என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பணி வாழ்வின் தொடக்கத்தில் முதல் சீடர்களை அழைத்த வேளையிலும், உயிர்ப்புக்கு பிறகு திருத்தூதர்களுக்கு காட்சி அளித்தபோதும் அவர் நிகழ்த்திய அற்புதங்களை இங்கு காண்போம்.
    இயேசு கிறிஸ்து இயற்கை மீதான தமது அதிகாரத்தை உணர்த்த, இரண்டு முறை திருத்தூதர்களுக்கு பெருந்திரளான மீன்கள் கிடைக்கும் வகையில் அற்புதம் செய்துள்ளார். பணி வாழ்வின் தொடக்கத்தில் முதல் சீடர்களை அழைத்த வேளையிலும், உயிர்ப்புக்கு பிறகு திருத்தூதர்களுக்கு காட்சி அளித்தபோதும் அவர் நிகழ்த்திய அற்புதங்களை இங்கு காண்போம்.

    இயேசு பேசி முடித்தபின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.

    இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். (லூக்கா 5:4-11)

    உயிர்த்த இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்றிரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை.

    இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். (யோவான் 21:1-8)
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சமூக இடைவெளியுடன் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கோவில் வளாகத்திலேயே 17 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் திருவிழா கொடி இறக்கம் நடைபெற்றது. இதையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பிறகு அம்மனை அலங்கரித்து கோவில் வளாகத்தை சுற்றி எடுத்து வந்தனர்.  

    ஊரடங்கு காரணமாக கோவில் செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் கவிதா, சுபாஷினி, பிரியா, பார்வதி ஆகியோர் முளைப்பாரி எடுத்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அம்மன் முன்பாக வைத்தனர்.

    பின்னர் பூ அலங்காரம் மற்றும் மின் ஒளியுடன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்தபடி சமூக இடைவெளியுடன் நின்று அம்மனை தரிசித்து சென்றனர்.
    இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி நடராஜப்பெருமானை வழிபட்டால் சகல வளங்களையும் பெறலாம்.
    இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
    ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
    விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
    விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
    ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம் ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

    - சிதம்பர பஞ்சாக்ஷர மந்திரம்

    பொதுப் பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்திரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார். சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
    ஊரடங்கு காரணமாக கோவையில் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தன. ஆனாலும் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜை நடைபெற்றது.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பரவலை கட்டுப்படுத்து வதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 7-வது முறையாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதால் கோவை உள்பட 11 மாவட்டங்கள் முதல் வகையில் உள்ளது.

    இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கல்வி புத்தகங்கள், பேக்கரிகள், சலூன் கடைகள், டீக்கடைகள், எலெக்ட்ரிக் கல் கடைகள், ஹார்டுவேர்ஸ், விற்பனை நிலையம், காலணி விற்பனை கடைகள், பாத்திர கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை, ஸ்டூடியோக்கள், ஜெராக்ஸ் கடைகள் திறக்கப்பட்டன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காக்கள் திறக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கோவையில் கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்க ளும் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தன. ஆனாலும் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் பக்தர்கள் அனுமதியின்றி பூஜை நடைபெற்றது.

    பக்தர்கள் இல்லாததால் கோவில் வளாகங்கள் தூசிப்படிந்தன. சில கோவில்களில் மர இலைகள் குப்பைகளாக காட்சி அளித்தன. எனவே கோவில் ஊழியர்கள் கிருமி நாசினி கொண்டு கோவிலை சுத்தப்படுத் தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று கோவை கோனியம்மன்கோவிலில் வளாகம் மற்றும் சுற்றுச்சுவர்களில் தண்ணீரை பீய்ச்சியடித்து ஊழியர்கள் சுத்தம் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, ஊரடங்கில் அடுத்த தளர்வின்போது கோவையில் கோவில்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோவில் வளாகத்தை சுத்தப்ப டுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர் என்றனர்.
    விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
    விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    சோமவாரம்: கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபட வேண்டிய தெய்வம், சிவபெருமான்.

    விரதமுறை:- பகல் முழுவதும் விரதம் இருந்து விரதத்தை முடித்து இரவு மட்டும் உணவருந்த வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் காலையில் பால், பழம் சாப்பிடலாம். இந்த நாளில் கணவன்- மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வழிபட்டு வரலாம்.

    பலன்:- திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை அமையும். திருமணமானவர் களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும்.

    பிரதோஷம்: தேய்பிறை மற்றும் வளர்பிறையில் வரும் திரயோதசி நாளில் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபட வேண்டிய தெய்வங்கள், சிவபெருமான் மற்றும் நந்தியம்பெருமான்.

    விரதமுறை:- சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷத்தை முதலாவதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாக பிரதோஷ விரதம் உள்ளது. இந்த விரத நாளில் பகல் உணவை தவிர்க்க வேண்டும். மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டத்தில் உணவருந்துதல், உறங்குவது, எண்ணெய் தேய்ப்பது செய்யக்கூடாது.

    பலன்:- கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை போன்றவற்றில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

    சித்ரா பவுர்ணமி: சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக சித்ரகுப்தர் இருக்கிறார்.

    விரதமுறை:- இந்நாளில், காலை வேளையில் பிதுர் தர்ப்பணம் செய்து, அன்று முழுவதும் உணவருந்துவதை தவிர்த்து, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.

    பலன்:- மறைந்த முன்னோர்களின் ஆன்மாக் களுக்கு பாவங்கள் நீங்கி, அவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவார்கள்.

    இடப விரதம்:வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். இந்த விரதநாளில், ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு நந்தியம்பெருமானையும் பூஜிக்க வேண்டும்.

    விரதமுறை:- பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம்.

    பலன்:- குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள்.

    கல்யாணசுந்தர விரதம்: பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாளும், பவுர்ணமியும் இணையும் நாளே ‘பங்குனி உத்திரம்.’ இந்த நாளில் சிவபெருமானின் திருமண வடிவமாக கருதப்படும் கல்யாண சுந்தரமூர்த்தியை வழிபட வேண்டும்.

    விரதமுறை:- பகல் முழுவதும் இறைவனை நினைத்தும் விரதம் இருந்து, இரவில் சாப்பிடலாம்.

    பலன்:- நல்ல வாழ்க்கைத்துணை அமைவதற்கு, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சூல விரதம்: தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று, இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுவும் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டிய விரதங்களில் ஒன்றுதான். அதுவும் சூலத்துடன் இருக்கும் சிவபெருமானின் படங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

    விரதமுறை:- இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பலன்:- விளையாட்டில் திறமை அதிகரிக்கும்.
    பெண்கள் தங்களது நோய் குணம் அடைந்ததற்காக தாங்களாகவே மாவிளக்கு எடுத்து அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்தனர்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு உத்தரவின்பேரில் பக்தர்கள் இல்லாமல் கோவில் வளாகத்திலேயே நடந்து வருகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் தேரில் பவனி வருவதுபோல் அலங்காரம் செய்து வைத்திருந்தனர். செயல் அலுவலர் இளமதி, சண்முகவேல் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்றனர்.

    சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வேப்பிலை மற்றும் தேங்காய் கையிலேந்தி பக்தி கோஷம் எழுப்பிக் கொண்டு 4 ரத வீதிகளில் வலம் வந்து கோவில் முன்பாக உள்ள கொடிக்கம்பத்தில் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் வெளியே இருந்தபடியே முடி காணிக்கை செலுத்தினர்.

    பெண்கள் தங்களது நோய் குணம் அடைந்ததற்காக தாங்களாகவே மாவிளக்கு எடுத்து அம்மனை நினைத்து வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி பூஜைகள் செய்தனர். கோவில் முன்பாக இருந்தபடியே அம்மனை நினைத்து வணங்கினர். பக்தர்கள் அடுத்த ஆண்டாவது கொரோனா இல்லாத ஆண்டாக அமைய வேண்டும், கோவில்களில் முழுமையான திருவிழாக்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.

    வழக்கம் போல் ரத வீதியில் அன்னதானம் வழங்குதல், நீர் மோர், பானம் வழங்குதல் நடந்தது. சிலர் தேருக்கு முன்னால் சூறை போடுவது போன்று நினைத்து கோவில் முன்பாக நின்று மாம்பழம், வாழைப்பழம் சூறை இட்டனர். இந்நிகழ்ச்சி அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்தது.
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.

    எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாகும்..
    ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ள ஹலேபீடு, ஒய்சாலா மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்குள்ள சன்னகேஸ்வரர் கோவிலின் வெளிசுவர்களில் வரிசையாக யானைகள், யாளிகள், அன்னங்கள், எண்ணற்ற தெய்வங்கள் காணப்படுகின்றன.

    கோவிலின் தென்புறத்தில் நர்த்தக விநாயகர் பெரிய வடிவிலும், உட்புறத்தில் இரணியன் உடலை கிழிக்கும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இதேபோல் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து ஆயரை காக்கும் கண்ணன், துவாரக பாலகர், நர்த்தன சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன.

    இதேபோல் கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரத கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள், சுவரின் மேல் பகுதியில் துவாரமிட்ட கல்திரைகள் மற்றும் சிவபெருமான், விஷ்ணு உருவங்கள் உள்ளன. இந்து கோவில்களை தவிர இங்கு சமண கோவில்களும் உள்ளன.

    இங்குள்ள ஆதிநாத ஈஸ்வரர், சாந்தேசஸ்வர், பர்சுவணதேஸ்வரர் கோவில்கள் உள்பட பல கோவில்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றின் தூண்கள் கண்ணாடி போல பளபளவென்று மின்னும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் உள்ளது.

    இந்த கோவில் கி.பி.1116-ம் ஆண்டு சோழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஒய்சாலா மன்னர் விஷ்ணவர்தனா கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம்.

    கொரோனா நோய் பரவல் நீங்கியதும், இந்த ஆலயத்தை தரிசினம் செய்து வாருங்கள். பெங்களூருவில் இருந்து 221 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹாசனில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.
    தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மூலம் டிக்கெட் வாங்கி உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருமலை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் திருவிழாக்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதம் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் திருவிழாக்கள் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    5-ந் தேதி (திங்கட்கிழமை) சர்வ ஏகாதசியும், 6-ந் தேதி வசந்த மண்டபத்தில் ராவண வதம் பாராயணமும் நடக்கிறது. 14-ந்தேதி மகரிஷி திருநட்சத்திர பூஜையும், 16-ந் தேதி ஸ்ரீவாரி ஆடிமாத முதல் தேதி விசேஷ பூஜை உற்சவமும் நடைபெறும். 20-ந் தேதி சயன ஏகாதசி பூஜை மற்றும் சாத்தூர் மாத விரத பூஜை நடக்கிறது.

    21-ந் தேதி நாராயண கிரியில் சத்திர ஸ்தாபிதம் மற்றும் 24-ந் தேதி வியாச ஜெயந்தி குரு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன உற்சவம் நடைபெறுகிறது.

    தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் மிகக்குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மூலம் டிக்கெட் வாங்கி உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் தீவிர பரிசோதனை செய்த பின்ரே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள்.
    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற்கு 4:9) என்று அழைப்பு விடுத்தார். காது கேளாமலும் பேச முடியாமலும் இருந்த சிலருக்கு இயேசு நலம் அளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
    பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். (மத்தேயு 9:32-33)

    பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர். (மத்தேயு 12:22-23)

    இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்தில் இருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது.

    அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள். (மாற்கு 7:31-37)

    பஸ்கள் ஓட தொடங்கியதால் தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான மண்டைக்காடு  பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் அர்ச்சகர்கள் வழக்கம்போல் பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பஸ்கள் ஓட தொடங்கியதால் தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கு கோவில் வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
    பகவான் விஷ்ணுவிற்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் நாம் ஜெபிப்பதன் பலனாக செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும்.
    இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும்;. லாபம் பெருகும், வீட்டில் பணப் பற்றாக்குறை நீங்கும். அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம்.

    விஷ்ணு  காயத்ரி மந்திரம்:

    ஓம் நிரஞ்சனாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
    ×