என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இறைவன் புரியும் தொழில்கள் அனைத்துமே அருளும் வகையைச் சேர்ந்ததுதான். படைத்து அருளுதல், காத்து அருளுதல், அழித்து அருளுதல், மறைத்து அருளுதல் மற்றும் அருளுதல்.
ஆதி அந்தம்:- சிவபெருமான் ஒருவரே, கருவில் பிறக்காதவர். ஆதலால் இறப்பு இல்லாதவர். என்றும் நிலைத்திருப்பவர். பிற உயிர்கள் அனைத்தும், கருவில் தோன்றி மறையும் தன்மை உடையவை. ஈசன் மூன்று திருமேனிகளைக் கொண்டவர். அருவம் என்னும் புலப்படாத நிலை. அருஉருவம் என்னும் சிவலிங்கத் திருமேனி. உருவம் என்ற விக்கிரகத் திருமேனி.
தொழில்:- சிவபெருமானுக்கு ஐந்து தொழில்கள் உண்டு. அவை, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல். இவற்றில் மறைத்தல் தொழிலை காத்தலிலும், அருளல் தொழிலை அழித்தலிலும் அடக்கி, முத்தொழில் கொண்டோன் என்பதாகவே ஈசன் வர்ணிக்கப்படுவார். ஆனாலும் இறைவன் புரியும் தொழில்கள் அனைத்துமே அருளும் வகையைச் சேர்ந்ததுதான். படைத்து அருளுதல், காத்து அருளுதல், அழித்து அருளுதல், மறைத்து அருளுதல் மற்றும் அருளுதல்.
குணங்கள்:- தன்வயத்தன் ஆதல் (தானே எல்லாம் ஆனவன்), தூய உடம்பினன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், பற்றற்றவன், பேரருள் கொண்டவன், முடிவிலான இன்பம் உடை யவன், முடிவிலா ஆற்றல் நிறைந்தவன்.

நாளை ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் நாம் பைரவரை எப்படி வழிபடுவது என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் வடிவமான பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது. நாளை சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் இந்த தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
நாளை அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். மாலையில் சிவன் கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும். பின்னர் ஐந்து தீபங்கள்(தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றி) ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு வறுமை மற்றும் பகைவர்களின் தொல்லை நீங்கும். மேலும் வியாபாரத்தில் முன்னேற்றம், தன லாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும்.
ஏழை மீனவன் அவன். தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்து, அதை விற்று கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான். என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லாததுபோல் காணப்பட்டான். அதை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்வான். அவனுடைய முகம் எப்போதும் வருத்தம் தோய்ந்த நிலையில் கடுகடுப்புடனேயே இருக்கும்.
ஒரு நாள் அவன் தன்னுடைய பால்ய கால நண்பனை சந்தித்தான். அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தான். பின்னர் அவனுடைய நலம் விசாரித்து, வருமானம் மற்றும் குடும்ப நிலைகளை கேட்டறிந்தான். அப்போது அவன் தன்னை விடவும் ஏழ்மை நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டான். ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடனேயே காட்சியளித்தான். நண்பன் சென்ற பிறகு, அன்றைய இரவு முழுவதும் மீனவனுக்கு உறக்கம் வரவில்லை. தன்னுடைய நண்பனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.
‘நமது நண்பனுக்கு வருமானமும் குறைவு, நம்மை விட பிரச்சினைகளும் அதிகம். ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லாமல் வாழ்கிறானே.. அது எப்படி?’ என சிந்தித்து சிந்தித்து மனக் குழப்பத்திலேயே உறங்கிப்போனான். மறுநாள் காலை எழுந்தபோதும், அவனுடைய மனக்குழப்பம் தீர்த்தபாடில்லை.
அந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் தன்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு சொல்லி வந்தார். ‘அந்த துறவியை சென்று பார்த்தால், நம் மனக்குழப்பம் தீர வாய்ப்பு கிடைக்குமா?’ என்று கருதிய மீனவன், உடனடியாக புறப்பட்டு துறவியின் குடிலுக்குச் சென்றான். குடிலுக்குள் அமர்ந்திருந்த துறவியை வணங்கிய மீனவன், தன்னுடைய குழப்பங்களை எடுத்துரைத்தான். அவரோ அவன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக புன்னகைத்தபடி, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
‘நம்முடைய மனக்குழப்பத்திற்கு பதிலளிக்காமல், சிரித்துவிட்டு செல்கிறாரே’ என்று சற்றே கோபம் வந்தாலும், துறவியை நிறுத்தி அது பற்றி கேட்க அவனுக்கு பயமாக இருந்தது. ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? அந்த பயத்தால் வீடு திரும்பிவிட்டான். ஆனால் அடுத்த நாள் காலையும் துறவியைப் பார்க்கச் சென்றான். இப்போதும் துறவியிடம் இருந்து அதே புன்னகைதான் வெளிப்பட்டது. பதில் கிடைக்கவில்லை. இப்படியே ஒரு மாத காலம் சென்றுவிட்டது. மீனவன், துறவியைப் பார்க்க வருவதும், அவர் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தபடி சென்றுவிடுவது வாடிக்கையாகிப் போனது.
ஒரு நாள் துணிச்சல் வந்தவனாக, “ஐயா நான் எனது பிரச்சினைகளை உங்களிடம் கூறினேன். ஆனால் நீங்களோ அதற்கான தீர்வைக் கூறாமல், சிரித்தபடியே என்னை கடந்து சென்று விடுகிறீர்கள். இதற்கு என்ன பொருள்?” என்று கேட்டான்.
இப்போது துறவி பதிலளித்தார். “நீ உன்னுடைய வருமானத்தை குறைவாக நினைக்கிறாய். அதே சமயம் உனக்கு வரும் பிரச்சினைகளை உயர்வாக கருதுகிறாய். இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். ஆசை கொள்வதில் தவறில்லை என்றாலும், பேராசை ஆபத்தானது. உன்னுடைய பிரச்சினையே உன் மனம் முழு வதும் ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் உனக்கு சிரிப்பு என்பதே மறந்து விட்டது. அதைத்தான் நான் உனக்கு இவ்வளவு நாளும் நினைவு படுத்தினேன். அதோடு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதை சிறு புன்னகையோடு கடந்து செல்ல முயற்சி செய். அது உன் வாழ்வை அழகாக்கும்” என்றார்.
இப்போது அந்த மீனவனின் உள்ளம் தெளிவடைந்திருந்தது. அந்த தெளிவை அவனது உதடு புன்னகைத்து வெளிக்காட்டியது.

ஏழு என்பது, வேதத்தில் ஒரு முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது. ‘ஏழு’ என்பதற்கு ‘முழுமை’ அல்லது ‘பரிபூரணம்’ என்றும் பொருள்படும். ஏழாக அமைந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்..
சிரஞ்சீவிகள்
‘ஜீவித்தல்’ என்பதற்கு, ‘உயிர்வாழ்தல்’ என்று பொருள். ‘சிரஞ்சீவிகள்’ என்றால் ‘எப்போதும் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்’ என்று பொருள். அந்த வகையில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாக அறியப்படுகிறார்கள்.
* அனுமன்
* விபீஷணன்
* மகாபலி
* மார்க்கண்டேயர்
* வியாசர்
* அஸ்வத்தாமன்
* பரசுராமர்
சப்த கோடி மகா மந்திரங்கள்
‘சப்த’ என்றால் ‘ஏழு’ என்று பொருள். ‘கோடி’ என்றால் ‘முடிவு’ என்றும் பொருள் உண்டு. ஆக ஏழு சொற்களை கொண்டுள்ள உயர்ந்த மந்திரங்கள் ‘சப்த கோடி மகா மந்திரங்கள்’ எனப்படும்.
* நமஹ
* ஸ்வாஹா
* ஸ்வதா
* வவ்ஷட்
* வஷட்
* பட்
* ஹும்
சக்கரங்கள்
* மூலாதாரம் - ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையே இருப்பது.
* ஸ்வாதிஷ்டானம் - பிறப்புறுப்புக்கு சற்று மேலே இருப்பது.
* மணிபூரகம் - தொப்புளுக்கு சற்று கீழே இருப்பது.
* அனாஹதம் - விலா எலும்புகள் ஒன்று சேரும் இடத்திற்கு சற்று கீழே இருக்கிறது.
* விஷுத்தி - தொண்டை குழியில்.
* ஆக்னா - புருவ மத்தியில்.
* சகஸ்ராரம் (அ) பிரம்மாரந்திரம் - உச்சந்தலையில், பிறந்த குழந்தைக்கு மட்டும் தலையில் மென்மையாக இருக்கும் இடத்தில் இருக்கிறது.
கொல்லும் கொடிய பாவங்கள்
* ஆணவம்
* சினம்
* பொறாமை
* காமம்
* பெருந்தீனி
* சோம்பல்
* பேராசை
சப்த ரிஷிகள்
* கவுதமர்
* பரத்வாஜர்
* விஸ்வாமித்ரர்
* ஜமதக்னி
* வசிஷ்டர்
* காசியபர்
* அத்ரி
சப்த கன்னிகள்
* அகல்யை
* சீதை
* திரவுபதி
* தாரை
* மண்டோதரி
* நளாயினி
* அருந்ததி
புண்ணிய நதிகள்
* கங்கை
* யமுனை
* கோதாவரி
* சரஸ்வதி
* நர்மதை
* சிந்து
* காவேரி
சப்த மண்டலங்கள்
* சூரிய மண்டலம்
* சந்திர மண்டலம்
* வாயு மண்டலம்
* வருண மண்டலம்
* நட்சத்திர மண்டலம்
* அக்கினி மண்டலம்
* திரிசங்கு மண்டலம்
சப்த ஸ்வரங்கள்
* ஷட்ஜம்
* ரிஷபம்
* காந்தாரம்
* மத்திமம்
* பஞ்சமம்
* தைவதம்
* நிஷாதம்

சதுரகிரி சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்' இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களில் இருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் சாப்டூர் மற்றும் தாணிப்பாறை மலைப்பகுதியில் சிவகிரி, விஷ்ணு கிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற 4 மலைகளுக்கு நடுவில், சஞ்சீவிகிரி என்ற மலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. சஞ்சீவி கிரி மலை என்பதே பின்னாளில், ‘சதுரகிரி மலை’ என மாறியது. கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சுந்தரலிங்கம், சந்தன லிங்கம் என்ற பெயர்களில் இரண்டு திருமேனிகளாக இறைவன் அருள்பாலிக்கிறார்.
அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளம் நிறைந்ததுமாக இருக்கிறது இந்தத் தலம். அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
* சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலையில் ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று உடலில் பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
* சந்தன மகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னிதி உள்ளது. இங்கு ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
* பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை, போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதுதான் செய்தார் என்று சொல்கிறார்கள்.
* இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும் என்கிறார்கள். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்ததாக சொல்லப்படுகிறது.
* மகாலிங்கம் கோவிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி’ ஆலயம் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் தொடங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் இங்கு பிரசாதமாக தரப்படுகிறது.
* சுந்தர மகாலிங்கம் கோவிலில் இருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் தரிசிக்காமல் சென்றார். இதனால், சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள், பார்வதி தேவி. சிவலிங்கத்திற்கு தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.
* சதுரகிரி சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்' இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களில் இருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.

சூரியன் :-
சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.
வியாழன் :-
உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.
சந்திரன் :-
சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.
செவ்வாய் :-
செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.
புதன் :-
உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
சுக்கிரன் :-
செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.
சனி :-
நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.
ராகு - கேது :-
ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

ஒரு முறை ஈசனின் அடியாரில் ஒருவரான சுந்தரரை, வெறுக்கும் சூழ்நிலை கலிக்காமருக்கு ஏற்பட்டது. கலிக்காமர் வாழ்ந்த காலகட்டத்தில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனக்காக சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தூது போகும்படி கேட்ட நிகழ்வு நடந்தது.
2-7-2021 அன்று கலிக்காம நாயனார் குரு பூஜை
சோழர்களின் படையில் தலைமை தாங்கும் பொறுப்பை வகித்து வந்தவர்கள், ஏயர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த குலத்தின் வழி வந்தவர்களில், பெருமங்கலத்தைச் சேர்ந்த கலிக்காமரும் ஒருவர். இவரும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்தார். அதோடு சிவ பக்தி மிகுந்தவராகவும் இருந்தார். இவர் நாயன்மார்களில் ஒருவரான, மானக்கஞ்சாற நாயனாரின் மகளை திருமணம் செய்து இல்லறம் நடத்தி வந்தார். எப்போதும் சிவனையே சிந்தித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு, அவரது அடியவர்களின் மீதும் அளவற்ற அன்பு இருந்தது.
ஒரு முறை ஈசனின் அடியாரில் ஒருவரான சுந்தரரை, வெறுக்கும் சூழ்நிலை கலிக்காமருக்கு ஏற்பட்டது. கலிக்காமர் வாழ்ந்த காலகட்டத்தில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனக்காக சிவபெருமானை பரவை நாச்சியாரிடம் தூது போகும்படி கேட்ட நிகழ்வு நடந்தது. இந்தச் செய்தியை அறிந்ததும் கலிக்காமர் பெரும் கோபம் கொண்டார்.
‘தன் சுயநலத்துக்காக இறைவனை தூது போகச் சொல்லும் சுந்தரர் எல்லாம் அடியாருக்கு அழகு சேர்ப்பவரா?.. இறைவனின் திருவடிகள் நோகும் அளவுக்கு, இப்படி திருவீதிகளில் அலையவிட்டுவிட்டாரே.. சிவபெருமான் தன் தோழனுக்காக இதைச் செய்ய முன்வந்தாலும், அதை அடியாரான சுந்தரர் தடுத்திருக்க வேண்டாமா? எவ்வளவு பெரிய பாவத்தை சுந்தரர் செய்துவிட்டார்’ என்று நினைத்து வருந்தினார், அதோடு சுந்தரரை வெறுக்கவும் செய்தார்.
கலிக்காமரின் கோபத்தைப் பற்றி அறிந்த சுந்தரர், தன்னுடைய செய்கைக்காக மனம் வருந்தினார். ஒரு அடியவரின் துயரத்திற்கு தான் காரணமாகிவிட்டோமே. அதோடு இறைவனை நம்முடைய சுயநலத்திற்காக பயன்படுத்திவிட்டாமே என்று கலங்கிப் போனார். தன் பிழையை பொறுத்தருளும்படி இறைவனை வேண்டிக்கொண்டார்.
தன்னுடைய இரண்டு பக்தர்களும் மன வருத்தத்துடன் இருப்பதை மாற்றி, அவர்கள் இருவரையும் இணைக்க ஈசன் நினைத்தார். இதற்காக கலிக்காமருக்கு, சூலை நோயைக் கொடுத்தார். நோயின் வீரியம் தாங்காமல், கலிக்காமர் இறைவனை வேண்டினார். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. “உன் துன்பத்தை நீக்கும் வல்லமை படைத்தவன் சுந்தரமூர்த்தி மட்டுமே” என்றது அந்தக் குரல்.
அதேநேரம் சுந்தரரின் கனவில் தோன்றிய ஈசன், “என்னுடைய ஏவலால், கலிக்காமன் சூலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறான். அவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி உதவு” என்று கூறினார்.
கலிக்காமருடன் நட்பு ஏற்படுத்த கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதிய சுந்தரர், பெருமங்கலம் புறப்பட்டார். அந்தச் செய்தி கலிக்காமருக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவரோ, ‘இறைவனையே ஏவல் பணி செய்ய வைத்தவர், என் நோயை தீர்ப்பதை விட நான் இறப்பதே மேல்’ என்று கருதி, தன்னுடைய வாள் கொண்டு வயிற்றை கிழித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் சுந்தரர், பெருமங்கலம் வந்துவிட்டதை கலிக்காமரின் மனைவி அறிந்தார். அவர், தனது துயரத்தையும், கணவரின் செயலையும் மறைத்து, சுந்தரரை இன்முகத்துடன் வரவேற்க எண்ணினார். தன் எண்ணப்படியே செய்யவும் செய்தார். வீட்டை அலங்கரித்து வைத்து சுந்தரருக்காக காத்திருந்தார்.
சுந்தரர் தன்னுடைய அன்பர் களுடன் கலிக்காமரின் இல்லத்தில் எழுந்தருளினார். அதன்பிறகுதான் நடந்த விஷயங்கள் அவருக்கு தெரியவந்தது. பதறிப்போன சுந்தரர், “இறைவா! இது என்ன சோதனை. கலிக்காமரின் இந்த முடிவை பார்த்த பிறகு, நானும் உயிர்வாழ விரும்பவில்லை” என்று கூறியபடி, அங்கு கிடந்த உடைவாளை எடுத்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தார்.
அப்போது சிவபெருமானின் திருவருளால், கலிக்காம நாயனார் உயிர்பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். சுந்தரரை தடுத்து நிறுத்தி, “ஐயனே! இதென்ன முடிவு. இறைவன் மீதான உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் நான்தான் பிழை செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சுந்தரரிடம் வேண்டினார்.
சுந்தரர், சிவபெருமானின் திருவருளை எண்ணி மனம் மகிழ்ந்தார். கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிக்கொண்டார்.

கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
ஒரு ஊரில் மிகப்பெரிய பணக்காரரும், செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவருமே இறைவனை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். வழிபடுவதில்தான் அவர்களுக்குள் வேறுபாடு இருந்தது.
தொழிலாளி தன்னுடைய செருப்பு கடையின் ஓரத்தில், இறைவனின் படத்தை வைத்து, அதை தினமும் வணங்கி வந்தார். அவரிடம் பணம் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியும், மன அமைதியும் இருந்தது.
செல்வந்தரோ தினமும் காலையில் நீராடிவிட்டு, பல மணி நேரம் பூஜையில் ஈடுபடுவார். ஆனால் பல தலைமுறைக்கு அவரிடம் சொத்து இருந்தாலும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் நாரத முனிவர், மகாவிஷ்ணுவிடம் “பெருமாளே... அந்த செல்வந்தர் பல மணி நேரம் பூஜை செய்கிறார். உங்களை வழிபடுகிறார். பக்திமானாக இருக்கிறார். ஆனால் அவரால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதே நேரம் செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பணம் இல்லாவிட்டாலும் நிம்மதியாக இருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் உங்களுடைய படத்தை வைத்து ஒரு முறைதான் வணங்குகிறார். இதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.
அதற்கு மகாவிஷ்ணு, “நாரதரே.. நீங்கள் உடனடியாக பூலோகம் செல்லுங்கள். அங்கு செல்வந்தரை சந்தித்து ‘நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்’ என்று சொல்லுங்கள். அவர் ‘இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக் கிறார்?’ என்று கேட்பார். அதற்கு நீங்கள் ‘நாராயணர் தற்போது, ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொணடிருக்கிறார்’ என்று சொல்ல வேண்டும். அதற்கு செல்வந்தர் என்ன பதில் சொல்கிறார் என்று அறிந்து கொண்டு வாருங்கள். மேலும் செல்வந்தரைப் போலவே, அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடமும் சென்று அதே போல் கூறி, அவரும் என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டு இங்கே வாருங்கள். உங்கள் கேள்விக்கான பதிலை சொல்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.
நாரதர் விரைந்து சென்று, செல்வந்தரை சந்தித்தார். அவரைப் பார்த்த செல்வந்தர், “நீங்கள் யார்?” என்று கேட்க, “நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்” என்று நாரதர் பதிலளித்தார்.
உடனே அந்த செல்வந்தர், “இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நாரதர், பெருமாள் சொல்லி அனுப்பியது போலவே, “நாராயணர், ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
அதைக் கேட்ட செல்வந்தர், “அது எப்படி முடியும்?. இதெல்லாம் நடக்கிற காரியமா?” என்று நாரதரிடம் கேட்டார்.
அங்கிருந்து மறைந்த நாரதர், தொழிலாளியைப் போய் பார்த்தார். தான் யார் என்று கேட்ட தொழிலாளியிடமும், “நான் நாராயணரிடம் இருந்து வருகிறேன்” என்று பதிலளித்தார், நாரதர்.
தொழிலாளியும், “இப்போது நாராயணர் என்ன செய்து கொண்டிருக்கிறார்” என்று கேட்க, நாரதரோ “அவர் ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
அதைக் கேட்டதும் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, ஒரு நிமிடம் கண்ணை மூடி இறைவனை வணங்கி விட்டு, “இதில் என்ன விந்தை இருக்கிறது? ஒரு பெரிய ஆல மரத்தை சின்ன விதைக்குள் அடக்கி வைத்திருப்பவர், இந்த பிரபஞ்சத்தையே, தன்னுடைய வாய்க்குள் காட்டியவர், அவரால் யானையை ஊசியின் காதுக்குள் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்றார்.
அங்கிருந்து புறப்பட்ட நாரதர், நேராக மகாவிஷ்ணுவிடம் வந்து, செல்வந்தரும், தொழிலாளியும் சொன்ன பதில்களை கூறினார்.
ஸ்ரீமன் நாராயணனான மகாவிஷ்ணு இப்போது நாரதருக்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கினார். “கடவுளை வணங்குவதால் மன அமைதி கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடவுள் பக்தி என்பது எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த சூட்சுமம் அடங்கியிருக்கிறது. பக்தி என்பது வெறும் பூஜைகளை செய்வது மட்டுமே அல்ல. அது இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன் பற்றிக்கொள்வது. செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் அந்த இறை நம்பிக்கை இருப்பதே, அவரது மன நிம்மதிக்காக காரணம்” என்று முடித்தார்.

தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் எல்லாமே ஐந்தாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அது பற்றி பார்ப்போம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது, விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில். இந்த திருத்தலத்தின் புராணப் பெயர் ‘திருமுதுகுன்றம்’ என்பதாகும். தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்களில், 9-வது தலம் இதுவாகும். இந்தக் கோவிலில் எல்லாமே ஐந்தாக அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும். அது பற்றி பார்ப்போம்.
மூர்த்தங்கள்
* விநாயகர்
* முருகர்
* சிவபெருமான்
* சக்தி (அம்மன்)
* சண்டிகேஸ்வரர்
இறைவனின் திருநாமம்
* விருத்தகிரீஸ்வரர்
* பழமலைநாதர்
* விருத்தாசலேஸ்வரர்
* முதுகுன்றீஸ்வரர்
* விருத்தகிரி
கோபுரங்கள்
* கிழக்கு கோபுரம்
* வடக்கு கோபுரம்
* மேற்கு கோபுரம்
* தெற்கு கோபுரம்
* கண்டராதித்தன் கோபுரம்
நந்தி
* இந்திர நந்தி
* வேத நந்தி
* ஆத்ம நந்தி
* மால்விடை நந்தி
* தர்ம நந்தி
விநாயகர்
* ஆழத்துப் பிள்ளையார்
* மாற்றுரைத்த விநாயகர்
* முப்பிள்ளையார்
* தசபுஜ கணபதி
* வல்லப கணபதி
ஈசனை வழிபட்டோர்
* உரோமச முனிவர்
* விபசித்து முனிவர்
* குமார தேவர்
* நாதசர்மா
* அனவர்த்தினி
வழிபாடு
* திருவனந்தல்
* காலசந்தி
* உச்சிகாலம்
* சாயரட்சை
* அர்த்தஜாமம்
திருச்சுற்று
* தேரோடும் திருச்சுற்று
* கயிலாய திருச்சுற்று
* வன்னியடி திருச்சுற்று
* அறுபத்து மூவர் திருச்சுற்று
* பஞ்சவர்ண திருச்சுற்று
மண்டபங்கள்
* இருபது கால் மண்டபம்
* இடைகழி மண்டபம்
* தபன மண்டபம்
* மகா மண்டபம்
* இசை மண்டபம்
மூர்த்தங்கள்
* விநாயகர்
* முருகர்
* சிவபெருமான்
* சக்தி (அம்மன்)
* சண்டிகேஸ்வரர்
இறைவனின் திருநாமம்
* விருத்தகிரீஸ்வரர்
* பழமலைநாதர்
* விருத்தாசலேஸ்வரர்
* முதுகுன்றீஸ்வரர்
* விருத்தகிரி
கோபுரங்கள்
* கிழக்கு கோபுரம்
* வடக்கு கோபுரம்
* மேற்கு கோபுரம்
* தெற்கு கோபுரம்
* கண்டராதித்தன் கோபுரம்
நந்தி
* இந்திர நந்தி
* வேத நந்தி
* ஆத்ம நந்தி
* மால்விடை நந்தி
* தர்ம நந்தி
விநாயகர்
* ஆழத்துப் பிள்ளையார்
* மாற்றுரைத்த விநாயகர்
* முப்பிள்ளையார்
* தசபுஜ கணபதி
* வல்லப கணபதி
ஈசனை வழிபட்டோர்
* உரோமச முனிவர்
* விபசித்து முனிவர்
* குமார தேவர்
* நாதசர்மா
* அனவர்த்தினி
வழிபாடு
* திருவனந்தல்
* காலசந்தி
* உச்சிகாலம்
* சாயரட்சை
* அர்த்தஜாமம்
திருச்சுற்று
* தேரோடும் திருச்சுற்று
* கயிலாய திருச்சுற்று
* வன்னியடி திருச்சுற்று
* அறுபத்து மூவர் திருச்சுற்று
* பஞ்சவர்ண திருச்சுற்று
மண்டபங்கள்
* இருபது கால் மண்டபம்
* இடைகழி மண்டபம்
* தபன மண்டபம்
* மகா மண்டபம்
* இசை மண்டபம்
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அச்சுறுத்தல் இந்த ஆண்டும் நீடிப்பதால், மதுக்கூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக திருவிழாக்கள் தடைபட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோவில் திருவிழாக்கள் முன்பு போல கோலாகலமாக நடைபெறுவது இல்லை. பெரிய கோவில்களில் மட்டும் திருவிழாக்களின்போது நடத்தப்படும் பூஜைகளை கோவிலுக்குள் எளிமையாக நடத்தி வருகின்றனர்.
அதேபோல திருமண விழாக்களில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பதால், திருமணங்களும் களையிழந்துள்ளன. இதன் காரணமாக பூ வியாபாரிகள் தொடங்கி, கிராமிய இசைக்கலைஞர்கள் வரை ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் கொரோனா பரவலுக்கு முன்பு வரை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக பல நாட்கள் திருவிழாக்கள் களைகட்டும். கிராம கோவில் திருவிழாக்களின்போது வளையல் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்படும்.
ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அச்சுறுத்தல் இந்த ஆண்டும் நீடிப்பதால், மதுக்கூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக திருவிழாக்கள் தடைபட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளால் திருவிழாக்கள் முன்பு போல விமரிசையாக நடைபெறவில்லை என்பது கிராம மக்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. திருவிழாக்களின்போது பல்வேறு பொருட்களை விற்று வாழ்க்கையை நடத்தி வந்த சிறு, குறு வியாபாரிகள் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நாடக கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அலங்கார விளக்கு அமைப்பவர்கள், வான வேடிக்கைக்காக வெடி கட்டும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் திருவிழாக்கள் நடைபெறாததால் அவர்களும் தங்களது வருமானத்தை இழந்து உள்ளனர்.
தற்போது தஞ்சை மாவட்டத்துக்கு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதும் பொதுமக்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீங்கி முன்புபோல் கோவில் திருவிழாக்கள் மீண்டும் களை கட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, கோடி லிங்கேஸ்வரர் கோவில். கோவிலின் சிறப்பு அம்சமாக, மிக உயரமான 108 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக சிவன் கோவில்களில் மூலவர் சிவலிங்கம் தவிர்த்து ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு சிவலிங்கங்கள் இருக்கக்கூடும். ஒரு சில ஆலயங்களில் மூலவர் லிங்கத்தைத் தவிர்த்து பஞ்ச லிங்க சன்னிதி என்ற வகையில் ஐந்து லிங்கங்கள் அமைந்திருக்கலாம். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் கோடிக்கும் அதிகமாக லிங்கங்கள் இருப்பது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததாலே எந்தப் பக்கம் திரும்பினாலும் சிவலிங்கங்கள்தான் காணப்படுகின்றன. ஆலயத்தின் பெயரே ‘கோடிலிங்கேஸ்வரர்’ கோவில் தான்.
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில். இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தில் சாம்பசிவமூர்த்தி என்பவரால் முதல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு தொடங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் மக்கள் அனைவரும், ஒவ்வொரு சிவலிங்கத்தை ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கி விட்டனர். இவ்வாறு பல்கிப் பெருகியதன் காரணமாக இப்போது ஒரு கோடிக்கும் அதிகமான சிவலிங்கங்கள் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது. இப்போதும் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் 108 அடி உயரத்தில் மிகப்பெரிய சிவலிங்கமும், அதற்கு நேர் எதிரில் 35 அடி உயரம் கொண்ட நந்தி சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் பிரம்மதேவர், மகாவிஷ்ணு, மகேஸ்வரர், வெங்கடரமணி சுவாமி, அன்னபூரணி, பாண்டுரங்க சுவாமி, சீதாதேவி சமேத ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன், கருமாரியம்மன் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன.
இதில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னிதிக்குள் ‘சிவ பஞ்சயாதி’ என்னும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தைச் சுற்றிலும் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், பார்வதி மற்றும் நந்தி ஆகியோர் நின்று வணங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டு நாகலிங்க மரங்கள் இருக்கின்றன. திருமணமாகாதவர்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், மணமானவர்கள் மணவாழ்க்கை இடையூறு இன்றி இன்பமாக அமைய வேண்டியும் சிவபெருமானை வேண்டிக்கொண்டு, இந்த நாகலிங்க மரங்களில் மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் இருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும் காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு வேளைகளில், 10 அர்ச்சகர்களால் மேளதாளங்கள் முழங்க பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் அனைத்து லிங்கங்களுக்கும், நாள் தவறாமல் பூஜைகள் நடைபெறுவது சிறப்புக்குரிய விஷயமாகும்.
இந்தக் கோவிலில் வித்தியாசமான வழிபாட்டு முறை ஒன்றை வழக்கத்தில் இருக்கிறது. அது சிவலிங்க பிரதிஷ்டை வழிபாடு ஆகும். தங்கள் வேண்டுதல் நிறைவேற நினைக்கும் பக்தர்கள், தங்களால் முடிந்த அளவில் வெவ்வேறு அளவுகளில் சிவலிங்கத்தை செய்து கொண்டு வந்து, இந்தக் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கங்கள், அந்தந்த பக்தர்களின் பெயரிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்தக் கோவிலில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறு கிறது. 108 அடி உயர சிவலிங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக மலர் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
கோலார் தங்கச்சுரங்கத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து கோலார்பங்கார்பெட்டை வழியாக இந்தக் கோவிலை அடையலாம்.

மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆனி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன.

இதையொட்டி உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம், தேன், சந்தனம், விபூதி, உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.