என் மலர்
ஆன்மிகம்

மூடப்பட்டுள்ள கோவில்
கொரோனா அச்சுறுத்தல்: தொடர்ந்து 2-வது ஆண்டாக தடைபட்ட கோவில் திருவிழாக்கள்
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அச்சுறுத்தல் இந்த ஆண்டும் நீடிப்பதால், மதுக்கூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக திருவிழாக்கள் தடைபட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், கோவில் திருவிழாக்கள் முன்பு போல கோலாகலமாக நடைபெறுவது இல்லை. பெரிய கோவில்களில் மட்டும் திருவிழாக்களின்போது நடத்தப்படும் பூஜைகளை கோவிலுக்குள் எளிமையாக நடத்தி வருகின்றனர்.
அதேபோல திருமண விழாக்களில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பதால், திருமணங்களும் களையிழந்துள்ளன. இதன் காரணமாக பூ வியாபாரிகள் தொடங்கி, கிராமிய இசைக்கலைஞர்கள் வரை ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் கொரோனா பரவலுக்கு முன்பு வரை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக பல நாட்கள் திருவிழாக்கள் களைகட்டும். கிராம கோவில் திருவிழாக்களின்போது வளையல் கடைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்படும்.
ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறும். கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா அச்சுறுத்தல் இந்த ஆண்டும் நீடிப்பதால், மதுக்கூர் பகுதி கிராமங்களில் தொடர்ந்து 2-வது ஆண்டாக திருவிழாக்கள் தடைபட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளால் திருவிழாக்கள் முன்பு போல விமரிசையாக நடைபெறவில்லை என்பது கிராம மக்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. திருவிழாக்களின்போது பல்வேறு பொருட்களை விற்று வாழ்க்கையை நடத்தி வந்த சிறு, குறு வியாபாரிகள் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். திருவிழாக்களை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நாடக கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. அலங்கார விளக்கு அமைப்பவர்கள், வான வேடிக்கைக்காக வெடி கட்டும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் திருவிழாக்கள் நடைபெறாததால் அவர்களும் தங்களது வருமானத்தை இழந்து உள்ளனர்.
தற்போது தஞ்சை மாவட்டத்துக்கு ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோதிலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதும் பொதுமக்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் நீங்கி முன்புபோல் கோவில் திருவிழாக்கள் மீண்டும் களை கட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story