search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    கிருத்திகை நட்சத்திரக்காரர்களே இந்த பரிகாரம் உங்களை செல்வந்தராக்கும்

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் பல மேன்மையான பலன்களை பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று
    முருக
    ப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.

    எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாகும்..
    Next Story
    ×