என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது. முன்னதாக கூட்டுப்பாடல் திருப்பலியும், நவநாள் திருப்பலியும் நடைபெற்றது.
அதன் பின் புனித அந்தோணியார், ஆரோக்கியமாதா, செபஸ்தியார் உருவம் தாங்கிய பெரியதேர் பவனி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 சப்பரங்கள் வந்தன. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் தேர், சப்பர பவனி நடைபெற்றது. அதன் பின் இரவு 7 மணி அளவில் அருட்தந்தை அடைக்கலராஜ் தலைமையில் ஆலயத்தில் நவநாள் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 8 மணியளவில் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.

பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரதயாத்திரை தொடக்கவிழா வேலூர் தங்கக்கோவிலில் கடந்த 14-ந் தேதி நடந்தது. இதற்கு சத்திஅம்மா தலைமை தாங்கி ரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்றது. அதன்பின்னர் ரதம் திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவில், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா, பொய்கை வழியாக வேலூருக்கு வந்தடைந்தது. பாலாறு அன்னை ரதயாத்திரைக்கு ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் மற்றும் உலக சிவனடியார்கள் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையொட்டி ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், ருத்ரவேள்வி, பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், திருவாசக விண்ணப்பம், ஆன்மிக சொற்பொழிவு, பாலாற்று அன்னையின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு கலவை சச்சிதானந்தா சுவாமிகள், செங்காநத்தம் பகவதி சித்தர் சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாலை 6 மணியளவில் மேள, தாளங்கள் முழங்க பாலாறு அன்னை ரதயாத்திரை ஊர்வலம் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு வேலூர் மண்டித்தெரு, மெயின்பஜார், பில்டர்பெட்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
திருமாலின் பள்ளிகொண்ட திருக்கோலம் மிகவும் பிரசித்திப்பெற்றது. அப்படி அவர் பள்ளிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவரங்கம் முக்கியமானது. அரங்கம் என்பது நதிநீரில் அமைந்த மேலான திட்டு என்று பொருள்படும். அந்த வகையில் திருவரங்கம்போலவே, மேலும் நான்கு கோவில்கள் உள்ளன. இவை அனைத்தும் சேர்த்து ‘பஞ்சரங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை, கர்நாடகாவில் உள்ள ஆதிரங்கம், திருவரங்கத்தில் உள்ள மத்தியரங்கம், கோவிலடியில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள சதுர்த்தரங்கம், திருஇந்தளூரில் உள்ள பஞ்சரங்கம் ஆகியவையாகும்.
அப்பாலரங்கம்
108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ‘அப்பாலரங்கம்’ என்ற பெயரோடும் அழைக்கப்படும் ஆலயம் இது. திருப்பேர்நகர் என்ற கோவிலடியில், இந்த அப்பால ரங்க நாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் கொள்ளிடம் இரண்டாகப் பிரியும் இடத்தில் இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் இருக்கிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
உபமன்யுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தை பெற்றதால், இத்தல இறைவனுக்கு அப்பக்குடத்தான் (அப்பால ரங்கநாதர்) என்று பெயர். இங்கு பெருமாள் மேற்கு நோக்கியபடி, புஜங்க சயனத்தில் வீற்றிருக்கிறார். இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேய முனிவருக்கு எம பயம் நீக்கியும், உபரிசிரவசு மன்னனுக்கு சாபம் மற்றும் பாவம் போக்கியும் பெருமாள் அருள்புரிந்த தலம் இதுவாகும்.
ஆதிரங்கம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது, ஸ்ரீரங்கப்பட்டனம். இங்கு காவிரி நதி இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேருகிறது. இங்குள்ள அரங்கநாத சுவாமி ஆலயமே, ‘ஆதிரங்கம்’ எனப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான கவுதமர், இங்குள்ள பெருமானை நோக்கி தவம் இயற்றியுள்ளார். அவருக்கு இத்தல பெருமாள், புஜங்க சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்தார். கவுதம முனிவரின் வேண்டுகோள்படி, அவருக்கு காட்சியளித்த கோலத்திலேயே, இறைவன் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.
சதுர்த்தரங்கம்
சாரங்கபாணி ஆலயம்தான் ‘சதுர்த்தரங்கம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. காவிரி நதி - காவிரி, அரசலாறு என்று இரண்டாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் இடமான கும்பகோணத்தில் இந்த ஆலயம் உள்ளது. இதுவும் திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றுதான். இங்குள்ள பெருமாள் சன்னிதி, தேரின் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரின் இருபுறங்களிலும் உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் உள்ளன. பெருமாள் வைதிக விமானத்தின் கீழ் சங்கு, சக்கரம் மற்றும் சாரங்கம் என்னும் வில் ஏந்தியவாறு, கிழக்கு நோக்கி உத்தான சயன திருக்கோலத்தில் அருள்புரி கிறார். இத்தலத்தில் பெருமாளை ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
மத்தியரங்கம்
தமிழ்நாட்டில் காவிரி நதி இரண்டாகப் பிரிந்து, மீண்டும் ஒன்று சேருமிடமாக திருச்சி அருகே உள்ள திருவரங்கம் உள்ளது. பஞ்சரங்க தலங்களில் இது ‘மத்தியரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘அனந்தரங்கம்’ என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். 108 திவ்ய தேச திருக்கோவில்களில், முதல் திவ்ய தேசமாக விளங்கும் திருவரங்கம் ஒரு சுயம்பு திருத்தலமாகும். இங்கு 21 கோபுரங்களும், 7 சுற்று பிரகாரங்களும் அமைந்துள்ளன. இங்கு பெருமாள் தங்கத்தால் வேயப்பட்ட விமானத்தின் கீழே புஜங்க சயனத் திருக்கோலத்தில் தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறார். மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் இதுவாகும்.
பஞ்சரங்கம்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம், பெருமாளின் 108 திருப் பதிகளுள் ஒன்று. பஞ்ச அரங்க தலங்களில் ‘பஞ்சரங்கம்’ மற்றும் ‘அந்தரங்கம்’ என்று சொல்லப்படுகிறது. இத்தலத்தில் அருளும் பரிமள ரங்கநாதர், வேதசக்கர விமானத்தின் கீழ் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். பெருமாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது சிறப்புக்குரியதாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடி, தன் சாபம் நீங்கப் பெற்றமையால் இவ்வூர் ‘திருஇந்தளூர்’ எனப்பெயர் பெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கயிலாசநாதர் கோவிலில், 14 சீடர்களுடன் காட்சி தருகிறார், குரு பகவான்.
சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான், தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கயிலாசநாதர் கோவிலில், 14 சீடர்களுடன் காட்சி தருகிறார், குரு பகவான். சிவபெருமானின் குரு வடிவமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தியிடம், ஆங்கீரசர், அத்ரி, காசியபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர்.
இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் இங்கு உள்ளனர். இத்தகைய வடிவத்தில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவிலில், தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோவிலுக்கு அருகிலேயே ருக்மணி- சத்யபாமா உடனாய கிருஷ்ணர் கோவிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோவிலும் உள்ளது.

‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம். அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான்.
பாண்டவர்களும், கவுரவர்களும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. தன் உறவுகள் கூடியிருந்த அஸ்தினாபுரத்திற்கு வருகை தந்திருந்தார், கிருஷ்ணன். அவரை நகரின் எல்லைக்கே சென்று அழைத்து வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதனால் அஸ்தினாபுரத்தை நிறுவியவரான பீஷ்மர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் பல போர் பயிற்சிகளை வழங்கிய துரோணர், அவரது மகன் அஸ்வத்தாமன், கிருபர், விதுரர் என பெருந்தலைகள் பலரும் சென்று கண்ணனை வரவேற்று அழைத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர்.
கிருஷ்ணரை வரவேற்பதற்காக வீதி நெடுகிலும் அலங்கார வளைவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் நின்று பூக்கள் தூவி வரவேற்றனர். பெண்கள் பலரும் கண்ணனுக்கு பூரணகும்ப மரியாதை செலுத்தினர். வரும் வழியிலேயே பீஷ்மர், கண்ணனிடம் “நீங்கள் தங்க ஏதுவான இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு விருப்பமான இடம் எது என்று சொன்னால் அதை தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்றார்.
அப்போது கண்ணபிரான், தன் கண்ணுக்குத் தென்பட்ட ஒரு கட்டிடத்தை சுட்டிக்காட்டி “பச்சை வர்ணம் பூசப்பட்டு, பிரளய காலத்தில் நீரில் மிதந்து வரும் ஆல் இலை போல நிற்கிறதே. அது யாருடைய வீடு?” என்றார்.
“இறைவா. அது என்னுடைய வீடு” என்று துரோணரிடம் இருந்து பதில் வந்தது.
கண்ணன் அடுத்ததாக ஒரு கட்டிடத்தை நோக்கி கைநீட்டி, “சிவப்பு நிறம் பூசப்பட்டு, செம்மாந்த கோலத்தோடு கம்பீரமாய் நிற்கும் இது யாருடைய வீடு?” என்று கேட்டார்.
இப்போது கிருபர் பதில் கூறினார். “மாதவா.. அது என்னுடைய வீடு”
கண்ணன் மறுபடியும் ஒரு கட்டிடத்தை நோக்கி, “மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, மகாமேரு குன்று போல நிற்கும் இது யாருடைய வீடு?” என்றார்.
அஸ்தினாபுரத்தின் பிதாமகனான பீஷ்மர், “அச்சுதா.. அது என்னுடைய வீடு. அதில் நீங்கள் தாராளமாக தங்கிக்கொள்ளலாம்” என்றார்.
அதையும் தாண்டிச் சென்ற கண்ணன், “நீல நிறத்தில் கடல் போன்று நீண்டு விரிந்து காட்சியளிக்கும் இது யாருடைய வீடு?” என்று கேட்டார்.
அதற்கு துரோணரின் மகனான அஸ்வத்தாமன், “பரம்பொருளே, அது என்னுடைய வீடு” என்று பதிலளித்தான்.
கண்ணன் புன்னகையோடே மீண்டும் நடக்கத் தொடங்கினார். அப்போது அவர் கண்ணின் மற்றொரு கட்டிடம் தென்பட்டது. “சிறிய அளவில் வெள்ளை நிறத்தோடு, பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் சாத்வீகம் பொருந்தி நிற்கும் இது யாருடைய வீடு?” என்றார்.
“அன்புக்குரிய கடவுளே.. அது உன்னுடைய வீடு” என்று விதுரரிடம் இருந்து பதில் வந்தது.
“என்னுடைய வீடா?.. அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று நினைத்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது, நான் எதற்காக பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றோரது வீடுகளில் போய் தங்க வேண்டும். நான் என் வீட்டிற்குப் போகிறேன்” என்றபடி, விதுரரின் வீட்டிற்குள் நுழைந்தார் கண்ணன்.
‘நான்’, ‘என்னுடையது’ என்பதெல்லாம் அகந்தையின் உருவம். ‘எல்லாமே இறைவனுடையது’ என்பதே செருக்கை அழிக்கும் சக்தி படைத்தது. அந்த ஆணவத்தை அழிக்கும் மனதையே, இறைவன் எப்போதும் விரும்புகிறான். அந்த மனதிற்குள் குடிபுகவே அவன் நினைக்கிறான்.

தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை 9 மணிக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
திருப்பதி ஏழுமலை யான் கோவிலில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரிடையாக வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டது.
தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
பக்தர்கள் சுமார் 8 முதல் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இன்று காலை 9 மணிக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
மொத்தம் 61 நாட்களுக்கு 15.25 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1மணிநேரத்தில் 15 லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர்.
திருப்பதியில் நேற்று 71,119 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 37,256 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
‘கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்’ (லூக்கா 11:9) என்ற வசனமானது, இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் உறுதியான மற்றும் உண்மையான வாக்குத் தத்தங்களில் ஒன்றாகும். இந்த வசனத்திற்கு உதாரணமாக லூக்கா எழுதிய நற்செய்தியில் ‘கேட்ட’தால் ஒருவர் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது திரளான மக்கள் இறைவார்த்தையை கேட்பதற்காக அவரிடம் வந்தனர். அந்த நேரத்தில் கரையோரமாக இரண்டு படகுகள் நின்று கொண்டிருந்தது. மீனவர்கள் சிலர் அந்த படகுகளில் இருந்து இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர்.
அதைக் கண்ட இயேசு அருகிருந்த ஒரு படகில் ஏறி, அதைச் சற்றே தள்ளும்படி கூறினார். படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு இறைவார்த்தையை போதித்தார். அவர் அமர்ந்திருந்த அந்தப் படகு, சீமோன் என்பவருக்கு சொந்தமானது.
இயேசு இறைவார்த்தையை போதித்த பின்னர், சீமோனை நோக்கி, ‘‘ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டு போய், மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
உண்மையில் சீமோனும், அவரோடு இருந்தவர்களும் இரவு முழுவதும் மீன் பிடிக்க வலைகளை வீசியும், மீன்கள் ஒன்றும் வலையில் சிக்காமல் வெறுமையாய் திரும்பியிருந்தனர். இயேசு ‘உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்னதும், சீமோன் “ஐயா.. இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.
அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்கு சைகை காட்டி துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. (லூக்கா 5:1-7)
சீமோனுக்கு கடலும் புதிதல்ல, வலைவீசி மீன் பிடிப்பதும் புதிய விஷயமல்ல. ஆனாலும் அனுபவம் இல்லாத ஒருவர் (இயேசு), ‘மீன்பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்’ என்று சொன்ன உடன், அவரின் வார்த்தையை கேட்டு சீமோன் ‘உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்’ என்று சொல்லி வலைகளை வீசினார். அந்நேரத்தில் சீமோன் தன்னுடைய பல வருட மீன்பிடிக்கும் அனுபவத்தை பற்றியோ, திறமையை பற்றியோ சிந்திக்கவில்லை. அவர் செய்தது ஒன்றே ஒன்று தான்.
இயேசு சொன்னார்.. அதை அப்படியே சீமோன் கேட்டார். அந்த வார்த்தைகளின் படியே சீமோன் செயல்பட்டாா்.
ஆம், இயேசு சொன்ன வார்த்தைகளை கேட்டு, சீமோன் வலையை வீசினபடியால், இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் கிடைக்காத மீன்கள், சில நொடி பொழுதில் அவருடைய வலையில் வந்து சிக்கின. ஒரு படகில் இருந்த வலையின் மூலம் அவர் இரு படகுகள் நிறைய, அதுவும் அந்த படகுகள் மூழ்கும் நிலைக்கு வரத்தக்க வகையில் மீன்கள் கிடைக்கப் பெற்றார்.
இரவு முழுவதும் பாடுபட்டு வெறும் வலையோடு திரும்பிய சீமோன், இயேசுவிடம் ‘மீன் கிடைக்க அருள் செய்யும்’ என்று கேட்கவில்லை. ஆனால் இயேசு கூறியதை கேட்டு அதன்படி செய்ததால்தான் நிறைவுக்கும் மேலான அற்புதத்தை பெற்றுக் கொண்டார். இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்ததால்தான் சீமோனின் வெறுமை, வளமையாய் மாறியது.
இன்றும் நம்முடைய அனுதின ஜெபத்தின் வழியாக இறைவனிடம் பலவற்றை கேட்டு பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். சீமோனை பின்பற்றி, நாமும் விவிலியத்தின் வழியாக இயேசு கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கீழ்படிந்து நடந்தால், சீமோன் போலவே நாமும் வாய் திறக்காமலேயே, நம்முடைய எதிர்பார்ப்புக்கும், நிறைவுக்கும் மேலான, நிரம்பத்தக்க ஆசீர்வாதங்களை நம் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம். தன்னுடைய செவிகளால் இயேசு சொன்னதை ‘கேட்ட’ சீமோன், தனது நாவினால் இயேசுவிடம் தனது தேவையை குறித்து எதுவும் ‘கேட்க’வில்லை. எனவே நீங்களும் கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர் (லூக்கா 11:10).

பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.
சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.
அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயாசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

தெப்பத்தில் உள்ள ஒவ்வொரு படித்துறையிலும் தெப்பம் 15 நிமிடங்கள் நின்று அங்கிருந்த பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார்.
காரைக்குடியில் காவல் தெய்வமாக பிரசித்தி பெற்ற கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 10-ந்தேதி மாலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 17-ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. 10-வது நாளான நேற்று முன்தினம் யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு தெப்ப திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் கோவில் அருகே மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு 11.40 மணிக்கு எழுந்தருளி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிர் வேட்டுக்கள் முழங்க நள்ளிரவு 12 மணிக்கு தெப்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெப்பத்தில் உள்ள ஒவ்வொரு படித்துறையிலும் தெப்பம் 15 நிமிடங்கள் நின்று அங்கிருந்த பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். இதை தொடர்ந்து நேற்று காலை பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்திருவிழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் கமலாலய குளத்தை வலம் வந்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சப்த விடங்க தலங்களில் முதன்மையானதாக விளங்கிறது. இந்த கோவில் ஆழித்தேர் ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. அதனுடன் மற்றொரு சிறப்பு இந்த கோவிலின் தெப்பத் திருவிழாவாகும். திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத்தின் நீளம், அகலம் 50 அடி ஆகும். உயரம் சுமார் 42 அடி. 432 காலி பேரல்களில் காற்று நிரப்பி கட்டப்பட்ட தெப்பத்தில் சுமார் 500 பேர் ஏறி செல்லும் வகையில் பிரமாண்டமாக இந்த தெப்பம் அமைக்கப்படும்.
இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடைபெற்றது. நேற்று குளமே ஆலயமாக கொண்ட கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. முன்னதாக இரவு 7.30 மணிக்கு திருவாரூர் துர்க்காலயா ரோட்டில் உள்ள தெப்ப மண்டபத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பார்வதி கல்யாணசுந்தரர் புறப்பட்டு கமலாலயம் குளத்தை அடைந்தார். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி எழுந்தருளினார்.
அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தெப்பம் இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. தெப்பத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.தெப்பம் கமலாலய குளத்தை 3 முறை சுற்றி வந்தது. ஒரு முறை சுற்றி வர 3 மணி நேரமானது. இதனால் விடிய, விடிய தெப்பத்திருவிழா நடைபெற்றது. மின்னொளியில் தெப்பம் குளத்தில் சுற்றி வரும் அழகை காண கமலாலய குளத்தின் கரைகளில் பக்தர்கள் திரண்டு நின்றனர்.
தெப்பத்திருவிழா நேற்று தொடங்கி இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், நகரசபை தலைவர் புவன பிரியா செந்தில் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி கவிதா, பரம்பரை அறங்காவலர் தியாகராஜன், தக்கார் ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மீஞ்சூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டத்தில் வண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார்.
திருவள்ளூர் மாவட்டம் வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதைதொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. வண்ண துணிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருந்தேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிறுணியம்பலராமன், பொன்ராஜா, மீஞ்சூர் கிராம தேர் திருவிழா குழுவினர் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் நான்கு மாட வீதிகளில் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் புகழ் பெற்ற கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
* மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில் திருபுவனம் கோட்டை எனும் இடத்தில் விநாயககோரக்கர் அருள்கிறார். நோய்களைத் தீர்ப்பதிலும் சனி தோஷம் தீர்ப்பதிலும் விநாயகர் வடிவில் உள்ள கோரக்க சித்தர் அருள்கிறார்.
* ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன காலங்களில் இந்த விநாயகரின் தெற்கு பகுதியிலும் உத்திராயண காலங்களில் வடக்கு பகுதியிலும் கதிரவன் தன் கிரணங்களால் இந்த விநாயகரை வணங்குகிறான்.
* கிருஷ்ணகிரியில் உள்ள பாகலூரில் விநாயகப் பெருமான் சிவலிங்க ஆவுடையாரின் மேல் வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடக்கையில் கொழுக்கட்டையுடனும் ஈசான்ய திக்கை நோக்கி அமர்ந்தருள் புரிகிறார்.
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியில் உள்ளது மிளகு பிள்ளையார் ஆலயம். மழை பொய்த்தால் இவரது உடலில் மிளகை அரைத்துத்தடவி அபிஷேகம் செய்வித்தால் உடனே மழைபொழியும் அற்புதம் நிகழ்கிறது.
* மதுரை கீழமாசி வீதியில் மொட்டை விநாயகரை தரிசிக்கலாம். பார்வதியால் அவள் காவலுக்குப் படைக்கப்பட்ட சிறுவனின் தலையை ஈசன் அறியாமல் கொய்தார். அவர் மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். இத்தலத்தில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்ப்பது வழக்கமாக உள்ளது.
* விழுப்புரம், தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும் போது அதில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
* நாகப்பட்டினம் செண்பகபுரியில் உள்ளது ஆதிகும்பேஸ்வர சுயம்பு விநாயகர் ஆலயம். இவர் சந்நதி கோஷ்டங்களில் மும்மூர்த்திகளும் அருள்வது வித்தியாசமான அமைப்பு.
* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரெத்தெண் விநாயகர் அருள்கிறார். இத்தல சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜப் பெருமானுடன் திருவீதியுலா வருகிறார்.
* கோயமுத்தூர் மத்தம்பாளையத்தில் காரண விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் விநாயகர் அருகில் நந்தியம்பெருமான் வீற்றிருப்பது தனிச் சிறப்பு.
* சேலம் மாவட்டம், ஆத்தூரில் தலையாட்டி கணபதி எனும் காவல் கணபதியை தரிசிக்கலாம். இவர் தலையை ஆட்டும் விதமாக இடதுபுறம் சாய்ந்தபடி அருள்கிறார்.
* சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள திருநாரையூரில் அருள்கிறார் பொள்ளாப் பிள்ளையார். நம்பியாண்டார் நம்பிக்கு அருள்புரிந்த விநாயகர் இவர். ராஜராஜசோழனுக்கு சைவத் திருமுறைகளைத் தொகுக்க உதவியவர். உளியால் செதுக்கப்படாத (பொள்ளா) பிள்ளையார்.
* தஞ்சாவூர், கணபதி அக்ரஹாரத்தில் விநாயகர் சதுர்த்தி விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகசதுர்த்தியைக் கொண்டாடுவதில்லை. இந்த ஆலயத்திலேயே வந்து கொண்டாடுகின்றனர்.
* ஓசூர்&பேரிகை பாதையில் பாகலூர் ஏசியன் பேரிங் கம்பெனி அருகில் மாடி விநாயகர் அருள்கிறார். இவர் சந்நதியில் இருபுறங்களிலும் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரும், மலைக்கோட்டை மாணிக்கவிநாயகரும் சந்நதி கொண்டுள்ளனர்.
* திருச்சி உச்சிபிள்ளையார் கோயிலின் அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் கோயில் உள்ளது. இந்த பிள்ளையாருக்குக் கீழே யந்திர பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
* திருவையாறுக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் வேத விநாயகர் அருட்பாலிக்கிறார். இவர் வேத கோஷத்தை சற்றே செவியை சாய்த்த வண்ணம் கேட்பதால் செவிசாய்த்த விநாயகர் என்கிறார்கள்.
* கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள மருத்துவக் குடியில் தேள் போன்ற வடிவமைப்பில் விருச்சிகப் பிள்ளையார் அருள்கிறார்.
* திருச்சிக்கு அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில் சிம்ம வாகனத்தின் மீது பஞ்சமுக விநாயகர் ஐந்தடி உயரத்தில் அருட்கோலம் காட்டுகிறார்.
* தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மராட்டிய மன்னர் துளசாஜி மகராஜாவால் கட்டப்பட்ட நீலகண்ட விநாயகரை தரிசிக்கலாம். நீலகண்டரின் பிள்ளையாதலால் நீலகண்ட பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
* தஞ்சாவூர் கீழவாசலில் வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) ஆலயம் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் சோழர்களால் வழிபட்ட இந்த விநாயகருக்கு கோட்டை விநாயகர் என்றும் பெயருண்டு.