என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிலையில் விரைவில் கோவில் திறக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த 2 விழாக்களின் போது மூலவர் நடராஜர் வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதனால் இந்த இரு விழாக்களும் தனி சிறப்பு பெறுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், தினசரி காலை, மாலையில் தங்க, வெள்ளி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.

    விழாவில் 5-ம் திருவிழாவான 10-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடைபெறுகிறது. தேர்திருவிழா 14-ந்தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. சிகர விழாவான ஆனி திருமஞ்சனம் 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் மகாஅபிஷேகம் நடக்கிறது.

    பின்னர் 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்குமேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 16-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தற்போது கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதுடன், தளர்வுகளையும் அரசு அறிவித்து வருகிறது. எனவே விரைவில் கோவில்கள் திறக்கப்படும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த வகையில் ஆனி திருமஞ்சனவிழாவிலும், பங்கேற்று நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
    இந்த கோவில் மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.

    நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.

    இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.  

    ‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.
    ‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.

    * அனுமன்
    * விபீஷணன்
    * மகாபலி
    * மார்க்கண்டேயர்
    * வியாசர்
    * அஸ்வத்தாமன்
    * பரசுராமர்
    கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற முருதேஸ்வரா கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது.
    கர்நாடகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் முருதேஸ்வரா கோவிலும் ஒன்று. உத்தரகன்னடா (கார்வார்) மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோவில் உள்ளது. இந்த மலையின் 3 பகுதிகளை அரபிக்கடல் சூழ்ந்து இருப்பது இதன் சிறப்பு. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இந்த கோவிலில் 20 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலை நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் 2 பிரமாண்டமான யானை சிலைகள் உள்ளன. இந்த கோவில் ராமாயண காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலின் ராஜகோபுரம் 249 அடி உயரம் கொண்டது. இது உலகிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் என கருதப்படுகிறது. இங்குள்ள லிங்கம், உண்மையான ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி என நம்பப்படுகிறது. இந்த லிங்கமானது தரைமட்டத்தில் இருந்து கீழே 2 அடி ஆழத்தில் அமைந்து இருக்கிறது. அத்துடன் இந்த கோவிலின் அருகே பிரமாண்டமான சிவன் சிலையும் இருக்கிறது. 123 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே திறந்த வெளியில் அமைக்கப்பட்ட 2-வது உயரமான சிவன் சிலை ஆகும்.

    இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆன்மிகவாதிகள் தினமும் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை நடை திறந்திருக்கும். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் கோவிலுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இங்கு உள்ள நெட்ரானி தீவு சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இந்த தீவு பகுதியில் நீர்சாகச விளையாட்டுகள் செய்து சுற்றுலா பயணிகள் குதூகலிக்கலாம்.
    கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது.
    கொரோனா நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று இந்த மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ததால், கோவில்களில் அதிகம் கூட்டம் இல்லை.

    கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் தரிசனத்திற்காக நேற்று திறக்கப்பட்டது. காலை 5.30 மணிக்குள்ளாக பூஜைகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் 7.30 மணி முதல் பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் பொதுமக்களின் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை.
    இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார். பெரும் திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அதிகார வர்க்கத்தால் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள். அவர்கள் போலி இறைவாக்கினரிடமும் பணம் பிடுங்கும் சமயவாதிகளிடமும் மாட்டிக்கொண்டு தங்கள் துன்பங்கள் தீர்ந்துவிடாதா என்று ஏங்கினார்கள். அவர்களிடம் ‘போலிகள்’ குறித்த விழிப்புணர்வை இயேசு உருவாக்கினார்.

    “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். ஒவ்வொரு மரமும் அதனதன் கனியால் அறியப்படும். போலி இறைவாக்கினரை அவர்களின் செயல்களைக்கொண்டே அறிந்துகொள்வீர்கள். நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். மரம் அதன் கனியால் அறியப்படும். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியாது. அதைப் போல, செயல்களைக்கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அதிகாரத் தொனியுடன் கற்பித்தார் இறைமகன்.

    இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார்.

    சீடர்கள் அவரிடம் வந்து, “ஏன் மக்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான்.

    ஆனால், இல்லாதவர்களிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும். அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். இந்த மக்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் மனதால் உணராமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது. இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
    இன்று செவ்வாய் கிழமை என்பதால், முருகன் கோவில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர்.
    சென்னை

    ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்  கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று இந்த மாவட்டங்களில் மட்டும் கோவில்கள் திறக்கப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகளிலும் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலையில் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ததால், கோவில்களில் அதிகம் கூட்டம் இல்லை.

    இந்த நிலையில் இன்று  செவ்வாய் கிழமை என்பதால், முருகன் கோவில்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள வடபழனி, கந்தகோட்டம் முருகன்  கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்தனர். மற்ற கோவில்களில் கூட்டம் குறைவாக இருந்தது. கொரோனா காலத்தில் கோவில்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் பலர் திருமணம் செய்து கொண்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் புதுமண தம்பதியினர் தரிசனம் செய்த காட்சி.

    வடபழனிகோவில் முன்பும் ஊரடங்கு நேரத்தில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணங்கள் நடைபெற்றது. இதுபோன்று திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து இதுபோன்ற தம்பதிகள் இன்று காலையில் வடபழனி முருகனை தரிசிப்பதற்காக காலையிலேயே கோவிலுக்கு வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் பயபக்தியோடு சாமி கும்பிட்டனர்.

    அதே போன்று இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் வயதானவர்களும் சாமி கும்பிட கோவிலுக்கு வந்திருந்தனர். கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள  நிலையில்  சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வரிசையில் நின்று இன்று சாமி கும்பிட்டனர். பக்தர்கள்  கைகளை சுத்தம் செய்வதற்கு கோவில் நுழைவாயிலில் சானிடைசர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதனை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பிறகே பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    மனிதர்களை நன்மையின் பக்கம் வழிநடத்திச்செல்ல ஏராளமான நற்செயல்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை இந்த நான்கு முக்கிய செயல்கள். அவை வருமாறு:-
    இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இதற்கு, அந்த ஏக இறைவன் அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை வாழ வேண்டும்.

    இறைவன் காட்டிய வழியில் நமது வழிபாடுகள், செயல்கள் அனைத்தும் அமைய வேண்டும். நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற முடியும்.

    மனிதர்களை நன்மையின் பக்கம் வழிநடத்திச்செல்ல ஏராளமான நற்செயல்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை இந்த நான்கு முக்கிய செயல்கள். அவை வருமாறு:-

    1) “இறைவன் ஒருவனே, வணக்கத்திற்கு உரியவன் அந்த அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை” என்று பொருள் தரும் முதலாவது கலிமாவை அதிகமாக ஓதி வரவேண்டும்.

    2) வாழ்நாளில் செய்த பாவமான செயல்கள், காரியங்களை நினைத்து மனம் வருந்தி கண்ணீர் சிந்தி இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அதுபோன்ற பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.

    3) இந்த உலக வாழ்க்கையில் நிறைய நன்மைகள் செய்து அதன் மூலம் மறுமையில் சொர்க்கத்தை பெறும் வகையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

    4) நரகத்தில் மனிதனை தள்ளும் தீய செயல்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் மன்றாடி கேட்டுக்கொள்ள வேண்டும்.

    இதுபோன்ற நற்செயல்கள் மூலம் நாம் அதிகமாக நன்மைகள் செய்து, பாவங்கள், தீமைகளை விட்டு விலகி இருந்து சொர்க்கத்தைப்பெற முயற்சி செய்திட வேண்டும். இது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதை கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

    ஆசையிலும், ஆணவத்திலும் ஆர்வம் கொண்டுள்ள மனித மனம் இதைச்செய்ய விடாமல் தடுக்கும். எனவே ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அருளைப்பெறும் வகையில் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறும் வகையில் நமது அன்றாட வாழ்க்கை முறைகளையும், செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வது அவசியம். அப்போது தான் அல்லாஹ்வின் அருட்பார்வை நமக்கு கிடைக்கும். இதைப்பெறுவது என்பது எளிதானது அல்ல. இறைவனிடம் இருந்தே இதற்கும் பல்வேறு வகையில் சோதனைகள் நமக்கு வரத்தான் செய்யும். குறிப்பாக நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளையும் பார்க்கும் போதே மனதில் ஆசை தூண்டப்பட்டு சோதனைகள் வரத்தொடங்கும்.

    இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, “பார்வை என்பது ஷைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்துக்கொள்வாரோ அவருக்கு உள்ளத்தில் ஈமான் (இறையச்சம்) பாதுகாக்கப்படும்” என்றார்கள். (நூல்: ஹாகிம்).

    மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).

    “மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, ‘தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்’ என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை” (திருக்குர்ஆன் 39:49).

    இறைவன் நம்மை சோதிப்பது எல்லாம் அவன் தரும் அருட்கொடைகளுக்கு நம்மை தகுதியானவர்களாக ஆக்குவதற்குத்தான். அதை நாம் புரிந்து கொண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை இறைவன் பொருட்டால் ஏற்றுக்கொண்டு, இறைவழியில் செயல்பட்டு நற்செயல்கள் செய்துவந்தால் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற முடியும்.

    நன்மைகள் பக்கம் நம்மை அழைத்துச்செல்லும் நற்செயல்களை எப்போதும் செய்வோம், மற்றவர்களையும் அதுபோன்ற செயல்களை செய்யும்படி தூண்டுவோம். இதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இறையச்சத்துடன் திகழும், இறைவனின் அன்பும், கருணையும் நம்மை வழிநடத்தி நன்மைகளை பெற்றுத்தரும்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது.
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

    குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.

    வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

    உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.

    வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.

    விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

    வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
    தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எல்லாமே ஐந்தாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அது பற்றி பார்ப்போம்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது, விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில். இந்த திருத்தலத்தின் புராணப் பெயர் ‘திருமுதுகுன்றம்’ என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். இந்தக் கோவிலில் எல்லாமே ஐந்தாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அது பற்றி பார்ப்போம்.

    மூர்த்தங்கள்

    * விநாயகர்
    * முருகர்
    * சிவபெருமான்
    * சக்தி (அம்மன்)
    * சண்டிகேஸ்வரர்

    இறைவனின் திருநாமம்

    * விருத்தகிரீஸ்வரர்
    * பழமலைநாதர்
    * விருத்தாசலேஸ்வரர்
    * முதுகுன்றீஸ்வரர்
    * விருத்தகிரி

    கோபுரங்கள்

    * கிழக்கு கோபுரம்
    * வடக்கு கோபுரம்
    * மேற்கு கோபுரம்
    * தெற்கு கோபுரம்
    * கண்டராதித்தன் கோபுரம்

    நந்தி

    * இந்திர நந்தி
    * வேத நந்தி
    * ஆத்ம நந்தி
    * மால்விடை நந்தி
    * தர்ம நந்தி

    விநாயகர்

    * ஆழத்துப் பிள்ளையார்
    * மாற்றுரைத்த விநாயகர்
    * முப்பிள்ளையார்
    * தசபுஜ கணபதி
    * வல்லப கணபதி

    ஈசனை வழிபட்டோர்

    * உரோமச முனிவர்
    * விபசித்து முனிவர்
    * குமார தேவர்
    * நாதசர்மா
    * அனவர்த்தினி

    வழிபாடு

    * திருவனந்தல்
    * காலசந்தி
    * உச்சிகாலம்
    * சாயரட்சை
    * அர்த்தஜாமம்

    திருச்சுற்று

    * தேரோடும் திருச்சுற்று
    * கயிலாய திருச்சுற்று
    * வன்னியடி திருச்சுற்று
    * அறுபத்து மூவர் திருச்சுற்று
    * பஞ்சவர்ண திருச்சுற்று

    மண்டபங்கள்

    * இருபது கால் மண்டபம்
    * இடைகழி மண்டபம்
    * தபன மண்டபம்
    * மகா மண்டபம்
    * இசை மண்டபம்
    ஜூன் மாதம் 29-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    29-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * தேய்பிறை பஞ்சமி
    * சந்திராஷ்டமம் - பூசம்

    30-ம் தேதி புதன் கிழமை :
     
    * தேய்பிறை சஷ்டி
    * சந்திராஷ்டமம் - ஆயில்யம்
     
    1-ம் தேதி வியாழக்கிழமை :

    * தேய்பிறை சப்தமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- மகம்

    2-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * தேய்பிறை அஷ்டமி
    * தேவ மாதா காட்சியருளிய நாள்
    * சந்திராஷ்டமம் - பூசம்

    3-ம் தேதி சனிக்கிழமை :

    * தேய்பிறை நவமி
    * திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
    * சந்திராஷ்டமம் - உத்திரம்

    4-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * தேய்பிறை தசமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்

    5-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சர்வ ஏகாதசி
    * சந்திராஷ்டமம் -   ஹஸ்தம், சித்திரை
    வேதாரண்யம் நகரில் அன்னப்பசாமி கோவிலில் ஆனி மாதத்தையொட்டி பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம் நகரில் அன்னப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாதத்தையொட்டி பூஜை நடைபெற்றது. அப்போது சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர்.
    ×