என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.
    வீதாகிலவிஷயேச்சம் ஜாதானந்தாஸ்ருபுலகமத்யச்சம்
    ஸீதாபதி தூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

    கருத்து:

    எல்லாவிதமான விஷய அனுபவங்களைக் கொண்டவரும், ஆனந்தக் கண்ணீர், மயிர்க்கூச்சல் ஆகியவற்றை அடைந்தவரும், சுத்தமான மனம் கொண்டவரும், ஸ்ரீராம தூதர்களில் முதன்மையானவரும், தியானம் செய்யத் தக்கவரும், வாயு குமாரனுமான ஹனுமனை தியானிக்கிறேன்.

    தருணாருணமுககமலம் கருணாரஸபூரபூரிதாபாங்கம்
    ஸஞ்சீவனமாஸாஸே மஞ்சுல மஹிமானமஞ்ஜனாபாக்யம்

    கருத்து:

    பால சூரியனுக்கு ஒப்பான முகக் கமலத்தைக் கொண்டவரும், கருணையாகிய நீர்ப் பிரவாகத்தால் நிறைந்த கண்களைக் கொண்டவரும், ஔஷதி பர்வதத்தைக் கொண்டு வந்து யுத்தத்தில் இறந்த வானரர்களைப் பிழைக்கும்படி செய்தவரும், புகழத்தக்க மகிமை உள்ளவரும், அஞ்சனாதேவியின் புண்ணிய பலனுமானவருமான ஹனுமனைத் தரிசிக்க விரும்புகிறேன்.

    ஸும்பரவைரிஸராதிகமம்புஜதளவிபுலலோசனோதாரம்
    கம்புகளமநிலதிஷ்டம் பிம்பஜ்வலிதோஷ்ட மேகமவலம்பே

    கருத்து:

    மன்மத பாணத்தைக் கடந்தவரும், தாமரை தளம் போல் அகன்ற கண்களால் அழகு பொருந்தியவரும், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவரும், வாயுதேவரின் பாக்கிய பூதருமான ஹனுமனைச் சரணம் அடைகிறேன்.

    தூரீக்ருதஸீதார்த்தி: ப்ரகடீக்ருதராமவைபவஸ்பூர்த்தி:
    தாரிததஸமுககீர்த்தி: புரதோ மம பாது ஹனுமதோ மூர்த்தி

    கருத்து:

    சீதையின் கஷ்டங்களை வெகு தூரத்தில் விலக்கியதும், ஸ்ரீராம மகிமையின் நினைவை வெளியிடுவதும், ராவணனுடைய கீர்த்தியைப் பிளந்ததுமான ஸ்ரீஹனுமனின் சரீரம் எனக்கு முன்னால் தோன்றட்டும்.

    வானரநிகராத்யக்ஷம் தானவகுல குமுதரவிகரஸத்ருஸம்
    தீனஜனவனதீக்ஷம் பவனதப: பாகபுஞ்ஜமத்ராக்ஷம்

    கருத்து:

    வானரர்களின் கூட்டத்துக்குத் தலைவரும், ராட்சதர்களின் வம்சமாகிய ஆம்பல் புஷ்பத்துக்கு சூரிய கிரணம் போல் இருப்பவரும், ராட்சத குலத்தை அழித்தவரும், துக்கம் அடைந்தவர்களை ரட்சிப்பதில் உறுதிகொண்டவரும், வாயு தேவனின் தவப்பயனாக இருப்பவருமான ஸ்ரீஹனுமனை நேரில் தரிசித்தேன்.

    ஏதத்பவனஸுதஸ்ய ஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்
    சிரமிஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராமபக்திபாக்பவதி

    கருத்து:

    பஞ்ச ரத்னம் என்று பெயருள்ள - ஸ்ரீஹனுமனின் இந்த ஸ்தோத்திரத்தை எவர் படிக்கிறாரோ, அவர் இவ்வுலகில் எல்லாவிதமான போகங்களையும் வெகு காலம் அனுபவித்து, ஸ்ரீராம பக்தனாகவும் சிறந்து விளங்குவார்.
    ஊரடங்கில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வார்கள்.

    கொரோனா 2-வது அலை பரவியதால் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்பிரகாரத்தில் திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பேராலயத்தின் முன்பக்க கதவு மூடப்பட்டுள்ளது.

    இதேபோல சிக்கல் சிங்காரவேலவர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், நாகூர் தர்கா உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு ஒரு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் வகையில் உள்ள நாகை மாவட்டத்திற்கு ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளை குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் ஒரு சில மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாகை மாவட்டத்தில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய காத்திருந்த நிலையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோல வேளாங்கண்ணியை பொறுத்தவரை பேராலயத்திற்கு வரும் பக்தர்களை நம்பி தான் பல்வேறு கடைகளை வியாபாரிகள் வைத்துள்ளனர். வழிபாட்டு தலங்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி பகுதியில் ஒரு சில பேன்சி ஸ்டோர் கடை, பொரி கடை, பட்டாணி கடை, ஜவுளி கடை உள்ளிட்ட கடைகள் மட்டும் திறந்திருந்தன. கடைகள் திறந்திருந்தும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வராததால் கடைகள் வெறிச்சோடி கிடந்தன.
    இறை வழிபாட்டில், மயில் முருகப்பெருமானின் வாகனமாக இருக்கிறது. வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.
    மயில்- நம் நாட்டின் தேசியப் பறவை. அதோடு இறை வழிபாட்டில், அது முருகப்பெருமானின் வாகனமாகவும் இருக்கிறது. மழை மேகத்தைப் பார்த்ததும், ஆண் மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடுவது வாடிக்கை.

    அப்படி ஆடும் பொழுது, ஒருசில இறகுகள் உதிர்ந்து கீழே விழும். அவ்வாறு கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டின் பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் விலகும்.

    வீட்டின் முன்பகுதியில் அந்த மயில் இறகை சொருகி வைத்தால், எதிர்மறை ஆற்றலை தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம்.

    வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    பெருமாள் ஆலயங்களுக்குச் செல்பவர்கள் ‘சடாரி’யைப் பற்றி அறிந்திருப்பார்கள். இந்த சடாரி, பெருமாளின் திருபாதங்கள் என்றும், அதனால்தான் அதை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    பெருமாள் ஆலயங்களுக்குச் செல்பவர்கள் ‘சடாரி’யைப் பற்றி அறிந்திருப்பார்கள். சிறிய அளவிலான கிரீடம் போல் இருக்கும் அந்த சடாரியை, கோவில் அர்ச்சகர், பக்தர்களின் தலையில் வைத்து ஆசி வழங்குவார். இந்த சடாரி, பெருமாளின் திருபாதங்கள் என்றும், அதனால்தான் அதை தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    பக்தர்களுக்கு சடாரி ஆசி வழங்கப்படுவதற்கு, வைணவ சம்பிரதாய முறைப்படி ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்ததும், இந்த பூவுலகத்தில் உள்ள மாயை, அந்தக் குழந்தையை பிடிக்கும் வகையில் செயல்படும் வாயுவிற்கு ‘சடம்’ என்று பெயர். ஒவ்வொரு குழந்தையும், கர்ம வினைகளுக்குக் கட்டுப்பட்ட இந்த பூமியில் பிறக்கும் பொழுது, அதன் உச்சந்தலையில் ‘சடம்’ என்ற காற்று படுகிறது. அந்த காற்று பட்டதும், அது தன்னுடைய முன் ஜென்ம நினைவுகளை மறந்து, உலக மாயையில் சிக்கிக்கொள்வதாக ஐதீகம். இந்த சடம் என்ற காற்று படுவதால்தான், பிறந்தவுடன் குழந்தைகள் அழுவதாகவும் சொல்லப்படுகிறது.

    அதே நேரத்தில் இந்த ‘சடம்‘ என்ற வாயுவால் பாதிக்கப்படாதவர், 12 ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார். இவர் ஆழ்வார்திருநகரில் காரியார்-உடையநங்கை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இவர் பிறந்தபோது, இயற்கைக்கு மாறாக அழாமல் இருந்தார். இதனாலேயே இவருக்கு ‘மாறன்’ என்ற பெயர் வந்தது. நம்மாழ்வார், தாயின் கருப்பையில் இருக்கும் போதே, ‘சடம்’ என்ற வாயுவை கோபமாக பார்த்ததால் ‘சடகோபன்’ என்றும் அழைக்கப்பட்டார்.

    வைணவ குரு பரம்பரையில், திருமால், திருமகளுக்கு அடுத்தபடியாக குரு நிலையில் வைத்து வணங்கப்படுபவர் ‘விஷ்வக்சேனர்.’ இவரது அம்சமாக பிறந்தவராகவே நம்மாழ்வார் பார்க்கப்படுகிறார். மேலும் திருமாலின் திருவடி அம்சம் என்றும் இவரை குறிப்பிடுவார்கள். அதன் அடிப்படையில், கோவிலில் குடிகொண்டுள்ள பெருமாளின் பாதங்களில், சடகோபம் என்ற சடாரி வைக்கப்பட்டு பூஜை முடிந்த பின்னர் அது பக்தர்களின் தலையில் வைக்கப்படுகிறது. அதாவது நம்மாழ்வாரையே, பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. சடாரி ஆசி பெறுவதன் மூலமாக ஒருவரது மனதில் உள்ள ஆணவம் அகன்று, அமைதியும், மகிழ்ச்சியும் குடிகொள்வதாக நம்பிக்கை. ஆலயத்தில் நமக்கு சடாரி ஆசி வழங்கப்படும்போது, தலை குனிந்து, புருவங்களுக்கு மத்தியில் வலது கை நடுவிரலை வைத்து, வாய் பொத்தி அதை ஏற்றுக்கொள்வது முறையாகும்.
    நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆனி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆனி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயா் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.

    கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
    3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது.
    தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஓங்கி உயர்ந்த மலைகளுக்கு மத்தியில் எழிலுற அமைந்து உள்ளது மூடபித்ரி. இதற்கு ‘கிழக்கு மூங்கில் பகுதி’ என்று பொருள். இது 14 முதல் 16-ம் நூற்றாண்டு வரை ஜெயின் மதம், கலாசாரம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றை பறைசாற்றுவதாக இருந்தது. இங்கு 18 பிரசித்தி பெற்ற ஜெயின் கோவில்கள் உள்ளன.

    நாடு முழு வதும் இருந்து ஜைன மதத்தினர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் ஏராளமான ஜெயின் கோவில்கள் இருந்த போதிலும் மூடபித்ரியில் உள்ள ஜெயின் கோவில் மிகவும் முக்கியமானது. இந்த கோவிலை பார்க்கும்போது, அது இமாலயர்களின் கட்டிடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. நேபாளத்தில் இதுபோன்று கலையம்சத்துடன் கூடிய கட்டிடங்கள் காணப்படுகிறது.

    மூடபித்ரியில் உள்ள சந்திரநாதா கோவில் தான் கர்நாடகத்தில் இருக்கும் மிகப்பெரிய ஜெயின் கோவில் ஆகும். இது 1429 முதல் 1430-ம் ஆண்டுக்குள் நாமங்களா தளபதி தேவராய உடையரால் கட்டப்பட்டது. இந்த கோவில் 1,000 தூண்களை கொண்டது. அதில் இரு தூண்கள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த கோவில் கருவறையில் சந்திரநாத சாமியின் பஞ்சலோக சிலை உள்ளது.

    3 மாடிகளை கொண்ட இந்த கோவிலின் நுழைவுவாயில் பகுதியில் ஒரே கல்லால் ஆன 16 அடி உயர தூண் உள்ளது. அது ‘மகாஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள சுவர்கள், தூண்களில் சாமிகள், இலைகள், பூக்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு உள்ளன. மேலும் ஒட்டகசிவிங்கி, சீன டிராகன் ஆகிய சிற்பங்கள் ஜெயின் வியாபாரிகள் ஆப்பிரிக்கா, சீன நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டுவதாக உள்ளன. இதுதவிர இந்த கோவிலில் விலை மதிப்பற்ற ஆபரணங்களும், ஜெயின் சாமியார்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன. மங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இந்தக்கோவில் அமைந்துள்ளது.
    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை கோவில்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. காலை 6.30 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

    வடபழனியில் அருள்மிகு சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அரசு பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி பக்தர்களுக்கு அர்ச்சனை, பிரசாதம் வழங்கப்படவில்லை.

    என்ன தான் வீட்டில் வழிபாடு செய்தாலும் கோவிலில் வழிபாடு செய்யும் போது பாசிட்டிவ் எனர்ஜி கிடைப்பதாக சாமி தரிசனம் செய்த பக்தர்கள் தெரிவித்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகை காயாரோகண சாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நாகாபரண விநாயகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    நாகை காயாரோகண சாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் ஏழை பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில். கொரோனா வைரஸ் தொற்றால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகர், வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனிஸ்வரர்சுவாமி கோவில் விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன். என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளில் விரதம் இருந்து அனுமனை வழிபடுவது ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் 14-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் வைகாசி பெருந்திருவிழா தொடங்கியது. 17 நாட்கள் திருவிழா தொடர்ந்து நடைபெறுகிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அரசு உத்தரவுப்படி கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி 2-ம் நாள் 17-ம் தேதி திருவிழா மேட்டுத்தெரு கிராமமக்களால் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு ஜெனகை மாரியம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சண்முகம் அர்ச்சகர் பூஜைகள் செய்தார்.

    21-ம் தேதி 6-ம் நாள் திருவிழா நடைபெற்றது. இதில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஜெனகை மாரியம்மன் எழுந்தருளினார். இந்த திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.

    23-ம் தேதி 9-ம் திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி அக்னிசட்டி எடுத்து வந்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் 13-ம் நாள் திருவிழாவான நேற்று அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.
    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் பற்பல அற்புதங்கள் செய்ததாக நற்செய்திகளில் காண்கிறோம். முடக்குவாதம் பாதித்த மூவருக்கு அவர் நலமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
    இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார்.

    இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். (மத்தேயு 8:5-13)

    இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று. பலர் வந்து கூடவே, வீட்டு வாயிலருகிலும் இடமில்லாமல் போயிற்று. அவர் அவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது முடக்குவாதமுற்ற ஒருவரை நால்வர் சுமந்து அவரிடம் கொண்டுவந்தனர். மக்கள் திரண்டிருந்த காரணத்தால் அவரை இயேசுவுக்கு முன் கொண்டுவர இயலவில்லை. எனவே அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

    அங்கே அமர்ந்திருந்த மறைநூல் அறிஞர் சிலர், “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் கடவுளைப் பழிக்கிறான். கடவுள் ஒருவரே அன்றிப் பாவங்களை மன்னிக்க யாரால் இயலும்?” என உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். உடனே அவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு தம்முள் உணர்ந்து, அவர்களை நோக்கி, “மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

    அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார். அவரும் எழுந்து உடனே தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாரும் காண வெளியே சென்றார். இதனால் அனைவரும் மலைத்துப்போய், “இதைப்போல நாம் ஒருபோதும் கண்டதில்லையே” என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். (மாற்கு 2:1-12)

    எருசலேமில் ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு. எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இம்மண்டபங்களில் உடல்நலமற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் ஆகியோர் திரளாய்ப் படுத்துக்கிடப்பர். [இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள். ஏனெனில் ஆண்டவரின் தூதர் சில வேளைகளில் அக்குளத்தினுள் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவர் எவ்வித நோயுற்று இருந்தாலும் நலமடைவார்.] முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்த ஒருவரும் அங்கு இருந்தார்.

    இயேசு அவரைக் கண்டு, நெடுங்காலமாக அவர் அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, “நலம்பெற விரும்புகிறீரா?” என்று அவரிடம் கேட்டார். “ஐயா, தண்ணீர் கலங்கும் போது என்னைக் குளத்தில் இறக்கி விட ஆள் இல்லை. நான் போவதற்கு முன் வேறு ஒருவர் இறங்கிவிடுகிறார்” என்று உடல் நலமற்றவர் அவரிடம் கூறினார். இயேசு அவரிடம், “எழுந்து உம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார். உடனே அம்மனிதர் நலமடைந்து தம்முடைய படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார். (யோவான் 5:2-9)
    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை :

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று அதிகாலை  கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்ட காட்சி
    நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

    * காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை  கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

    * விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

    * அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    ×