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளது

“நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
இயேசு கிறிஸ்து தம்மை நம்பிக்கையுடன் தொட்ட பலருக்கும் சுகம் அளித்ததாக நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர். இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்ணும், வேறு பலரும் இயேசுவின் ஆடையைத் தொட்டு நலமடைந்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
இயேசுவும் அவரது சீடர்களும் கெனசரேத்து பகுதியை அடைந்தார்கள். இயேசுவை யாரென்று அறிந்துணர்ந்த அவ்விடத்து மக்கள் சுற்றுப் புறமெங்கும் ஆள் அனுப்பி எல்லா நோயாளர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அவரது மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினர்; தொட்டவர் யாவரும் நலமடைந்தனர். (மத்தேயு 14:34-36)
இயேசு தொழுகைக் கூடத் தலைவர் யாயிருடன் சென்று கொண்டிருந்தார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.
அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார். (மாற்கு 5:24-34)

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இந்த சிறப்பு யாக பூஜையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தினந்தோறும் ஆயுட்ஹோமம், மணிவிழா, சதாபிஷேகம், சஷ்டியப்தபூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தினந்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 128 திரவிய பொருட்களுடன் பஞ்சாக்கர ஹோமம், 81 பத மந்திர ஹோமங்கள் செய்து ஓதுவார்கள் பதிகங்களை பாடினர்.
இதனையொட்டி 2 வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு கோவில் பிரகாரங்களை வலம் வந்தனர். பின்னர் அமிர்தகடேஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இந்த சிறப்பு யாக பூஜையில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.