என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல அமல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், பாவமன்னிப்பு கிடைத்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். இதற்கு நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றான சொந்தங்களைப் பேணுதல் என்பதை நாம் கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருமுறை நபிககள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் ஒட்டகத்தில் வந்த போது, ஒரு கிராமவாசி அவரை வழிமறித்து, “இறைத்தூதரே, ஒரு மனிதனை சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும், நரகத்தைவிட்டு தூரமாகவும் ஆக்குவதற்கு உரிய நற்செயல் எது?” என்று கேட்டார்.
அதற்கு நபிகள் (ஸல்) கீழ்க்கண்ட 5 விஷயங்களை தெரிவித்தார்கள்:
1) அல்லாஹ்வை வணங்க வேண்டும், 2) எந்த நிலை யிலும் இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது, 3) கடமையாக்கப்பட்ட 5 நேரத் தொழுகையை தவறாமல் கடைப் பிடிக்க வேண்டும், 4) இறை வனால் விதிக்கப்பட்ட ஜகாத்தை முழுமையாக கொடுக்க வேண்டும், 5) சொந்தங்களை சேர்ந் திருக்க வேண்டும்.
சொந்தம் என்பது இறைவனுடன் இணைவதற்கு உரிய பாலமாகும். இந்த இணைப்பு பாலத்தில் கோளாறு இருந்தால் இறைவனிடம் சேரமுடியாது. நரகத்தின் மேல் போடப்பட்டுள்ள பாலத்தின் பெயர் “ஸிராத்துல் முஸ்தகீம்”.
சொர்க்கம் செல்பவர்கள் அனைவரும் இந்த பாலத்தைக் கடந்து தான் போக வேண்டும். இது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் (19:71) இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேலும், அதனைக் (ஸிராத்துல் முஸ்தகீம் எனும் பாலத்தை) கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்”.
தர்மம் செய்தல், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்தல், மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்தல், எப்பொழுதும் அங்கசுத்தியுடன் (ஒளு) இருத்தல் மற்றும் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடத்தல் ஆகிய 5 விஷயங்களை ஒருவர் நிரந்தரமாக செய்தால் அவருக்கு மலைபோன்ற அளவு நன்மையும், உணவு, உறைவிடத்தில் விசாலமும் கிடைக்கும்.
இதையே திருக்குர் ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மேலும், அவர்கள் எத்தகைய நடத்தை கொண்டவர்கள் என்றால், எந்தெந்த உறவு முறைகளைப் பிணைத்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளை இடுகின்றானோ அந்த உறவுமுறைகளைப் பிணைத்து வைக்கின்றார்கள். தம் அதிபதிக்கு அஞ்சுவார்கள். மேலும், கடுமையான முறையில் தம்மிடம் கணக்குக் கேட்கப்படுமோ என அச்சம் கொண்டவராக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 13:21).
இறைவனின் கட்டளைப்படி வாழ்பவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதுடன் சொர்க்கத்திலும் இடம் கிடைக்கும். எனவே இறைவன் வகுத்த வழியில் வாழ்வோம், சொந்தங்களுடன் சேர்ந்து வாழ்ந்து இறைவனின் அருளையும், சொர்க்கத்தையும் நாம் பெறுவோம். அதற்கு இறைவன் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக, ஆமீன்.
வடகரை ஏ. முகம்மது இஸ்மாயில் காஷிபி, சென்னை.

கடந்த வாரம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன
திருப்பதியில் கடந்த வாரம் முதல் உள்ளூர் பக்தர்கள் 2 ஆயிரம் பேர் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளியூர் பக்தர்களையும் இலவச தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது. அதற்கான தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இலவச தரிசன டோக்கன்களை திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் வழங்கினால் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள்.
எனவே கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.
ஆனால் வெளியூர் பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இதுதவிர ஏராளமான வெளியூர் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்கள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற ஆசையில் தினமும் திருப்பதிக்கு வந்து திரும்பி செல்கின்றனர். இலவச வாய்ப்பு இல்லாத காரணத்தால் வேண்டுதல்களை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கின்றோம் என்று சாதாரண பக்தர்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை கவனித்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை போல் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் பக்தர்களுக்கு வெளியிட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு வாரத்தில் இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு கிடைக்கும் என்று தேஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 14-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
14-ம் தேதி செவ்வாய் கிழமை :
* அமிர்தயோகம்
* ஜேஷ்டாஷ்டமி
* குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி
* தென்காசி சிவபெருமான் தெப்போற்சவம்
* வளர்பிறை அஷ்டமி
* சந்திராஷ்டமம் - கார்த்திகை
15-ம் தேதி புதன் கிழமை :
* வளர்பிறை நவமி
* கேதார விரதம் ஆரம்பம்
* கெஜலட்சுமி விரதம்
* திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மர் மூலவருக்கு திருமஞ்சனம்
* சந்திராஷ்டமம் - ரோகிணி
16-ம் தேதி வியாழக்கிழமை :
* சித்தயோகம்
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
* சந்திராஷ்டமம்- மிருகசீருஷம்
17-ம் தேதி வெள்ளிக்கிழமை :
* சர்வ ஏகாதசி
* திருவோண விரதம்
* வாமன ஜெயந்தி
* சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்
* சந்திராஷ்டமம் - திருவாதிரை
18-ம் தேதி சனிக்கிழமை :
* சனிப்பிரதோஷம்
* உத்திர கௌரி விரதம்
* குச்சனூர் சனி பகவான் ஆராதனை
* கருட தரிசனம் நன்று
* சந்திராஷ்டமம் - புனர்பூசம்
19-ம் தேதி ஞாயிற்று கிழமை :
* சித்தயோகம்
* கதளி கௌரி விரதம்
* அனந்த விரதம்
* கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை
* இன்று கண்ணூறு கழித்தல் நன்று
* சந்திராஷ்டமம் - பூசம்
20-ம் தேதி திங்கள் கிழமை :
* பவுர்ணமி
* உமாமகேஸ்வரி விரதம்
* சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பபாவாடை தரிசனம்
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புஷ்பாலங்கார சேவை
* சந்திராஷ்டமம் - ஆயில்யம்

வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலய ஆண்டு பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. கொரோனா பரவலை தடுக்க இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
மேலும் கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் பலசரக்கு கடைகள் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் மூடப்பட்டன. இந்த நிலையில் ஆண்டு பெருவிழா முடிவடைந்ததையொட்டி 17 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டதால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய மாதா திருத்தேரில் காட்சியளித்தார்.

தேர் திருவிழாவிற்கு அரியாங்குப்பம் பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்கினார். முன்னதாக புதுச்சேரி பல்நோக்கு சமூக அமைப்பு நிறுவனர் அருமைசெல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆயரின் கியூரியா செயலாளர் ஆரோக்கியதாஸ் கலந்துகொண்டார்.
சிறப்பு அழைப்பாளராக அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஆரோக்கிய மாதாவை வணங்கினார். நோய் தொற்று காரணமாக தேர் வீதி உலா ரத்து செய்யப்பட்டது. அதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் ஆலயத்தின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் நடைபெற்றது.

மார்த்தாண்டம் கொட்டாரத்து விளை பள்ளியறை பகவதியம்மன் கோவில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் இன்றி மேற்கூரை ஓடுகள் உடைந்து பழுதடைந்து பூட்டியே கிடக்கிறது. x
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியில் கொட்டாரத்து விளை பள்ளியறை பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் மன்னர்கள் காலத்தில் சிறிய அரண்மனை இருந்துள்ளது. திக்குறிச்சி மகாதேவரை மன்னர்கள் தரிசனம் செய்ய வரும்போது இந்த அரண்மனையில் ஓய்வெடுத்து சென்றுள்ளனர். அரண்மனை அருகே இருந்த காரணத்தால் இந்த கோவில் கொட்டாரத்துவிளை பகவதி என்று அழைக்கப்பட்டு வந்தது.
இந்த கோவில் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் இன்றி மேற்கூரை ஓடுகள் உடைந்து பழுதடைந்து பூட்டியே கிடக்கிறது. 490 தேவசம் போர்டு கோவில் கட்டுபாட்டில் 305 -வது கோவிலாக இந்த கோவில் உள்ளது. பயணம் மகாதேவர் கோவில் கீழ் உள்ள இந்த கோவில் அரண்மனையை போல காணாமல் செல்லும் முன் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் பழுதை சீரமைத்து தினசரி பூஜைகளுக்காக அர்ச்சகரை நியமித்து பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் உற்சவர் விநாயகர் மயில் வாகனத்தில் உலா வந்தார். அதைத் தொடர்ந்து நேற்று காலை மூஷிக வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து மூஷிக வாகனத்துக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களும், பக்தர்களும் பூஜை செய்து உற்சவர் வீதிஉலாைவ தொடங்கி வைத்தனர். அதில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருதி இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள் போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள்.
அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை தந்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள். என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள்.
அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித் தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
வீட்டில் லட்சுமி பூஜை செய்வது எப்படி?
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
விஷ்ணுவிற்குரிய எண்ணற்ற நாமங்களில், எந்த காரியத்தை செய்யும் பொழுது எந்தப் பெயரை உச்சரிக்கவேண்டும் என்பதை, நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். அவை வருமாறு:-
சாப்பிடும் பொழுது ‘கிருஷ்ணா’ என்றும், படுக்கச் செல்லும் பொழுது ‘பத்மநாபா’ என்றும், யுத்தத்தின்போது ‘சக்ரதாரி’ என்றும், வெளியே கிளம்பும் பொழுது ‘திரிவிக்ரமா’ என்றும், கெட்ட கனவு கண்டால் ‘கோவிந்தா, கண்ணா’ என்றும், காட்டு வழியில்செல்லும்பொழுது ‘நரசிம்மா’ என்றும், சுபகாரியப் பேச்சு நடக்கும்பொழுது ‘நாராயணா’ என்றும், மருந்து உண்ணும் பொழுது ‘மகா விஷ்ணு’ என்றும், ஆரோக்கியம் சீராக ‘மாதவா’, ‘கேசவா’ என்றும் நாமங்களை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு உச்சரித்தால் ‘உரு’ ஏறத் திரு ஏறும் என்பது போல காக்கும் கடவுளாம் விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க உச்சரிக்க அச்சம் இல்லாத வாழ்க்கை அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். கண்ணபிரானை புரட்டாசி மாதச் சனியில் வழிபட்டு பொன்னான வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம்.
வடக்கு நோக்கி செல்லும் வெள்ளெருக்கு வேரைத் தேர்ந்தெடுத்து சாஸ்திர முறைப்படி மஞ்சள் காப்பு கட்டி, மந்திரம் கூறி, எடுத்து வடித்த விநாயகர் திருவுருவத்துக்கு சக்தி அதிகம்.
சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் எனும் ஊரில் வெள்ளெருக்கு விநாயகர் கோவில் உள்ளது. கோவில் நிலத்தில் வெள்ளெருக்கஞ் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் இருப்பது விசேஷமானது. அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டியதில்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னியிலை ஆகியவற்றைச் சூடி வழிபடலாம். அத்தர், ஜவ்வாது, புனுகு போன்ற வாசனைப் பொருள்களைச் சாத்தலாம்.
வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும். மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.

தேன் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு விடிய, விடிய விநாயகருக்கு நடைபெற்றது. இதில் கடல் நுரையால் ஆன விநாயகர் சிலை செம்பவள மேனியாய் காட்சியளித்தது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் பிரளயம் காத்த விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய விடிய தேன் அபிஷேகம் நடப்பது வழக்கம். இதனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு வாரம்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் கோவில் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்ற காரணத்தால், சிறப்பாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி அன்று, காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கோவில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு கோவில் வளாகத்தின் உள்ளேயே நடைபெற்றது.
தொடர்ந்து தேன் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு விடிய, விடிய விநாயகருக்கு நடைபெற்றது. இதில் கடல் நுரையால் ஆன விநாயகர் சிலை செம்பவள மேனியாய் காட்சியளித்தது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
கொரோனாபரவல் தடுப்பு காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முகூர்த்த நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும் பல திருமணங்களும் நடைபெற்றன.