search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நந்தி வழிபாடு
    X
    நந்தி வழிபாடு

    முன்னோர் சாபங்கள் விலக செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

    சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.
    பல குடும்பங்களில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்திற்குள்ளேயும் சண்டை, சச்சரவு ஏற்பட்டு மனஅமைதி குறையும். அதுபோன்ற நேரங்களில் ‘யார் கொடுத்த சாபமோ நமது வாழ்க்கை இப்படி இருக்கின்றதே’ என்று புலம்புவார்கள்.

    சுய ஜாதக அடிப்படையில் எந்த சாபத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து, அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற முடியும்.

    * பெற்றோரால் ஏற்படும் சாபங்கள் விலக, பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.

    * சகோதர சாபம் விலக, அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்லது. குறிப்பாக திசை மாறிய நந்தியைத் தோ்ந் தெடுத்து வழிபட்டால் உடனடியாக பலன் கிடைக்கும்.

    * சுமங்கலி சாபம் நீங்க, திருதியை திதியில் சோமாஸ்கந்தர் மற்றும் அதிகார நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும்.

    இதுபோன்றே அனைத்து சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. ‘பாவத்திற்கு விமோசனம் உண்டு. ஆனால் சாபத்திற்கு விமோசனம் இல்லை’ என்பார்கள். சாப விமோசனத்திற்கு என்று தமிழகத்தில் ஏராளமான தலங்கள் உள்ளன. வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் அங்கு சென்று வழிபட்டு வந்தால் தடைகள் அகன்றோடும்.
    Next Story
    ×